திங்கள், டிசம்பர் 31, 2012

மதுரை ஆதினம் அப்படி சொல்லியிருக்க கூடாது!!

டெல்லியில் அரங்கேறிய மருத்துவ கல்லூரி மாணவியின் பாலியல் பலாத்கார சம்பவம் பல விஷயங்களை நமக்கு உணர்த்தியது... என்னன்னா நம் மக்களும் தெருவில் இறங்கி போராடும் அளவிற்கு மனிதாபிமானம் (ஆள் பார்த்து) இருக்கு.. மெட்ரோ சிட்டியில் நேரமும் இருக்கு... இது போக நேத்து இன்னொரு விஷயமும் எனக்கு உணர வச்சது... நம்ம தமிழ்நாட்டு அமைப்புகள் போராடுவதற்கு எந்த ஒரு துரும்பும் இதுவரை கிடைக்கல... நம்மலும் இருக்கோம்னு காட்டணுமே... என்ன  செய்யலாம்னு காத்துட்டிருந்தவங்களோட வலைல நம்ம மதுர ஆதினம் தானா வந்து மாட்டிக்கிட்டார்...

சின்ன வயசுல அடிக்கடி கேள்விபடும் விஷயம், "அரைகுறை ஆடை அணியும் நடிகையை எதிர்த்து மாதர் சங்கம் போராட்டம், உலக அழகி போட்டி எதிர்த்து போராட்டம், விளம்பரத்தில் பெண் போகப்பொருளாக காட்டுவதை கண்டித்து
போராட்டம்...ன்னு இந்த லெவளில் இருக்கும்... இதெல்லாம் நான் முன்பே சொன்ன மாதிரி சின்ன வயசுல... சின்ன வயசுல...

சில வருட குளிர்கால உறக்கத்துக்கு பின் பெண்கள் அமைப்பு புதிய பரிணாமத்தில் வந்தது செம அதிர்ச்சி.... இவ்வளவு நாள் பெண்கள் கண்ணியம் பத்தி பேசிட்டிருந்தவங்களா இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி என புருவத்தை தலைமுடி தொடும் அளவுக்கு உயர்த்தி, காய்ந்து போய் ஒட்டிக்கொண்டிருந்த உதட்டை திறந்து இருக்கும் பற்களையெல்லாம் தெரிய வைத்து, மவுஸ்ஸில் இருக்கும் உள்ளங்கையை தானாக நெத்தியில் சடார்ன்னு ஒரு அடி அடிக்க வச்சது!

ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப இஸ்லாமிய பெண்களைப் போல் அனைத்து பெண்களும் பர்தா அணிய வேண்டும்- ன்னு சொன்னார். பாவம் இவர் கெட்ட நேரம் இஸ்லாமும், பர்தாவும் வாய்ல வந்துடுச்சு.... கொஞ்சம் உஷாரா இருந்திருந்து இப்படி சொல்லியிருக்கணும்... //ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப அனைத்து பெண்களும் முழு உடலை மறைக்கும் கன்னியமான ஆடை அணிய வேண்டும்// - இப்படி சொல்லியிருந்தா இப்ப இவருக்கு இந்த நெலம ஏற்பட்டிருக்குமா? இல்ல குளிர்கால உறக்கத்தில் இருந்த பெண்கள் அமைப்பும் மார்கழி மாசம் அதுவுமா மடத்தை முற்றுகையிட்டிருக்குமா? பாவம் தூங்குறவங்களையெல்லாம் எழுப்பிட்டார் இந்த ஆதினம் :-)) 

போராட்டத்தின் போது "நாங்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என சொல்லாதே" என்ற வாசகம் பற்றி கேள்விபடும் போதும், பெண்கள் இரவு நேரத்தில் வெளியே சுற்ற வேண்டாம் என ஆந்திராவில் ஒரு அரசியல் பிரமுகர் சொன்ன போது அதை நீ சொல்லாதே என சொன்னபோதும்- அப்படின்னா எக்கேடோ கெட்டு போ என அனைவரையும் சொல்ல வைத்திருக்கும்... நம் நாட்டு மக்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்தது எது என்ற வருத்தமே மிஞ்சியது... கண்ணியமா ஆடை உடுத்து என சொன்னது தப்பா என மனசாட்சி உள்ள அனைவர் மனதிலும் நிச்சயமாய் உதித்திருக்கும்.. பாவம் மாதர் சங்கங்களும், போராட்டத்தில் குதித்த அனைவரின் முகத்திலும் நீங்காத நெய்வேலி கரி  படிந்துவிட்டது...

இந்த பிரச்சனை ஆரம்பமாகிய நேரத்திலிருந்து அனைவரின் பார்வையும் உடைகட்டுப்பாடு, வளர்ப்பு, தண்டனை என்ற 3 விஷயங்களை சுற்றியே வந்தது. அனைவரின் கோரிக்கையும் இதனை வலியுறுத்தியே வந்தது..... துரதிஷ்ட்டவசமாக இவர்கள் வலியுறுத்திய இந்த விஷயங்கள் எல்லாமே முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னொரு காலத்திலிருந்தே இஸ்லாமியர்களின் வாழ்க்கை பகுதியில் பிரிக்க முடியாத அங்கமா இருக்கு... இந்த சம்பவத்தால் "இஸ்லாம் முறைப்படி" என்பது அனைவரின்  ஒட்டுமொத்த குரலாக இருக்கும் போது இஸ்லாமோபோஃபியாக்கள் சும்மா இருப்பாங்களா??...ம்ஹூம்.........

உடைகட்டுப்பாடு தேவை- ஆனால் இஸ்லாம் பெண்களை போல் என சொல்லக்கூடாது! பெண் பிள்ளை கண்காணிப்பு தேவை- ஆனால் இஸ்லாம் கூறும் வழிமுறைபடி என சொல்லக்கூடாது! கடுமையான தண்டனை வேண்டும்- ஆனா இஸ்லாம் சொன்ன மரணதண்டனை என  சொல்ல கூடாது!
-என்பதில் ரொம்பவே உறுதியா இருக்காங்க. பாவம் அவங்க பயமும் நியாயமானதே  :-)

என்னத்தான் மூடி மறைச்சாலும் இஸ்லாம் எனும் விதை மண்ணை துளைத்து தழைக்கவே செய்யும்.. பாறையின் இடுக்கில் சிக்கிக்கொண்டாலும் பிளவு ஏற்படுத்தி  வளரவே செய்யும்... காரணம், இது மலட்டு விதை அல்லவே :-)

அப்பறம் இன்னொரு முக்கிய விஷயம்...

பர்தா போட்டா மட்டும் பாலியல், வன்கொடுமைகள் எல்லாம் நின்றுவிடாது...

கடுமையான தண்டனை கொண்டு வந்தால் மட்டும் பாலியல், வன்கொடுமைகள் எல்லாம் நின்றுவிடாது...

பெண்பிள்ளைகளை கட்டுப்பாடோடும் கண்காணிப்போடும் வளர்த்தால் மட்டும் பாலியல், வன்கொடுமைகள் எல்லாம் நின்றுவிடாது...


கண்ணியமாய் உடை உடுத்தி, வரைமுறைகளோடு பாதுகாப்பான சுதந்திரமும்  அளித்து, நாட்டில் கடுமையான சட்டத்தை கொண்டு வந்தால் நிச்சயம் எந்த வெறிநாயும் சீண்டாது! நாம்  ஏன் கறித்துண்டை காமிப்பானேன்? நாய் ஏன் நம்மை கடிப்பானேன்??    தப்பு செய்றதுக்கான எல்லா கதவையும் அடைச்சு விடுங்க... அப்பறம் குற்றம் கொறையுதா இல்லையான்னு பாருங்க...


டிஸ்கி: இந்த பதிவை தனது தளத்தில் போட அனுமதித்த சிராஜ்ஜிற்கு நன்றி :-)

-ஆமினா முஹம்மத்

நன்றி : oneindia , inneram.com
வெள்ளி, டிசம்பர் 21, 2012

இன்று சத்தியமா உலகம் அழியாது.. ஏன்னா?? ஏன்னா?? ஏன்னா???தெருவுல நடக்க முடியல.....
ஒரு கடைக்கு போக முடியல.....

காலைல இட்லி வாங்கலாம்னு ஹோட்டலுக்கு போனேன்(காலை சாப்பாடு எங்க வீட்ல கிடைக்குது??? )...

 தெரிந்த நண்பர் தான் சமையல் மாஸ்டராக இருக்கிறார்....  அவர் கேட்டார் "பாய்... இன்னைக்கு ஏதும் ஹாட் நியூஸ் இருக்கா???"

நான்.. "இல்லையே அண்ணன்.. வழக்கம் போல் தான் இருக்கு" என்றேன்.

அதுக்கு அவர்  "இல்ல..இன்னைக்கு உலகம் அழியப்போகுதாமே????" அப்டின்னார்.....


பாமரர்களில் இருந்து, படித்தவர்கள் வரை அனைவரும் இன்று உலகம் அழியப்போகுதாமே??? நிஜமா சார்????

யாரோ மாயன் இன மக்கள் உருவாக்கிய காலண்டர்ல 2012 க்கு மேல இல்லையாமே??

ஆச்சா...பூச்சானு ஒரே அலப்பரையா தான் இருக்கு....

ஆனா பாருங்க சகோதர, சகோதரிகளே!!!!

இன்று சாமி சத்தியமா உலகம் அழியாது...  ஏன்னா..ஏன்னா..ஏன்னா...?????
அதே தான்.. நான் என்ன பெருசா சொல்லிட போறேன்... ???

இஸ்லாமிய நம்பிக்கைப் படி இன்று உலகம் அழியாது.. அழியவே அழியாது...


 
 ( இது மாயன் காலண்டர் இல்ல.. எங்க ஊரில் விசியோகிக்க              
இருக்கும் 2013 காலண்டர்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....)
                                                                 


உலக அழிவின் முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
 
1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

 
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.

இதில் 10 விசயங்கள் சொல்லப்பட்டாலும், நான் அனைத்தையும் பற்றி பேசப்போவது இல்லை.. ஒரே ஒரு விசயம்...  5 வது பாயிண்ட்... 


5 - ஈஸா (அலை) இறங்கி வருவது

ஈஸா (அலை) என்பது கிறிஸ்தவர்களின் கடவுளான ஏசுநாதரை  குறிக்கும். 
ஏசுநாதரை குறித்த இஸ்லாமிய நம்பிக்கையை சுருக்கமாக 4 பாயிண்டுகளில் பார்த்து விடுவோம்.

1. முஸ்ஸிம்களைப் பொறுத்த அளவில் அவர் கடவுள் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போல் இறைவனின் தூதுவர். முந்தைய கால மக்களுக்காக வந்தவர்.

2. அவர் சிலுவையில் அறையப்படவில்லை. அதே போல் சாகவும் இல்லை. சிலுவை  பிரச்சனையின் போது எதிரிகளிடையே குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் சிலுவையில் அறைந்தது ஏசுவை அல்ல. ஈஸா (அலை) அவர்கள் கடவுளிடத்தில் உயிருடன் உயர்த்தப்பட்டார்கள். 

3. உலக இறுதி நாளின் போது கடைசி 40 நாட்கள் அவர் வருவார். இந்த உலகை ஆள்வார். முஸ்லிம்கள் அனைவரும் அவரின் பின் அணி வகுப்பார்கள். அவரை கொண்டாடுவார்கள்.

4. தஜ்ஜால் என்ற கொடுங்கோலன் சர்வ வல்லமையுடன் இருப்பான். அவன் முஸ்லிம்களுக்கு பெரும் அச்சுறுத்தலாய் இருப்பான். அவனை ஈஸா அலை அழிப்பார்கள். அத்துடன் உலகம் அழிக்கப்படும்.

இது குறித்த ஒரு நபி மொழியை பாருங்கள்.....

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல
்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெரும்) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும். 
 
இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா(ரலி)

'வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிராக அவர் சாட்சியம் அளிப்பார்' (திருக்குர்ஆன் 04:159) 

என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

தன்னைப்போன்ற ஒரு நபியை போட்டியாக என்னாமல், தனக்குப் பின் உலகம் அழியும் போது வருவார், இஸ்லாமியர்களை தஜ்ஜாலிடம் இருந்து காப்பார் என்று இயேசுவை எவ்வளவு உயர்த்தி சொல்லி இருக்கிறார் முஹம்மது நபி ஸல் அவர்கள்????   அவரும், அவர் போதித்த இஸ்லாமும் உண்மையானது என்பதற்க்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி இல்லையா சகோஸ்??? நிச்சயமாக சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் நிறையவே அத்தாட்சிகள் உண்டு. சிந்திப்பீர்களா சகோஸ்?????

தஜ்ஜால் என்ற கொடுங்கோலனும்,ஈஸா நபியும் இந்த உலகத்திற்க்கு இன்னும் வர வில்லை. இதற்கு முஸ்லிம்களாகிய நாங்கள் சாட்சி, கிருத்தவ சகோதரர்களும் சாட்சி.

ஆகவே சகோஸ்... இன்று சத்தியமா உலகம் அழியாது.. அழியவே அழியாது.....

டிஸ்கி : இது ஒரு இஸ்லாமிய பதிவல்ல... இஸ்லாமிய நம்பிக்கையைச் சொல்லி முட்டாள்களின் மூட நம்பிக்கையை ஒழிக்கும் ஒரு பதிவு.... ஹி..ஹி..ஹி..ஹி......


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters