செவ்வாய், பிப்ரவரி 12, 2013

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் - ஞானிக்கு ஒரு கேள்வி....


முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்ட விநோதினி அநியாயமாக இறந்து விட்டார்....

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்...
(நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே மீள்பவர்களாக இருக்கிறோம்...)


இதை பற்றி ஏராளமான செய்திகள் வந்து விட்டன... ஆகவே அதற்குள் நான் நுழையவில்லை... அந்த கொடூரனுக்கு என்ன தண்டனை கொடுப்பது???
இது தான் மக்கள் மத்தியில் இருக்கும் விவாதம்....

காலையில் புதிய தலைமுறையில் அவரது தந்தை மற்றும் உறவினர்களின் பேட்டியை காட்டினார்கள். அதில் அவரின் தந்தை "என் மகள் முகத்தில் ஆசிட் ஊற்றியவனின் மூஞ்சியில்  ஆசிட் ஊற்ற வேண்டும், வேறு எதுவும் எங்களுக்கு தேவை இல்லை.. தூக்கு தண்டனை வேண்டாம், ஒரு நொடியில் செத்துவிடுவான்... என் மகள் பட்ட கஷ்டத்தை அவன் காலமெல்லாம் பட வேண்டும்" என்றார்.

அதைவிட முக்கியம் அந்த பெண் விநோதினியும் மருத்துவமணையில் இருக்கும் பொழுது, "அவனின் முகத்தில் ஆசிட் ஊற்ற வேண்டும்... நான் அனுபவிக்கும் இதே வேதனையை அவனும் அனுபவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

என்ன செய்யப்போகிறது அரசு
??? தெரியவில்லை...

ஆனால், என்னை பொறுத்த வரையில் இதற்கு சரியான தீர்வு சுரேஷ் என்ற அந்த குற்றவாளியின் மூஞ்சியில் மீண்டும் ஆசிட் ஊற்ற வேண்டும். ஜெயிலில் போட்டு சாப்பாடு போடுவது ஒரு போதும் தீர்வாகாது. இது போன்ற சம்பவங்கள் குறைய வேண்டும் என்றால், குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் வர வேண்டும்... செய்தால் நாமும் அதே போல் செய்யப்படுவோம் என்ற அச்சம் வர வேண்டும். அதற்கு "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்ற சட்டம் தான் சரி வரும்.

ஆகவே அந்த பெண் மற்றும் அவரின் உறவினர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அவன் மூகத்தில் ஆசிட் ஊற்ற வேண்டும்.. ஆசிட் ஊற்றியும் அவன் கண் பார்வை பறி போகாவிட்டால், அவன் கண் பார்வையையும் பறிக்க வேண்டும்.. அந்த பெண் அனுபவித்த வேதனையை அவன் வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டும் அல்லது இதே போல் 3 மாதத்தில் மூச்சுத் திணறல் வந்து சாக வேண்டும். இவன் இருந்து இந்த உலகத்திற்கு எதுவும் செய்யப் போவது இல்லை.

இதற்கு சட்டத்தில் இடம் இல்லாவிட்டால் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டும்... பாதிக்கப்பட்டவனின் பார்வையில் இருந்து குற்றத்தை அணுகுவதே சரியான தீர்வாக இருக்க முடியும். அவர்கள் வயிறு எறிந்து
இருக்கிறார்கள். அரசே!!  அவரின் குடுபத்தாரின் வயிரை குளிர வை. இல்லை இல்லை 6 மாசம் ஜெயில் தான் தருவேன் என்றால் தாராளமாக ஜெயில் தண்டனை கொடுங்கள்... ஆனால் அறிந்து கொள்ளுங்கள், உங்களால் ஒரு போதும் குற்றத்தை குறைக்க முடியாது....

சுரேஷ்...


இந்த அரசின் தண்டணைகளில் இருந்து ஒரு வேலை நீ தப்பிவிடலாம்.. திறமையான வக்கீல், பண பலம் இருந்தால் நீ தப்பிவிடக்கூடும்... அறிந்துகொள், யாருடைய பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத அந்த இறுதி தீர்ப்பு நாளில்  இறைவன் உனக்கு அளிக்கும் தண்டனையில் இருந்து அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ தப்பிக்க முடியாது.

இன்று கதறி அழுது, வயிறெரிந்து இருக்கும் அவரின் பெற்றோர்களின் மூஞ்சியிலும், அநியாயமாக இறந்த பெண்ணின் மூஞ்சியிலும் அன்று நாங்கள் நீதி கிடைத்த  மகிழ்சியையும், நிம்மதியையும் மற்றும் புன்னகையையும் காண்போம்.  அந்த இறுதித் தீர்ப்பு நாளில் இருக்கு உனக்கு ஆப்பு....

இந்த இடத்தில் தான் நாம் அனைவரும், கடவுள் இல்லை என்பவர்கள் உட்பட சிந்திக்க வேண்டும்.... உலக சட்டத்தை மட்டும் நம்பினால்?? இந்த குற்றவாளிகள் லஞ்சம் கொடுத்து தப்பி விட்டால்?? விநோதினியின் கஷ்டத்திற்கு என்ன தீர்வு?? அவள் பாதிப்புக்கு பதில் என்ன?? அல்வா தானா???? கடவுள் இல்லை என்பவர்களே பதில் சொல்லுங்கள்???

இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஹதீஸ்(நபி ஸல் அவர்கள் கூறியது) :


2413. அனஸ்(ரலி) அறிவித்தார்.
யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், 'உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?' எனறு கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி ("ஆம், அவன்தான்" என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனுடைய தலை நசுக்கப்பட்டது.
Volume :2 Book :44


2703. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
என் தந்தையின் சகோதரி - ருபய்யிஉ பின்த்து நள்ர், - ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தாரிடம் என் குலத்தார், 'இழப்பீட்டுத் தொகையைப் பெறுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்து விடும்படி சொல்லுங்கள்" என்று கோரினார்கள். அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். எனவே, எங்கள் குலத்தார் நபி(ஸல்) அவர்களிடம் (விபரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழி வாங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ரு(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமாக! அவளுடைய முன்பல் உடைக்கப்படாது" என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், 'அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (எனவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)" என்று கூறினார்கள். பிறகு, அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக் கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்" என்றார்கள்.


அனஸ்(ரலி) வழியாக அறிவிக்கப்படும் மற்றோர் அறிவிப்பில், '(அந்த வாலிபப் பெண்ணின்) குலத்தார் (பழிவாங்காமல்விட்டுவிட) ஒப்புக் கொண்டு பரிகாரத் தொகையை ஏற்றார்கள்' என்று வந்துள்ளது.
Volume Book :53


இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குரான் வசனம் :

அறிவுடையோரே !பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து)விலகிக்கொள்வீர்கள்.
அல்குரான். 2: 178,179.


உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் அவர்களுக்கு விதியாக்கினோம்.
(பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும்.
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

(அல் குர் ஆன் 5:45)


நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக(கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக(கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக(கொலை செய்த)பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழிவாங்குவது  உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு(கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்கவேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனை உள்ளது.

என்னே விநோதம்???

மார்க்கபந்துகளின் இந்த முடிவைத் தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் கேட்டிருக்கிறார்கள்... எக்ஸாட்லி டிட்டோ... இதையே தான் கேட்டு இருக்கிறார்கள். இஸ்லாம் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையில் இருந்து தீர்ப்பு சொல்கிறதுக்கு என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை.

பாதிக்கப்பட்டவர்களின் மனக்காயத்துக்கு ஆறுதல் தரும் சட்டத்தை தந்த  இறைவா!! நீயே தூயவன்... நீயே உலகத்தின் அதிபதி.. நாங்கள் அனைவரும் உன்னுடைய அடிமைகள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.. 


இறைவனே மிக்க அறிந்தவன்........

ஞானிக்கு ஒரு கேள்வி :

இது குறித்து எழுத்தாளர் ஞானியிடம் இன்று காலை புதிய தலைமுறை கருத்து கேட்டது.

இந்த சம்பவங்கள் நடக்க என்ன காரணம்?

ஞானி ஒரு நொடி கூட யோசிக்காமல் சொன்ன பதில்     "சினிமா".

மேலும் அவர் சொன்ன சில விஷயங்கள்...

"சினிமாவை நம்பும் ஒரு பெரிய கூட்டம்(தலைமுறை) இன்னும் நம்மிலே இருக்கிறது"

 "இந்த சம்பவங்களுக்கு சினிமா தான் காரணம்",

"சினிமாவில் காட்டப்படும் தவறான விஷயங்களை தவறு என்று சுட்டிக்காட்ட நம்மிடம் கல்வி முறையோ, அமைப்புகளோ இல்லை".

ஐயா ஞானி, இத தானே "விஸ்வரூப" பிரச்சனையில் நாங்கள் கத்தி, கதறி சொன்னோம். படம் வந்த பிறகு எதிர்ப்பது தான் சரி என்று சொன்னீர்களே???? நம்ம கிட்ட தான் அப்படி சரியாக எடுத்துச் சொல்லும் சிஸ்டம் இல்லையே??? (உங்க கருத்துப்படி தான்... ஹி..ஹி..ஹி), பின்ன எப்படி படம் வந்த பிறகு மக்களுக்கு புரிய வைக்கிறது???

"மற்றவர்களுக்கு வந்தா இரத்தம், முஸ்லிம்களுக்கு வந்தா தக்காளி சட்னி" - என்ற கொள்கையில் இல்லாதவர் நீங்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நீங்கள் தவறானவர் என்று எனக்கு தோன்றவில்லை.. ஆனால் உங்கள் பேச்சில் நீங்கள் அறியாமலே எவ்வளவு முரண்பாடுகள் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். எங்கு இடைவெளி இருக்கிறது என்று சிந்தியுங்கள், உங்களை திருத்திக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் பெருமை சேர்ப்பதாகவே இருக்கும்.

73 கருத்துகள்:

 1. salam sago.!
  kalathuku eatra pathivu!
  entha pathivai eathirkavum oru sila per varuvarkalo?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் சலாம் அப்சல்...

   இந்த பதிவில் சொல்லி இருக்கும் விஷயங்கள் நடைமுறைக்கு ஒத்து வரும் விஷயம்...எதிர்ப்பு வந்தாலும் அதற்காக உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது அல்லவா????

   வருகைக்கு நன்றி...

   நீக்கு
 2. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சிராஜ் பாய்,
  காலையில் அந்த மரணத்தை பற்றி செய்தி படிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய நீதியை இந்த சட்டம் வழங்கி விட போகிறது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதற்கு பதில் தான் சத்தியமாக தெரியவில்லை. ஆனால் ஞாநி சொல்லுகின்ற காரணத்தை வைத்து பார்க்கும் போது சினிமாக்காரர்கள் மீதும் ஆசிட்டை ஊத்துகின்ற தண்டனையை நிறைவேற்ற வேண்டும் போல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் சலாம்..
   பண்பின் சிகரம் சேக் தாவுத் தம்பி.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

   ஞானி இந்த விஷயத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்... சினிமா வந்த பிறகு எதிர்க்கலாம் என்ரு விஸ்வரூபம் பிரச்சனையின் போது சொல்கிறார்... இப்பொழுது சினிமாவை நம்பும் தலைமுறை நம்மிடயே இருக்கிறது.. அவர்களுக்கு எடுத்து சொல்லும் சிஸ்டம் இல்லை என்று கூறுகிறார்... நேரத்துக்கு ஒன்னு பேசுறாங்க.. கடுப்பா இருக்கு...

   நீக்கு
 3. அஸ்ஸலாமு அலைக்கும்..

  சரியான நேரத்தில் சரியான பகிர்வு..

  இஸ்லாம் கூறும் சட்டங்கள் அனைத்தும் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பது சிந்தித்து உணரக் கூடிய எம்மதத்தை சேர்ந்தவர்களுக்கும் விளங்கும்..

  ஜசக்கல்லாஹ் ஹைரன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் சலாம் யாஸ்மின்...

   // இஸ்லாம் கூறும் சட்டங்கள் அனைத்தும் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பது சிந்தித்து உணரக் கூடிய எம்மதத்தை சேர்ந்தவர்களுக்கும் விளங்கும்.. // இதை அனைத்து சகோதர, சகோதரிகளும் உணரும் காலம் ஒன்று நிச்சயம் வரும்... உலகம் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்குறது...

   அநீதி மிகைக்கையில் மக்கள் ஆட்டோமெட்டிக்கா நீதியின் பக்கம் வருவார்கள்..அந்த நாள் விரைவில் வரும்... இன்ஷா அல்லாஹ்...

   நீக்கு
 4. காலையில் அந்தச் செய்தியைப் படித்ததும் மனம் கனத்துப் போனது. அந்தக் கயவனுக்கும் அதே தண்டைனை தர வேண்டுமென கேட்கிறாள் என்றால், எந்தளவு வேதனை, வலி இருந்திருக்கும் விநோதினிக்கு? தீப்புண்ணைவிட ஆசிட் மிகக் கொடியதாம். மேல் காயம் ஆறினாலும், உள்ளிருந்து கொப்பளித்துக் கொண்டேயிருக்குமாம். அல்லாஹ் எல்லாரையும் காக்கட்டும். கண்டிப்பாக அவனுக்கு இதே தண்டனை தரவேண்டும். இதைப் பார்த்து, இனியொருவனும் ஆசிட் பாட்டிலைக் கையில் எடுக்கக்கூடாது.

  டெல்லி சம்பவத்திலும், மாணவியின் பெற்றோர்கள் - குற்றவாளிகளுக்கு - வயது வித்தியாசம் பாராமல் தூக்கிலிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்க்கிறார்கள். ஆனால், அக்குற்றாவாளிகளின் வழக்கறிஞர் அவர்கள் குற்றம் செய்யவில்லை என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருக்கிறார். என்னாகுமோ??!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // ஆனால், அக்குற்றாவாளிகளின் வழக்கறிஞர் அவர்கள் குற்றம் செய்யவில்லை என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருக்கிறார். என்னாகுமோ??!! //

   நிச்சயம் பேசுவார்கள்..பொய்களை கட்டவிழ்த்து குற்றவாளிகளை காப்பாற்றியும் விடுவார்கள்.. இந்தியாவில் யார் சிறந்த வக்கீல் தெரியுமா?? குற்றாவாளிகளை காப்பாற்றுபவர்களே.. வெட்கக் கேடு..

   நிச்சயம் குற்றவாளிகள் தப்பி விடுவார்கள் ஹுஸைனம்மா... தெரியாமல் எத்தனை தவறுகள் நடக்கின்றன.. அதில் குற்றவாளிகளுக்கு யார் தண்டனை கொடுப்பது....

   இந்த இடத்தில் தான் நாம் அனைவரும், கடவுள் இல்லை என்பவர்கள் உட்பட சிந்திக்க வேண்டும்.... உலக சட்டத்தை மட்டும் நம்பினால்?? இந்த் குற்றவாளிகள் லஞ்சம் கொடுத்து தப்பி விட்டால்?? விநோதினியின் கஷ்டத்திற்கு என்ன தீர்வு?? அவள் பாதிப்புக்கு பதில் என்ன?? அல்வா தானா???? கடவுள் இல்லை என்பவர்களே பதில் சொல்லுங்கள்???

   ஆனால், உண்மை நீங்கள் நினைப்பது போல் இல்லை, இங்கு யாரை ஏமாற்றியும் தப்பிவிடலாம்.. ஆனால் இறுதி திர்ப்பு நாளில், யாருடைய பரிந்துறையும் ஏற்றுக்கொள்ளப்படாத அந்த நாளில் வழங்கப்படும் தண்டனை தான் உண்மையானது, முழுமையானது.. அது இல்லாட்டி, பணக்காரன் மட்டுமே இந்த உலகில் வாழத் தகுதியானவன் என்ற சூழல் வந்துவிடும்... இதை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது.. சிந்திக்கும் மக்களுக்கு இதில் ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன... இறைவனே மிகவும் அறிந்தவன்..

   நீக்கு
 5. "மற்றவர்களுக்கு வந்தா இரத்தம், முஸ்லிம்களுக்கு வந்தா தக்காளி சட்னி" - என்ற கொள்கையில் இல்லாதவர் நீங்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்....><><><><><><><><><>

  பதிலளிநீக்கு
 6. //ஞானி ஒரு நொடி கூட யோசிக்காமல் சொன்ன பதில் "சினிமா"//

  திரைப்படஙக்ளில் இஸ்லாமியர் பற்றிய எதிர்ப்பு குறித்து பல்வேறு மக்களும் எதிர்த்துக் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த வாரம் “நீயா-நானா”வில் பங்குபெற்ற இளைஞரொருவர் “முஸ்லிம்கள் என்றால் பார்த்துப் பழகு” என்று அம்மா சொன்னதாகச் சொன்னாராமே!! இந்த நிகழ்ச்சி, இரண்டு மாதஙக்ளுக்கு முன்பே - அதாவது விஸ்வரூப எதிர்ப்புக்கு முன்பே- பதிவு செய்யப்பட்டதாம்!! (http://abiappa.blogspot.com/2013/02/30.html)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹுஸைனம்மா....

   சினிமாவை பார்த்து யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்று வாதிடுபவர்களுக்கே தெரியும் அது தவறான வாதம் என்று.. பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார்கள்.. உண்மையில் இந்த தலைமுறை ஆழ்ந்து படித்து உண்மையை அறியும் தலைமுறை அல்ல.... மேலோட்டமாக டிவியில் பார்ப்பதை வைத்து பேசக்கூடியவர்களே அதிகம்..இதை நான் பல முறை அவதானித்தது உண்டு.... இவ்வாறான சூழ்நிலையில் உலக அளவில் மீடியாக்கள், பெரும்பாலானவை அமெரிக்கர்களின் கையில் இருப்பவை... அவர்கள் சுய தேவைக்காக இஸ்லாமியர்களை தீவிர வாதிகளாக காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..இங்கு இருப்பவர்கள் கொஞ்சம் கூட ஆராயாமல் அதை அப்படியே வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.. வெட்கக் கேடு...

   உதாரணம், தாலிபன் எதிர்ப்பு..எதுக்குப்பா தாலிபன எதிர்க்கிறீங்கன்னு கேட்டா புத்தர் சிலைய இடிச்சான்,இரட்டை கோபுரத்த தகர்த்தான், பெண்கள படிக்க விடல, கஞ்சா பயிரிட்றான்(அட அல்லாஹ், கஞ்சாவ ஒழிச்சவங்கள பார்த்து பயிரிட்டான்னு சொல்றாங்களே??? அவ்வ்வ்வ்வ்வ்வ்) இத தவிர ஒன்னும் சொல்லத் தெரியல.. அடப்பாவிங்களா 2 புத்தர் சிலைய உடைச்சவன் உலக தீவிர வாதின்னா, பெட்ரோல் திருடுவதற்காக வெபன்ஸ் ஆப் மாஸ் டிஸ்ட்ரக்ஸன்னு சொல்லி ஈராக்கையே அழிச்சவன என்னப்பா சொல்வீங்கன்னு கேட்டா உளர்றாங்க... அடுத்த பதிவு சூடா இருக்கும் ஹுஸைனம்மா.... இன்ஷா அல்லாஹ்....

   நீக்கு
 7. //அறிந்துகொள், யாருடைய பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத அந்த இறுதி தீர்ப்பு நாளில் இறைவன் உனக்கு அளிக்கும் தண்டனையில் இருந்து அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ தப்பிக்க முடியாது.

  இன்று கதறி அழுது, வயிறெரிந்து இருக்கும் அவரின் பெற்றோர்களின் மூஞ்சியிலும், அநியாயமாக இறந்த பெண்ணின் மூஞ்சியிலும் அன்று நாங்கள் நீதி கிடைத்த மகிழ்சியையும், நிம்மதியையும் மற்றும் புன்னகையையும் காண்போம். //

  சுபஹானல்லாஹ்! எவ்வளவு அருமையான வரிகள். புல்லரித்தது சகோதரா..!!

  நேரத்திற்க்கு தேவையான மிக அருமையான கட்டுரை. இறைவன் நற்கூலி வழங்குவானாக..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் உங்களுக்கு தனியாக மெசேஜ் செய்த என்னுடைய இன்னொரு கருத்தை இங்கேயே சொல்ல சொன்னதை பாராட்டுகிறேன்.

   சிறப்பான இந்த கட்டுரையை பாரட்டுதுலோடு என்னுடைய இன்னொரு ஒரு சிறிய கருத்தையும் சொல்லிக் கொள்ள விரும்பிகின்றேன். இந்த பதிவில் "நாயே" என்று வார்த்தை உபயோகிப்பதை முடிந்தால் எடுத்து விடுங்கள். கட்டுரை இன்னும் மிக சிறப்பாக இருக்கும்.

   நீக்கு
  2. சகோ ரஃபி,

   எதுவும் வெளிப்படையாக இருப்பது நல்லது தானே???

   மன்னிச்சுக்கங்க சகோ.. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு எழுதினேன் இந்த கட்டுரையை.. மரண செய்தி கேட்டு அவங்க அப்பா அழுதத பார்த்ததும் இரத்தம் கொதிச்சிச்சு.... அதுல கொஞ்சம் வரம்பு மீறி விட்டேன்....

   நாய் என்ற வார்த்தையை இப்பொழுதே நீக்கி விடுகிறேன்... எந்த சூழ்நிலையிலும் வார்த்தையில் கண்ணியம் காக்கும்/காக்கக் சொல்லும் உங்கள் போன்றோர் இருப்பது மிகப் பெரிய பலம்...

   நீக்கு
  3. டன்... ஆட்சேபத்துக்கு உரிய அந்த வார்த்தைகளை நீக்கி விட்டேன்/மாற்றி விட்டேன்...

   :-) :-)) :-)))

   நீக்கு
  4. மாஸா அல்லாஹ்!

   என் கருத்தை ஆமோதித்தர்க்கும், உடனடி நடவடிக்கைக்கும மற்றும் உங்கள் கருத்துகளுக்கும் ஜசகல்லாஹைர் சகோ. சிராஜ்.

   பாஸ்.. என்னிடம் எதற்கு மன்னிபெல்லாம்? அதை இறைவனிடம் கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு நல்ல பதிவில் இருந்த இதை மாற்றிகொள்ளலாமே என்று எனக்கு தோன்றிய ஒரு சிறிய விஷயத்தை சொன்னேன். அதை வெளிப்படையாகவும் சொல்ல சொல்லி உடனே தூக்கியும் விட்டீர்கள். எவ்வளவு சிறந்த பண்பு அது..!!

   உண்மை..! இறை நம்பிக்கையாளர்களானா நமக்கு நம் மார்க்கம் தந்தது இறை பயத்துடன் கூடிய கண்ணியம். அநியாயம் செய்த ஒருவரை திட்டும்போதோ சாபம் விடும்போதோ அவர் அநியாயம் செய்ததை விட அதிகமாக நாம் திட்டி அது அவருக்கு நாம் அநியாயம் செய்ததாக இறைவிடம் நம் மீது குற்றம் ஆகி விடக்கூடாது என்பதரக்க்காகவும் அதை எடுத்துவிட சொன்னேன். உடனே செய்தும் விட்டீர்கள்.

   இரண்டாவது இந்த பதிவு காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த தாவா பதிவு! ஆதலால் என் பேஸ்புக் சுவரிலும் இந்த பதிவை பகிர்ந்துள்ளேன்.

   //இந்த இடத்தில் தான் நாம் அனைவரும், கடவுள் இல்லை என்பவர்கள் உட்பட சிந்திக்க வேண்டும்.... உலக சட்டத்தை மட்டும் நம்பினால்?? இந்த் குற்றவாளிகள் லஞ்சம் கொடுத்து தப்பி விட்டால்?? விநோதினியின் கஷ்டத்திற்கு என்ன தீர்வு?? அவள் பாதிப்புக்கு பதில் என்ன?? அல்வா தானா???? கடவுள் இல்லை என்பவர்களே பதில் சொல்லுங்கள்???// சூப்பர் கேள்விகள். இதைக் கூட உங்கள் பதிவில் சேர்க்கலாம்.
   நீக்கு
  5. சேர்த்துவிட்டேன் ரஃபி...

   நீக்கு
 8. அஸ்ஸலாமு அலைக்கும்..

  சரியான நேரத்தில் சரியான பகிர்வு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் அஸ்ஸலாம் வெறி பிடித்த வஹ்ஹாபிய கூட்டத்தின் பதிவுல தலைவரே....!!!!!


   வருகைக்கு நன்றி அண்ணே... தலைவரின் கமெண்ட் பார்த்ததும் தொண்டனின் கண்கள் ஆனந்த கண்ணீரில் நனைகின்றன....:-)

   நீக்கு
 9. சலாம் சிராஜ்! எப்படியாவது அந்த சகோதரியின் உயிராவது பிழைத்துவிடும் என்று எதிர்ப்பார்த்தோம். 'கண் இல்லாமல் நான் இருந்து என்ன செய்யப் போகிறேன்' என்று மனம் குமுறி அழுதே போய்ச் சேர்ந்துவிட்டார் :'(

  //அந்த பெண் மற்றும் அவரின் உறவினர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அவன் மூகத்தில் ஆசிட் ஊற்ற வேண்டும்.. ஆசிட் ஊற்றியும் அவன் கண் பார்வை பறி போகாவிட்டால், அவன் கண் பார்வையையும் பறிக்க வேண்டும்.. அந்த பெண் அனுபவித்த வேதனையை அவன் வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டும் அல்லது இதே போல் 3 மாதத்தில் மூச்சுத் திணறல் வந்து சாக வேண்டும்//

  அனைவரின் எதிர்ப்பார்ப்பும் இதுதான். நிச்சயமா இனியாவது தண்டனையிலிருந்து அந்த‌ ராஸ்கல் தப்பக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதி கொடுப்பது இஸ்லாமிய சட்டம் மட்டுமே! அந்த சட்டங்களை நோக்கி இந்தியா வரும்வரை எத்தனை விநோதிகள் பழியாகப் போகிறார்களோ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் சலாம் அஸ்மா அக்கா..

   எல்லோருமே அந்த பின் பிழைத்துவிடுவால் என்று தான் நினைத்தோம்... பட் எதிர்பாராத விதமாக மரணித்து விட்டார்...

   // நிச்சயமா இனியாவது தண்டனையிலிருந்து அந்த‌ ராஸ்கல் தப்பக்கூடாது. // நிச்சயமா... மென்மையான தண்டனைகள் கொடுக்கும் வரை, நாம் இன்னும் பல விநோதினிகளை காவு கொடுக்கத்தான் வேண்டி இருக்கும்....

   வருகைக்கு நன்றி அக்கா...

   நீக்கு
 10. //அறிந்துகொள், யாருடைய பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத அந்த இறுதி தீர்ப்பு நாளில் இறைவன் உனக்கு அளிக்கும் தண்டனையில் இருந்து அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ தப்பிக்க முடியாது.//

  அந்த கொடியவனை தண்டிக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் தண்டனை கொடுக்கும் அதிகாரம் இறைவனுக்கு இருக்கிறதா அல்லது மனிதர்களுக்கு இருக்கிறதா? இறைவன் கண்டிப்பாக தண்டிப்பார் என்றால் மனிதர்கள் ஏன் தண்டிக்க வேண்டும்? ஒரே குழப்பமாக உள்ளது.

  குற்றவாளியை விட்டுவிட்டால் மேலும் குற்றங்கள் செய்வார் என்பதற்காக மனிதர்களே தண்டிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட பாதிக்கப் பட்டவர் மன்னித்து விட்டுவிட்டால் அந்த குற்றவாளி மீண்டும் குற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குட் கொஸ்டின் பிரதர்...

   நான் ஆபிஸ் கிளம்பிக்கொண்டு இருக்கிறேன்... அங்கு போனதும் பதில் சொல்கிறேன்.. அல்லாது எனது சகோக்கள் யாரும் பதில் அளிப்பார்கள்..

   அப்ரிசியேட்...

   நீக்கு
  2. @விஜய் பாதிக்கப் பட்டவர் மன்னித்து விட்டுவிட்டால் அந்த குற்றவாளி மீண்டும் குற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளதே.///


   இதை படிங்க சகோ

   http://www.satyamargam.com/1746

   நீக்கு
  3. @அன்பு சகோ விஜய்

   முதல் பாதிக்கு பதிலை தெளிவாக நீங்களே சொல்லி விட்டதால் இரண்டாம் பாதிக்கான (கேள்விக்காக) பதிலை சொல்ல முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்

   ** குற்றவாளியை விட்டுவிட்டால் மேலும் குற்றங்கள் செய்வார் என்பதற்காக மனிதர்களே தண்டிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட பாதிக்கப் பட்டவர் மன்னித்து விட்டுவிட்டால் அந்த குற்றவாளி மீண்டும் குற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளதே **

   சரிதான் ஆனால் முதல் முறை கிடைக்கப்பெற்றும் மன்னிப்பு போல இரண்டாம், மூன்றாம் முறையும் கிடைக்க வாய்ப்பில்லையே சகோ.. குற்றத்தை அடிப்படையாக கொண்டு இச்சமூகத்தில் நிகழும் செயல்கள் யாவற்றையும் அணுகும் நாம் அதை ஒரு துயர சம்பவம் அல்லது சமூக ரீதியான பிரச்சனை எனும் கோணத்தில் மட்டுமே பார்க்கிறோம். ஆக பிரச்சனையின் இருபுறத்தையும் பாக்கிறோம். அதனால் தான் குற்றம் சுமத்தப்படுபவருக்கும் சாதகமான நிலைப்பாட்டை மனிதாபிமான அடிப்படையில் எடுக்கிறோம்

   ஆனால் பாதிக்கப்பட்டவர் நிலையில் இருந்து அதை அணுகும் போது மன்னிப்பென்பது மிக பெரிய விசயமாக தான் தோன்றும். அதிலும் குற்றம் நிருபிக்கப்படும் தருணங்களில் மன்னிக்கும் தன்மை நூற்றுக்கு ஒரு சதவீகிதம் மட்டுமே இருக்க சாத்தியம். சாராசரி மனிதர்களின் எண்ண ஓட்டம் அப்படியானது தான்.

   எதிர்பாராத விதமாகவோ, தவறுதலாகவோ, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எவ்வித முன் திட்டமிடலும் இன்றி ஒருவர் தவறு செய்வாரானல் அவரது செய்கை தவறானது என்பதை அவருக்கு உணர்த்தும் விதமாக மறுபடி திருந்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக தான் தான் "பாதிக்கப்பட்டவரின் மன்னிப்பு" என்ற ஒரு ஆப்சனும் மார்க்கம் ஏற்படுத்தி இருக்கிறது.

   ஆக வேண்டுமென்றே, தனது சுய நலத்திற்காக செய்யப்படும் மேற்கண்ட நிகழ்வை போல ஒரு செயலுக்கு மன்னிப்பு வழங்க எவர் மனமும் ஒத்துக்கொள்ளாது. அதை அந்த பெற்றோர்களின் கதறலும் சாட்சி பகர்கிறது. தொடர்ந்து செய்யப்படும் தவறுகள் எப்போதும் மன்னிக்கப்பட்டுக்கொண்டே இருக்க கூடாதென்றால் முதல் முறை தவறுக்கே மிக சரியான தண்டனை சட்டத்தால் கொடுக்கப்பட வேண்டும்!.

   இதுப்போன்ற பல ஆசிட் சம்பவங்களும், கற்பழிப்பு சம்வங்களும் நம் தெருக்களில், ஊர்களில், நாட்டில் சனி ஞாயிறு நீங்கலாக வாரம் முழுவதும் வரும் சீரியல் போல நம் மனசாட்சியை கேவலமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு தினம் தினம் கடந்துதான் போகின்றன...

   தெளிவான சட்ட முறைமைகள் என்பது 'குற்றவாளிகளை குறைப்பதற்காக இல்லாமல் குற்றங்களை குறைப்பதற்காக இயற்றப்பட்டிருக்க வேண்டும்'. "நீதி நிலை நாட்டல்" என்பதற்கு தெளிவான வரையறைகள் நமக்கு தெளிவாகவரை
   மனிதம் காப்போம் மனித நேயம் காப்போம் என பொதுவெளியில் உரக்க குரலிடுவது விறலுக்கு இறைத்த நீராகி தான் போகும்.

   இறுதியாக...
   "சட்டங்கள் கடுமையாக்கப்படாதவரை குற்றங்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை..!


   @ அன்பு சகோ சிராஜ்
   சரியான இலக்கை நோக்கிய ஒரு நேர்த்தியான பதிவிற்கு நன்றி ஜஸாகல்லாஹ் கைரா

   உங்கள் சகோதரன்
   குலாம்

   நீக்கு
  4. வ அலைக்கும் சலாம் என் அருமைத் தம்பி ஹஸன் அன்ட் குலாம்...

   அழகான, தெளிவான விளக்கத்திற்கு நன்றி... முடிந்தால் என்னுடைய கருத்தையும் பகிர்கிறேன்....

   நீக்கு
  5. @முஹம்மத் ஹசன்

   //http://www.satyamargam.com/1746

   மருத்துவரும் ஆயத்தமாக இருந்தார். குற்றவாளியான மாஜிதின் கண்ணொன்றில் சில சொட்டுகள் அமிலக் கலவை இடுவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே மீதமிருந்தன.

   அப்போது ஒலித்தது ஆமினாவின் குரல். "அவனை விட்டுவிடுங்கள், அவனை விட்டுவிடுங்கள், நான் அவனை மன்னித்துவிட்டேன்"

   இதயங்களைப் புரட்டக் கூடிய இறைவனின் கருணைதான் அங்கே ஆமினாவின் குரலாய் ஒலித்தது.

   இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த செய்திதான் இது.

   மாஜிதின் கண்களிலிருந்து இப்போதும் நீர் வழிந்தபடி இருக்கிறது. ஆனால் அதில் வன்மம், வக்கிரம் என்னும் திராவகங்களின் எரிச்சல் இல்லை. அதில் அன்பின் ஆனந்தம் வழிகிறது இப்போது.

   மன்னிக்கப்பட்ட இதயத்திலிருந்து
   ஊற்றெடுக்கிறது கண்ணீர்
   மனிதத்தின் வேருக்கு நீராய்.//

   அப்படியென்றால் சுரேஷும் கண்ணீர் விட்டு அழுதான் என்றால் மன்னித்து விட்டு விடலாமா?

   நீக்கு
  6. @G u l a m

   //ஆக வேண்டுமென்றே, தனது சுய நலத்திற்காக செய்யப்படும் மேற்கண்ட நிகழ்வை போல ஒரு செயலுக்கு மன்னிப்பு வழங்க எவர் மனமும் ஒத்துக்கொள்ளாது. அதை அந்த பெற்றோர்களின் கதறலும் சாட்சி பகர்கிறது. தொடர்ந்து செய்யப்படும் தவறுகள் எப்போதும் மன்னிக்கப்பட்டுக்கொண்டே இருக்க கூடாதென்றால் முதல் முறை தவறுக்கே மிக சரியான தண்டனை சட்டத்தால் கொடுக்கப்பட வேண்டும்!. //

   முஹம்மத் ஹசன் கொடுத்த இணைப்பில் இதே தவறை (முதல் முறை) செய்தவனுக்கு மன்னிப்பு வழங்கியதை பெருமையாக கூறுகிறார்கள். நீங்கள் முதல் முறை தவறுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். எனக்கு தலை சுற்றுகிறது.

   நீக்கு
  7. @விஜய் அவர்களுக்கு,

   //நீங்கள் முதல் முறை தவறுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.//

   இது அவருடைய கருத்து. இஸ்லாம் அப்படியெல்லாம் வரை முறை வைக்கவில்லை.

   இஸ்லாம் சொல்லும் இந்த விஷயம் மிக எளிது. எந்த குழப்பமும் வேண்டாம்.

   யாருக்கு அநியாயம் இளைக்கப்பட்டதோ அவர்களின் கையில் தீர்ப்பைக் கொடுக்கிறது இஸ்லாம். அவர்கள் குற்றவாளி தண்டிக்கபட வேண்டுமென்று விரும்பினால் அரசு தண்டிக்க வேண்டும், இல்லை அவர்கள் குற்றவாளியை மன்னித்துவிட வேண்டுமென்று விரும்பினால் அரசு அவனை மன்னிக்கும் பாதிக்கப்பட்டவர்க்கு கொடுக்க வேண்டிய ஒரு ஈட்டு தொகையுடன்.

   இது முதல் முறையானாலும் சரி, பல முறையானாலும் சரி, தீர்ப்பு பாதிக்கப்பட்டவரிடம் தான்.

   //முஹம்மத் ஹசன் கொடுத்த இணைப்பில் இதே தவறை (முதல் முறை) செய்தவனுக்கு மன்னிப்பு வழங்கியதை பெருமையாக கூறுகிறார்கள்.//

   தண்டித்தலுக்கு உள்ள முழு உரிமையை இஸ்லாம் பாதிக்கப்பட்டவருக்கு கொடுத்தாலும்.. மன்னிப்பு அதனிலும் சிறந்தது என்று கூறுகிறது. ஆனால் மன்னிப்பு தான் கட்டாயம் என்று கூறவில்லை.

   அதவாது, எந்த ஒரு திட்டமிடாமல் உள்நோக்கம் இல்லாமல் நடந்த தவறுக்கு மன்னிக்கலாமா அல்லது தண்டிக்கலாமா, அதேபோல் ஒரு தடவை மன்னித்தும் கூட தன்னை திருத்திகொள்ளாமல் திரும்ப திரும்ப செய்யும் தவறுக்கு மன்னிக்கலாமா அல்லது தண்டிக்கலாமா என்பது எல்லாம் பாதிக்கப் பட்டவனின் கையிலேயே கொடுத்துவிடுகிறது. அவர் விரும்பினால்.. முதல் முறையே தண்டிக்க சொல்லலாம்... அல்லது திரும்ப திரும்ப செய்யும் தவறை கூட மன்னிக்க சொல்லாம். As simple as that.

   //அப்படியென்றால் சுரேஷும் கண்ணீர் விட்டு அழுதான் என்றால் மன்னித்து விட்டு விடலாமா? //

   ஆம். அதற்க்கு கண்ணீர் விட்டு அழுகவெல்லாம் தேவை இல்லை. கண்ணீர் விடாமலேயே..வினோதினியின் தந்தையும், தாயும் சேர்ந்து (அதாவது வினோதினியின் இரத்த உறவுகள்) அவரை மன்னிக்க எண்ணினால்.. சுரேஷை இஸ்லாமிய சட்டம் தண்டிக்காது. அதில் ஒருவர் மன்னித்து, ஒருவர் மன்னிக்கவில்லை என்றாலும் கூட மன்னிப்பு கிடையாது. தண்டனை அளித்ததாக வேண்டும்.

   அப்படி பார்க்கையில் இந்த பிரச்னையில் அவர் தந்தை சுரேஷை மன்னிக்க சொல்லவில்லை.

   கண்ணுக்கு கண்,
   பல்லுக்கு பல்,
   ஆசிட் வீச்சுக்கு ஆசிட் வீச்சு என்கிறார்!!

   பாதிக்கப்பட்டவரின் ஓலம். உரிமைக் குரல்.

   இதை அளித்தால்.. பாதிக்கப்பட்டவருக்கும் நீதி.
   நாளை பல விநோதிநிகளும் காப்பற்றபடுவார்கள்.

   Cure க்கு Cure, Prevention க்கு Prevention!!

   நான் சாட்சியம் கூறுகிறேன். வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவனே!
   முஹம்மது (ஸல்.) அவர்கள் இறைவனின் திருத்தூதர்!!

   நீக்கு
 11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 12. இந்த அரசின் தண்டணைகளில் இருந்து ஒரு வேலை நீ தப்பிவிடலாம்.. திறமையான வக்கீல், பண பலம் இருந்தால் நீ தப்பிவிடக்கூடும்... அறிந்துகொள், யாருடைய பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத அந்த இறுதி தீர்ப்பு நாளில் இறைவன் உனக்கு அளிக்கும் தண்டனையில் இருந்து அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ தப்பிக்க முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காபி பேஸ்ட் பண்ணது ஓக்கே தாரிக்...

   பட் தாங்கள் சொல்ல விரும்பியது என்னவோ???

   நீக்கு
 13. அஸ்ஸலாமு அலைக்கும்
  சகோ.சிராஜ்,
  சரியான நேரத்தில் சரியான தீர்வு..!

  நீங்கள் நீதிபதியாக இருந்தால் சகோதரி வினோதினியின் குடும்பம் சொந்தம் மற்றும் பந்தம் எல்லாம் மன சாந்தி அடையும். இனி ஒரு 'ஆசிட் சுரேஷ்' தமிழ்நாட்டில் உருவாக பல வருஷம் ஆகும். எவனும் ஆசிட் பக்கமே போக மாட்டான்..!

  அரசே... நீதி மன்றமே...
  தயவு செய்து இஸ்லாமிய சட்டங்களை ஏற்றுக்கொண்டு இந்திய சட்டங்களை திருத்து.
  உனக்கு ஒரு பாட்டில் ஆசிட் வாங்க பணம் வேண்டுமானால் நான் தருகிறேன்.
  ஆனால், எனது வரிக்காசில் அந்த குற்றவாளி சுரேஷுக்கு உன் மாமியார் வீட்டில் உக்காரவச்சி மனியடிச்சி வருஷக்கணக்கில் சோறு போட ஒரு நயா பைசா கூட தரவேமாட்டேன்.

  மீறினால், நீ எனது காசை திருடுகிறாய் என்று அர்த்தம்..! தட்ஸ் ஆல்..!


  பாதிக்கப்பட்டவர்களின் மனக்காயத்துக்கு ஆறுதல் தரும் சட்டத்தை தந்த இறைவா!! நீயே தூயவன்... நீயே உலகத்தின் அதிபதி.. நாங்கள் அனைவரும் உன்னுடைய அடிமைகள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.. ===>>> ஆமீன்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் சலாம் சகோ ஆசிக்...

   // நீங்கள் நீதிபதியாக இருந்தால் சகோதரி வினோதினியின் குடும்பம் சொந்தம் மற்றும் பந்தம் எல்லாம் மன சாந்தி அடையும். இனி ஒரு 'ஆசிட் சுரேஷ்' தமிழ்நாட்டில் உருவாக பல வருஷம் ஆகும். எவனும் ஆசிட் பக்கமே போக மாட்டான்..! //

   நிச்சயம் நான் அதைத்தான் செய்வேன்.. எவனா இருந்தா என்ன?? சட்டத்தின் முன் சமம் தான்.. பாதிக்கப்பட்டவர்கள் மகிழும் வண்ணமே தீர்ப்பு இருக்க வேண்டும்..

   வருகைக்கு நன்றி சகோ...

   நீக்கு
 14. வருகைக்கும், சுட்டிக்கும் நன்றி சகோ உண்மைகள்...

  பதிலளிநீக்கு
 15. அந்தப் பெண்ணின் மீது ஒருவன் ஆசிட் ஊற்றும்போது அந்த இறைவன் என்ன செய்துகொண்டு இருந்தான்.

  …அந்தப் பெண் ஒரு கொடியவளா?

  …அந்த இறைவனே அவனை அனுப்பினானா?

  …இதற்கு உண்டான விடையை உங்கள் அரேபிய இறைவனிடம் கேட்டுவிட்டு பின்னர் கேள்விகேட்கலாம்.

  …அந்த இறைவன் ஒரு மூடன், குற்றம் நடக்குமுன்னர் தடுக்க முடியாத ஒரு கோழை. இறைவன் என்பதே வேஸ்ட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அந்தப் பெண்ணின் மீது ஒருவன் ஆசிட் ஊற்றும்போது அந்த இறைவன் என்ன செய்துகொண்டு இருந்தான். //

   ராவணன் அண்ணே., சரி உங்க வாதப்படி 'அந்த இறைவன் கெட்டவர் அல்லது இல்லைன்னே வச்சிக்கலாம்...'

   அந்த பெண் போல பல பெண்கள் நாள்தோறும் பாதிக்கப்படுகிறார்களே..கடவுள் இல்லா உலகம் காண ஆசைப்படும் நீங்களே சொல்லுங்க..

   *அந்த பொண்ணு செத்து போனதுக்கு என்ன பிரதி பலன் கொடுக்க முடியும் உங்களால்..?

   *தவறு செய்த அந்த ஆணுக்கு தண்டனை கொடுத்தால் ஓகே..? ஒரு வேளை சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி அந்த குற்றவாளி தண்டிக்கடவில்லையென்றால்.. அப்போது என்ன செய்வது?

   *இனியும் இதுப்போல் எவரும் தவறு செய்யாம இருக்க என்ன சட்டம் இயற்றலாம்.. ?

   கொஞ்சம் சத்தமா சொல்லுங்க..

   நீக்கு
 16. குலாம்!

  இராவணனின் கேள்வி: அமிலத்தை வீசி அவள் முகத்திலெறியும்போது உங்கள் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்? எல்லாம் வல்ல இறைவனென்றால் தடுத்திருக்கலாமே? அப்பெண்ணைக்காப்பாற்றியிருக்கலாமே?

  உங்கள் பதில்: தொடர்பேயில்லாமல் இருக்கிறது.

  நேரடியான கேள்விக்கு நேரடியான பதிலைச்சொல்லவும்.

  உங்கள் இறைவன் ஏன் அப்பெண்ணைக்காப்பாற்றவில்லை?

  சிராஜ்: அட்டெம்ப்ட் யுவர் ஆன்சர் ப்ளீஸ்! Others too can try. It would be interesting to see how the Great God is defended by some human beings. God needs defence and apologies :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபிர் குலசேகரன்,

   காஃபிர்களுக்கு தாவா செய்ய என்போன்ற காஃபிரே போதும். ஒரு மூமினைப் பார்த்து கேள்வி கேட்கும் அள்வுக்கு காஃபிர்கள் இருப்பதை ஏக இறைவன் நாடுவது வருத்தமாக இருந்தாலும், உங்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறோம்.

   இறைவன் நாடாமல் எதுவும் நடக்காது!!. இப்படி செயல் மூலம் இறைவனின் சட்டமே காஃபிர்களின் ஓட்டை ஜனநாயக,மத சார்பற்ற ,மனித உரிமை சட்டங்களை விட கோடி மடங்கு சிறந்தது என புரிய வைக்க வாய்ப்பு அளித்தான்!!

   நினைத்து பாருங்கள்!!

   அதே பேருந்து நிலையத்தில் அதே இடத்தில்,கூட்டம் கூட்டி அதே ப்ராண்ட் அமிலம் கொண்டு அந்த குற்றவாளி முகத்தில் ஊத்தி அதனை உலக முழுதும் டிவியில் காட்டினால் மார்க்கம் எப்படி பரவும்?

   சிந்திக்க மாட்டீர்களா??!!

   இன்னும் கேள்வி கேட்கலாம்!!

   அல்லாஹ் அக்பர்!!!!!!!!

   நன்றி!!

   நீக்கு
  2. //இராவணனின் கேள்வி: அமிலத்தை வீசி அவள் முகத்திலெறியும்போது உங்கள் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்? எல்லாம் வல்ல இறைவனென்றால் தடுத்திருக்கலாமே? அப்பெண்ணைக்காப்பாற்றியிருக்கலாமே?//

   அவ்ளோதானா கேள்வி...?

   அமிலத்தை மனிதன் கண்டுபிடிக்க எப்படி இறைவன் மனிதனை அனுமதித்தான்..?

   அமிலத்தை வீசி எரியும் சுரேஷை எப்படி இறைவன் படைத்தான்..?

   ஆசிட் சுரேஷை பெற்றெடுக்கும் பெற்றோரை எதற்கு இறைவன் படைத்தான்..?

   அந்த பெற்றோரை பெற்றெடுத்த பெற்றோரை எதற்கு இறைவன் படைத்தான்..?

   ------------இப்படியும் கேட்டுக்கிட்டே போகலாமே..?

   இதற்கெல்லாம் ஒரே பதில்....

   இவ்வுலகம் ஒரு பரீட்சை அறை மாதிரி...!

   அதில் ஒரு மாணவன் தப்பா எழுதினாலும், ஒண்ணுமே எழுதலேன்னாலும், ரைட்டா எழுதினாலும் எல்லாமே ரிசல்ட் வரும்போதுதான் தெரியும். அப்போது தேர்வு அறையில் உள்ள ஆசிரியர்... தன் கண்முன்னே ஒருவன் தப்பா எழுதினாலும், இல்லை ஒண்ணுமே எழுதாம உக்கார்ந்து இருந்தாலும், ஓடி வந்து அவனுக்கு சொல்லி தரவோ, அவனுக்காக எழுதித்தரவோ மாட்டார். காப்பி/பிட் அடிக்கவோ அவனை விட மாட்டார். காரணம் அது பரீட்சை ஹால்.

   யாரேனும் வரலைன்னாலும், உடம்பு சரி இல்லாமல் ஆப்சென்ட் என்றால் பெயில்தான். அவருக்காக ஆசிரியர் பரீட்சை எழுத மாட்டார்.

   நீங்க என்னடான்னா....

   ஆன்சர் தெரியாமல் திருதிரு ன்னு முசிச்சிட்டு இருக்கும் ஒரு மாணவரை காட்டி, அவனுக்கு மட்டும் பரீட்சை அறையில் ஆசிரியர் சொல்லி கொடுத்து இருந்திருந்தால் அவன் சென்டம் வாங்குவானே... இப்படி முப்பத்தி நாளு மதிப்பெண்ணுக்கு மட்டும் எழுதி பெயில் ஆக தயாராக மாட்டானே... என்ன ஆசிரியர் அவர்... அராஜக அக்கிரம ஆசிரியர்... இறக்க மில்லாத ஆசிரியர்... என்றெல்லாம் குறை சொல்கிறீர்களே, இது தவறு. ஏனெனில் அதெல்லாம் அங்கே ஆசிரியரின் வேலை இல்லை. கண்காணிப்பது மட்டுமே வேலை. சொல்லி கொடுப்பது பாடம் நடத்துவது எல்லாம் அல்ரெடி ஓவர்.

   இந்த உலகில் அவரவர் சுயமா சிந்திச்சு, நல்லது எது கெட்டது என்று பிரித்து பார்த்து ஏற்கனவே இறை தூதர் மூலம் இறைவன் தந்த அறிவுரையை பேணி நடக்கிறாரா இல்லையா என்றே இப்போது டெஸ்ட் நடக்கிறது.

   அதில்தான் சுரேஷ் பெயில்.

   மனிதனுக்கு இரு கடமை உள்ளன. ஒன்று இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமை. இன்னொன்னு சக மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமை.

   முதலாவதில் குறை வைத்தால்... இவ்வுலகில் எந்த தண்டனையும் இல்லை.

   இரண்டாவதில் குறை வைத்தால்... தண்டனை உண்டு. ''சக மனிதனுக்கு எந்த தீங்கும் செய்யாமல் இருக்க வேண்டும்'' என்ற கடமையை மீறினால் தண்டனை உண்டு. சக மனிதனுக்கு குற்றம் செய்தவன் இவ்வுலகில் தண்டனையில் இருந்து தப்பித்தால் மறுவுலகில் இறைவனின் தண்டனை உண்டு. இவ்வுலகிலேயே குற்றதுக்கான இறைவன் சொன்ன தண்டனையை பெற்றுவிட்டால், மறுமையில் இறைவன் நாடினால் தண்டனை இன்றி தப்புவான்.

   சக மனிதனுக்கு கேடு இழைத்த சுரேஷ் இவ்வுலகில் சரியான தண்டனை பெற்றாக வேண்டும்.

   இதுதான் இஸ்லாமிய கான்செப்ட்.

   நீக்கு
  3. ஒரு விஷயம் விட்டுட்டேன். இங்கே சுரேஷ் என்ற மாணவன், பக்கத்தில் அருமையாக பதில் எழுதிக்கொண்டு இருந்த வினோதினி என்ற மாணவியின் பேப்பரை கிழித்து விட்டான். இதற்கான தண்டனையை அவன் பெற வேண்டும். என்ன செய்யலாம்..? அவனுடைய அரை மணி நேரத்தை பிடுங்கி வினோதினிக்கு தரலாம். அல்லது கிழித்த பேப்பரை மீண்டும் சுறேஷையே எழுதி தர சொல்லலாம். அல்லது சுரேஷின் பத்து அல்லது இருபது மார்க்கை வினோதினிக்கு பிடுங்கி தந்து விடலாம். ஏதோ, ஒரு தண்டனை தந்தாக வேண்டும். அது வினோதினியின் மனம் சரியான நீதி என்று ஏற்க வேண்டும்..!

   நீக்கு
  4. முஹம்மத் ஆஷிக்! alias Citizen of the World !! (Why do u attempt to add another name with your beautiful Islamic name ?)

   //இந்த உலகில் அவரவர் சுயமா சிந்திச்சு, நல்லது எது கெட்டது என்று பிரித்து பார்த்து ஏற்கனவே இறை தூதர் மூலம் இறைவன் தந்த அறிவுரையை பேணி நடக்கிறாரா இல்லையா என்றே இப்போது டெஸ்ட் நடக்கிறது//

   கிட்டத்தட்ட என் பக்கம்தான் வருகிறீர்கள். நான் ஏற்கனவே சிராஜின் இன்னொரு பகுதியில் வைத்த வாதம் இது.

   அதாகப்பட்டது:

   மனிதர்கள் தங்கள் பிரச்சினைகளத் தாங்களே உருவாக்குகிறார்கள். அவை நல்லதோ கெட்டதோ அவற்றின் பலன்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். அனுபவித்துத்தான் தீரவேண்டும்! கெட்டதென்றால் அவர்கள்தான் அதை எப்படிச்சரி செய்வது எனத் திட்டம் போட்டு நிறைவேற்ற வேண்டும். ஆக, இறைவனுக்கிங்கிடமில்லை.

   இதே வாதத்தைக் கோடங்கி ஏன் சிரியாவில் மக்கள் அழிக்கப்படுகிறார்கள்? ஏக இறைவன் என்ன செய்தான் ? எனப் பதிவு போட்ட போது அங்கே வைத்தேன். He and his cowriters attempted to duck it.

   நீங்கள் வைத்தது இசுலாமிய கான்செப்ட்டா என்று எனக்குத் தெரியாது. இசுலாமியர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் அது என் கான்செப்ட் என்று எனக்குத் தெரியும்.

   கடைசியில் இராவணன் கருத்தே சரியாகிறது. அதாவ‌து, உங்க‌ள் க‌ருத்து வ‌ழியாக‌வே. You have not contradicted him. Rather, elucidated him. Beware, it is also the view of many atheists: only diff is that they say, if there is a God.... I say, there is a God but...

   ம‌னித‌ வாழ்க்கை ஒரு தேர்வு அறை. நாமெல்லாரும் மாணாக்க‌ர்க‌ள். நாம் எழுதுவ‌தை இறைவ‌ன் பார்க்க‌த்தான் முடியுமே த‌விர‌ அவ‌ன் ந‌ம‌க்காக‌த் தேர்வெழுத‌ முடியாது.

   இத‌ன்ப‌டி இராவ‌ண‌னின் ந‌க்க‌ல் ச‌ரி: இறைவ‌ன் வ‌ர‌மாட்டான் எப்ப‌டிப்ப‌ட்ட‌ கூப்பாடுபோட்டு அப்பெண் அழுதாலும்.

   இராவ‌ணின் த‌வ‌றென்ன‌வென்றால், அப்ப‌டி இறைவ‌ன் வ‌ராம‌லிருந்த‌ப‌டியால் இறைவ‌ன் கொடிய‌வ‌ன் என்ப‌துதான். No it is wrong. When it is not someone's business to interfere, how did Ravan conclude that how the inaction can make him bad. If your teacher does not write your exam, can you call him a cruel teacher, Ravan?

   இறைவ‌ன் கொடிய‌வ‌ன் அன்று. அல்லாத‌வ‌னும் அன்று. அவ‌ன் வேலை எதுவென்று அவ‌னுக்குத் தெரியும். ம‌னித‌ரின் வேலை எதுவென்று ம‌னித‌ருக்குத் தெரிய‌ வேண்டும் என்று நீங்க‌ளே சொல்லிவிட்டேள்.

   This self-reliance is all that a mother wants in her children finally. To give birth to them and help them grow to certain age is all that she should do. Beyond that, the children, as adults, should live their lives on their own. They should responsibility for their actions or acts of commissions or omissions. If good, nice; if bad, get punished by fellow humans. Not God.

   In the instant case of Suresh and Vinodhini, all blame is not attached to Suresh only. Because no one lives alone in society immune to societal and familial influences on his mind. Therefore, a part of the blame for his growth into an acid throwing guy is attached to his own parents. Another part is attached to all others, include the larger society, in all its aspects, who could have helped him grow with right feeling towards fellow beings.

   You can punish him. Ok. But how will you punish others who go scot free?

   Blame is attached to Vinodhini too if she had already had some contact with the guy. W/o knowing how a person will be, it is a dangerous liaison.

   This is not the case. Daily papers report such cases of girls attacked by boys; and in 99 per cent of the cases, the couple know each other.

   நீக்கு
 17. சகோ சிராஜ்
  அஸ்ஸலாமு அலைக்கும்!!

  சரியான மார்க்க விளக்கப் பதிவு!!. நான் 1000 பதிவு போட்டாலும் சாதிக்க முடியாததை ஒரே பதிவில் ஆணித்தரமாக விள்க்கி விட்டீர்கள்!!


  இதே விடயம் இப்படித்தான் பழிக்குப் பழி ஷரியா என்றால் , காஃபிர்கள் ஒருத்தரும் நம்ப மாட்டார்கள்.இஸ்லாம் மீது அவதூறு சொல்வதே உனக்கு வேலை என்கிறார்கள் அப்பாவி காஃபிர்கள்!!

  காஃபிர் காஃபிர்தான்,மூமின் மூமின்தான்!!

  மிக்க நன்றி!!!
  ***

  கோவைக் குண்டு வெடிப்பு பத்தி மறந்துடனும். அதுக்கு பழிக்கு பழி வேண்டாம்!!

  அப்புறம் பதிவில் மூமின்கள் யாரும் சொல்லாததால்

  நான் சொல்கிறேன்!!

  அல்லாஹ் அக்பர்!!![இது கூட சொல்லாமல் என்னத்தை பதிவு எழுதி இந்தியாவை இசுலாமிய நாடாக்கி ஷரியா கொண்டுவந்து ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்]

  நன்றி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார்வாகன்....

   // கோவைக் குண்டு வெடிப்பு பத்தி மறந்துடனும். அதுக்கு பழிக்கு பழி வேண்டாம்!! //

   யார் மறக்க சொன்னா?? நல்லா நியாபகம் வச்சிக்கங்க..அதான் சம்பந்தப்பட்டவன் , சம்ப்ந்தப்படாதவன் எல்லாரையும் தூக்கி 20 வருஷமா உள்ர வச்சி இருக்கீங்களே??

   இப்ப சொல்லுங்க.. அந்த நிகழ்ச்சி நடக்க காரணமான கோவை கலவரம் செய்தவர்களும், முஸ்லிம்களின் கடைகளை சூறையாடியவர்களும் எங்கிருக்கிறார்கள்???? பதில் தருவீர்களா?? இந்த கேள்வியை கேட்க வெட்கமாக இல்லையா சார்வாகன்???

   ஓக்கே இப்ப டீல்க்கு வருவோம்..தீவிரவாதம் புரியிற எவனும் இந்த உலகத்துக்கு தேவை இல்லை... கோவை கலவரத்தில் உண்மையில் ஈடுபட்டவர்களை(கவனிக்கனும் உண்மையில் ஈடுபட்டவர்களை மட்டும் சொல்கிறேன்) கொன்னுடலாம்.... அதுக்கு முன்னாடி ஒரு கலவரத்த நடத்தி, கோவை குண்டுவெடிப்பு நடக்க காரணமாக இருந்த காவி நபர்களை என்ன செய்யலாம்?? அவர்களை பிடித்து ஜெயிலில் போடக்கூட உங்கள் சட்டத்துக்கு திராணி இல்லையே??? அவர்களையும் பிடித்து மரண தண்டனை கொடுக்கச் சொல்லுங்கள்..... கமான் கோ அஹெட்.... நீதி கிலோ என்ன விலை சார்வாகன்????

   நீக்கு
 18. சிராஜ்!

  நீங்கள் ஞானி சொன்னதைச் சரியாகக் கிரஹிக்கவில்லையென அஞ்சுகிறேன். அவர் சொன்னது: படம் வந்த பின் பார்த்துவிட்டு சரியா தவறாயென முசுலீம்கள் முடிவெடுக்கலாம்.

  நீங்கள் அதற்கு:

  "ஐயா ஞானி, இத தானே "விஸ்வரூப" பிரச்சனையில் நாங்கள் கத்தி, கதறி சொன்னோம். படம் வந்த பிறகு எதிர்ப்பது தான் சரி என்று சொன்னீர்களே???? நம்ம கிட்ட தான் அப்படி சரியாக எடுத்துச் சொல்லும் சிஸ்டம் இல்லையே??? (உங்க கருத்துப்படி தான்... ஹி..ஹி..ஹி), பின்ன எப்படி படம் வந்த பிறகு மக்களுக்கு புரிய வைக்கிறது???

  "மற்றவர்களுக்கு வந்தா இரத்தம், முஸ்லிம்களுக்கு வந்தா தக்காளி "

  சிராஜ்!

  அமிலம் ஊற்றும்படி சொல்லித் தந்தது அல்லது காட்டியது தமிழ்ச் சினிமா. அதாகப்பட்டது அப்படிப்பட்ட படமொன்று ஏற்கனவே வெளிவந்து சக்கைப்போடு போட்டது. எங்கோ ஒரு சில ஞானிகளைத்தவிர மற்றெவரும் அப்படத்தைப்பற்றி யாதொன்றும் சொல்லவில்லை. ஆக, படம் வந்து பார்க்கப்பட்டு அதன் விளைவாக இந்த அமில வீச்சுக்களைப்பற்றிச் சொல்கிறார் ஞானி. Please know the fact that after the release of the film Vazakku en, there have been many attempts to throw acid on the faces of the girls who rejected the boys. Yesterday in Madurai, 3 boys were arrested for threatening a girl. Why this sudden spurt in such crimes or attempts? Coz, the impact of Vazakku En is deep. If more such films are released where the rejected boys throw acid on the girls, life for girls in our society esp. in mofussil towns and villages are hell. Gnani is on the spot. Support him. Don't support such films.

  விசுவரூபம் படம் வெளிவரும் முன்பே நீங்கள் அதைப்பற்றி ஆவேசமாக எதிர்த்து எழுதினீர்கள். படம் பார்க்காமல் எப்படிச்சொல்ல முடியும்? பார்க்காமலே ஒரு பெண் அழகில்லை என முடிவு செய்வரோ? அப்படித்தான் நீங்கள் செய்கிறீர்கள் என்பதுதான் ஞானியின் வாதம்.

  நானும் படம் இப்போதுதான் பார்த்தேன். சாதாரண படம். எனக்கொன்றும் அதைப்பார்த்த பின் முசுலீம்களின் மீது வெறுப்பொ விருப்போ வரவில்லை. எப்போதும் போல அவர்களும் பிரஜைகள். நானும் ஒரு பிரஜை. அவ்வளவுதான்.

  இதை எப்படி என்னால் சொல்ல முடிகிறது? சிம்பிள். படம் பார்த்ததனால் ! :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் பார்த்தவர்கள், பார்த்து விட்டு எதிர்த்தார்கள். கமல் வேண்டாம் என்றார். முஸ்லிம்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று நம்பி சப்போர்ட் பண்ணினோம். முடிவு, சரிதான். பொய் சொன்னது கமல். சீனை மாற்றியது கமல். படம் வெளி வந்த பிறகு இதுதான் நடந்திருக்கும். ஆனால்... அதற்குள் பல விஷங்கள், பல ரசிகர்களின் உள்ளத்தில் ஏறி நஞ்சாக்கி இருந்திருக்கும். அது தவிர்க்கப்பட்டு விட்டது. அவ்ளோதான்.

   நீக்கு
  2. சிட்டிசன்,

   நீங்கள் ஏதோ செய்து மாற்றிவிட்டதாக நினைப்பது,உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது இதான், நான் இரண்டு வெர்ஷனில் படம் பார்த்துவிட்டேன், பெரிதாக ஒன்றும் மாற்றமேயில்லை, நீக்கப்பட்ட வசனங்கள் ,காட்சிகள் இல்லாமலும் அதே போல புரிதலை தான் தருகிறது. ஆனால் அது ஒன்றும் பெரிய எதிர்மறை தாக்கத்தினை உருவாக்கி இஸ்லாமியர்களை வெறுக்கவும் செய்யவில்லை, இப்படம் அரைகுறையாக உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்பதால் "ஒரு திரைப்படம்' என்ற வகையில் உண்மையில் எரிச்சலைத்தான் தருகிறது, இதுக்கா இம்புட்டு அலப்பறைனு.

   இந்த படத்தை எதிர்க்க ,அல்லது வெறுக்க வேறு சிலக்காரணங்களை சொல்லலாம்,இந்தியாவில் அரசு நடப்பது அமெரிக்காவிற்கு சேவகம் செய்யவா, அரசு சம்பளம் செலவு செய்து ரா அமைப்பினை நடத்துவது அமெரிக்காவினை காப்பாற்றவா என்ன? அரசு அமைப்பை வச்சு இந்தியாவை காப்பாற்ற வேண்டாமா?

   இந்திய,தமிழ் பார்வையாளனாக இப்படம் நமக்கு தேவையே இல்லாத கதை.எதிர்ப்பு,ஆர்ப்பாட்டம்னு விளம்பரம் வாங்கி இப்போ நல்லா ஓடுது :-))

   நீக்கு
  3. //பெரிதாக ஒன்றும் மாற்றமேயில்லை, நீக்கப்பட்ட வசனங்கள் ,காட்சிகள் இல்லாமலும் அதே போல புரிதலை தான் தருகிறது.//------------------மிகவும் வருத்தத்துக்கு உரிய செய்தி.

   //ஆனால் அது ஒன்றும் பெரிய எதிர்மறை தாக்கத்தினை உருவாக்கி இஸ்லாமியர்களை வெறுக்கவும் செய்யவில்லை,//---------------உங்களிடம் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஆனால், எல்லாருக்குமாக அதனை பொதுப்படுத்தாதீர்கள்..!

   நீக்கு
 19. சிராஜ் சித்தரே,

  ஞானி சந்தர்ப்பவாதமா பேசுறார்னே வச்சுப்போம், நீங்க சந்தர்ப்பவாதமாக பேசவில்லையா?

  நீங்க என்பது மார்க்கப்பந்துக்களை பொதுவாக சொல்கிறேன்,உங்களை மட்டும்னு எடுத்துக்காதிங்க.

  லாமா என்ற சிறுமியை கொன்ற அப்பெண்ணின் தந்தையும் மார்க்க குருவுமான காம்தி என்ற நபருக்கு ரத்தப்பணம் கொடுத்து விடுதலை கொடுக்கலாம், அப்பெண்ணின் தாயார் மன்னிப்பு அளித்துவிட்டால் தண்டனை இல்லை என்பதாக ஷரியா வச்சு சொல்லுறிங்களே ,எப்படி?

  கொடுரமான செயல் என்பதற்கு தண்டனை இல்லையா, 5 வயது சிறுமி அடைந்த வலி,வேதனைக்கு என்ன பதில். அச்சிறுமியா மன்னிப்பு கொடுக்க இனி உயிருடன் வரப்போகிறாள், அப்படி இருக்க அவரது தாயார் அவரே காம்தியின் மனைவி எனவே அவர் மன்னித்துவிட்டால் போதும் என ஷரியாவை வைத்து பேசுவது எப்படி சரியாகும்?

  தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறார்கள் ,எனவே தண்டனை கொடுக்கலாம், அதே சமயம் இழப்பீடு வாங்கிட்டு விடலாம்னு நினைச்சு விட சொல்லிட்டாங்கன்னா அரேபிய முறைப்படி விடலாமா?

  பொதுவான சட்டம் ,தண்டனை என ஒன்று தேவையில்லையா?

  மிகவும் ஏழையாக ஒருவர் இருக்காங்க,அவங்களை நாலுப்பேர் பேசி மனம் மாற்றி , கொடுக்கிறத வாங்கிட்டு ,மன்னிச்சிறுன்னு சொல்லி விடுதலை வாங்கிக்கொடுக்க வைக்கும் சூழலும் உருவாகும், எனவே பொதுவான கிரிமினல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.அது தூக்கு தண்டனையாக இருந்தாலும் சரியே.

  மீண்டும் சொல்கிறேன் தன்டனை சட்டப்படி கொடுக்கப்பட வேண்டும்.


  அப்பெண் அடைந்த வலி,வேதனை எல்லாம் பேசும் நீங்கள் ரத்தப்பணம் கொடுத்து மன்னிக்கலாம் எனவும் வக்காலத்து வாங்குவதும் சந்தர்ப்பவாதமே.உங்கப்பதிவில் ருபய்யா பல்லுடைப்பு சம்பவத்தினை மேற்கோள் காட்டி மன்னிக்கப்பட்ட சம்பவ்த்தினையும் இங்கே எதற்கு சொல்லி இருக்கீறீர்கள் என்ற நுண்ணரசியலை புரிந்து கொண்டதாலே இதனை சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. மைனஸ் ஓட்டு போட்ட கள்ள ஓட்டு கும்பலுக்கு நன்றி...

  கொஞ்சம் வேலைப்பளு அதிகம்... நாளை மறுமொழி இடுகிறேன்... இன்ஷா அல்லாஹ்...

  நீங்க நேர்மையா இருக்கதெல்லாம் ஓக்கே தான், யார் யார் என்ன ஓட்டு போட்றாங்கன்னு பாருங்கப்பா... நேர்மைய பேச வந்துட்டாங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 21. கொடூரங்களை அனுமதிக்கும் கையாலாகாத கடவுள் தந்த கேடுக் கெட்ட வழிக்காட்டியா இது என சந்தேகம் எழுகின்றது. மனிதன் இன்னமும் தனது மிருகத் தனமான கூறுகளில் இருந்து பரிணாமம் அடையவிலலி என்பதையே இந்த அமிலத் தாக்குதலும், அதற்கு எதிராக இன்னொரு அமிலத் தாக்குதல் செய்யச் சொல்லும் உங்கள் மனோபாவமும். பழிக்குப் பழி, பல்லுக்குப் பல் வாங்குவது கேடு என ஈஸா நபி கூறுவதாக வாசித்த நியாபகம், ஆனால் அல் -குரானோ ஏறுக்கு மாறாக பழி வாங்க மனிதர்களைத் தூண்டி விடுகின்றது.

  //பகைமையை பகைமையால் வெல்ல முடியாது. பாசத்தால்தான் வெல்ல முடியும். கோபத்தை, அன்பால், தீமையை நன்மையால்தான் போக்க முடியும்! - புத்தர் //

  கூறியக் கூற்று எத்தனை முதிர்ச்சியானது என்பதை இக்கணம் நான் நினைவுப் படுத்த விரும்புகின்றேன்.

  இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
  நன்னயம் செய்து விடல்

  '(நமக்குத்) தீமை செய்பவர்களை தண்டிக்க அவர் வெட்கப்படும்படியாக நன்மையை செய்துவிடுங்கள்.'

  என்ற இரண்டாயிரம் பழமையான வள்ளுவரின் தத்துவத்தை தமிழர்கள் மறக்கக் கூடாது. பகைமை பகைமையைத் தான் வளர்க்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நன்றிகள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
   நன்னயம் செய்து விடல்//----------இது பாதிக்கப்பட்டோருக்கான (விநோதிநிக்கான) குறள்...! அவர் இறந்து விட்டதால் அவரின் குடும்பத்தொருக்கான குறள்..!

   இதில், நீதிபதிக்கோ, அரசுக்கோ, இக்பால் செல்வனுக்கோ, சிராஜூக்கோ எனக்கோ.... அந்த ஆசிட் வீசியவன் மீது இந்த குறளை பின்பற்ற கிஞ்சித்தும் உரிமை இல்லை. இதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது. மன்னிப்பின் உரிமையை பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமே தந்து..!

   எதற்கு இந்த 'சேம் சைட் கோல்' என்ற ஷேம்..?

   இவ்ளோ எதுக்கு....?!? இதை முதலில் நீங்க பின்பற்றிநீர்களா..?

   நீங்க உங்களை எதிர்த்த ஒரு இலங்கை முஸ்லிம் பதிவரின் பதிவுக்கு மைனஸ் ஒட்டு மழை பொழிஞ்சப்போ... இந்த குறளை பின்பற்றி இருந்திக்கனும்..!

   "அந்த மைனஸ் ஓட்டெல்லாம் வழக்கமா இக்பால் செல்வன் பதிவில் இடம்பெறும் முதல் ஏழெட்டு பிளஸ் ஒட்டுகள்தான்"ன்னு நான் ஆதாரத்தோட அப்பதிவில் சொன்னப்ப.... இந்த குறளை எனக்கு எதிராக பின்பற்றி இருந்திக்கனும்..! ஆனால், கடுப்பாகி எதிர்பதிவு போட்டு அதிலும் பின்னூட்டத்திலும் எள்ளி நகையாடி உங்க கோபத்தை நல்லா தீர்த்துக்கிட்டீங்க..! அப்போது... எனது உட்பட, கண்ணில் பட்ட முஸ்லிம் பதிவர்களின் பதிவுக்கெல்லாம் மைனஸ் ஓட்டு போட்டு உங்க ஆத்திரத்தை தீர்த்துக்கிட்டிங்க.


   "சொல்லுதல் யார்க்கும் எளிதாம், அரியவாம்
   சொல்லிய வண்ணம் செயல்"
   ---இது இப்போது உங்களுக்கான குறள், இக்பால் செல்வன்..!

   நீக்கு
  2. இக்பால் செல்வன் அண்ணா...

   // மனிதன் இன்னமும் தனது மிருகத் தனமான கூறுகளில் இருந்து பரிணாமம் அடையவிலலி என்பதையே இந்த அமிலத் தாக்குதலும் //

   என்னங்கன்னா சொன்னீங்க??? மிருகத் தனமா? இத பத்தி பேச உங்களுக்கு தகுதி இருக்கா அண்ணா???? இந்த பிரச்சனைய விடுங்க.... கேவலமான போஸ்டுகளில் போய் , கேவலமாக பின்னூட்டம் இடுகிறீர்களே??? உங்கள் சமூக பொறுப்பு அவ்வளவு தானா???

   உங்களுக்கு சரியான வார்த்தைகளை பயன்புத்தாத போஸ்டுகளில் போய் கண்டிக்க வக்கு இல்லையே?? பின் எதற்க்கு என்னமோ எஜுகேட்டட் மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க... உங்க நடவடிக்கை பிளாட்பார்ம் ரேஞ்சுக்கு தானே அண்ணா இருக்கு....

   இந்த விஷயத்தில் வவ்வால் மிக உயர்ந்தவர்.... அவரிடம் கற்றுக் கொள்ளுங்கள்.... முதலில் பொது வெளியில் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள், உபதேசங்களை பின்னர் செய்யலாம்...

   வந்துட்டாரு பெரிசா கருத்து சொல்ல...

   காட்டுமிராண்டி தனத்த பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்கண்ணே... நேற்று என்னுடைய பதிவில் சுரேஷ் நாயி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தேன்..அதுக்கே வந்து அந்த வார்த்தைய நீக்க சொன்னாய்ங்க இந்த கண்ணுக்கு கண் காட்டு மிராண்டிகள்....

   ஆனால் மெத்த படித்த நீங்கள், அன்று ஒரு நாள் ஒரு பெரிய மனிதரை அநாகரிகாம கிண்டல் பண்ணீ எழுதிய ஒரு போஸ்டில் போய் அதை கண்டிக்காமல், கூத்தடித்தீர்கள்..

   இங்க வந்து நாகரிகத்த பத்தி பேசிறீங்க.. நாகரிகம் கிலோ என்ன விலை சார்???

   நீக்கு
 22. மக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதன் மூலம் குற்றங்களை ஒரு போதும் கட்டுப்படுத்த இயலாது. இவை உளவியல் சார்ந்து வாசிப்புடையவர்களுக்கு நன்கு விளங்கும். பல பாலியல் குற்றங்களுக்கு அத்திவாரமே அவரது சமூகம், குடும்பம், கல்வி மற்றும் மரபியல் சார்ந்த வாழ்க்கை முறைகள் தான் காரணமாக அமைகின்றது.

  பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காண முற்படும் போது உணர்ச்சிக்களைத் தூண்டி அறிவியலுக்கு ஒவ்வாத பழம் நடைமுறைகளும், மதச் சட்டங்களும் யதார்த்த சமூகத்தின் சிக்கல்களைத் தீர்க்கப் போவதில்லை என்பதை மட்டும் இங்கு இப்போது பதிவு செய்கின்றேன்.

  பழிக்குப் பழிச் சட்டம்: பெண்களுக்கு பாதுக்காப்பு தந்து விடாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம்... இதுவரை பலனை தராத, ஒருபோதும் பலனே தந்ததே இல்லாத வெற்று வாய்ப்பந்தல்..! நடைமுறை சாத்தியப்படும் சிந்தனை வேண்டும்..!

   சிந்திக்கத்தேரிந்தவன் ஒருபோதும் ஆசிட் ஊற்ற மாட்டான். ஆசிட் ஊற்றும் சிந்த்க்கத்தேரியாதவனுக்கு கடும் தண்டனை வேண்டும். அது எல்லா மீடியாவிலும் பரப்பப்பட வேண்டும். சிந்திக்கத்தெரியாத அனைவரையும் அச்செய்தி சென்றடைய வேண்டும். அதுபோன்ற செயலை செய்ய நாடும் மற்ற சிந்திக்கத்தெரியாதவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும். ஆசிட் வீச்சை கட்டுப்படுத்தும். இதுதான் நடைமுறை எதார்த்தம். இஸ்லாம் நடைமுறை எதார்த்தமான மார்க்கம்..!

   நீக்கு
 23. சகோ.சிராஜ்...

  ரிசானாவுக்காக கூப்பாடு போட்டவர்கள்,
  விஸ்வரூப தடைக்காக தாண்டவம் ஆடியவர்கள்,
  சவூதி குழந்தை லாமாவுக்காக அற்றரியவர்கள்...

  எவருமே....

  நம் மாநிலத்து சகோதரி விநோதிநிக்காக அந்த அளவில் நூறில் ஒரு பங்கு கூட வருத்தப்படவில்லை.

  இவர்களின் போலித்தன்மையை இது அப்பட்டமாக தோலுக்கிறது. அத்தோடு இங்கே மைனஸ் ஒட்டு போட்டு தமது எதிர்ப்பை இத்தனை பேர் காட்டி இருப்பதை பார்த்தால்...

  அநேகமாக...

  சகோ.வினோதினி கொலையில் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வக்கீல்...............................

  டாஸ்மாக்கில் சரக்கடித்து விட்டு பெண்கள் கையை பிடிச்சி இருப்போர்,
  பெண்களை ஈவ் டீசிங் செய்து என்ஜாய் பண்ணுவோர்,
  பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்கள்,
  ஆசைக்கு இணங்காத பெண்களின் மீது ஆசிட் ஊற்றுபவர்கள்,
  விபச்சாரத்தையும், லிவிங் டுகெதர் கலாச்சாரத்தையும் ஆதரிப்பவர்கள்,

  ------------ஆகிய தமிழக பெரும்பான்மை ஆண்களின் கூட்டு மனசாட்சியினை திருப்தி படுத்த வேண்டி... (please, refer Afsal Guru judgement your honour)

  ஆசிட் ஊற்றிய கொடூரன் சுரேசை இன்முகத்துடன் மன்னித்து விடுமாறு விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


  ................. இப்படி வாதாடி விடுவாரோ என்று அஞ்சுகிறேன்..!

  பதிலளிநீக்கு
 24. ஸலாம் சகோ. சரியான நேரத்தில் அருமையான பதிவு

  இவ்வளவு மைனஸ் ஓட்டு போட்டுள்ளதை பார்த்தால் சுரேஷிக்கிற்கு நிறைய பங்காளிகள் இருக்கிறார்கள் போல. ஆசிட் விசியவனுக்கு வெக்களாத்து வாங்க ஆட்களால் இருக்கும் போது இன்னும் எத்தனை விநோதினிகள் அநியாயமாக பழியாக போகிறார்கள் என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி அல்ல நிஜாம்...

   முஸ்லிமா?? நீ எதுவும் சொல்லக்கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடு..கமல் படத்துக்கு பக்கம் பக்கமா பதிவு போட்டாங்க..இந்த பிரசனைக்கு ஹார்ட்லி 5 பதிவு வந்து இருக்கும்.. அவ்ளோ தான்...

   இதிலிருந்து தெரியிதே இவங்க சமூக அக்கரை...

   நீக்கு
 25. அன்புச் சகோதரர் சிராஜ்,
  அஸ்ஸலாமு அலைக்கும்.

  ஆழமாகவும் தெளிவாகவும் எழுதக்கூடிய உங்களைப் போன்ற இளையவர்கள் பெருகிவருவது மகிழ்வளிக்கிறது!

  இந்தப் பதிவும் பின்னூட்டங்களுக்கான நிதாதமான பதில்களும் பாராட்டுகுரியன. நண்பர் விஜய், தலை சுற்றுவதாகப் பின்னூட்டியிருக்கிறார். மன்னித்தல்/தண்டிக்கக் கோருதல் ஆகிய இரண்டுமே பாதிக்கப்பட்டவருக்கு இறைவன் வழங்கியுள்ள ஆப்ஷன்கள் என்பதை விளக்கி இன்னும் தெளிவான சான்றுகளை அவருக்குத் தரவும்.

  சவூதிச் சிறுமி லமாவின் வழக்கு விசாரணை இன்றும் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. //சற்றே குறைய மூன்று மாதம் சிறை வாசம் மட்டுமே பெற்ற அவன், இஸ்லாமிய சட்டப்படி இரத்தப் பணம் கொடுத்து விடுதலையை "வாங்கியுள்ளான்". இஸ்லாமிய சட்டப்படி தந்தை தனது பிள்ளைகளைக் கொன்றாலோ, கணவன் மனைவியைக் கொன்றாலோ அவர்களுக்கு மரணத் தண்டனை விதிக்க முடியாது// என்றெல்லாம் பொய்மூட்டையை அவிழ்த்துவிட்ட இக்பால் செல்வன் போன்றோர்க்கு மத்தியில், அதே தவற்றைச் செய்து, அது தவறு எனத் தெரிய வந்ததும் அதற்கு வருத்தம் தெரிவித்திருக்கும் 'அகமும் புறமும்' மாயன் பாராட்டுக்குரியவராவார்.

  தரமான இப்பதிவுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 26. இங்க பிரச்சனை அவன் செய்த குற்றத்திற்கான காரணம், இன்று figure செட் ஆகனும்ன திரும்ப திரும்ப அவள disturb பண்ணிட்டே இருக்கணும், நீ எப்டி அவ மேல வெறிய இருக்குறேருதே அவள்ட்ட சொல்லனும், சினிமா தான் சொல்லிதருது. சகிப்புதன்மை இல்லாதவனாக அவனை மாற்றுகிறது. அதுமட்டும் இல்லாமல் பெண்கள் மேல் உள்ள கிழ்த்தரமான அபிப்ராயம்தான் காரணம்.
  நீங்கள் குற்றத்தின் பார்வையில் மட்டும் பார்க்கிறீர்கள், அவன் செய்த இந்த தப்புக்கு நாமும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். நாம் பார்த்த சினிமா, நம்மை சுற்றி இருக்கும் சமூகமும், ஒரு பெண்ணை எப்டி பார்க்கிறது, அதில் இருந்து அவன் உருவாக்கி கொண்ட கருத்து அதை பற்றியும் ஆராய வேண்டும்.சினிமா, சமுகம் ரெண்டும் அவனுக்கு சொல்லி கொடுத்தது ஒரு பெண் தான் வாழ்கை, அவள் இல்லாமல் போனால் ஒண்ணுமே இல்லை, அவள்தான் குடும்ப குத்து விளக்கு, இப்படி பட்ட சிந்தனையில் வளர்ந்த ஒருத்தன்தான் இந்த குற்றங்களை செய்கிறான்.
  அவன் முஞ்சில அசிட் ஊதிட்டா மட்டும் தீர்ந்திடாது. அப்டியே இந்த தண்டனை இருந்தாலும், சில சமயம் சில லூசுங்க எல்லாத்துக்கும் ரெடியா இருபான்னுங்க, அசிட் ஊத்திட்டு, தானும் suicide பண்ணிகிவனுங்க. அப்போ இங்க ஒழிக்க வேண்டியது எது, பிரட்சினையோட வேர் எது. அதை தான் ஆராய வேண்டும். தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்பதும் உண்மைதான், அதே சமயம், இந்த குற்றத்திற்கான காரணம் ஒவோருத்தர் மனதிலும் இருக்கும் கருத்தாக்கம், அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும். தண்டனை பயத்தை மட்டும் தான் உருவாக்கும், கருத்தாக்கத்தை உருவாக்குமா?

  ஒவ்வொரு மனிதனுக்கும் உலகத்தில் மீதான ஒரு அகண்ட பார்வை வேண்டும், அதை கல்வியும் சமூகமும் உருவாக்க உதவிட வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Badshah

   //அவன் முஞ்சில அசிட் ஊதிட்டா மட்டும் தீர்ந்திடாது. அப்டியே இந்த தண்டனை இருந்தாலும், சில சமயம் சில லூசுங்க எல்லாத்துக்கும் ரெடியா இருபான்னுங்க, அசிட் ஊத்திட்டு, தானும் suicide பண்ணிகிவனுங்க. //

   அப்படி தற்கொலை செய்துகொண்டால் இறைவன் அவனுக்கு இரட்டிப்பு தண்டனை தருவார். ஒன்று ஆசிட் ஊற்றியதற்கு. இன்னொன்று தற்கொலை செய்து கொண்டதற்கு. சோ அதை பத்தி நாம கவலைப்பட தேவை இல்லை.

   நீக்கு
 27. சகோஸ் வவ்வால், குலசேகரன்...

  உங்கள் கமெண்டுகளை எடுத்து போட்டு இன்னொரு போஸ்ட் போடுகிறேன்.... அதில் விளக்கம் கொடுக்கிறேன்.. நீங்களும் விவாதிக்கலாம்.. தரங்கெட்டு எழுதும் பதிவர்கள் நிறைந்து இருக்கும் பதிவுலகத்தில் உங்கள் போன்றவர்கள் அபூர்வமானவர்கள்... வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 28. சிட்டிஸன்..

  ஊருக்கும் பயணம் போகும் சூழ்நிலையிலும்.. இவ்வளவு கமெண்ட் போட்டு இருக்கிறீர்களே?? உங்கள் கடமை உணர்ச்சியை பார்த்து மெய் சிலிர்க்கிறது சகோ...

  நன்றி...பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 29. அப்படியென்றால் சுரேஷும் கண்ணீர் விட்டு அழுதான் என்றால் மன்னித்து விட்டு விடலாமா?

  விஜய்அவர்களே இப்பொழுதும் சுரேஷ் அழுதுகொண்டுதான் இருப்பான் அது அவனுடைய பயத்தின் காரணமாக

  1. ஒருவேளை நான் தவரிழைத்துவிட்டேன் என்னை மன்னிக்கவேண்டாம் தண்டியுங்கள் என்று தானே முன்வந்தால் அவன் குற்றவுணர்வில் தவறை திருத்தமுயலுபவன் என்று நம்ப தோணும். அப்பொழுதும் அவனை மன்னிக்கும் பொறுப்பு அவர்களின் பெற்றோர்களுக்கே உண்டு. அதுவல்லாது

  அவனுக்கான தண்டனை அவன் செய்ததுபோலவே என்று சட்டப்படி முடிவாக்கபட்டால் அந்த தண்டனையை ஏற்க்கவேண்டிய நிலையில் அவன் தள்ளப்படுகிறான.

  2.இந்நிலையிலும் அப்பெற்றோர்கள் அவனை மன்னிக்க முற்பட்டு அவன் மன்னிக்க பட்டால் குற்றவுணர்வில் அவன் கண்ணிர்விட்டு அழுவான் அது அவனை நேர்வழி படுத்தும் விஜய்.

  எனவே விஜய் தன் தவறை உணர்ந்து மனசாட்சிபடி தண்டனை பெற துணிந்தால் மட்டுமே இவன் குற்றவுணர்வில் அழுகிறான் என்று நம்ப முடியும்.

  அவன் என்னதான் அழுதாலும் புரண்டாலும் மன்னிப்பதும் மன்னிக்காதிருத்தலும் அப்பெறோர்களின் பொறுப்பு.

  காலத்திற்கேற்ற பதிவு மிக அருமை மாப்ள.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @AZAD R.PURAM

   //விஜய்அவர்களே இப்பொழுதும் சுரேஷ் அழுதுகொண்டுதான் இருப்பான் அது அவனுடைய பயத்தின் காரணமாக//

   இந்த இணைப்பில் (http://www.satyamargam.com/1746) மாஜித் திருந்திவிட்டதாக எந்தத் தகவலும் இல்லை. ஆமினா மன்னித்ததால் அவன் கண்ணில் கண்ணீர் வந்தது என்றுதான் இருக்கிறது. ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. சவூதியில் எது நடந்தாலும் அதை நியாயப் படுத்த முயற்சிக்கிறீர்கள். நம் ஊரில் நடந்தால் அதை வேறு விதமாக பார்க்கிறீர்கள். என்னுடைய பின்னூட்டங்களும் அதற்கு வந்திருக்கும் பதில்களையும் வாசித்து பார்த்தால் இது நன்றாக புரியும்.

   பதிலளித்த நண்பர்களுக்கு நன்றி.

   நீக்கு
 30. சகோ சிராஜ் நலம் என்று நம்புகிறேன்,
  மனைவியை அடிக்கலாம் என்று இசுலாம் சொல்வதாக படித்துள்ளேன். அதே உரிமையை ஏன் மனைவிக்கு இசுலாம் தரவில்லை என்று கூற இயலுமா?

  இசுலாமிய சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா?
  உங்கள் அடிமையை ஒருவன் கொன்றுவிட்டால் அடுத்தவன் அடிமையை நீங்கள் கொல்லலாம் என்கிறது இசுலாம்.. என்ன ஒரு அறிவிலித்தனமான அல்லா?

  ஒருவன் ஒரு பெண்ணின் ஆடையை அவிழ்த்துவிட்டால், அவனது வீட்டு பெண்ணின் ஆடையை மற்றொருவன் அவிழ்ப்பது இசுலாமிய சட்டம் என்கிறார்கள்.இந்த கேடு கேட்ட சட்டங்களை இறைவன்தான் தந்தான் என்பதைவிட ஒரு அறியாமை இவ்வுலகில் இருக்கமுடியும் என எனக்கு தோன்றவில்லை.
  நன்றி

  பதிலளிநீக்கு
 31. அல் குர்ஆன் 2:178 - கொலைக்கு தீர்வு - கொலையா ??

  http://sunmarkam.blogspot.ae/2012/05/2178.html

  please read......

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters