சனி, மே 21, 2011

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் ஆனந்த விகடன்
 வழக்கமான ஆர்வத்துடன் இந்த வார ஆனந்த விகடனை வாங்கி பார்வையை செலுத்தினேன். தலையங்கத்தில், நடந்து முடிந்த தேர்தலில் ஏன் கலைஞர் தோற்றார்  என்பதற்க்கான நியாயமான காரணங்களை பட்டியலிட்டும் , அதே நேரம் ஜெயலலிதாவின் கடந்த கால தவறுகளையும் சுட்டி காட்டி, இவை இரண்டும் போல் இல்லாமல் நல்லாட்சி தாருங்கள் என்று இருந்தது.  தலையங்கம் மிகவும் அற்புதமாக நடுநிலையுடன் எழுதப்பட்டிருந்தது.

ஆனால், அதற்க்கு சில பக்கங்கள் தள்ளி தலையங்கத்தில் காட்டிய புத்திசாலிதனத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் சில வரிகள் இருந்தன. அந்த கட்டுரையின் தலைப்பு.இலையைத் துளிர்க்கவைத்த  இரண்டு தலைகள்...


விகடன் கூறும் இரண்டு தலைகள் யார் தெரியுமா?

சசிகலா மற்றும் சோ ராமசாமி


                               

அதற்க்கு விகடனார் கூறும் காரணம். சோ ராமசாமி தான் விஜயகாந்துடன் கூட்டணி முக்கியம் என்றாராம், சசிகலா சரியான வேட்பாளர்களை தேர்ந்து எடுத்தாராம்.

நான் விகடனை பார்த்து கேட்கிறேன். அ.தி.மு.க வேட்பாளர்கள் நல்லவர்கள் என்பதற்க்காகத்தான் மக்கள் அந்த வேட்பாளர்களுக்கு வக்களித்தார்களா? விஜயகாந்துடன்  கூட்டணி வைத்தால் தான் ஜெயிக்க முடியும் என்ற அந்த கடினமான முடிவை எடுக்க சோ வால்தான் முடியுமா? அரசியல் அறிவு அறவே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட கணிக்க கூடிய கணிப்பல்லவா அது... பொதுமக்களை விடுங்கள் என் மகனுக்கு கூட தெரிந்த கணிப்புதான் அது.
அதுகூட தெரியாமல் தான் ஜெயலலிதா  இருந்தாரா அவருக்கு சோ சொல்லி புரிய?

                                                              

யாரை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறீர்கள் விகடனாரே? சோ வையா? ஏன்??? தமிழகத்தில் இலையை துளிர்க்க வைக்க அவர் ஏதும் புரட்சி செய்தாரா? கடந்த ஐந்து வருடங்களாக கருணாநிதியின் ஆட்சியை அகற்ற மக்களுடன் இணைந்து போராடினாரா? ஒரு புண்ணாகும் இல்லைல... அப்புறம் என்ன?

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் தங்கள் மனக்குமுறல்கள் அனைத்தையும் வாக்குச் சீட்டில் கொட்டி இலையை துளிர்க்க வைத்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க மக்கள் புரட்சி. பெரும்பாலான மக்களின் ஆவேசத்தால் நிகழ்ந்த மாற்றத்தை...  மக்களின் கஷ்டம் புரியாத, மக்களோடு மக்களாக இணைந்து ஒரு போராட்டம் கூட நடத்திராத  சோ மற்றும் சசிகலாவிற்கு சமர்ப்பிக்காதீர்கள். அது நியாயம் அல்ல. (பத்திரிகை) தர்மமும் அல்ல.

அப்படி தான்தான்  காரணம் என்று சோ நினைப்பாரேயானால் அதை அவர் தனது துக்ளக்கில் எழுதி மகிழட்டும். யார் கேட்கப்போகிறார்கள்?.ஆனால் ஒரு வெகுஜன பத்திரிகையாகிய நீங்கள் எழுதி அவரை மகிழ்விக்க வேண்டாம்.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் விகடனாரே.....
இப்படி சிறுபிள்ளைத்தனமாக எழுதுவது ஒரு பாரம்பரிய பத்திரிகைக்கு அழகல்ல....
36 கருத்துகள்:

 1. ஐ வெங்காய பஜ்ஜி...ஆனாலும் சோவின் வற்புறுத்தலும் விஜயகாந்துடன் கூட்டணி வைத்ததுக்கு ஒரு காரணம்...இந்த நேரத்தில் ஜெ டி ராஜேந்தருடன் கூட்டணி வைத்தாலும் ஜெயித்திருப்பார்...

  பதிலளிநீக்கு
 2. // NKS.ஹாஜா மைதீன் கூறியது...
  ஐ வெங்காய பஜ்ஜி...ஆனாலும் சோவின் வற்புறுத்தலும் விஜயகாந்துடன் கூட்டணி வைத்ததுக்கு ஒரு காரணம்...இந்த நேரத்தில் ஜெ டி ராஜேந்தருடன் கூட்டணி வைத்தாலும்


  உண்மை
  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
  ஒரு காந்தியவாதியின் வேண்டுகோள்
  http://speedsays.blogspot.com/2011/05/gandhi-request.html

  பதிலளிநீக்கு
 3. ஒரு போராட்டம் கூட நடத்திராத சோ மற்றும் சசிகலாவிற்கு சமர்ப்பிக்காதீர்கள். அது நியாயம் அல்ல. (பத்திரிகை) தர்மமும் அல்ல.கரெக்ட்.http://zenguna.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. வருகை மற்றும் கருத்துக்கு நன்றி speed master மற்றும் ஞானசேகரன்

  பதிலளிநீக்கு
 5. /* இந்த நேரத்தில் ஜெ டி ராஜேந்தருடன் கூட்டணி வைத்தாலும் ஜெயித்திருப்பார்... */


  கரெக்டா சொன்னீங்க மச்சான்... வருகைக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 6. விகடன் தாத்தா மொட்டைத்தலையில் 'நொச்சு'.. 'நொச்சு'...ன்னு அடிச்சிருக்கீங்க...!

  ஆமா... சகோ.சிராஜ்,

  அப்புறம்... அந்த விகடன் தாத்தாவின் மண்டையில் முளைச்சு இருக்கே ஒரு கொம்பு... அது முன்னாடியே இருந்துச்சா... இல்லை நீங்க பதிவு எழுதின பின்னாடி முளைச்சிச்சா...? அவ்வ்வ்வ்வ்...

  விகடனுக்கு செமத்தியான பதிலடி, சகோ.சிராஜ்...! மிக்க நன்றி..!

  பதிலளிநீக்கு
 7. அது அவாள் பாசம். விட்டு தள்ளுங்க.

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கு நன்றி ரியாஸ், சகோ. ஆஷிக் மற்றும் சஹா அவர்களே

  பதிலளிநீக்கு
 9. ///டந்த ஐந்து வருடங்களாக கருணாநிதியின் ஆட்சியை அகற்ற மக்களுடன் இணைந்து போராடினாரா? /// சரியான கேள்வி ..

  பதிலளிநீக்கு
 10. நல்லவேளை நடிகை விந்தியாதான் காரணம்ன்னு சொல்லாமல் விட்டார்களேன்னு சந்தோஷ பட்டுக்க வேண்டியதுதான். விட்றா...விட்றா சீனா. தீனா

  பதிலளிநீக்கு
 11. அப்புறம்... அந்த விகடன் தாத்தாவின் மண்டையில் முளைச்சு இருக்கே ஒரு கொம்பு... அது முன்னாடியே இருந்துச்சா... இல்லை நீங்க பதிவு எழுதின பின்னாடி முளைச்சிச்சா...? அவ்வ்வ்வ்வ்...////
  [co="red"]சிராஜ் குட்டுவான்னு தெரிஞ்சே தீர்க்க தரிசனமா வீங்கிருக்கும் போல...[/co]

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லாஞாயிறு, 22 மே, 2011

  உங்கள் மகனுக்குக் கூட தெரியும் கணிப்பு என்று சொல்லிவிட்டீர்கள்.

  ஆனால் கணிப்பு என்றவுடன் சோ ராமசாமியின் நினைவு வரவேண்டியதில்லை. ஏனெனின், வி.காந்துடன் சேர்ந்தால் அவரின் வாக்குகளைச் சிதறவிடாமல் திமுகவிற்கு எதிராக பெறலாம் என்ற் கணிப்பு எல்லாருக்கும் தெரியும்.

  "ஆனால் வி.காந்து வருவாரா ? அவருக்கு ஜெயலலிதா என்றால் அலர்ஜி அல்லவா? அதை சூசகமாக, 'கடவுளிடமும் மக்களிடமும்தான் என் கூட்டணி' என்றாரே ! இவரை எப்படி தம் வலையில் சிக்கவைத்து கருனானிதிக்கு எதிராக களத்தை மாற்றுவது ?"

  இவைகள்தான் கேள்விகள். இக்கேள்விகளை எதிர் நோக்கத்தான் சோ ராமசாமி. இவர் ஜெயலலிதாவின் ராஜகுரு. இருவருக்கும் 'திராவிட இயக்கத்தை', ஒழித்து பெரியாருக்கு முன்னிருந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது குறிக்க்கோள் என்பது எல்லாத்தமிழர்களுக்கும் தெரிந்த ஒன்று. அதை அவர் துகளக்கில் தொடர்ந்து எழுதிவருகிறார்.

  சோவின தந்திரம் என்னவென்றால், வி காந்து கூப்பிட்டால் வர மாட்டார். என்ன செய்யலாம் ?

  அரசு அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்க பல வழிகள் உள. நேரடியாகக் கொடுக்கலாம். மறைமுகமாகவும் கொடுக்கலாம். எப்படிக் கொடுத்தாலும் அவர் மசியமாட்டார் என்பதைத் தெரிந்தவர்கள் கடைசியாகப் பிடிக்கும் வழியே, அவரின் மனைவி. மனைவிக்குப் பணத்தாசை, பொருளாசையக்காட்டி விட்டால், அவரின் மூலம் அதிகாரியைப்பிடித்து விடலாம்.

  இதைத்தான் சோ இராமசாமி செய்தார். திருமதி வி.காந்தைப் பிடித்தார்கள். அவரின் தம்பியையும் பிடித்தார்கள். ஏற்கனவே பலகாரணிகளால் கருனானிதிக்கு எதிராகக் கொதித்துப்போயிருந்த இருவரும் (நூறடி ரோடு கலியாண மண்டபம் இடிக்கப்பட்டது. கருனானிதியிடம் நேரடியாகக் கெஞ்சியும் பலனில்லை! போன்றவை) எதையும் செய்யத் தயாராக இருந்தார்கள்.

  தலையணை மந்திரம் ஓதப்பட‌, விகாந்து ஜெயலலிதாவிடம் கூட்டணிவைத்தார்.

  இதில் நீங்கள் சொல்லும் கணிப்பு எங்கே இருக்கிறது ? இங்கு நடந்தது ஒரு திரைமறைவு செயல். சோ ராமசாமியால் நடத்தப்பட்டது.

  நேற்று வைகோ சொன்னது போல திராவிட இயக்கம் அழிவுப்பாதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு முதற்ச்சாவு மணி கருனானிதி குடும்பம் அடிக்க, ஜெயலலிதா சோராமசாமி ஆணிகள் அடிக்கிறார்கள். விரைவில் புதைக்கப்படும்.

  பெரியார்க்கு முன், ..
  பெரியாருக்குப் பின்,..
  மீண்டும் பெரியாருக்கு முன்.

  வித்தியாசமான காலச்சக்கரமல்லவா. ? The more things change, the more they remain the same !

  பதிலளிநீக்கு
 13. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு

  பதிலளிநீக்கு
 14. நண்பரே..முதலில் ஆனந்த விகடன் ஒரு நல்ல பத்திரிக்கையா என்பதே என் கேள்வி..

  மிகவும் கீழ்த்தரமான, மாமா வேலை பார்க்கும் ஆபாச விகடன் நடுநிலைமை என்று அவனைப்போய் ஒரு பொருட்டாய் கேள்வி கேட்கிறீர்களே..

  அந்த அருவருப்பான சரோஜாதேவி டைப் பத்திக்கை..காசுக்காக கூட்டிக்கொடுக்கும் தொழில் செய்கிறான்..

  இந்த மாதிரி ஆபாச வியாபாரிகளை முதலில் புறக்கணியுங்கள்..

  பதிலளிநீக்கு
 15. வருகை புரிந்து கருத்துக்கள் தெரிவித்த நண்பர்கள் நிகழ்வுகள், ரஹீம் கசாலி, FOOD மற்றும் மர்மயோகிக்கு நன்றி. மீண்டும் வருக.

  பதிலளிநீக்கு
 16. மாற்று கருத்து தெரிவித்த நண்பர்கள் சிம்மக்கல் மற்றும் இராஜராஜேஸ்வரி இருவருக்கும் மிக்க நன்றி. மீண்டும் வருக.

  பதிலளிநீக்கு
 17. //simmakkal கூறியது...
  உங்கள் மகனுக்குக் கூட தெரியும் கணிப்பு என்று சொல்லிவிட்டீர்கள்.

  ஆனால் கணிப்பு என்றவுடன் சோ ராமசாமியின் நினைவு வரவேண்டியதில்லை. ஏனெனின், வி.காந்துடன் சேர்ந்தால் அவரின் வாக்குகளைச் சிதறவிடாமல் திமுகவிற்கு எதிராக பெறலாம் என்ற் கணிப்பு எல்லாருக்கும் தெரியும்.

  "ஆனால் வி.காந்து வருவாரா ? அவருக்கு ஜெயலலிதா என்றால் அலர்ஜி அல்லவா? அதை சூசகமாக, 'கடவுளிடமும் மக்களிடமும்தான் என் கூட்டணி' என்றாரே ! இவரை எப்படி தம் வலையில் சிக்கவைத்து கருனானிதிக்கு எதிராக களத்தை மாற்றுவது ?"

  இவைகள்தான் கேள்விகள். இக்கேள்விகளை எதிர் நோக்கத்தான் சோ ராமசாமி. இவர் ஜெயலலிதாவின் ராஜகுரு. இருவருக்கும் 'திராவிட இயக்கத்தை', ஒழித்து பெரியாருக்கு முன்னிருந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது குறிக்க்கோள் என்பது எல்லாத்தமிழர்களுக்கும் தெரிந்த ஒன்று. அதை அவர் துகளக்கில் தொடர்ந்து எழுதிவருகிறார்.

  சோவின தந்திரம் என்னவென்றால், வி காந்து கூப்பிட்டால் வர மாட்டார். என்ன செய்யலாம் ?

  அரசு அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்க பல வழிகள் உள. நேரடியாகக் கொடுக்கலாம். மறைமுகமாகவும் கொடுக்கலாம். எப்படிக் கொடுத்தாலும் அவர் மசியமாட்டார் என்பதைத் தெரிந்தவர்கள் கடைசியாகப் பிடிக்கும் வழியே, அவரின் மனைவி. மனைவிக்குப் பணத்தாசை, பொருளாசையக்காட்டி விட்டால், அவரின் மூலம் அதிகாரியைப்பிடித்து விடலாம்.

  இதைத்தான் சோ இராமசாமி செய்தார். திருமதி வி.காந்தைப் பிடித்தார்கள். அவரின் தம்பியையும் பிடித்தார்கள். ஏற்கனவே பலகாரணிகளால் கருனானிதிக்கு எதிராகக் கொதித்துப்போயிருந்த இருவரும் (நூறடி ரோடு கலியாண மண்டபம் இடிக்கப்பட்டது. கருனானிதியிடம் நேரடியாகக் கெஞ்சியும் பலனில்லை! போன்றவை) எதையும் செய்யத் தயாராக இருந்தார்கள்.

  தலையணை மந்திரம் ஓதப்பட‌, விகாந்து ஜெயலலிதாவிடம் கூட்டணிவைத்தார்.

  இதில் நீங்கள் சொல்லும் கணிப்பு எங்கே இருக்கிறது ? இங்கு நடந்தது ஒரு திரைமறைவு செயல். சோ ராமசாமியால் நடத்தப்பட்டது.

  நேற்று வைகோ சொன்னது போல திராவிட இயக்கம் அழிவுப்பாதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு முதற்ச்சாவு மணி கருனானிதி குடும்பம் அடிக்க, ஜெயலலிதா சோராமசாமி ஆணிகள் அடிக்கிறார்கள். விரைவில் புதைக்கப்படும்.

  பெரியார்க்கு முன், ..
  பெரியாருக்குப் பின்,..
  மீண்டும் பெரியாருக்கு முன்.

  வித்தியாசமான காலச்சக்கரமல்லவா. ? The more things change, the more they remain the same !///

  நண்பா இதுதான் என் கருத்தும்

  பதிலளிநீக்கு
 18. தற்போது எல்லா பத்திரிகைகளுமே அம்மாக்கு ஜால்ரா தான் ....எல்லாம் அவாள் பத்திரிகைகள்...(விகடன்...தின்மணி...)இந்த பத்திரிகைகளுக்கு அம்மாவின் தயவு பல வழிகளில் தேவை படுகிறது...

  பதிலளிநீக்கு
 19. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. வருகைக்கு நன்றி நண்பர்களே.... மீண்டும் வருக....

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சிராஜ்! முதல் முறையாக வருகிறேன்! டீயும் வடையும் ப்ரீயா குடுப்பீங்களா?

  பதிலளிநீக்கு
 22. அப்படி தான்தான் காரணம் என்று சோ நினைப்பாரேயானால் அதை அவர் தனது துக்ளக்கில் எழுதி மகிழட்டும். யார் கேட்கப்போகிறார்கள்?.ஆனால் ஒரு வெகுஜன பத்திரிகையாகிய நீங்கள் எழுதி அவரை மகிழ்விக்க வேண்டாம்.//

  உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன் சிராஜ் !

  பதிலளிநீக்கு
 23. சகோ,டீக்கடையில் அரசியல் அமளி அருமையாக இருக்கிறது. காத்திரமான விவாதத்தை வைத்திருக்கிறீர்கள். ஆனந்த விகடனின் போக்கினைப் பார்த்தால், யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவரளுக்குச் சார்பாகப் பேசுவது போலல்லவா இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 24. 1996 தேர்தலின் போது மூப்பனார், கருணாநிதி கூட்டணி அமைய சோ இருவருக்குமிடையே நடையாய் நடந்து டீல் பண்ணினார். அது போல இந்தக் கூட்டணியிலும் ஆலோசனை சொல்லி, விஜயகாந்தை மசிய வைப்பதில் உதவியிருக்கலாம் யார் கண்டது. சசிகலா, யார் யார் எல்லாம் வேட்பாளர்களாக வேண்டுமென்று தனக்கு வேண்டியவர்களை சொல்லி ஜெ விடம் கட்டளையிட்டிருப்பார். ஆனா ஒன்னு, வாஜ்பேயி மாதிரி ஆட்கள் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிய, யாருக்கும் அஞ்சாத ஜெ. இந்த வீடியோ கேசட் விற்றுக் கொண்டிருந்த ஒரு பொம்பளையின் பேச்சைக் கேட்டு அத்தனைக்கும் அடி பணிந்து போக வேண்டிய அவசியம் என்ன என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

  பதிலளிநீக்கு
 25. அதிமுகவும் விஜயகாந்தும் கூட்டணி வைக்கவேண்டுமென்று மக்கள் விரும்பினாலும் ஜெ. முதலில் சம்மதிக்கவில்லை.

  1996ல் நடந்தது போல் மேற்கூறிய இருவரும்தான் ஜெ வை சம்மதிக்கவைத்ததாக கேள்வி. கூடவே வைகோவை கழட்டி விட சொன்னதும் சோ தான். இதை தேர்தலுக்கு முந்தைய விகடனை படித்து பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.

  அதை குறிப்பிட்டுத்தான் அவர்கள் அப்படி எழுதியிருக்கிறார்கள்.

  எனக்கு தெரிந்து மற்ற பத்திரிகைகளை விட விகடன் குழுமம் ஓரளவு நடுநிலையாகவே செய்திகள் வெளியிடுகிறார்கள்.

  மற்றபடி எல்லா பத்திரிகைகளுமே அவரவர் சார்ந்த இனத்துக்கு சாதகமாகவே நடந்துகொள்கிறார்கள். இதுதான் இன்றைய எதார்த்தம்.

  பதிலளிநீக்கு
 26. ”இது முழுக்க முழுக்க மக்கள் புரட்சி. பெரும்பாலான மக்களின் ஆவேசத்தால் நிகழ்ந்த மாற்றத்தை... மக்களின் கஷ்டம் புரியாத, மக்களோடு மக்களாக இணைந்து ஒரு போராட்டம் கூட நடத்திராத சோ மற்றும் சசிகலாவிற்கு சமர்ப்பிக்காதீர்கள். அது நியாயம் அல்ல. (பத்திரிகை) தர்மமும் அல்ல.”

  1986 ல் இதே மக்களின் ஆவேசத்தால் நிகழ்ந்த மாற்றத்தை எப்படி ரஜினீயிடம் சமர்பித்தீர்கள். அதே நியாயம்தான்!

  பதிலளிநீக்கு
 27. வருகைக்கும்.. கருத்துக்கும் நன்றி மர்மயோகி

  பதிலளிநீக்கு
 28. வருகைக்கு நன்றி ஓனர் ஆப் மாத்தியோசி.... ஆதரவுக்கு நன்றி... மீண்டும் வருக....

  பதிலளிநீக்கு
 29. வருகைக்கும்.. கருத்துக்கும் நன்றி நிரூபன்

  பதிலளிநீக்கு
 30. வருகைக்கும்... கருத்து அலசலுக்கும் நன்றி ஜெய தேவ தாஸ் அவர்களே...

  பதிலளிநீக்கு
 31. கருத்துக்கு நன்றி அக்பர் அவர்களே... மீண்டும் வருக

  பதிலளிநீக்கு
 32. /* 1986 ல் இதே மக்களின் ஆவேசத்தால் நிகழ்ந்த மாற்றத்தை எப்படி ரஜினீயிடம் சமர்பித்தீர்கள். அதே நியாயம்தான்!
  */

  1996 ல் நடந்த மாற்றத்தை நான் ரஜினிக்கு சமர்ப்பிக்க வில்லை நண்பரே... வேறு சிலர் செய்து இருக்கலாம்... உங்கள் வருகைக்கும் எதிர்கருத்துக்கும் நன்றி.... மீண்டும் வருக...

  பதிலளிநீக்கு
 33. யாரோ ஒரு நண்பர் மைனஸ் வோட்டு போட்டு இருக்கிறார்... அவர் பெயரை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்... காரணம் இது தான் நான் வாங்கும் முதல் மைனஸ் வோட்டு... ஆகவே உங்களை நினைவில் நிறுத்த விரும்புகிறேன்... தயவு செய்து சொல்லுங்கள்... பின்னாடி ஒரு வேலை நான் பிரபல பதிவர்களின் வரிசையில் வந்தால் உங்கள் பெயரை நினைவு கூறலாம்....

  பதிலளிநீக்கு
 34. அன்பரே!
  நீங்கள் எழுதி யுள்ள பதிவு
  நூற்றுக்கு நூறு உண்மை!
  பாராட்டு!

  புலவர் சா இராமாநுசம்
  த ம ஓ 1

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters