சனி, செப்டம்பர் 14, 2013

விநாயகர் ஊர்வலங்களும்... என் மன வேதனையையும்...

 
சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள் 3, அதில் பாலவாக்கம் கடற்கரையும் ஒன்று...
நேற்று என் மகனை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு பாலவாக்கம் பீச் வழியா போகையில் ஏராளமான போலிஸ்கள் பாதுகாப்பிற்கு நின்றார்கள்... முதலில் என்னவென்று எனக்கு புரியவில்லை, அதன்பின் விசாரிக்கையில் தான் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு நடக்கிறது என்று கூறினார்கள். மேலும் விசாரிக்கையில்  சிலைகளை கரைக்க சென்னையில் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 3 தானாம்... அதில் பாலவாக்கமும் ஒன்று என்று கூறினார்கள்.

அதேபோல், இன்று ஈ.சி.ஆர் ரோட்டில் பைக்கிற்கு பெட்ரோல் போட்டுகொண்டு இருக்கையில், நிறைய விநாயகர் சிலைகளை வண்டியில் எடுத்துக்கொண்டு சென்றார்கள்... ஒவ்வொரு வண்டியிலும் ஒரு போலிஸ் உட்கார்ந்து இருந்தார்... அதைத்தவிர நிறைய போலிஸ் வாகனங்கள் முன்னும், பின்னும்... அதை பார்த்ததும் மனம் வேதனையாக இருந்தது...

இந்துக்களின் விழாக்களில் இதுவும் ஒன்று... அதற்கு இவ்வளவு பாதுகாப்பும், பந்தோபஸ்தும் தேவையா...?? என்னமோ நடக்கக்கூடாதது நடந்து கொண்டு இருப்பது போல் இருந்தது அதைப்பார்த்ததும்... 
அமைதியாக நடந்து கொண்டு இருந்த இந்த ஊர்வலங்களை வன்முறையாக மாற்றிய பெருமை இந்து முண்ணனி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நபர்களையே சாரும்... பெரும்பான்மை இந்து சகோக்கள் அமைதியாக போகும்பொழுது, இந்த கயவர்கள் ஊடுருவி பள்ளிவாசல்கள் அருகில் செல்லும் பொழுது கெட்ட வார்த்தை பேசுவது, வெடி வெடிப்பது என்று செய்து வேண்டுமென்றே பதற்றத்தை அதிகரிக்க வைத்திருக்கிறார்கள்... 
அதேபோல் விநாயகர் ஊர்வலங்களுக்கு பர்மிஷன் கேட்கும் பொழுது வேண்டுமென்றே பள்ளிவாசல்கள் இருக்கும் வழித்தடங்களில் செல்ல அனுமதி கேட்பது. ஏன் பள்ளிவாசல் இருக்கும் வழித்தடங்கள்??? இதில் இருந்தே இவர்களின் கெட்ட எண்ணம் தெரிகிறதல்லவா? நல்ல மனிதர்கள் பிரச்சனை வராமல் இருப்பதையே விரும்புவார்கள்.. ஆனால் இவர்களோ பிரச்சனை வளர்க்கும் அனைத்தையும் திட்டமிட்டு செய்கிறார்கள். இந்து சகோக்கள் இவர்களின் தீய நோக்கை புரிந்து கொண்டு, இவர்களை புறக்கணித்து வரும் காலங்களில் அமைதியான விநாயகர் ஊர்வலங்கள் நடக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்...

ஆர்.எஸ்.எஸ் தம்பிகளா...
நீங்க நினைக்கலாம் இந்துக்களையும், முஸ்லிம்களையும் இதை வைத்து பிரித்து குளிர்காயலாம்னு...
ஒரு நாள் வரும்...
அன்னைக்கு இந்த இரண்டு தரப்பும் ஒன்னு சேர்ந்து உங்கள ஓடஓட விரட்டும்...
அதன் பின்...
விநாயகர் ஊர்வலங்களில் போலிஸ் இல்லாத நாள் ஒன்றும் வரும்... 24 கருத்துகள்:

 1. ஏன்..அதென்ன முஸ்லிம் தெருக்களின் வழியாக கொண்டு செல்கிறார்கள்..ஏன் அதை தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் வழியாக கொண்டு செல்ல வேண்டியதுதானே அவர்களுக்கு அது உரியதுதானே ! இதை இந்து சகோதரர்கள் புரிந்து கொண்டாலே இந்த வெறியர்கள் தனிமை படுத்த படுவார்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது கிளைச் செய்தி.... நான் சொல்ல வந்த கோர் பாயிண்டுக்கு அவுட் ஆப் சிலபஸ்...

   வருகைக்கு நன்றி அன்புத் தம்பி.... :)

   நீக்கு
 2. இது போன்ற செயல்கள் உண்மையிலேயே மிகத் தவறானவை. பள்ளிவாசல் வழியாக ஊர்வலம் செய்வதன் மூலம் என்ன சாதிக்க முடியும், சண்டையை கிளப்புவதை தவிர?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் ஏன் அந்த வழியாக தான் போக வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று உங்களுக்கும் எனக்கும் போலிசுக்கும் தெரியும்...

   நம் நடுநிலை சகோக்களுக்கு அது தெரியாது... தெரியும் பொழுது பிரச்சனை சால்வ்ட்...

   வருகைக்கு நன்றி பந்து... (என்ன பேரு இது???)

   நீக்கு
 3. இதனை இந்து சகோதரர்கள் புரிந்து கொண்டு வருங்காலங்களில் இந்துத்வாவினரை ஓரங்கட்டி அமைதியான முறையில் விநாயக சதுர்த்தியை கொண்டாடுவார்களாக!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவில் சொல்லப்பட்டது போல்... அப்படி ஒரு நாள் வரும் அண்ணே...
   நிச்சயம் வரும்.. இவர்கள் சூழ்ச்சி பெரும்பான்மை மக்களுக்கு தெரியவரும் பொழுது அந்த நாள் வரும்...

   வருகைக்கு நன்றி அண்ணே...

   அழகான ஊர்வலம்.... இந்த பிரச்சனைகள் இல்லாட்டி எல்லா பிள்ளைகளும் கூட்டமா போய் பார்க்கலாம்.... அத போய் கடுமை ஆக்கி வச்சிருக்காங்க....

   நீக்கு
 4. சிராஜ்,

  விநாயகர் பொம்மைய பத்திலாம் எனக்கு அக்கறையில்லை,ஆனால் உங்களை நினைச்சாத்தான் சிரிப்பா இருக்கு :-))

  அந்த பொம்மைய எடுத்து போறது சிலரின் வழக்கம்னே வச்சுக்கலாம், ஏன் பள்ளி வாசல் இருக்கும் தெரு வழியா எடுத்து போக கூடாது?

  வெடி எல்லாத்துக்கும் தான் வெடிக்கிறாங்க, கெட்ட வார்த்தையில என்னா பேசினார்கள் என கூட்டத்தில போய் கேட்டிங்களா?

  ஏதோ கத்திட்டு, வெடி வெடிச்சிட்டு ரோட்டுல போனால் நமக்கென்னனு மார்க்கப்பந்துக்கள் இருக்கலாமே, அவர்கள் என்ன பள்ளிவாசலை அடிச்சு உடைச்சார்களா, இல்லை உள்ள வந்தாங்களா?


  அப்படி யாராவது தாக்குதலில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்து கடுமையாக தண்டித்தாலே எல்லாம் அடங்கிடுவாங்க, அதை செய்யனும் என்றால் மார்க்கப்பந்துக்கள் எதுவும் பிரச்சினை பண்ணாம இருக்கனும். ஆனால் ரோட்டுக்கே வரக்கூடாதுனு முதல் ஆளா நிற்பதால், எதிர் தரப்பும் முறுக்கிட்டு தான் கிளம்பும்.

  இந்துதுவாக்களை ஓரங்கட்டிவிட்டு இந்துக்களும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஓரங்கட்டிவிட்டு மார்க்க பந்துக்களும் அமைதியான முறையில் ஒத்துழைத்தால் காவல் துறையினருக்கே வேலையில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வவ்வால்...

   // உங்களை நினைச்சாத்தான் சிரிப்பா இருக்கு :-))//

   சேம் டு யூ.....:)

   ஆரம்பகட்டத்தில் விநாயகர் ஊர்வலங்கள் பள்ளிவாசல் வழியாக போகையில் யாரும் எதிர்க்கவில்லை... அப்படி போகையில் சிலர் பள்ளிகள் மீது கல் எறிதல், கெட்டவார்த்தையில் திட்டுதல் போன்ற காரியங்களை செய்ய ஆரம்பித்ததாலே இப்பொழுது பள்ளிவாசல் பக்கம் அனுமதிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது...

   ஒருவர் தன் மத ஊர்வலத்தை நடத்தலாம்.. தப்பே இல்லை... ஆனால் அப்படி செய்கையில் பள்ளிவாசலில் கல் எறிவதும்... துளுக்கனுகளா என்று கத்துவதும் வம்பிழுத்து பிளவை ஏற்படுத்த முயலும் நரித்தனமே அன்றி வேறில்லை...

   நான் உங்க வீட்டு வழியா போக உங்களை கேட்க வேண்டாம்.. ஆனா உங்களை தே..... பயலுகலான்னு திட்ட வேண்டிய அவசியம் இல்லைல? அப்படி திட்டினா அந்த பக்கம் நான் போறதுக்கு நீங்க கவலைபட்றது நியாயமானது தானே??

   காவிகளில் குள்ளநரி வேலைகள் தெரிந்தும் உங்களைப் போன்றவர்கள் இப்படி பேசுவது ஆச்சரியமா இருக்கு..

   நீக்கு
  2. // கெட்ட வார்த்தையில என்னா பேசினார்கள் என கூட்டத்தில போய் கேட்டிங்களா?//

   பேசலைன்னு நீங்க கூட்டதில் போய் பார்த்தீங்களா????

   நீக்கு
  3. வெளவால் அண்ணே,

   // அந்த பொம்மைய எடுத்து போறது சிலரின் வழக்கம்னே வச்சுக்கலாம் //

   பொம்மையா? அபச்சாரம், அபச்சாரம் கண்ணத்தில போட்டுகோங்க...

   //கெட்ட வார்த்தையில என்னா பேசினார்கள் என கூட்டத்தில போய் கேட்டிங்களா? //

   நீங்க எழுதிகுடுத்த ஸ்கிரிப்டு ஒங்களுக்கே மறந்துடுச்சா? அதவேற கூட்டத்துல போயி கேக்கணுமா? அதான் மைக் செட்டு கிளியுதே...

   // ஏதோ கத்திட்டு, வெடி வெடிச்சிட்டு ரோட்டுல போனால் நமக்கென்னனு மார்க்கப்பந்துக்கள் இருக்கலாமே //

   அப்ப, அரை டவுசர்கள் ஏதோ திட்டிக்கொண்டு வரும்போது பூவெல்லாம் தூவி வரவேற்க தேவையில்லையா? என்ன அண்ணே இப்புடி ஆயிட்டீங்க, அஜெண்டாவ மறக்கலாம? எதுக்கும் ராஜஸ்தானுக்கு போயி ட்ரைனிங் எடுத்திட்டு வாங்க.

   // அவர்கள் என்ன பள்ளிவாசலை அடிச்சு உடைச்சார்களா, இல்லை உள்ள வந்தாங்களா? //

   அட, ஆமால்ல, அரை டவுசர்களுக்கு பள்ளிவாசல அடிச்சு ஒடைக்க தெரியாதுல்ல? இது வரைக்கும் ஒடைச்சதே இல்லே.

   // அப்படி யாராவது தாக்குதலில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்து கடுமையாக தண்டித்தாலே எல்லாம் அடங்கிடுவாங்க, அதை செய்யனும் என்றால் மார்க்கப்பந்துக்கள் எதுவும் பிரச்சினை பண்ணாம இருக்கனும். ஆனால் ரோட்டுக்கே வரக்கூடாதுனு முதல் ஆளா நிற்பதால், எதிர் தரப்பும் முறுக்கிட்டு தான் கிளம்பும். //

   ஆமா அண்ணாச்சி, நம்மூரு காளியாத்தா, மாரியாத்தா, முத்துமாரி, கங்கையம்மன், மீனாட்சி அம்மன், தூண்டில்காரன் மாதிரி சாமிகளின் ஆண்டு ஊர்வலம், முளைப்பாரி திருவிழாவெல்லாம் அமைதியா நடக்குதே அது எப்புடி? அதுவும்தான் முஸ்லிம்கள் வாழுற தெரு வழியா போகுது, அதுல வராத கலவரம் ஒங்க ஊர்வலத்துல மட்டும் வருதே, ஏன்? எப்பவும் தலைகீழாவே சிந்திக்காதீங்க, கொஞ்சம் நேராவும் பாருங்க, புரியும்.

   நீக்கு
  4. சிராஜ்,

   ஹி...ஹி நான் இதப்போல பொம்மை ஊர்வல கூட்டமெல்லாம் வேடிக்கைப்பார்ப்பது வழக்கம், எனவே ஓரளவுக்கு தெரியும்.இந்த தடவை ஒரு பெரிய புள்ளையார் பொம்மை வண்டில வச்சிருந்தாங்க, இந்த பொம்மை செய்ய எவ்வளவு செலவாச்சுனு ஆர்வத்தில கேட்டுட்டேன் "அதுக்கே உர்ருனு" பார்த்தான் அவ்வ்.

   எனது பின்னூட்டத்திலேயே சொல்லி இருக்கேன்,அப்படி வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை மட்டும் கைது செய்து தண்டிக்கனும் என. ஒரு தடவை கைது செய்து "முறைப்படி" கவனிச்சால் அதுக்கு அப்புறம் வம்பு செய்ய மாட்டார்கள்.

   நீங்களே சொல்லி இருக்கிங்க அப்படி வம்பில் இறங்குவது ஒரு பத்து பேரு தான் இருக்கும்னு,அவங்களை புடிச்சா போதும் ,ஏன் ஒட்டு மொத்தமாக பள்ளிவாசல் இருக்கும் வழியாவே வரக்கூடாதுனு சொல்லி வருத்தப்படுறிங்கனு தான் நான் கேட்டுள்ளேன்.

   எப்படி காவிகளில் குள்ளநரிகள் இருக்கிறார்களோ,அதே போல அடிப்படைவாத மார்க்கப்பந்துக்களும் குள்ள நரிகளே, நாகூரில் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவில் பிரச்சினை செய்வது அடிப்படைவாத மார்க்கப்பந்துக்களே, அவ்விழாவும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தான் இப்பொழுதெல்லாம் நடக்கிறது, ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் இத்தனை பதட்டம் அப்பகுதியில் இருக்காது.

   இஸ்லாமியர்களிலேயே ஒரு பிரிவு இன்னொரு பிரிவை அடிச்சிக்கிட்டு ,பதட்டம் உருவாக்குறாங்க? இதெல்லாம் அடிப்படைவாத இஸ்லாமிய குள்ளநரிகளால் தானே?

   # கெட்டவார்த்தையை எல்லா பள்ளிவாசல் பகுதியிலும் பேசி பிரச்சினை உருவாகுதா?

   எங்க ஏரியாவிலும் ஒரு பள்ளிவாசல் இருக்கு அது வழியாத்தான் விநாயகர் பொம்மைலாம் போச்சு ஆனால் ஒன்னும் சச்சரவுலாம் இல்லை.

   பல இடத்தில இப்படி அமைதியாவே போயிட்டு இருக்கு.

   நீங்க பொதுவா எந்த பள்ளிவாசல் வழியா போனாலும் அசம்பாவிதம் நடக்க்கிறாப்போல சொல்லி இருக்கிங்க. சென்னையை பொறுத்தவரையில் திருவல்லிக்கேணியில் தான் பிரச்சினை உருவாகும். அதுவும் பத்து வருஷத்துக்கு முன்னர் ஒழுங்கா போனதா தான் எனக்கு நினைவு, நான் ராயபேட்டையில இருந்த போது பார்த்திருக்கிறேன்,மீர் சாகிப் மார்க்கெட், பள்ளிவாசல் வழியாக சாதாரணமாக போயிட்டு இருக்கும் ஊர்வலம்.

   அப்போலாம் பல பகுதியில் இருந்து வர பொம்மை ஊர்வலம் அவங்கவங்க இஷ்டப்பட்ட வழியில கடற்கரைக்கு போயிப்பாங்க, எல்லாம் ஒரே ரூட்ல வரனும்னு மாத்தினப்பின்னாடி தான் பிரச்சினை ஆகுது என நினைக்கிறேன்.

   நீக்கு
  5. சாஹா,

   உங்களைப்போன்ற அடிப்படைவாத மார்க்கப்பந்துக்களால் தான் நடுநிலையான இந்துக்கள் கூட ,தீவிரமாக இந்துத்வ பாதைக்கே போறாங்க, என்ன பேசுறோம்னே தெரியாம உளறுவதை நிறுத்திட்டு ,கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்க.

   உங்க கண்ணுக்குலாம் , உங்கள் சமூகத்தை தவிர மற்ற எல்லாருமே காவிக்கோஷ்டியா தெரியும் எனில், அப்படினா ஏன் உங்களை போன்றவர்களை தலிபான்களா பார்க்க கூடாது :-))

   நீக்கு
  6. வவ்வால்..

   // எனது பின்னூட்டத்திலேயே சொல்லி இருக்கேன்,அப்படி வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை மட்டும் கைது செய்து தண்டிக்கனும் என. ஒரு தடவை கைது செய்து "முறைப்படி" கவனிச்சால் அதுக்கு அப்புறம் வம்பு செய்ய மாட்டார்கள். //

   எஸ்.. இதை செய்தால் போதும்... எல்லா ஊரிலும் தேவை இல்லை.. பிரசச்னைக்குரிய ஊர்களில் செய்தால் போதும்... நீங்கள் என்னென்னவோ சொல்லி இருக்கீங்க.. உங்க வியூ புரியல... பட் தன் வீட்டிலே வெடிகுண்டு வைத்து முஸ்லிம்கள் பலி போடுபவர்கள் இவர்கள் என்பதையும், தென்காசியில் தன் ஆபிஸிலே குண்டு போட்டு முஸ்லிம்கள் மீது பலி போட்ட்டவர்கள் இவர்கள் என்பதும்... காந்தியை கொல்லும் பொழுதே திட்டமிட்டு இஸ்மாயில் என்று பச்சை குத்தி செய்தவர்கள் இவர்கள் என்பதையும் ஏனோ மறந்துவிடுகிறீர்கள்...

   இறைவன் மீது ஆணையாக தமிழக முஸ்லிம்கள் மாற்று மத விழாக்களில் கலவரம் செய்பவர்கள் அல்ல.... ஏன்னா தமிழக முஸ்லிம்கள் பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும்...

   வருகைக்கு நன்றி...

   நீக்கு
 5. //ஏன்..அதென்ன முஸ்லிம் தெருக்களின் வழியாக கொண்டு செல்கிறார்கள்..ஏன் அதை தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் வழியாக கொண்டு செல்ல வேண்டியதுதானே //
  //பள்ளிவாசல் வழியாக ஊர்வலம் செய்வதன் மூலம் என்ன சாதிக்க முடியும், சண்டையை கிளப்புவதை தவிர//

  இவர்களின் இந்த வாதத்துக்கும் தம்புள்ளையில் பாரம்பரிய புத்த கோயிலில் எல்லைக்குள் பள்ளிவாசல் இருக்கக் கூடாது என்று கூறும் இனவாத சிங்கள பிக்குகளின் வாதத்துக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. எத்தனை பள்ளிவாசல்கள் இந்துக் கோயில்களை இடித்துக் கட்டப்படுள்ளன, எத்தனை பள்ளிவாசல்கள் பழமையான இந்துக் கோயில்களுக்கு முன்னால், பக்க்கத்தில் எல்லாம் தமிழ்நாட்டில் கூட உள்ளன. இதைப் பார்த்து விட்டு அவை எல்லாம் அகற்றப்பட வேண்டும் என இந்துக்கள் போராட்டம் நடத்தினால் என்ன ஆகும். வருடத்தில் ஒருமுறை பள்ளிவாசலுக்கு முன்னால் விநாயகர் ஊர்வலம் போனால் என்ன? முஸ்லீம்கள் அதை வரவேற்று, மத நல்லிணக்கத்துகாக மட்டுமன்றி நாம் தமிழர் என்ற முறையில் தமது நேசக் கரத்தை முதலில் நீட்டினால் என்ன? நாங்கள் தமிழர்களும் முஸ்லீம்களும் மத வேறுபாடின்றி இத்தனை நூற்றாண்டுகள் வாழவில்லையா? எல்லாம் வாஹாபியிசம் செய்கிற வேலை. ஆர் எஸ் எஸ் காரர் மட்டுமல்ல, வாஹாபிகளும் தமிழ்நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டியவர்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வவ்வாலுக்கு கொடுத்த கமெண்டை உங்களுக்கும் சமர்பிக்கிறேன்...

   தன் மதவிழா கொண்டாடையில் அடுத்த மதத்துக்காரன வம்பிழுக்க நினைப்பது கீழ்தரமானது.. இதை செய்வது எல்லோரும் அல்ல... கலவரத்தை உண்டு பண்ண நினைக்கும் சில கீழ்தரமான ஜென்மங்கள் மட்டுமே... ஒரு கூட்டத்துக்கு 10 பேர் கூட இருக்க மாட்டாங்க.. இவங்கள ஒழுங்கா ஹேன்டில் பண்ணாலே இவ்ளோ போலிஸ் போஃர்ஸ் தேவை இல்லை...

   நீக்கு
  2. ///தன் மதவிழா கொண்டாடையில் அடுத்த மதத்துக்காரன வம்பிழுக்க நினைப்பது கீழ்தரமானது.///

   முஸ்லீம்களை வம்புக்கு இழுக்கிறார்கள் அது நிறுத்தப்பட வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டால் அது நியாயமானதே ஆனால் தமிழ்நாட்டில் விநாயகர் ஊர்வலம் பள்ளிவாசல் உள்ள வீதிவழியாக போகமுடியாது அல்லது அனுமதிக்கக் கூடாது என்று எந்த முஸ்லீமாவது கூறினால் அதை விட அடாவடித்தனம் இருக்கவே முடியாது. :)

   நீக்கு
  3. விசயன் சகோ...

   // அனுமதிக்கக் கூடாது என்று எந்த முஸ்லீமாவது கூறினால் அதை விட அடாவடித்தனம் இருக்கவே முடியாது. :)//

   கல்லெறிதல், கெட்டவார்த்தை பேசுதல் போன்ற பிரச்சனைகளை செய்து அதன் மூலம் முஸ்லிம் கடைகளை எறித்தல் போன்ற ரேஞ்சுக்கு போன பின் தான் (ஒரு சில ஊர்களில்) பின் தான் பள்ளீவாசல் பகுதிகளை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வர ஆரம்பித்தது.... அதற்கு முன் வவ்வால் சொன்னது போல் எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை...

   ஆக... பள்ளிவாசல் இருக்கும் பகுதிகளை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கை எதிர்வினை... வினை அல்ல... இல்லை என்று நீங்கள் மறுத்தால்... உங்கள் மனசாட்சிக்கே இதை விட்டு விடுகிறேன்...

   நீக்கு
 6. பிள்ளையார் ஊர்வலங்கள்.

  பிள்ளையார் என்ற இந்து மதக் கடவுளுக்குப் பல நாமகரணங்கள் உண்டு என்றாலும், அதனைப் பெரிது படுத்தி விளம்பரம்செய்து இந்தியத் துணைக் கண்டத்தின் தேசியத் திருநாள் போல பிள்ளையார் சதுர்த்தியைப் பெரிதுபடுத்தியுள்ளனர்.

  இதனை முக்கியப் புள்ளியாக வைத்து இந்துத்துவாவுக்கு ஒரு புதிய உந்து சக்தியை உண்டாக்குவதற்கான வகையில் மூளையைச் செலுத்தியவர் மகராஷ்டிரப் பார்ப்பனரான பாலகங்காதரத் திலகர்.

  பிள்ளையார் என்பதற்கு இன்னொரு பெயர் வினாயகர் என்பதாகும். கவுதம புத்தருக்கு இந்தப் பெயர் உண்டு. இந்தப் பெயரை உருட்டல் புரட்டல் செய்து, எங்கெங்கெல்லாம் புத்தர் உருவச் சிலைகள் இருந்தனவோ அந்த இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு, இந்த விநாயகனாகிய பிள்ளையாரின் சிலைகளைச் செய்து வைத்துவிட்டனர்.

  ஆரியப் பார்ப்பனர்களின் மனப்பான்மையைத் தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இருக்காது.

  பொம்மைகளைக் கோயில்களில் கடவுள்களாக்கி, அவற்றின் ஏஜென்டுகளாகப் பார்ப்பனப் பெருச்சாளிகள் புகுந்து கொண்டு மக்களின் அறியாமை, அச்சம், பேராசை இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தங்களைப் பிறவி முதலாளிகளாக ஆக்கிக் கொண்டு, சுரண்டல் வேலையை அதிகார பூர்வமான தொழிலாக செய்து கொண்டவர்கள் இந்தப் பார்ப்பனர்கள்தாம்.

  விநாயகன் என்ற கடவுளின் உருவத்தைப் பார்ப்பவர்களுக்கு இப்படி ஒரு மிருகமே இருக்க முடியாது என்கிறபோது எப்படி கடவுளாக இருக்க முடியும் என்ற கேள்வி எழாமல் போகாது.

  உருவமற்றவர் கடவுள் என்று ஒரு புறத்தில் ஓதிக் கொண்டு, இவ்வளவு ஆபாசமாக ஒரு கடவுளை ஆரியப் பார்ப்பனர்கள் உருவாக்கியுள்ள பித்தலாட்டத்தை என்ன சொல்ல!

  எந்த அளவுக்கு விநாயகனைப் பயன்படுத்தினார் திலகர் என்றால், இரண்டு ஆங்கில அதிகாரிகளை படுகொலை செய்யும் அளவுக்கு வெறியை ஊட்டினார்.

  புனேயில், பிளேக் நோய் பரவியதால், அந்த நோய்க்குக் காரணமான எலிகளை வேட்டையாட ஆங்கிலேயர் ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டு, செயல்படுத்தவும் பட்டது.

  அந்தத் தருணத்தில் இந்த திலகர் என்னும் பார்ப்பனர் - கிறிஸ்தவர்களாகிய வெள்ளைக்காரர்கள் நமது கடவுளான விநாயகரின் வாகனத்தைக் கொல்லுகிறார்கள். இதனை அனுமதிக்கலாமா என்ற ஆவேச வெறியைக் கிளப்பினார்.

  இதன் காரணமாக இந்துத்துவா வெறியர்கள் இரு ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றனர். இதன் காரணமாக திலகர் தண்டிக்கப்படவும் செய்தார்.

  அந்தக் காலந்தொட்டு நாடு தழுவிய அளவில் பிள்ளையார் ஊர்வலங்களை சிறுபான்மையினரிடம் கலகம் விளைவிக்கும் ஒருயுக்தியாக மேற்கொண்டனர். இந்த அனுபவம் சென்னையிலும் உண்டு.

  விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் என்றால் வீட்டுக்குள் கொண்டாடிக் கொண்டு தொலையலாம். வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள கிணறுகளிலும், குளங்களிலும் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கலாம். (அப்படித்தான் நடந்து வந்தது;) திலகரின் திட்டத்துக்குப் பிறகுதான் வீதிகளில் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் கைங்கர்யம் நடைபெறத் தொடங்கியது.

  நீர்நிலைகளில் கரைக்கப்படும் பிள்ளையார் பொம்மைகளில் வண்ணம் தீட்டப்பட்டு இருக்கக் கூடாது. இராசயனக் கலவையான வண்ணம் தீட்டப்பட்டிருந்தால் அது தண்ணீரை நஞ்சாக்கும், சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கிறது.

  அது குறித்து எந்தவித மதிப்பையும் கொடுக்காமல் பல வண்ணப் பிள்ளையார்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கிறார்கள்.

  குறிப்பிட்ட அடி உயரத்திற்கு மேல் பிள்ளையார் பொம்மைகள் எடுத்துச் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டும், அதை இந்துத்துவவாதிகள் பொருட்படுத்துவதில்லை. இந்த முறையாவது காவல்துறை என்ன செய்யப்போகிறது என்பதையும் பார்ப்போம்!

  Copied from: http://www.viduthalai.in/page-2/41020.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பொழுது இவர் இந்துக்களின் மத நம்பிக்கையை கொச்சைப் படுத்துகிறார். இப்படி சிலர் இஸ்லாத்தைப் பற்றி எழுதினால் உடனடியாக பாட்வா (Fatwa) அறிவித்து விடுவார்கள். இந்துக்கள்விடுதலை பத்திரிகையைக் கணக்கிலெடுப்பதில்லை, அதனால் அதில் வந்த கட்டுரையை இந்தப் பதிவில் நடைபெறும் உரையாடலுக்கிடையில் புகுத்துவது உங்களில் இயலாமையைக் காட்டுகிறது. இஸ்லாத்தைப் பற்றிய கலந்துரையாடலில் யாராவது ஆர் எஸ் எஸ் காரரின் கட்டுரையை மேற்கோள் காட்டினால் அது எவ்வளவு முட்டாள் தனமோ அதை விட முட்டாள் தனம், இந்து திருவிழாக்களை விளக்க விடுதலைப் பத்திரிகையின் கட்டுரையை பதிவதுமாகும். :)

   நீக்கு
 7. சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் இன் பிள்ளையார் ஊர்வலங்கள்.

  மசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம்.

  மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சினை இல்லாமல் நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே – இல்லாத ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.

  மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூறின்றிச் செல்லுகின்றன.

  இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை.
  1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான் இக்கலவரங்கள் ஆரம்பித்தன.

  சரியாகத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, ”துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு” போன்ற வசை மொழிகளை கூவுவது இவற்றினால்தான் தகராறுகள் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.

  பம்பாய், ஹைதராபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன.

  தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.


  எனவே மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

  பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன – இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது மக்களின் கடமையாகும்.

  மசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள்.

  COPIED FROM SOURCE: http://www.vinavu.com/2012/07/07/conversion-18/

  பதிலளிநீக்கு
 8. முஸ்லிம்கள் Vs வினாயகர் ஊர்வலங்கள். PART 1.

  . 'சாமான்யனின் தெய்வமாக' ஆலமர, வேப்பமர நிழலிலும் மற்றும் ஆத்தங்கரைகளிலும் வீற்றிருக்கும் 'புள்ளையாரை' முன்வைத்து முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகின்றன.

  முன்பெல்லாம் வினாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் மாட்டுச் சாணம் அல்லது களிமண்ணால் சிறிய வினாயகர் வடிவங்களைப் பிடித்து அவற்றைக் கிணறுகளிலோ குளங்களிலோ வீசி எறிவர். வினாயகர் சதுர்த்தி என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் கொழுக்கட்டை கிடைக்கும் என்பதுதான்.

  இன்றோ, தமிழகத்தில் 1985ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்துத்துவ வெறிக்கும்பல் நடத்தும் வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரமும் வன்முறையும் தான் நினைவுக்கு வந்து திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.

  இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு - தங்களின் இருப்பையும் இந்திய முஸ்லிம்களின் மீது வெறுப்பையும் காட்டுவதையே பிழைப்பாகக் கொண்ட மதவெறியர்களின் கையில் அப்பாவி வினாயகரும் 'துருப்பு சீட்டாக' சிக்கிக் கொண்டார்.

  முஸ்லிம்களுக்கு எதிரான பகையை வளர்ப்பதற்கான எந்த வாய்ப்பையும் தவற விடாத ஹிந்துத்வ சக்திகள், கோட்ஸே என்ற சித்பவன பிராமனனால் மஹாத்மா காந்தி, படுகொலை செய்யப்பட்டபோது அதைத் திரித்து, "ஒரு முஸ்லிம்தான் காந்தியை படுகொலை செய்தான்" என்று வதந்தி பரப்பினார்கள்.

  அந்தப் பழக்கம் இன்றும் தொடர்ந்து தென்காசியில், தங்களது சொந்த இந்து முன்னணி அலுவலகத்தில் 'வெடிகுண்டு' வைத்துவிட்டுப் பழியை அப்பாவி முஸ்லிம்கள் தலையில் போட்டுக் கலவரம் செய்ய முயன்று - இறுதியில் போலீசில் 'வகையாக சிக்கி' மூக்கை உடைத்துக் கொண்டது.

  'இஸ்லாமியர்கள் தங்களின் தெருவழியாக இந்துக் கடவுளர்களை தூக்கிச் செல்ல அனுமதிப்பதில்லை என்றும் "முஸ்லிம்களின் வசிப்பிடங்களின் வழியாக பன்றி போகலாம், கழுதை போகலாம், நாய் போகலாம் ஆனால் 'புள்ளையர் சிலை' போகக்கூடாதா?" என்று பொது மக்களை உசுப்பேத்தி விட்டு, வழக்கமாகச் செல்லும் வழியை விட்டுவிட்டு முஸ்லிம்கள் வசிப்பிடம் வழியாகத்தான் புள்ளையாரைத் தூக்கிச் செல்லவேண்டும் என்று மக்களைத் தூண்டி வருகிறார்கள்.

  அந்தப் பொய்களை கேட்கிற எவருக்கும் இஸ்லாமியர்கள் வினாயகரை எதிர்க்கிறார்களே என்றே எண்ணத் தோன்றும்.

  முஸ்லிம்களின் வசிப்பிடங்கள் வழியே பன்றிகள் போகும்போது, "பாபரின் வாரிசுகளே! பாகிஸ்தனுக்கு திரும்பி போங்கள்" என்று உறுமுவது கிடையாது. நாய்கள் போகும்போது, "துலுக்கனை வெட்டு; துலுக்கச்சியக் கட்டு" என்று குரைப்பது கிடையாது.

  கழுதைகள் போகும்போது, "பத்து பைசா முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு" என்று கனைப்பது கிடையாது.

  ஆனால் 'பக்த கோடிகளாக' வேஷமிட்டு, 'சோம பானம்' 'சுரா பானம்' அருந்தி, சுய நினைவில்லாமல் கூலிக்கு மாரடிக்கிற 'கேடிகள்' போடுகிற இஸ்லாமிய எதிர்ப்பு கோஷங்கள்தாம் முஸ்லிம்களைத் தங்களது வசிப்பிடங்களின் வழியாக 'வினாயகர் ஊர்வலம்' செல்வதை எதிர்க்கத் தூண்டுகிறது.


  இஸ்லாமியர்களின் எதிர்ப்பு வினாயகருக்கோ ஹிந்து சகோதரர்களுக்கோ எதிரானது அல்ல.

  'வினாயகர் ஊர்வலம்' என்ற போர்வையில் கலவரம் விளைவித்து, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைத்து, முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடத் திட்டம் போடும் ஹிந்துத்வ மதவெறி கும்பலுக்கு மட்டும் எதிரானது என்பதை மாற்றுமதச் சகோதரர்கள் நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், இதையும் வழக்கம்போல் திசை திருப்பி பொதுமக்களிடம் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வை வளர்கிறார்கள்

  வினாயகர் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாகச் செல்பவர்கள் எவரும் மந்திரங்கள் சொல்லுவதில்லை.

  அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று தூக்கி செல்கிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மந்திரமே தெரியாது; அதற்குக் காரணம் உயர்சாதிக்கு மட்டும் சொல்வதற்குச் சொந்தமான மந்திரத்தைப் பிறர் காதால் கேட்க கூடாது; நாவால் உச்சரிக்க கூடாது, மீறினால் ‘ஈயம் காய்ச்சி ஊற்றப்படும்’ என்ற 'மனுதர்மத்தின்' அன்பான மிரட்டல்தான்.

  ஹிந்து தர்மப்படி 'சூத்திரன்' 'மிலேச்சன்' என்ற முத்திரைகளோடு கோவிலுக்குள் நுழைய அருகதையற்றவர்களின் கைகளிள் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக 'சிலையை'த் திணிக்கிறது ஹிந்துத்வா.

  வேதங்களால், தீண்டத்தகாதவர்களாக வரையறை செய்யப்படவர்களுக்குத் தற்காலிகமாக 'ஹிந்து' என்று முத்திரை குத்தி, முஸ்லிம்களுக்கெதிராகக் களமிறக்குகிறது ஹிந்துத்வா.  ஆக்கம் : பிறைநதிபுரத்தான்.

  Source: http://pirainathi-puram.blogspot.sg/2008/09/vs.html

  பதிலளிநீக்கு
 9. முஸ்லிம்கள் Vs வினாயகர் ஊர்வலங்கள். PART 2.

  சாதி வேறுபாடு பாராட்டும் இந்துத்வாவின் இரட்டை வேடம் மக்கள் அறியாதது அன்று. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தபோது பின்னங்கால் பிடரியில் இடிபட, மூச்சு முட்ட 'ஹை கோர்ட்' 'சுப்ரீம் கோர்ட்' என்று அலைந்து -திரிந்து தடை வாங்கியது - ஹிந்துத்வ கும்பல்தான்.


  தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இந்து ஆதிக்கவாத சக்திகள் அத்துமீறும் போதெல்லாம் வாயையும் 'மற்றதையும்' பொத்திக்கொண்டு - காஷ்மீர் உயர் சாதி பண்டிட்களுக்காக 'குய்யோ' முறையோ' என்று ஒப்பாரி வைப்பதும் ஹிந்துத்வ கும்பல்தான்.

  ஒவ்வொரு வருடமும் வினாயகர் ஊர்வலத்தின் போது பதட்டம்-கலவரம் ஏற்பட இத்தகைய கோஷங்கள்தான் காரணம் என்று - 'ஸ்காட்லாந்து' போலிசுக்கு இணையாகக் கருதப்படும் தமிழகக் காவல் துறைக்குத் தெரியாதா?

  வினாயகர் சிலை கரைக்கப்படுவதால் நீர் நிலைகளில் தேக்கங்களில், ஆறு குளங்களில் ஏற்படும் மாசுகளைப் பற்றி கவலைப்படும் மத்திய-மாநில அரசுகள் - ஊர்வலம் மூலம் ஏற்படும் மதக்கலவரம் பற்றி கவலைப்படாது ஏன்?

  நீர் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக - கரைக்கப்படும் சிலைகள் செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைப் பற்றிய விதிமுறைகளில் காட்டப்படும் அக்கறையில் சிறிதுகூட ஊர்வலத்தால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர் நலனில் காட்டப்படாதது ஏன்?

  சட்டமும் காவல் துறையும் என்ன செய்துகொண்டிருக்கின்றன? இழவுத் துறையாகிப் போன உளவுத்துறை போல் செயலிழந்து விட்டதா? அமைதியாக நடக்க வெண்டிய ஊர்வலத்தை - பதட்டம் நிறைந்ததாக மாற்றும் கயவர்கள் யார் என்று காவல் துறைக்குத் தெரியாதா?

  டிசம்பர் ஆறை முன்னிட்டு முன்னெச்சரிகை நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லிம்களைக் கைது செய்வதில் காட்டும் அக்கறையில் சிறிது கூட 'ஹிந்துத்வ' வினாயகர் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் மீது காட்டாதது ஏன்?

  பிரச்சினைக்குத் தற்காலிக தீர்வுகள் வேண்டி 'பதட்டம்' நிறைந்த ஊர்களில் அனைத்து மதக்கூட்டம் போட்டும் ஹிந்துத்வ வன்முறையாளர்களின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

  அதனால் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களை நெறிபடுத்த சில வரைமுறைகளை அரசும்-காவல் துறையும் எதிர்காலத்தில் செய்யவேண்டும்:

  • ஊர்வலத்தில் கலந்து கொள்கிறவர்கள் மது அருந்தியிருக்கிறார்களா என்று பரிசோதனை செய்யப்படவேண்டும்.

  • ஊர்வலத்தில் கலந்து கொள்கிறவர்கள் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் போன்றவற்றைப் பதுக்கி வைத்திருக்கிறார்களா என்று பரிசோதனை செய்யப்படவேண்டும்.

  • முஸ்லிம்களின் வசிப்பிடங்கள வழியாக செல்லும் ஊர்வலங்களை 'வீடியோ' மூலம் படம்பிடிக்க வேண்டும்.

  • வெளியூர்காரர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது.

  • ஊர்வலத்தின் போது முழங்குவதற்கான கோஷங்களைக் காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

  • அனுமதிக்கப்படாத கோஷங்களை எழுப்புவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  இவற்றைச் செய்யத் தவறினால் ஊர்வலத்தின்போது ஏற்படும் வன்முறை, பொருள் நஷடம், உயிர் இழப்பு ஆகியவற்றிக்குக் காவல் துறையே பொறுப்பேற்க வேண்டும்.

  கடமையைச் செய்ய காவல் துறை தவறினால், மத நல்லிணகத்திற்குக் கேடு விளைவிக்க விரும்பும் சக்திகளைக் கட்டுப்படுத்த மேற்கண்ட நெறிமுறைகளை வலியுறுத்தி, சமூக அக்கறையுள்ள அமைப்புகள் பொதுநல வழக்கு தொடர்ந்து அரசின் கவனத்தை திருப்ப வேண்டும்.

  ஆக்கம் : பிறைநதிபுரத்தான்.

  Source: http://pirainathi-puram.blogspot.sg/2008/09/vs.html

  பதிலளிநீக்கு
 10. விவாதம் நன்றாகத்தான் போய்கொண்டு இருந்தது ஆனால் வாஞ்சூர் வாந்தி எடுக்க தொடங்கிய பின் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது

  பதிலளிநீக்கு
 11. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நீண்ட நெடுங்காலமாக நடக்கிறது தேர் ஊர்வலம். அதற்கு இதுபோன்ற பதட்டமான பாதுகாப்பு தேவைப்பட்டதில்லை.

  சென்னை நகரிலேயே ஆடி மாதத்தில் விநாயகர் சதுர்த்தியை விடவும் மிகப்பிரபலமாக நடக்கிறது அம்மன் கோவில் ஆடித்திருவிழாக்கள். அப்போது ஊர்வலம், கரகம் என களைகட்டுகிறது. அதற்கும் இதுபோன்ற போலிஸ் பாதுகாப்பு தேவைப்படவில்லை.

  இந்துக்கள் ரமலான் காலத்தில் முஸ்லீம் நண்பர்கள் வீட்டுப் பிரியாணியை விரும்பித்தான் சாப்பிடுகிறார்கள். அவர்களது மத உணர்வுகளை மதிக்கிறார்கள். சராசரி இந்துவுக்கு எல்லா கடவுளும் ஒன்றேதான்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters