திங்கள், ஜனவரி 28, 2013

அண்ணன் பி.ஜே அவர்களுக்கு ஒரு கடிதம்                                                               

அன்புள்ள அண்ணனுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நலமாக இருக்கிறீர்களா??

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், பூரண உடல் சுகத்தையும் தருவானாக. ஆமீன்.

நீங்கள் தமிழகத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர். ஏன்? இந்தியாவிலே மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களை கணக்கிட்டால் நீங்கள் முதல் 5 இடங்களுக்குள் வருவீர்கள்(என்னைப்பொறுத்தவரை). இத்தகைய ஞானத்தை உங்களுக்கு கொடுத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

2002 ம் வருடம் என்று நினைக்கிறேன், இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஹஸரத்மார்கள் சொன்னதை மட்டும் மார்க்கம் என்று நம்பி வாழ்ந்து கொண்டு இருந்தேன். அப்பொழுது காரைக்குடியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது, பிஜே பேசுகிறார் என்று கூறி ஏறத்தால வற்புறுத்தி இழுத்துச் சென்றான் என் நண்பன் கஸாலி. அன்று தான் உங்கள் உரையை முதன் முதலில் கேட்டேன், முழுமையாகக் கேட்டேன். அல்ஹம்துலில்லாஹ். அவ்வளவு அழகாகப் பேசினீர்கள். அன்று தான் என் மனதில் மாற்றத்திற்கான முதல் விதை விழுந்தது, அது இன்று ஆலமரமாய் வளர்ந்து உங்களுக்கு கடிதம் எழுதும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.

தமிழகத்தில் வாழும் இலட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களின், குறிப்பாக இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன் நீங்கள். அதில் எந்த சூழ்நிலையிலும் மாற்றம் வராது, இன்ஷா அல்லாஹ்.

ஆனால், கடந்த சில நாட்களாக உங்கள் கட்டுரைகளில் சிலவும், உங்கள் பேச்சுக்களில் சிலவும் வரம்பு மீறி இருப்பது போல் தோன்றுகிறது அண்ணன். இது எனக்கு மட்டும் அல்ல, பெரும்பாலான இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு அப்படி தான் தோன்றுகிறது. குறிப்பாக மனுஷபுத்திரனை நீங்கள் "மிருகபுத்திரன்" என்று கூறியதையும், நேற்று விஸ்வரூப எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய சில வார்த்தைகளையும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்களால் ரசிக்க முடியவில்லை.

எது சொன்னாலும் அதில் குறை காணத் துடிப்பவர்கள் விமர்சிக்கிறார்கள் என்பதற்காக நான் இந்த கடிதத்தை எழுதவில்லை. நீங்கள் மிக கண்ணியமாக பேசி இருந்தாலும் அவர்கள் எதிர்க்கவே செய்வார்கள் என்பதை நானறிவேன்.
ஆனால் பொதுவான மாற்று மத சகோதரர்கள் பலர் இருக்கிறார்களே?? அவர்களுக்கும் அல்லவா நீங்கள் சொல்ல வந்த கருத்து போய்ச் சேராமல் ஆகிவிடும். எவ்வளவு அழகான கருத்துக்களை வைத்தீர்கள்?? ஆனால் வார்த்தைகளில் சற்று நிதானம் தவறியதால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிடுமோ என்று அஞ்சிகிறேன்... அஞ்சுகிறோம்.

ஏன் இப்படி பேச வேண்டும் என்று கேட்டால், அவர்கள் வரம்பு மீறும் அளவுக்கு நாமும் வரம்பு மீறலாம் என்ற வசனத்தை உதாரணமாக காட்டுகிறார்கள் நம் சகோதரர்கள். ஆனால், வரம்பு மீறுவதை விட மன்னிப்பது சிறந்தது என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள்.

அண்ணன்... நான் உங்களை மன்னிக்கச் சொல்லவில்லை... தாராளமாக உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். ஆனால் வார்த்தையில் கண்ணியத்தைப் பேணலாமே??? நீங்கள் வேண்டுமென்றே கண்ணியக்குறைவாக பேசினீர்கள் என்று நாங்கள் கூறவில்லை. அறியாமல் கூட இனி பேச வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் விமர்சனங்களில் இருக்கும் சில வார்த்தைகளை பார்க்கும் பொழுது நெஞ்சம் பதறுகிறது அண்ணே... "மிருகபுத்திரன்" என்ற வார்த்தையை கேட்டதும் காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல் பதறினோம். கமலின் குடும்பத்தை பற்றி நாம் பேச வேண்டியது இல்லையே அண்ணன். அவர் செய்தது நியாயம் இல்லை தான். அதற்காக நாமும் தரம் இறங்கத்தேவை இல்லையே???

அப்படி இறங்கினால் அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்??? இவர்களா நமக்கு தீர்ப்பளிக்கப்போகிறார்கள்?? இவை அனைத்தும் தற்காலிகம் தானே?? அதற்கு ஏன் இவ்வளவு கடினமான வார்த்தைகள்?? மென்மையாகவே கூறுவோம். முடிந்தால் புரிந்து கொள்வார்கள், முடியாவிட்டால் அதை இறைவனின் புறத்தில் விட்டுவிடுவோம்.

நீங்கள் சாதாரணமானவர் அல்ல... தமிழக முஸ்லிம்களின் நம்பிக்கை... உங்களால்  மட்டுமே கொத்து கொத்தாக இளைஞர்களை குரான், ஹதீஸின் பக்கம் கொண்டு வர முடியும்(இறைவன் நாடினால்...).. அந்த வல்லமையை இறைவன் உங்கள் பேச்சிற்கு கொடுத்து உள்ளான்.


அந்த ஆற்றலை இன்னும் வீரியமாக, விவேகமாக பயன்படுத்தி இந்த சமுதாயத்தை நீங்கள் மென்மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இனி தவறிக்கூட உங்கள் வாயில் இருந்தோ அல்லது எழுத்திலோ எந்த சூழ்நிலையிலும் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம்.
இதை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சார்பாகவும். பதிவுலகத்தில் இருக்கும் பெரும்பான்மை பதிவர்கள் சார்பாகவும் கேட்கிறோம். உங்கள் அன்புத் தம்பிகளின், தங்கைகளின் கோரிக்கையை பரிசீலிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

வஸ்ஸலாம்.

சிராஜுதீன்,
28.01.2013


குறிப்பு : இந்த கடிதம் சகோ பிஜே அவர்களுக்கும் அனுப்பப்படும்.
73 கருத்துகள்:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

  மாஷா அல்லாஹ் ... அருமையான கருத்துக்களை முன் வைத்து மிக அழகிய முறையில் எத்தி வைத்துள்ளீர்கள் சகோ சிராஜ்.... இன்ஷா அல்லாஹ் இந்த கருத்து சகோ பி.ஜே அவர்களுக்கு அனைத்து முஸ்லிம்கள் சார்பாக போய் சேரும் என்றும் நம்புவோம்.. இனி இப்படி ஒரு தவறு எந்த ஒரு காரியத்திலும் எந்த ஒரு முஸ்லிமின் புறத்தில் இருந்தும் வராமல் பார்த்துக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்..

  ஜஸக்கல்லாஹ் ஹைரன் ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் அஸ்ஸலாம் சகோ யாஸ்மின்...

   இன்ஷா அல்லாஹ், அண்ணனுக்கு இதை மெயிலில் அனுப்பப் போகிறேன். நிச்சயம் அவர் பார்வைக்கு இது கொண்டு செல்லப்படும் அல்லது அவரே பார்ப்பார் என்று நம்புகிறேன். நிச்சய்ம் மாற்றங்கள் வரும். அறிந்தே இப்படி பேசுபவர் அல்ல அவர். உணர்ச்சி வேகத்தில் வந்து விழுந்த வார்த்தைகளாகாவே இருக்கும். ஆனாலும் அதையும் தவிர்த்துக்கொள்ள தூண்டிக்கொண்டே இருப்போம்.

   வருகைக்கு நன்றி.

   நீக்கு
 2. சினிமா பிரியனான என்னை சுவனப்பிரியனாக மாற்றிய (இறைவன் நாட்டத்தால்) பிஜே அண்ணன் இனி உணர்ச்சி வசத்தில் வார்த்தைகளை இது போல் கொட்டி விட வேண்டாம் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை மட்டுமா?? மதுவிலும், சூதுவிலும் வீழ்ந்து கிடந்த நம் சமூக இளைஞர்களில் பலரை நேரான வழிக்கு கொண்டுவந்த பெருமை அண்ணனயே சாரும். இன்ஷா அல்லாஹ், இது போன்ற சிறு விஷயங்களை கவனத்தில் கொண்டால், அவரின் பேச்சு அனைத்து தரப்பு மக்களையும் சுண்டி இழுக்கும் என்பதில் மாற்று கருத்து எவருக்கும் இருக்க முடியாது.

   வருகைக்கு நன்றி அண்ணே...

   இது கொஞ்சம் சீரியஸ் போஸ்ட்... அதுனால உங்கள பதிவுலக வஹ்ஹாபிய தலைவர்னு கிண்டல் பண்ண முடியல.. கோச்சுக்காதீங்க.. ஹி..ஹி..ஹி

   நீக்கு
  2. /அதுனால உங்கள பதிவுலக வஹ்ஹாபிய தலைவர்னு கிண்டல் பண்ண முடியல.. // அதான் பண்ணியாச்சே :)

   நீக்கு
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  மிக அருமையான கடிதம் சகோ.சிராஜ். நன்றி.

  மிகச்சிறந்த மார்க்க ஆய்வறிஞர் மவுலவி சகோ.பீஜே உலவி அவர்களின் சமீபத்திய வரம்பு மீறிய பேச்சுக்களுக்கும்.... எழுத்துகளுக்கும்....

  .....அவரின் மார்க்க மாணவனான எனது வருத்தம் கலந்த கண்டனங்கள்.

  தற்போது விசுவரூபம் பிரச்சினையில் நமக்கு முழு வெற்றி கிடைக்க வேண்டும் என்றால்... நமது கருத்து, அனைத்து மாற்றுக்கருத்து கொண்டோர் மனதினுள்ளும் முழு நியாயத்துடன் சென்று சேர வேண்டும் என்றால்... இந்த கண்டனம் மற்றும் தவறு சுட்டிக்காட்டல் கடிதம் மிக அவசியமே.

  இவை, முஸ்லிம்கள் மீதும் இஸ்லாம் மீதும் இன்ன்னும் அதிகம் மதிப்பையும் ஈர்ப்பையும் அதனை எதிர்ப்போரிடத்தில் இன்ஷாஅல்லாஹ் ஏற்படுத்தும். எப்படியெனில், 'என்னதான் தமிழ் உலக முஸ்லிம்கள் போற்றும் ஒப்பற்ற மார்க்க என்றாலும் அவரும் ஒரு நேரத்தில் தவறு செய்தால், அப்போது முஸ்லிம்களின் கண்டனத்தில் இருந்து தப்ப மாட்டார்' என்பதே இப்போது நாம் முன்வைக்கும் முக்கிய செய்தி.

  'இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்' என்பதை நாம் நமக்குள் நியாபகப்படுத்திகொள்வோமாக. எனில், இறைவன் நம்முடன் இருந்தால் நமது முயற்சியில் வெற்றி கிடைக்காமல் போகுமா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் சலாம் சகோ முஹம்மது ஆசிக்...

   நிச்சயமாக இறைவன் பொருமையாளர்களுடன் இருக்கிறான். சில சமயம் உணர்ச்சி மேலீட்டீல் தவறான கண்ணியமற்ற வார்த்தைகளை அறியாமல் வெளியிட்டு விடுகிறார்கள். ஆயினும் அது தவிர்க்கபட வேண்டியதே...

   // அவரும் ஒரு நேரத்தில் தவறு செய்தால், அப்போது முஸ்லிம்களின் கண்டனத்தில் இருந்து தப்ப மாட்டார்' //

   யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவது நம் கடமை. கடமையை செய்வோம், வெற்றியோ தோல்வியோ இறைவன் தருவது. அதை மனம் உவந்து ஏற்றுக்கொள்வோம்...

   வருகைக்கு நன்றி....

   நீக்கு
 4. சலாம் அண்ணே..

  எண்ணற்ற முஸ்லிம்களின் மனதில் இருந்த நெருடலை மிக அழகான முறையில் வெளிப்படுத்தி விட்டீர்கள்..! ஜசாக்கல்லாஹு க்ஹைர்..!!

  ...//பதிவுலகத்தில் இருக்கும் பெரும்பான்மை பதிவர்கள் சார்பாகவும் கேட்கிறோம். உங்கள் அன்புத் தம்பிகளின் கோரிக்கையை பரிசீலிப்பீர்கள் //// அன்புதங்கைகளின் கோரிக்கையும் அதுவே..~! அண்ணே கடிதத்துல சேர்த்து விடுங்கள்..!!

  உங்கள் கடிதம் சகோ பிஜே அவர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த இறைவனை மனதார வேண்டிக்கொள்கிறேன்..!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைக்கும் சலாம்...

   தங்கைகள் என்ற வார்த்தையை உடனே சேர்க்கிறென்..

   வருகைக்கு நன்றி தங்கச்சி...

   நீக்கு
  2. உங்கள் எழுத்துப்பணி மென்மேலும் இதே வீரியத்தோடு தொடர வாழ்த்துக்கள்..!!

   ஜசாக்கல்லாஹு க்ஹைர்..! :)

   நீக்கு
  3. // உங்கள் எழுத்துப்பணி மென்மேலும் இதே வீரியத்தோடு தொடர வாழ்த்துக்கள்.. //

   இதெல்லாம் நிஜமான பாராட்டா?? இல்லை .... சந்தேகமாவே இருக்கு...

   நீக்கு
  4. ஹஹஹா நம்புங்கன்னே :) சத்தியமா பாராட்டுதான் :)

   இனிமே இதே போல சமூக அக்கறை உள்ள பதிவுகளா போடுங்க..! :)

   நீக்கு
  5. நம்ம பதிவு எல்லாமே சமூக அக்கரை உள்ளது தானே?? இல்லையா????

   நீக்கு
  6. இதுக்கு முன்னாடி நீங்க பதிவு போட்டு இருக்கிங்களா அண்ணே~!!! :) :)

   நீக்கு
  7. // இதுக்கு முன்னாடி நீங்க பதிவு போட்டு இருக்கிங்களா அண்ணே //

   சமூக அக்கரையில் வடை பஜ்ஜி தான் நம்பர் ஒன்னுன்னு ஒரு பேச்சு அடிபடுதாம்... காத்துவாக்குல சேதி வந்துச்சு....

   நீக்கு
 5. உங்கள் பதிவை நான் வரவேற்கிறேன் நண்பரே.

  அதே சமயத்தில் நிறைய நண்பர்கள் சொல்கிறார்கள். //அவர்கள் வரம்பு மீறும் அளவுக்கு நாமும் வரம்பு மீறலாம் //. திரைத்துறையினர் அல்லது இவர் சமீபமாக பேசி வரும் நபர்கள் யாரேனும் இப்படி பேசி உள்ளார்களா என்ன?

  இவர் தான் இதை ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் நீங்கள். மிகக் கேவலமான ஒரு தாக்குதலை கையில் எடுத்துள்ளார், வெட்கப்பட வேண்டிய செயல் இது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரர் பிரபு கிருஷ்னா..
   உங்களுக்கும் சேர்த்து நாங்கள் எங்களது கண்டனங்களை பதிவு செய்கிறோம்...
   எங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிற ஒரு சமுதாயத்தலைவரின் இப்படியான பேச்சிற்கு தார்மீகமாக நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம்...

   அன்புடன்
   ரஜின்

   நீக்கு
  2. // இவர் தான் இதை ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் நீங்கள். //

   யார் ஆரம்பித்தது என்று தெரியவில்லை.. தெரிந்துகொள்ள வேண்டியதும் இல்லை. வேறு யாரும் ஆரம்பித்து இருந்தாலும், அண்ணன் அப்படி பேசி இருக்கக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு.

   வருகைக்கு நன்றி சகோ பிரபு கிருஷ்ணா....

   நீக்கு
  3. சகோ.பிரபு கிருஷ்ணா,

   கமல் போன்ற இறைநம்பிக்கையற்ற பல நாத்திகர்கள் (எல்லோரும் அப்படி அல்ல), தமக்கென்று எவ்வித கொள்கையோ, ஒழுக்கமோ, கோட்பாடோ, கட்டுப்பாடோ, கலாச்சாரமோ, தங்கள் பொல்லாத கற்பனைக்கு ஒரு வரைமுறையோ, இவ்வுலக செயலுக்கு மறு உலக தண்டனை பற்றிய இறை அச்சமோ பேணாத காரணத்தால், அவர்களின் அத்துமீறிய அறுவறுப்பான செயல்களை அவ்வப்போது தங்கள் சுயலத்துக்காக செய்கிறார்கள். இனியும், செய்யத்தான் செய்வார்கள்.
   .
   .
   அப்போது... நாம், நாசூக்காய் அவருக்கு அதனை எடுத்துச்சொல்லியும் சட்டை செய்யாமல் சிலநேரம் அவர்கள் அதே செயலை தொடர்ந்து செய்தால், அப்போது, 'இறைவன் கொடுத்த கட்டளைகளை பேணவேண்டும்' என்ற கொள்கையுள்ள நாம், பொறுமையிழந்து, சராசரி மனிதனுக்கே உரித்தான குணமான தேவையற்ற கோபம் காரணமாய் இறை ஒழுக்க கட்டுக்கோப்புக்கள் எல்லாம் தகர்ந்து போக, ஒரு சில சமயம் சற்று காட்டமான வார்த்தைகளை வரைமுறை தவறிய பதில்களை நம்மையும் மீறி தந்துவிட நேரிடுகிறது.

   //அவர்கள் வரம்பு மீறும் அளவுக்கு நாமும் வரம்பு மீறலாம் //.---இது ஒரு ஆத்திர அவசர மதிகெட்ட நேரத்தில் ஒரு அனுமதியே அன்றி.... இதுதான் எப்போதுமே செய்தாக வேண்டும் என்பது போன்று உள்ள ஒரே சட்டம் அல்ல...!

   @ 16:125 says...(நபியே)உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக்கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக!

   @ 16:126 says...நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.

   @ 16:127 says...(நபியே!)நீர் பொறுமையுடன் இருப்பீராக.


   ஆகவே, அச்சமயங்களில்... இறைநம்பிக்கையாளர்களாகிய நமக்கு பொறுமை/தண்டித்தல் இரண்டுக்கும் அனுமதி இருந்தாலும், நாம் பொறுமையுடனேயே... இருந்து விடுவோம்...! ஏனெனில் வரம்பு மீறுவதை விட இதுவே அதிக மேன்மை உள்ளது.

   ஏனெனில்...

   @ 2:153 says...நம்பிக்கை கொண்டோரே! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.


   நீக்கு
  4. வேறு யாரும் ஆரம்பிக்கவில்லை இவர் தான் இப்படி பேசி உள்ளார் சகோ. அது தான் உண்மை. இதை ஒப்புக் கொள்ள மறுப்பவர்களின் விவாதம் தான் "அவர்கள் வரம்பு மீறும் அளவுக்கு நாமும் வரம்பு மீறலாம்".

   நீக்கு
  5. சகோ.பிரபு கிருஷ்ணா,

   ////திரைத்துறையினர் அல்லது இவர் சமீபமாக பேசி வரும் நபர்கள் யாரேனும் இப்படி பேசி உள்ளார்களா என்ன? ////---மிக அருமையாக கேள்வி கேட்டீர்கள்.

   மேற்படி சட்டம் முஹம்மத் நபி அவர்களின் மீது எதிரிகளின் தனிமனித வரம்பு மீறல் சம்பந்தப்பட்டது. கமல் மனுஷ்யபுத்திரன் போன்றோர் பொது வரம்பு மீறலில் உள்ளவர்கள். அவர்கள் தனிப்பட்ட எந்த வகையிலும் அறிஞர் சகோ.பீஜெவுடன், இவர் செய்தது போல வரம்பு மீறவில்லை.

   குர்ஆனில் இன்னொரு இடத்தில், 'நான்தான் இறைவன்' என்று சொல்லிக்கொண்ட எகிப்து கொடுங்கோல் மன்னன பிரவ்ன் இறைவனிடமும் மக்களிடமும் வரம்பு மீறியவன். அவனுக்கு நல்லுபதேசம் சொல்ல, இறைவன் தனது நபி மூஸா (அலை..) மற்றும் அவரின் சகோதரர் ஹாரூண் அலை... இவருவரையும் அனுப்பும்போது... சொல்லும் அறிவுரை..!

   20:43
   (நபி மூஸா & ஹாரூன்) நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்

   20:44

   (நபி மூஸா & ஹாரூன்) நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.

   இந்த அறிவுரை நமக்கும் பொருந்தும். பின்னர், அந்த பிரவுன் மூஸா நபி மற்றும் அவரின் கூட்டத்தார் மீது வரம்பு மீறிய போது, இவர்கள் அவனை தண்டிக்க சக்தி இல்லாது இருந்த போது, இறைவனே அந்த பிரவுனை நீரில் மூழ்கடித்து விட்டான் என்பது குர் ஆனில் இருந்து நாம் அறியும் வரலாறு.

   நீக்கு
  6. சகோ ஆசிக்...

   மிக விரைவாக அழகிய, பொறுத்தமான குரான் வசனங்களை பதிந்துள்ளீர்கள்.

   நன்றி சகோ.

   நீக்கு
  7. @ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~

   எனவே திரு. பி.ஜே அவர்கள் தான் இதை ஆரம்பித்தார் என்று ஒத்துக் கொள்வதில் என்ன தயக்கம் உங்களுக்கு?

   நீக்கு
  8. சகோ பிரபு கிருஷணன்...

   இல்லை.. பீஜே க்கு முன்னரே பாரதிராஜா வரம்பு மீறி பேசி இருந்தார். அவர் பேட்டியை படியுங்கள். எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்.

   அது பெரும்பாலான முஸ்லிம்களின் மனதை பாதித்தது. பீஜே தான் முதலில் பேசினார் என்பது தவறான வாதம்... அவர் பேசி இருந்தால் ஏற்றுக்கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இருக்காது... பாரதிராஜா பேட்டி படியுங்கள், பீஜேவின் கோபத்திற்கான காரணம் விளங்கும்..

   பட், யார் பேசினாலும் பதிலுக்கு இவரும் பேசக்கூடாது என்பதே எங்களின் தெளிவான நிலைப்பாடு...

   நீக்கு
  9. கருத்து சுதந்திரம், படைப்பு சுதந்திரம் பேசிய பாரதிராஜா அன்ட் கோ குமுதத்தில் "ஒரு நடிகையின் கதை" தொடராக வந்த பொழுது அதை நிறுத்த சொல்லி அராஜகம் செய்தார்கள். அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு கருத்து சுதந்திரம் தெரியவில்லை.

   இவர்கள் இரட்டை வேடம் போடுபவர்கள் சகோ. அமைதியாக சிந்தித்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம். ஒரு இனத்தின் மீது காழ்புணர்வுடன் இருந்தால் மட்டுமே அந்த நியாயங்கள் கண்ணை விட்டு மறைந்துவிடும்.(நான் சத்தியமா உங்கள சொல்லல...)

   நீக்கு
  10. அவர் உட்பட அனைவரின் கருத்தையும் படித்து விட்டு தான் நான் கேட்கிறேன். யாரும் இவ்வளவு கேவலமாக பேசவில்லை.

   //எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை// இது ஒரு பழமொழி என்பது சிறு குழந்தைக்கும் தெரியும் சகோ.

   யார் பேசினாலும் பேசக்கூடாது என்ற நிலைப்பாடு சரி. ஆனால் இதை ஆரம்பித்து வைத்தது இவர் தான் என்பது அப்பட்டமான உண்மை.

   நீக்கு
  11. சரி..ஓக்கே..விடுங்க.. முதலில் வரம்பு மீறி பேசினார் என்றே கண்டனத்தை பதிந்து விடுகிறோம்.. பிறகு ஆதாரங்கள் வந்தால் மாற்றிக்கொள்ளலாம்...

   நீக்கு
  12. கருத்து சுதந்திரம், படைப்பு சுதந்திரம் பேசிய பாரதிராஜா அன்ட் கோ குமுதத்தில் "ஒரு நடிகையின் கதை" தொடராக வந்த பொழுது அதை நிறுத்த சொல்லி அராஜகம் செய்தார்கள். அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு கருத்து சுதந்திரம் தெரியவில்லை. //

   நிற்க. இவ்விசயத்தை இத்தோடு தொடர்பு படுத்த வேண்டாம். நீங்கள் தினமலர் பத்திரிக்கையை எதிர்ப்பது கூட ஒரு விதத்தில் தவறு என்று நான் சொல்ல வேண்டி வரலாம்.

   கருத்து சுதந்திரம் என்பது வேறு, தனி மனித தாக்குதல் என்பது வேறு. பாரதி ராஜாவின் கருத்துக்கு அவரது வீட்டுக்கு சென்று முற்றுகை இடலாம்,அது தான் சரியே அன்றி ஒரு பொது மேடையில் கேவலமாக விமர்சித்தது அல்ல.

   நீக்கு
  13. உங்கள் கருத்துக்கள் மிக நேர்மையாகவும், நாகரீகமாகவும் உள்ளது. பி .ஜெ வின் பேச்சு பெரும் தலை குனிவை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகமே இல்லை.

   நீக்கு
  14. @சிராஜ்
   பாரதி ராஜா இந்துக்களின் பிரதிநிதி அல்ல. பிஜே தங்கள் சமூகத்தின் பிரதிநிதி. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், எவர் முக்கியம் என்று.

   நீக்கு
 6. எனக்கும் அவரின் பேச்சை கேட்டதும் பகீரென்றுதான் இருந்தது சிராஜ். இவர் ஏன் இப்படி ஒரு மட்டமாக ஒரு நாலாந்தர பேச்சளர் போல பேசுகிறார் என்று வருத்தப்பட்டேன். அதேநேரம் அவர் பேச்சில் சில விஷயங்களை தவிர்த்திருந்தால் அருமையான பேச்சாக அமைந்திருக்கும். என் கண்டனங்களையும் தெரிவித்து கொள்கிறேன். இன்னொரு விஷயம் நாம் காரைக்குடி போனது 2001-ஆம் வருடம்தான். சகோ பீஜே அவர்களை வைத்து நாம் நம் ஊரில் கூட்டம் நடத்திய ஆண்டுதான் 2002-ஆம் ஆண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனுஷ்யபுத்திரன் பற்றிய விஷயம் டீக்கடையில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.. அப்பொழுதே பலர் கடும் கண்டனத்தை பதிந்தார்கள். பட் அது வெளி உலகிற்கு தெரியாதல்லவா???

   // அதேநேரம் அவர் பேச்சில் சில விஷயங்களை தவிர்த்திருந்தால் அருமையான பேச்சாக அமைந்திருக்கும். // அவரின் கேள்விக்கு யாரும் பதில் அளிக்க முடியாது. அந்த இயலாமையில் தான் அவரின் வார்த்தைகளை பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். பட் அதை தவிர்த்து இருந்தால் மிகச் சிறந்த உரையாக அது இருந்து இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை...

   // இன்னொரு விஷயம் நாம் காரைக்குடி போனது 2001-ஆம் வருடம்தான். சகோ பீஜே அவர்களை வைத்து நாம் நம் ஊரில் கூட்டம் நடத்திய ஆண்டுதான் 2002-ஆம் ஆண்டு. // அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எனக்கு ஜீரண சக்தி அதிகம்.. உனக்கு நியாபக சக்தி அதிகம்... குழப்பமா இருந்துச்சு அதான் உறுதி இல்லாம சொல்லி இருந்தேன்... விட்டு தள்ளு வருஷமா முக்கியம்?? விஷயம் தான் முக்கியம்...

   நீக்கு
 7. உண்மையில் நீ அருமையாக இந்த கண்டனத்தை பதிவு செய்திருக்கிறாய். இதேபோல் நானும் ஒரு பதிவிடலாம் என்று நினைத்தேன்.ஆனால், நான் சொல்ல வந்த விஷயத்தை நீ சொல்லிவிட்டாய்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..ஹா.. நான் முந்திகிட்டனா??? சாய்ந்தரமே எழுத வேண்டியது. ஆபிஸ் வொர்க்.. அதான் லேட்டு...

   நீக்கு
 8. அஸ்ஸலாமு அலைக்கும்...

  பி ஜெய்னுல்லாபுதீன் அவர்களுக்கு எனது கடும் கண்டனங்கள்!!!

  இஸ்லாத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் அழகிய முறையில் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் உயர்ந்த சகோதரர் பிஜெ அவர்கள், நேற்று நடத்திய கூட்டத்தில் விஸ்வரூபம் சர்ச்சையில் திரைத்துரையினரையும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் கண்டிக்கிறேன் பேர்வழி தகாத வார்த்தைகளாலும், தரக்குறைவான பேச்சுக்களினாலும், விமர்சித்து மிக மிக தவறான முன்னுதாரணமாக தன்னை முன்னிருத்திவிட்டார்.
  அவரது இந்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்பதே இஸ்லாம் காட்டும் அழகிய வழிமுறை....

  அதனை செய்ய வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணன் அன்வான்டடா பலருக்கு மெல்ல அவல் கொடுத்திட்றாரு...
   அனேகமா அவர சுத்தி இருக்கவங்க இதை அவர் கவனத்திற்கு கொண்டு செல்வது இல்லை என்றே தோன்றுகிறது...

   ரசின்... அவசரப்பட வேண்டாம்... மெயின் ஷோ இன்னும் ஆரம்பிக்கல... நாளைக்கு பாஸ்தா வருவாரு... பின்னூட்டம் போடுவாரு.. அப்ப தான் இருக்கு விஷேசம்.. என்னை மட்டும் தனியா விட்டுட்டு எங்கயும் போயிடாதீங்க.. எல்லாரும் வந்திடுங்க..

   ஹா..ஹா..ஹா... சேக் தாவுதுகிட்ட மட்டும் இருந்து இந்த போஸ்ட மறைக்க வழி இருக்கா???

   நீக்கு
 9. நன்றி. சகோதரத்துவம் ஓங்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் ஓங்கும்... நாம் அனைவரும் நீதியில் நிலைத்து இருந்தால்..

   வருகைக்கு நன்றி சகோ..

   நீக்கு
 10. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர்களே...
  இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்சிகளில் மாற்றுமத நண்பர்கள் கேட்கும் ஆபாசமான அருவருப்பான கோபமூட்டும் கேள்விகளுக்கும் கூட இன்முகத்துடன் கனிவாக பதில் அளிக்கக்கூடிய பி. ஜே அவர்கள் இந்நிகழ்ச்சியில் நிதானமின்றி நிலைதடுமாறி கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து பேசியது நம்பமுடியவில்லை. தாவா பணியில் ஈடுபடும் மிகச் சிறந்த மார்க்க அறிஞர் இவர், பிறருக்கு முன்மாதிரியாக, கண்ணியம் தவறாமல் பேசுவதை தொடர்ந்து பேணிவருதல் இன்றியமையாத ஒன்றாகும். இல்லையென்றால் மாற்றுமத நண்பர்கள் மத்தியில் இவர் செய்யும் தாவா பணிகளும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.

  பதிலளிநீக்கு
 11. இந்த பதிவிலிருந்து முரண்படுகிறேன் :

  சலாம்.

  நாமும் நேற்று பார்த்தவன் என்கிற முறையில் எனது கருத்தை பதிவு செய்கிறேன்..! பீஜே என்ன தவறாக சொன்னார் பட்டியல் இடுங்கள்..! கமலுடைய மகளை தவறாக பேசினாரா..? என்ன பேசினார் அப்பாவுடன் ஹீரோயினாக நடிக்க ஆசை என்று கூறியதாக கூறினார்..நமக்கு வேண்டும் என்றால் அவர் கூறியதற்கு அனைத்துக்கும் ஆதாரம் கேட்க வேண்டும் ...அதுதான் நம்முடைய தேவை..இங்கு எதற்க்கெடுத்தாலும் இஸ்லாமியர்களை பழிக்கவேண்டும் என்று இருப்பவர்களின் கருத்துக்கள் அவ்வாறு இருக்கலாம்..இவ்வளவு காலம் பீஜேவின் கருத்துக்களை கேட்ட நமக்கே இவ்வாறு தோன்றுகிறது என்றால் பேசிய அவருக்கு தெரியாதா..? இவ்வளவு நாட்கள் கட்டிய கோட்டை சரிந்து விடும் என்று அவர் அறிந்திருக்க மாட்டாரா..? சான்றுகளின் அடிப்படையில் தான் பீஜே பேசியதாகவே எனக்கு படுகிறது ..என்ன ஒன்று பேசப்பட்டவர்களின் யோக்கியதை அப்படி ...பேசப்பட்ட ஒவ்வொருவரிடமும் முரண்பாடு உண்டு..அது அவ்வளவு இழிவாக உள்ளது..பூவை பற்றி பேசினால்தான் பூவாடை அடிப்பதற்கு..!

  ** சினிமாக்காரர்கள் கருத்து சுதந்திரம் பற்றி பேசுவார்கள் அவர்களை பற்றி தினமலரில் செய்தி வரும்போது வரவேற்கவா செய்தனர்..!

  ** ராமதாஸ் ஆதரவு தெரிவிக்கிறார்..பாபா படம் வந்த போது என்ன செய்தார்..!

  இதைபோல் ஒவ்வொருவரிடம் உள்ள முரண்பாடுகளை பேசினார்..

  இஸ்லாமை பற்றி பேசும் போது அதுவே அமைதியைக்கொடுக்கிறது..இவர்களை பற்றி பேசும் போது என்ன அமைதியை இவர்கள் கொடுக்க முடியும்..!

  நபி ஸல் அவர்கள் ஒரு மாதம் சுப்ஹு தொழுகையிலே குரானை மனனமிட்ட 70 குர்ராக்களை கொலை செய்தவர்களுக்கு எதிராக துவா செய்தார்களே..! எப்படி துவா செய்ய வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள்.. போரின் போது போர்த்தளபதி எவ்வாறு உரையாற்றுவார்..! போர் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு காலம் நடைபெறுவது அதற்குள் அவர்களுக்கு தனது வீர உரையின் மூலம் ஒரு பூஸ்ட் போர் வீரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்..!

  இங்குள்ள பிரச்சனையின் தரத்தை கவனிக்க வேண்டும்..இது ஒரு குறுகிய கால போராட்டம் ...அதுவும் தீமையை தடுக்கும் போராட்டம்...சகோ.முகம்மத் ஆஷிக் மேலே கொடுத்துள்ள குர் ஆன் வசனங்களை ஏற்கிறேன்..எதற்க்காக கொடுக்கப்பட்டது என்ன சூழல் என்பதை ஆராயவேண்டும்..

  மூன்று முறைகளில் நலவை நாடலாம்..ஒன்றாவது நன்மையை ஏவுவது..அடுத்து தீமையை தடுப்பது..மூன்றாவது நன்மையை ஏவி தீமையை தடுப்பது ...

  நன்மையை ஏவுவதற்கு ஒரு அழகிய முறையில் தர்க்கம் செய்ய வேண்டும்..அங்கு நமது நோக்கம் அவர்களிடத்தில் நன்மையை எத்திவைப்பது..நன்மையை ஏவி அதன்மூலம் தீமையை தடுப்பதற்கு இது தருணம் அல்ல..இங்கு நோக்கம் தீமையை தடுப்பது..! இங்கு நன்மையை ஏவுவதற்கு, கமல் மற்றும் அவருக்கு ஆதரவானவர்களுக்காக நன்மை நாட நடைபெற்ற கூட்டம் அல்ல..விஸ்வரூபம் படத்தால் என்னதீமை ஏற்படும் ..இருக்கின்ற குறுகிய கால இடைவெளியில் தீமையின் முழு தன்மையையும் மக்கள் முன் எடுத்து வைத்து அவர்களை எச்சரிக்க வேண்டிய தருணம்..!

  இறுதியாக தீமையை தடுக்கும் நோக்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நன்மையை ஏவுவதற்கு ,நன்மை ஏவி தீமை தடுப்பதற்கு இது தருணம் அல்ல..இருக்கின்ற கொஞ்ச நாட்களுக்குள் மக்களுக்கு நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று கொண்டு செல்லும் விதமாக நடந்த தீமையை தடுக்கும் உரை..!

  சகோ.எதற்கான ஒரு கூட்டம் என்பதை மறந்து இஸ்லாமை எதிர்ப்பவர்களிடம்
  சரணடைந்தது வேதனை தருகிறது..! இங்கு பின்னூட்டமிட்ட இஸ்லாமிய சகோதரர்களே..எல்லா நேரத்துலயும் பொறுமையாகவே பேசுகின்ற ஒரு தன்மையை நாடுகிறீர்கள்..அதற்க்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்..தப்லிக் ஜமாஅத்..அவர்களிடத்தில் எதற்கெடுத்தாலும் பொறுமை, நன்மையை எவுவதிலும் பொறுமை, தீமையை தடுப்பதிலும் பொறுமை..இரண்டாவதுதான் பிரச்சனையே..அதுதான் தவ்ஹீத் ஜமாத்திற்கு கடந்தகால வெற்றி,

  இன்ஷா அல்லாஹ் இதுவும் வெற்றியாக சேர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..

  (பொறுமையா விளக்கம் சொல்லி எத்திவைக்க எதிர்காலம் இருக்கு சகோதரர்களே..! இது தருணம் அல்ல !!)  குறிப்பு : நான் பீஜே யை மதிப்பவன் ஆனால் அவரது இயக்க தொண்டன் அல்ல..! இடம் பொருள் ஏவலை நோக்கத்தை உணர்ந்த ஒரு பதிவு அவ்வளவே..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ.நாகூர் மீரான்,
   ஒன்றை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

   சகோ.பீஜெவின் பேச்சில் உள்ள கேள்விகளுக்கு அவர் பேச்சில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூட பதில் சொல்ல முடியாது..! அவமானத்தால் வெட்கி தலை குனிந்து மானம் கெட்டு போய் நிற்பதை தவிர வழியே இல்லை..! அவரின் பேச்சு அனைவரின் போலித்தன முகமூடிகளையும் கிழித்து நார் நாராக்கி விட்டது உண்மையோ உண்மை..!

   அப்படி அவர் பிறரின் இஸ்லாமிய விரோத போலிக்கொள்கை முகமூடியை கிழித்தேறியும் போது உபோகித்தது தனது கை அல்ல. இஸ்லாமிய வரைமுறை மீறிய சொற்களான தவறான ஆயுதம். அதில் சிலருக்கு கீறல் விழுந்து விட்டது. இதுதான் இப்போது பூதாகரமாக ஆக்கப்படுகிறது..!

   இங்கே...
   http://vimeo.com/58302985
   சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முதுகெலும்பு இருந்தால் இவர்கள் பதில் சொல்லட்டும். இல்லையேல்... வக்கில்லாதவர்கள் வாயை மூடிக்கொள்ளட்டும். இவர்களுக்கு சகோ.பிஜெவை குறை சொல்ல எந்த அருகதையும் இல்லை.

   இவர்கள் செய்த குற்றத்தை செய்யாதவர்களுக்கு மட்டுமே இவர்களுக்காக ஆதரித்து பேச உரிமை உண்டு. அப்படி கேட்போரிடம் சகோ.பிஜே கேட்ட அதே கேள்விகளை இவர்களிடம் நாம் கேட்போம் சகோ..! பதில் சொல்ல தயாரா..? தயார் என்ற திராணி என்றால் மட்டும் சகோ.பிஜெவால் குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதராவாக இங்கே கருத்து போடுங்கள்..!

   நீக்கு
  2. சகோ.முகம்மத் ஆஷிக்

   ஆம்...சில சொற்களை கொண்டு நம்முடன் வாதிடுகின்றனர்...எப்போது வாதிடலாம் என்றால் பீஜே பேசியது அவதூறு , பொய்யானது என்றால் மட்டுமே..பீஜே மீது நாம் மதிப்பு வைத்திருக்கிறோம் என்றால் நாம் என்ன செய்யலாம்..அவர் பேசிய அனைத்திற்கும் ஆதாரம் தர சொல்லி தகவல் அனுப்பலாம்..அதனால் அவர் மீது உள்ள குற்றசாட்டை மறுப்பதை கொண்டு எதிரிகளின் முகத்திரையை கிழிக்கலாம்..ஆனால் அதற்க்கு முன்பே பீஜே பேசியது தவறு என்று நாம் எப்படி முடிவுக்கு வரமுடியும்..அவர் ஒவ்வொன்றாக குறிப்பு எடுத்து கொண்டுதான் பேசியதாக தெரிந்தது..அதனால் அதில் தவறுகள் வர அதிகம் வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்..இருந்தாலும் நாம் ஆதாரம் கேட்பது பீஜேயின் நர்பெயருக்க்தான் நல்லது..

   வேறு என்ன குறை..பேசியமுறையா..? தீமையை தடுக்கும் பொருட்டு அது தேவையே..!!! ஆனால் அதற்குள் அவரிடம் விளக்கம் பெறாமலே நிராகரிப்போர் முன்பு ,நல்ல சான்ஸ் கிடைத்துவிட்டது என்று குதூகலிப்போர் முன்பு எப்படி ஒரு முஸ்லிமை,மார்க்க அறிஞரை தரம் தாழ்த்துவோம் நாம்..?????

   ஒருவேளை பீஜே பேசியதற்கு ஆதாரம் தர இயலாத போது தான் இந்த பதிவு வந்திருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து..!!!

   நீக்கு
  3. சலாம் சகோ சிராஜ்.

   அண்ணனுக்கு எழுதிய கடிதத்தை அவர்களின் பதிலுக்கு பிறகு பதிந்திருந்தால் அது நியாயமானது. ஆனால், ஏனிந்த அவசரம்..? :( //இந்த பதிவிலிருந்து முரண்படுகிறேன்// நானும்தான்.

   @ சகோ நாகூர் மீரான்

   என்னுடைய கருத்துக்களை அப்படியே எழுத்தில் ஏற்றியிருப்பதற்கு ஜஸாகல்லாஹ் ஹைரன் கஸீரா :)

   //இறுதியாக தீமையை தடுக்கும் நோக்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நன்மையை ஏவுவதற்கு ,நன்மை ஏவி தீமை தடுப்பதற்கு இது தருணம் அல்ல..இருக்கின்ற கொஞ்ச நாட்களுக்குள் மக்களுக்கு நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று கொண்டு செல்லும் விதமாக நடந்த தீமையை தடுக்கும் உரை..!//

   எதற்கான ஒரு கூட்டம் என்பதை மறந்து இஸ்லாமை எதிர்ப்பவர்களிடம்
   சரணடைந்தது வேதனை தருகிறது..! இங்கு பின்னூட்டமிட்ட இஸ்லாமிய சகோதரர்களே..எல்லா நேரத்துலயும் பொறுமையாகவே பேசுகின்ற ஒரு தன்மையை நாடுகிறீர்கள்..அதற்க்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்..தப்லிக் ஜமாஅத்..அவர்களிடத்தில் எதற்கெடுத்தாலும் பொறுமை, நன்மையை எவுவதிலும் பொறுமை, தீமையை தடுப்பதிலும் பொறுமை..இரண்டாவதுதான் பிரச்சனையே..அதுதான் தவ்ஹீத் ஜமாத்திற்கு கடந்தகால வெற்றி,

   இன்ஷா அல்லாஹ் இதுவும் வெற்றியாக சேர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..//

   அப்படியே வழிமொழிகிறேன். சேம் ப்ளட் சகோ :) மாஷா அல்லாஹ்!

   நீக்கு
  4. வ அலைக்கும் சலாம் அஸ்மா அக்கா...

   கொஞ்சம் பிஸி...வந்து பதில் அளிக்கிறேன்... இன்ஷா அல்லாஹ்.

   நீக்கு
  5. அஸ்மா அக்கா...

   மாஷா அல்லாஹ்.. அதற்கிடையில் ததஜ விற்கு கேள்வியை அனுப்பிவிட்டீர்கள்.. ஆன்லைன் பிஜே வில் உங்கள் பெயருடன் பதில் வந்து இருக்கிறது... மிக்க நன்றி..

   http://www.onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/barathirajavai_kochaipaduthalama/

   பாரதிராஜா மன்னிப்பு கேட்டால் நானும் கேட்கத் தயார் என்று சகோ பீஜே கூறி இருப்பது அவரின் பெருந்தன்மைனை காட்டுகிறது. இருந்தாலும், பொது மேடைகளில் இன்னும் கொஞ்சம் கவனமுடன் பேச நாம் கூறிக்கொண்டே இருப்போம். அது நிச்சயம் நன்மைபயக்கக்கூடியதாகவே இருக்கும்.

   எங்களின் ஆதங்கத்தை வெகு விரைவாக ததஜ தலைமைக்கு கொண்டு சென்ற அழகான முயற்சிக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 12. பிரதர்ஸ்.. தப்பா எடுத்துக்க படாது, பி.ஜே ரொம்ப நல்லவராவே இருக்கலாம்(அவரை பத்தி எனக்கு அதிகம் தெரியாது!!! அதுனால ஒரே ஒரு வீடியோவை மட்டும் வைத்துக்கொண்டு அவர் தொடர்பான ஒரு முடிவுக்கு வர முடியாது), கஸாலி பிரதர் சொன்ன மாதிரி,
  //அவர் பேச்சில் சில விஷயங்களை தவிர்த்திருந்தால் அருமையான பேச்சாக அமைந்திருக்கும்//
  அதே மாதிரி, "கமல் விஸ்வரூபம் படத்துலயும் சில பல காட்சிகளை தவிர்த்திருந்தால் அருமையான என்டர்டைனர் படமா அமைந்திருக்கும்"ன்னு கமல் ரசிகர்கள் ஆகிய நாங்களும் பீல் பண்ணுறோம்..

  நம்ம விமர்சனத்தில் இருந்து ஒரு பகுதி,

  "ஒரே மதத்தை சேர்ந்த, ஆனா இரு வேறுபட்ட புரிதல் அல்லது கொள்கை உடைய இரண்டு தனி நபர்களினதும் அவர்களை சூழ உள்ளவர்ககளினதும் போராட்டம்" தான் படத்தோட கதைன்னு எனக்கு தோணுது. படம் எந்த ஒரு இடத்திலும் இஸ்லாம் மதத்தை அவமதிக்க வில்லை, முஸ்லீம்களை அவமதிக்கிறதா, இல்லையான்னு என்னை கேட்டால் இல்லன்னுதான் சொல்லுவேன், ஆனா அவமதிக்குதுன்னு யாராவது எடுத்துக்க இடம் இருக்கான்னு கேட்டா இருக்கு. இங்கதான் படத்தோட பிரச்சினையே இருக்கு. அதுக்காக தடை செய்யப்பட வேண்டிய படமான்னு கேட்டால் கண்டிப்பா இல்ல. ஹிந்தில "நியூ யோர்க்", "மை நேம் இஸ் கான்", "குர்பான்", "மிஷன் இஸ்தான்புல்", ஹாலிவூட்ல "Traitor" போன்ற படங்கள் ஆரம்பித்து வைத்த விவாதத்தை தமிழில் விஸ்வரூபம் ஆரம்பித்து வைத்திருக்கிறது. அந்த படங்கள் எப்படி ரெண்டும் கெட்டானாக அலசியதோ, விஸ்வரூபமும் அப்படியே, அதை தவிர இஸ்லாத்தை அவமதித்து விட்டது, சிறுபான்மை மக்களை கமல் தாக்குகிறார்ன்னு கூச்சல் போடுற அளவுக்கு கேவலமான படம் ஒன்னும் கெடயாது. அதுக்காக கமல் தவறே செய்யலைன்னு சொல்லவும் முடியாது. படம் ஆரம்பித்து வைத்த விவாதத்தை ஆக்கபூர்வமான முறையில் தொடர வேண்டியவர்கள் கண்மூடித் தனமாக படத்தை எதிர்த்து ஒரு வரலாற்று தவறை செய்துவிடாமல் இருக்கனும்ங்கிறதே ஒரே ஆசை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ மொ.ராசு....

   வருகைக்கும், உங்களின் பார்வையிலான கருத்துக்கும் நன்றி.. தொடர்ந்து வாங்க.. அடுத்த போஸ்ட் பத்தி எரியிற தலைப்பில் வர இருக்கு... ஹா..ஹா..ஹா..

   நீக்கு
 13. சகோ சிராஜ் அஸ்ஸலாமு அலைக்கும்
  மார்க்க அறிஞர் பி.ஜே குரான் ,ஹதித் அடிப்படை இல்லாமல் பேசி இருப்பார் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட பதிவுக்கு கடும் கண்டனம்.

  ஆபாசமாக பேசுவதே அண்ணனுக்கு அழகு!

  ரஷாதியுடன் நடக்கும் விவாத தலைப்புகளை அனைத்து முஸ்லிம் ஆண் பெண் கேட்டு மகிழ வேண்டும்!!
  மத்ஹபுகளில் ஆபாசம் உண்டா ??

  அதை நீங்கள் பதிவிட வேண்டும்!!!.

  அண்ணன் பைபிளை ஆபாச புத்த்கம் என அல்லாஹ் பாதுகாகக் முடியாமல் போன முந்தைய வேதங்களை கூறினார் என்பதை மறக்கலாமா!!

  அண்ணன் செய்வது மார்க்க ரீதியாக சரியான ஒன்று!!

  இழிபிறவிகள் ஆன காஃபிர்களை திட்டுவது சரியே!!

  நபி(சல்) அவர்கள் த்ன்னை திட்டிய குரேசிகளின் கவிதைக்கு ஆள் அம்ர்த்தியாவது எசப்பாட்டு பாடித்திட்டினார் என்பதை மறக்க்லாமா!!
  ஆதாரம் வேண்டுமா?

  3213. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
  நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான்(ரலி) அவர்களிடம், 'எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்" என்று கூறினார்கள்.
  Volume :3 Book :59

  ஆகவே இமாம் பி.ஜே சொல்லியது சரியாகவே இருக்கும். தைரியம் இருந்தால் ஒண்ன்டிக்கு ஒண்டி,நேருக்கு நேர் விவாதத்துக்கு வர்ரியா என தவுகீத் தொ(?)ண்டர்கள் பொங்கி எழுவார்கள்!!

  அவர்களிடம் இருந்து ஏக இறைவன் முடிந்தால் உங்களை காப்பாற்றட்டும்!!

  மார்க்கப்போராளி சகோ அரபிக் குழந்தை நாகூர் மீரானுக்கு பாராட்டுக்கள்.இப்ப்டித்தான் முஸ்லிம் பெயர்தாங்கிகளை போட்டுத் தாக்கனும்.

  நாகூர் மிரான்,பி.ஜே மாதிரியே அனைவரும் பேசினால் எங்களுக்கு சினிமாவை விட இந்த கோமாளிக் கூத்துகளை பார்த்து இரசிப்போம் என கூறுகிறேன்.

  அண்ணனின் விசுவரூபம் மிக அருமை!!!

  வருங்கால முகம்து அலி ஜின்னா ஆவாரா அண்ணன் எனபதே கேள்வி!!

  நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருங்கால வஹ்ஹாபி சார்வாகன்....

   எது சொன்னாலும் எதிர்க்கிறது ஒரு பொழப்பா??? கடுப்பா இருக்கு.

   நீக்கு
 14. Ivvalavu Sillaraingala neenga.......Nalla irungada!!!!

  Koran idha thaan solli tharudha???? I guess worst mistake was discussing with you guys.

  That guy has commented about Kamal in the most perverted way possible and you are writing him a letter, instead of slippering him...Nalla iru!!!!

  Ashamed to read your writings and ashamed that I wrote something on this page.

  Bye Bye!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமெண்ட் போடாமலே கெளம்பி இருக்க வேண்டியது தானே??

   நீக்கு
 15. சார்வாகன் , வந்துவிட்டீர்களா..! வருக, உங்களை இந்த பக்கமே இதற்க்கு முன் நான் பார்த்ததில்லையே...தங்களின் வருகையை யாவரும் அறிவர்..! பாருங்கள் நம் இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் மனசாட்சி அறிந்தபடி நன்மைக்காக இந்த பதிவை இட்டார்களே ! அதிகமானோர் ஆதரித்தனரே ! இதை பார்த்து உங்கள் உள்ளத்தில் ஏதேனும் மாற்றம் வந்ததா ! அவர்களின் பார்வையில் தவறு எனப்பட்ட ஒன்றிக்கு இஸ்லாத்தை களங்கப்படுத்தும் நோக்கோடு ஹதீஸ்களை அள்ளி தெளிக்கிரீரே.! இதன்மூலம் இஸ்லாமை குறை சொல்லும் நோக்கம் சரி என்றாகிவிடும் என்றா நினைக்கிறீர்..! ஆயினும் அது நடக்கக்கூடியது அல்ல..!

  அட ! பீஜே தப்பே செய்திருக்கட்டும் நாங்கள் நிச்சயம் கண்டிப்போம்..ஆனால் உங்களுக்காக அல்ல..உங்கள் முன்னால் அல்ல...உங்களுடன் அல்ல...யாருசார் நீங்க..! நேற்றுவரை குஜராத்தில் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்படும் பொது பேச நாதி இல்லை..இன்று ஒரு இஸ்லாமிய பெண் கொலை செய்யப்படும் பொது மட்டும் அங்கலாயிகிரீரே ! காரணம் மாட்டியது இஸ்லாமிய ஷரியத் ,சவூதி . உங்களுக்காக எடுத்து சொல்ல இன்னும் காலம் உண்டு..ஆனால் உங்களுக்காக குற்றம் நிரூபிக்கப்படாத ஒரு முஸ்லிமை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம்...!

  ஒரு நல்ல முஸ்லிமுடைய பண்பு யாதெனில் ஒருவர் தவறு செய்தால் மறைவாக கண்டிப்பது ஆகும். இதனால் அவரும் விளங்கி கொள்ள வாய்ப்பாக இருக்கும் ..யாரையும் நாம் புண்படுத்திய தேவை இல்லாத பாவம் நமக்கு இல்லை..அதை மறந்த என் சமூகம் இன்று உங்கள் வாயில் எல்லாம் அவலாக !

  இந்த கடிதத்தை அனுப்புவோம் என்று இல்லாமல் விளக்கம் ,ஆதாரம் கேட்டு கடிதம் அனுப்புவோம்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. / இந்த பதிவை இட்டார்களே ! அதிகமானோர் ஆதரித்தனரே ! இதை பார்த்து உங்கள் உள்ளத்தில் ஏதேனும் மாற்றம் வந்ததா ! //

   மாற்றமா?? மாறிட்டாலும்... எது சொன்னாலும் அதுக்கு மாற்று கருத்து சொல்றது எல்லாம் ஒரு வேளைனு செஞ்சிகிட்டு இருக்கார்... ஒரு பாயிண்ட் கூடவா நாம சரியா பேச மாட்டோம்... இப்பைலாம் அவர் பின்னூட்டம் பார்த்தால் பதிலளிக்கவே தோண்றவில்லை...

   நீக்கு
 16. சலாம் சகோ.அஸ்மா.!

  மிக்க மகிழ்ச்சி ,நேற்று பதிவையும் பின்னூட்டங்களையும் பார்த்துட்டு நம் சகோதரர்கள் பீஜே உரையை கேட்டு அடைந்த அதிர்ச்சியை நாம் அடைந்தோம்.. ! அட உலகில் ஒருவர் விட்டுகொடுத்து போகிறார் என்றால் அவரை நல்லவராக இருக்க விடாது மேலும் மேலும் அவரது உரிமையை கைப்பற்றி அவரை இளிச்சவாயனாக ஆக்கிவிடும் உலகம் இது..அது போல் நாம் குற்றம் நிரூபிக்கபடாத ஒரு முஸ்லிமை பொதுவெளியில் விட்டுக்கொடுத்து பேசினோம் என்றால் பின்பு ஒன்றை கொண்டுவருவார்கள் அதை போல்தான் இதுவும் என்பார்கள்..பின்பு ஒன்றை ,பின்பு ஒன்றை...அவர்களின் நோக்கம் இஸ்லாத்தை வீழ்த்திவிடுவது ! பாருங்கள் குர்ஆனில் மாற்றம் வேண்டுமாம்..இஸ்லாத்தை அறியாத ஒரு பதிவரின் பதிவு..!

  பீஜே அவதூறு சொல்லும் பட்சத்தில் அவருக்கு அந்த விசயத்தில் யாரும் வக்காலத்து வாங்க போவதில்லை...அவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் உள்ள பாடு அது..ஏன் முடிந்தால் அவதூறு வழக்கு கமல் போடட்டுமே..அதுகூட தெரியாமலா பீஜே பேசியிருப்பார்..!

  இஸ்லாத்தில் அபூபக்கர் சித்திக் அவர்களும் உண்டு ..உமர் அவர்களும் உண்டு..நன்மையை சொல்லும்போது அபூபக்கர் சித்திக் அவர்களாகவும் தீமையை தடுக்கும்போது உமர் அவர்களாகவும் இருக்கும் இந்த பீஜெதான் வேண்டும்....எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக காட்டமாக தாக்குகிறாரே என்று இருக்கும் இந்த பீஜெதான் வேண்டும்..யாருக்காகவும் அவர்தன்னை மாற்றி கொள்வதை நான் விரும்பவில்லை..! " எவ்வளவு அடிச்சாலும் தாங்குராருபா.." என்கிற நிலைக்கு பீஜேவை யாரும் தள்ளி விடக்கூடாது

  என்ன சகோ.அஸ்மா சரிதானே..!!!

  பதிலளிநீக்கு
 17. பெரியவர் வாஞ்சூர் அவர்களின் சார்பில் எனது கண்டனங்கள் :

  சலாம்.,

  இந்து முஸ்லிம் இடையே பிரிவை உண்டாக்கும் பதிவராம்..என்னமோ இவர்தான் அந்த பதிவை உண்டாக்கியது போல..அதன் தலைப்பு உட்பட வேறு ஒரு தளத்தில் இருந்து காப்பி செய்யப்பட்டதை மறைத்து,இஸ்லாமியர்கள் மேல் உள்ள காட்டத்தில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் ஒரு பதிவர்...ஒரு இஸ்லாமியர் மேல் சொல்லும் அவதூறை நாம் கண்டித்தோமா ?

  //ஏன்யா கொஞ்சமாவது புத்தி இருக்காதா,//

  //உனக்கு என்ன புத்தி தெரியுமா, //

  அவரது வயது என்ன..? எதற்கு இந்த ஏக வசனம் ! வேறு ஒரு தளத்தில் இருந்து காப்பி பண்ணியதற்கா ? சகோ.ஆசிக் அஹ்மத் அதற்க்கான விளக்கத்தை கொடுக்கிறார்..அதற்க்கு அவர் கொடுக்கும் பதிலை பாருங்கள்..

  //பரவாயில்லை ஆஷிக். விளக்கத்திற்கு நன்றி. ஆனால் பிரச்சனை ஒருவருடையது இல்லை, அதுவும் நான் எந்த இசுலாமிய பதிவர்களையும் குறிப்பிடவில்லை. அமீரை எதிர்க்கும் இந்துக்களைத்தான் எதிர்க்கிறேன்.//

  இதற்க்கு முந்தைய பின்னூட்டத்தில் நாயை யாராவது கல்லை விட்டு எரிய வேண்டாமா என்று கேக்கிறார்..அதே வாயால் இப்படியும் கூறுகிறார்..மனிதாபிமானி தளத்தில் போட்ட ஒரு பதிவுதான் நியாபகம் வருகிறது :-)) நீங்கள் செய்த செயலை தளத்தில் போடும்போது எதிர்ப்புகள் என்னமா இருந்தது..! அதையே அடுத்த ஒரு பதிவர் பற்றி அவதூறு போட்டால் கேட்க ஆளில்லை..ஆசிக் கூறியவுடன் பதிவுக்கே அர்த்தம் இல்லை..தவறாக பதிவை இட்டுவிட்டேன் என்று கூறும் மனப்பாங்கும் இல்லை..!

  இவர்களுக்காக இன்னும் எத்தனை முஸ்லிம்களைத்தான் நாம் விட்டுக்கொடுக்க போகிறோமோ..!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரை விட்டு கொடுத்தது?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

   சகோ ஏற்கனவே பல தடவை சொன்னது தான்.. ஒருத்தர் தவறான வார்த்தைகள் கொண்டு கருத்திடுகிறார் என்றால் அது குறித்து நாம் கவலயே பட வேண்டியது இல்லை... பொதுவானவர்கள் பார்வையில் அவர்களே குற்றவாளியாக பார்க்கப்படுவார்கள்...

   சிம்பிள்.. நீங்கள் போடும் கமெண்ட் நீங்கள் யார் என்பதை சொல்லி விடும்...

   நீக்கு
 18. பதில்கள்
  1. ஹா..ஹா..ஹா..

   செம லிங்க்... இது ஒன்னு போதும்...
   பகிர்விற்க்கு நன்றி சகோ...

   வாழ்க விவேக்...

   நீக்கு
 19. அருமைத் தம்பி நாகூர் மீரான்...

  உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் விரிவாக படித்தேன்... உங்களின் விஷயத்தை நுட்பமாக அணுகும் உத்தி எனக்கு மிக நன்றாகவே பிடித்து இருக்கிறது... வாழ்த்துக்கள்..

  இது குறித்து நிறைய விவாதிக்க வேண்டி உள்ளது. டைப் பண்ண கடுப்பா இருக்கு... போனிலே பேசிக் கொள்வோமா?? இல்லை இங்க தான் வேணுமா???

  பதிலளிநீக்கு
 20. அடடே சில நபர்கள் போட்ட கமண்டுக்கு லைக் குடுக்க முடிய மாட்டிங்குதே ....சரி இருக்கட்டும் சிராஜ் அண்ணன் நல்ல கடிதம் ...எப்புடி எல்லாம் யோசிக்கிறிங்க ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க

  பதிலளிநீக்கு
 21. //அருமைத் தம்பி நாகூர் மீரான்...// அவ்வ்வ்வ்...சகோ.சில கருத்துக்கள் கூறும் போது நம்முடைய தரத்தைக்கொண்டு அது பரிசீலிக்கப்படாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.. அதனால் தான் என்னுடைய அடையாளம் எதுவும் தெரியாமல் பார்த்துக்கொள்வேன்..நாளையே நான் உங்கள் முன் வந்து நின்றாலும் உங்களை எனக்கு தெரியும் ..ஆனால் என்னை உங்களுக்கு தெரியக்கூடாது என்று நினைக்கிறேன்..! இக்லாஸ் இருக்க வேண்டும் என்று அஞ்சியே இவ்வாறு நினைக்கிறேன்..! சொல்லப்படும் கருத்துதான் முக்கியமே தவிர மற்றது அல்ல..ஆனால் உலகம் தரத்தை வைத்துதான் கருத்தை எடுத்துக்கொள்ளும் ..சொல்வார்களே.! அலுவலகத்தில் பணியாளர் கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் தூங்குகிறார் என்று அர்த்தம் , மேலாளர் கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் அவர் சிந்திக்கிறார் என்று அர்த்தம்..! நமது தரத்தை பொறுத்தே நமது கருத்தும்..! அதனால் அது வெளியே தெரிய வேண்டாமே சகோ.!

  தவிர பீஜே அதற்க்கான பதிலை தருவதாக சொல்லிவிட்டார்..இனி அவர் பாடு ..அதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் மற்றவர்கள் பாடு....! இப்போது நமது எண்ணம் எல்லாம் நீங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதையும் ஒரு ஆதாரமாக கொண்டு கயவர்கள் , ஆள்மாறாட்ட கேசுகள் எல்லாம் தூற்றுகிறதே ! அதற்க்கு எப்படி பதிலடி கொடுப்பது என்றுதான் !

  அல்லாஹ் நல்வழி காட்டுவான் சகோ. கூலா இருங்க ..இன்னும் பிரச்சனை முடியல..இன்னைக்கு விஸ்வரூபம் தொடர்பான தீர்ப்பு இருக்கு..! பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  பதிலளிநீக்கு
 22. நான் எதிர்பார்த்த சுவனபிரியன் சிறந்த பதிலை தந்திருக்கின்றார்.
  ஆனால் நாகூர் மீரான் ரொம்ப மோசம்பா

  பதிலளிநீக்கு
 23. சிராஜ் உங்கள் பதிவை ஏற்கனவே படித்து விட்டேன். பின்னூட்டம் இட வில்லை. நீங்கள் போட்ட பதிவின் முக்கியத்துவத்தை நாகூர் மீரானின் பின்னூட்டம் கெடுத்துவிடும் போல் உள்ளது.

  செந்திலின் பதிவில் நான் போட்ட பின்னூட்டம் ஒன்று
  "அமீர் நல்ல கலைஞன். பிறப்பால் கிரிஸ்தவனாகிய நான் "ஐ சப்போர்ட் அமீர்"

  சிராஜ் வருணின் பதிவில் நான் போட்ட பின்னூட்டங்களில் நியாயமாக தங்கள் கருத்துகளை தெரிவித்த பல இஸ்லாமிய நண்பர்களின் கருத்துகளையும் பகிர்ந்திருக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 24. விஸ்வரூபத்தில் எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும்? : முஸ்லீம் அமைப்பினர் ஒரு பட்டியல் கொடுத்ததாக ஒரு இணைய தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

  என்னுடைய தனிப்பட்ட கருத்தின் படி "வன்முறையாய் உள்ள சண்டைக்காட்சிகள்" தவிர ஏனைய காட்சிகளை நீக்க வேண்டும்.
  சண்டை காட்சிகளை ஏன் நீக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள் என்று தெரியவில்லை.

  சண்டை காட்சி நீக்கினால் படமே இல்லாமல் போய் விடும் என்று கமல் தெரிவித்ததாக அறியப்படுகின்றது. (இணைய தள செய்திதான். உண்மை நிலவரம் எனக்கு தெரியாது)

  பதிலளிநீக்கு
 25. சில பதிவர்கள் ராமதாஸ் கேவலமாக பேசுறார், வேறு சில அரசியல் தலைவர்கள் பேசுகிறார்கள்.
  PJ பேசினால் தப்பா என்று கேட்கிறார்கள்.

  PJ ம் ராமதாசும் ஒன்றா???
  ராமதாஸ் ஒரு அரசியல் கட்சி தலைவர், ஒரு ஜாதி சங்க முக்கிய தலைவர். ஆனால் pj அப்படியா???

  பதிலளிநீக்கு
 26. உணர்ச்சி மிகுதியில் ஒருவர் பேசுவதை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரலாகாது. அந்த சூழலில் பாரதிராஜா போன்றோர்கள் தள்ளிவிட்டதின் விளைவே.இப்படி பேசும் நிலை என்று நான் கருதுகிறேன்.எனவே இருவரும் உணர்ச்சி வசப்பட்டதினால் இருவருமே மன்னிக்க படவேண்டியவர்கள்.இதற்கும் மேலாக இஸ்லாத்தின் கண்ணியத்தையும் மேன்மையையும் பற்றவர்களுக்கு போதிக்கும் பிஜே போன்றவர்கள் பொது இடத்திலும்,அறைகூவல் விடுவதிலும் ஆபாசமாக பேசுவதை தடுத்து பொறுமையை ரொம்ப கடைபிடிக்க வேண்டும் என்பது என் கருத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப சரியா சொன்னீங்க ஆசாத் மாப்ள...

   பாரதிராஜாவின் பேச்சுக்கு பதில் தான் அது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கவனமுடன் அண்ணன் பேச வேண்டும் என்பதே நம் விருப்பம்.

   பாரதிராஜாவும் பிஜேவும் ஒன்னு இல்லையே மாப்ள???

   வருகைக்கு நன்றி...

   நீக்கு
 27. // PJ ம் ராமதாசும் ஒன்றா???
  ராமதாஸ் ஒரு அரசியல் கட்சி தலைவர், ஒரு ஜாதி சங்க முக்கிய தலைவர். ஆனால் pj அப்படியா?? //

  எஸ்.. கம்ப்ளீட்லி அக்ரீட்...

  அதனால் தான் பல முஸ்லிம்கள் பெரும் வருத்தம் அடைந்தனர். எங்கள் குழுமத்தில் இருக்கும் சகோதரி அஸ்மா மற்றும் பலர் இதை ததஜ தலைமையின் கவனத்திற்க்கு உடனே எடுத்துச் சென்றுவிட்டார்கள். இன்று ததஜ மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது...

  எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாது என்றே நம்புகிறோம் நடந்தால் தொடர்ந்து எங்கள் கண்டனங்களை தெரிவித்துக்கொண்டே இருப்போம்...

  பதிலளிநீக்கு
 28. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  மாஷா அல்லாஹ்..நமது பெரும்பாலானவர்களின் எண்ணத்தையும், ஆதங்கத்தையும் தெளிவாகவும், அழகான முறையிலும் பதிவு செய்திருக்கீங்க..வாழ்த்துக்கள் சகோ..

  சகோதரர் பீஜெ அவர்களின் பேச்சு ..எப்போதும் போல, ’’மாஷா அல்லாஹ்’’....நம்மை பற்றி சொன்னவர்களின் பேச்சுக்களுக்கு சாட்டையடியாக, பதில் சொல்ல முடியாததாக அமைஞ்சுருக்கு என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்க போவதில்லை..

  நாம் மிகவும் மதிக்க கூடிய, மார்க்கத்தில் ஏற்படும், அனைத்து சந்தேகங்களுக்கும் , தெளிவு பெறக் தரக் கூடிய, நம் குடும்பத்தில் மூத்த அண்ணனுக்கு நிகரானவர் சகோ பீஜே அவர்கள்.

  நம் மார்க்கத்தை பற்றி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி சமூகத்தில் நம்மை வேறுபடுத்தி காட்ட முயல்கிறார்களே என்ற நியாயமான வருத்தத்தில் சில சொல்ல கூடாத வார்த்தைகள் சொன்னதை வைத்து நாம் அதை அவர்களுக்கு சுட்டி காட்டுவதன் காரணமா அவர்களின் அறிவுக்கோ, பெருமைக்கோ எந்த பங்கமும் வரப் போவதில்லை..

  நாம் ஒன்றும் மலக்குகள் இல்ல. தவறே செய்யாமல் இருப்பதற்கு...சராசரி உணர்ச்சிகளும், கோபமும் உள்ள மனிதர்கள் தான்..வீட்டில் மூத்த அண்ணன் தெரியாமல் தடுக்கி விழும் போது, மற்றவர்கள் தூக்கி விடும் செயலுக்கு ஒப்பானது தான் இந்த பதிவின் நோக்கம் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான்.

  இஸ்லாமிய மார்க்கம்.யார் தெரியாமல் தவறு செய்தாலும் அதை சுட்டி காட்டுவது என்பது ஒவ்வொரு முஸ்லீமின் கடமை என்று சொல்கிறது..அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரியே..அதில் பாரபட்சம் காட்ட கூடாது என்பது தான் இறையின் வாக்கு..

  இந்த பதிவை பார்த்த பின்பாவது.. நன்கு சிந்திக்க கூடியவர்கள் இந்த பதிவின் நோக்கத்தை புரிந்து கொள்வார்கள் என் நம்புகிறேன்..

  பதிவுக்கு நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 29. நன்றி சிராஜ்.. கடிததத்தின் உள்ளடக்கமும், எழுதப்பட்ட விதமும் மிகச் சரி.. விளைவுகள் எப்படி இருந்தாலும் சரி.. நாம் செயலைச் செய்வோம். உங்களைப்போன்றவர்கள் எழுத்தைப் பார்க்கும்போதுதான் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தயவு செய்து யாரும் வரம்பு மீருபவர்களயும் சட்டத்தை கையில் எடுப்பவர்களையும் அதரிக்காதீர்கள் தலைவர்கள் செய்யும் மோசமான செயல்கள் அவர்களுடய கண்மூடி பக்தர்களை தீவிரமாக செயல்பட தூண்டும் இதுவே தீவிரவாதத்தின் அடிக்கல்.

   நீக்கு
 30. உங்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருப்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி !

  பதிலளிநீக்கு
 31. அண்ணன் கருத்தில் பிழையா நடக்கவே நடக்காது சிராஜ். வசைமொழி பேசுபவனுக்கு நீங்கள் சொல்வது போல் நிதானமாக பதில் சொல்ல முடியாது. அவன் திட்டினால் நான் திட்டுவேன். அவனிடம் நாம் என்ன கடனா வாங்கியிருக்கிறோம் அவன் வசைபாட அனுமதிக்க கொஞ்சம் இல்லை ரொம்ப லேட்டு நான்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters