செவ்வாய், பிப்ரவரி 12, 2013

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் - ஞானிக்கு ஒரு கேள்வி....


முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்ட விநோதினி அநியாயமாக இறந்து விட்டார்....

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்...
(நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே மீள்பவர்களாக இருக்கிறோம்...)


இதை பற்றி ஏராளமான செய்திகள் வந்து விட்டன... ஆகவே அதற்குள் நான் நுழையவில்லை... அந்த கொடூரனுக்கு என்ன தண்டனை கொடுப்பது???
இது தான் மக்கள் மத்தியில் இருக்கும் விவாதம்....

காலையில் புதிய தலைமுறையில் அவரது தந்தை மற்றும் உறவினர்களின் பேட்டியை காட்டினார்கள். அதில் அவரின் தந்தை "என் மகள் முகத்தில் ஆசிட் ஊற்றியவனின் மூஞ்சியில்  ஆசிட் ஊற்ற வேண்டும், வேறு எதுவும் எங்களுக்கு தேவை இல்லை.. தூக்கு தண்டனை வேண்டாம், ஒரு நொடியில் செத்துவிடுவான்... என் மகள் பட்ட கஷ்டத்தை அவன் காலமெல்லாம் பட வேண்டும்" என்றார்.

அதைவிட முக்கியம் அந்த பெண் விநோதினியும் மருத்துவமணையில் இருக்கும் பொழுது, "அவனின் முகத்தில் ஆசிட் ஊற்ற வேண்டும்... நான் அனுபவிக்கும் இதே வேதனையை அவனும் அனுபவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

என்ன செய்யப்போகிறது அரசு
??? தெரியவில்லை...

ஆனால், என்னை பொறுத்த வரையில் இதற்கு சரியான தீர்வு சுரேஷ் என்ற அந்த குற்றவாளியின் மூஞ்சியில் மீண்டும் ஆசிட் ஊற்ற வேண்டும். ஜெயிலில் போட்டு சாப்பாடு போடுவது ஒரு போதும் தீர்வாகாது. இது போன்ற சம்பவங்கள் குறைய வேண்டும் என்றால், குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் வர வேண்டும்... செய்தால் நாமும் அதே போல் செய்யப்படுவோம் என்ற அச்சம் வர வேண்டும். அதற்கு "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்ற சட்டம் தான் சரி வரும்.

ஆகவே அந்த பெண் மற்றும் அவரின் உறவினர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அவன் மூகத்தில் ஆசிட் ஊற்ற வேண்டும்.. ஆசிட் ஊற்றியும் அவன் கண் பார்வை பறி போகாவிட்டால், அவன் கண் பார்வையையும் பறிக்க வேண்டும்.. அந்த பெண் அனுபவித்த வேதனையை அவன் வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டும் அல்லது இதே போல் 3 மாதத்தில் மூச்சுத் திணறல் வந்து சாக வேண்டும். இவன் இருந்து இந்த உலகத்திற்கு எதுவும் செய்யப் போவது இல்லை.

இதற்கு சட்டத்தில் இடம் இல்லாவிட்டால் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டும்... பாதிக்கப்பட்டவனின் பார்வையில் இருந்து குற்றத்தை அணுகுவதே சரியான தீர்வாக இருக்க முடியும். அவர்கள் வயிறு எறிந்து
இருக்கிறார்கள். அரசே!!  அவரின் குடுபத்தாரின் வயிரை குளிர வை. இல்லை இல்லை 6 மாசம் ஜெயில் தான் தருவேன் என்றால் தாராளமாக ஜெயில் தண்டனை கொடுங்கள்... ஆனால் அறிந்து கொள்ளுங்கள், உங்களால் ஒரு போதும் குற்றத்தை குறைக்க முடியாது....

சுரேஷ்...


இந்த அரசின் தண்டணைகளில் இருந்து ஒரு வேலை நீ தப்பிவிடலாம்.. திறமையான வக்கீல், பண பலம் இருந்தால் நீ தப்பிவிடக்கூடும்... அறிந்துகொள், யாருடைய பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத அந்த இறுதி தீர்ப்பு நாளில்  இறைவன் உனக்கு அளிக்கும் தண்டனையில் இருந்து அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ தப்பிக்க முடியாது.

இன்று கதறி அழுது, வயிறெரிந்து இருக்கும் அவரின் பெற்றோர்களின் மூஞ்சியிலும், அநியாயமாக இறந்த பெண்ணின் மூஞ்சியிலும் அன்று நாங்கள் நீதி கிடைத்த  மகிழ்சியையும், நிம்மதியையும் மற்றும் புன்னகையையும் காண்போம்.  அந்த இறுதித் தீர்ப்பு நாளில் இருக்கு உனக்கு ஆப்பு....

இந்த இடத்தில் தான் நாம் அனைவரும், கடவுள் இல்லை என்பவர்கள் உட்பட சிந்திக்க வேண்டும்.... உலக சட்டத்தை மட்டும் நம்பினால்?? இந்த குற்றவாளிகள் லஞ்சம் கொடுத்து தப்பி விட்டால்?? விநோதினியின் கஷ்டத்திற்கு என்ன தீர்வு?? அவள் பாதிப்புக்கு பதில் என்ன?? அல்வா தானா???? கடவுள் இல்லை என்பவர்களே பதில் சொல்லுங்கள்???

இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஹதீஸ்(நபி ஸல் அவர்கள் கூறியது) :


2413. அனஸ்(ரலி) அறிவித்தார்.
யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், 'உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?' எனறு கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி ("ஆம், அவன்தான்" என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனுடைய தலை நசுக்கப்பட்டது.
Volume :2 Book :44


2703. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
என் தந்தையின் சகோதரி - ருபய்யிஉ பின்த்து நள்ர், - ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தாரிடம் என் குலத்தார், 'இழப்பீட்டுத் தொகையைப் பெறுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்து விடும்படி சொல்லுங்கள்" என்று கோரினார்கள். அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். எனவே, எங்கள் குலத்தார் நபி(ஸல்) அவர்களிடம் (விபரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழி வாங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ரு(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமாக! அவளுடைய முன்பல் உடைக்கப்படாது" என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், 'அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (எனவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)" என்று கூறினார்கள். பிறகு, அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக் கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்" என்றார்கள்.


அனஸ்(ரலி) வழியாக அறிவிக்கப்படும் மற்றோர் அறிவிப்பில், '(அந்த வாலிபப் பெண்ணின்) குலத்தார் (பழிவாங்காமல்விட்டுவிட) ஒப்புக் கொண்டு பரிகாரத் தொகையை ஏற்றார்கள்' என்று வந்துள்ளது.
Volume Book :53


இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குரான் வசனம் :

அறிவுடையோரே !பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து)விலகிக்கொள்வீர்கள்.
அல்குரான். 2: 178,179.


உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் அவர்களுக்கு விதியாக்கினோம்.
(பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும்.
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

(அல் குர் ஆன் 5:45)


நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக(கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக(கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக(கொலை செய்த)பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழிவாங்குவது  உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு(கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்கவேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனை உள்ளது.

என்னே விநோதம்???

மார்க்கபந்துகளின் இந்த முடிவைத் தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் கேட்டிருக்கிறார்கள்... எக்ஸாட்லி டிட்டோ... இதையே தான் கேட்டு இருக்கிறார்கள். இஸ்லாம் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையில் இருந்து தீர்ப்பு சொல்கிறதுக்கு என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை.

பாதிக்கப்பட்டவர்களின் மனக்காயத்துக்கு ஆறுதல் தரும் சட்டத்தை தந்த  இறைவா!! நீயே தூயவன்... நீயே உலகத்தின் அதிபதி.. நாங்கள் அனைவரும் உன்னுடைய அடிமைகள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.. 


இறைவனே மிக்க அறிந்தவன்........

ஞானிக்கு ஒரு கேள்வி :

இது குறித்து எழுத்தாளர் ஞானியிடம் இன்று காலை புதிய தலைமுறை கருத்து கேட்டது.

இந்த சம்பவங்கள் நடக்க என்ன காரணம்?

ஞானி ஒரு நொடி கூட யோசிக்காமல் சொன்ன பதில்     "சினிமா".

மேலும் அவர் சொன்ன சில விஷயங்கள்...

"சினிமாவை நம்பும் ஒரு பெரிய கூட்டம்(தலைமுறை) இன்னும் நம்மிலே இருக்கிறது"

 "இந்த சம்பவங்களுக்கு சினிமா தான் காரணம்",

"சினிமாவில் காட்டப்படும் தவறான விஷயங்களை தவறு என்று சுட்டிக்காட்ட நம்மிடம் கல்வி முறையோ, அமைப்புகளோ இல்லை".

ஐயா ஞானி, இத தானே "விஸ்வரூப" பிரச்சனையில் நாங்கள் கத்தி, கதறி சொன்னோம். படம் வந்த பிறகு எதிர்ப்பது தான் சரி என்று சொன்னீர்களே???? நம்ம கிட்ட தான் அப்படி சரியாக எடுத்துச் சொல்லும் சிஸ்டம் இல்லையே??? (உங்க கருத்துப்படி தான்... ஹி..ஹி..ஹி), பின்ன எப்படி படம் வந்த பிறகு மக்களுக்கு புரிய வைக்கிறது???

"மற்றவர்களுக்கு வந்தா இரத்தம், முஸ்லிம்களுக்கு வந்தா தக்காளி சட்னி" - என்ற கொள்கையில் இல்லாதவர் நீங்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.





நீங்கள் தவறானவர் என்று எனக்கு தோன்றவில்லை.. ஆனால் உங்கள் பேச்சில் நீங்கள் அறியாமலே எவ்வளவு முரண்பாடுகள் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். எங்கு இடைவெளி இருக்கிறது என்று சிந்தியுங்கள், உங்களை திருத்திக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் பெருமை சேர்ப்பதாகவே இருக்கும்.





புதன், பிப்ரவரி 06, 2013

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....



டோண்டு ராகவன்....

ஜனவரி மாதம்... எதிர்க்குரல் புத்தகம் வெளியீடு தொடர்பான பதிவு போட்டதும், அன்று மதியம் எனக்கு போன் வந்தது.. பேசியவர் டோண்டு ராகவன்,  அது தான் அவர் என்னிடம் பேசுவது முதல் முறை...

"நல்ல விஷயம் செஞ்சு இருக்கீங்க. வாழ்த்துக்கள்.. புத்தக கண்காட்சிக்கு போவீங்களா? நான் வருவேன், முடிந்தால் சந்திப்போம்" என்று கூறினார்.

ஆயிரம் தான் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பவராக இருந்தாலும், புத்தகம் வெளியீடு என்று கேள்வி பட்டதும் போன் போட்டு வாழ்த்து சொல்லிய பண்பாளர்.

டோண்டு ராகவன் அவர்களின் மரணச்செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அன்று சந்தித்து இருக்கலாமே என்று இப்பொழுது தோன்றுகிறது.

எல்லாம் வல்ல இறைவன் அவர் குடும்பத்தாருக்கு இந்த பேரிழப்பை தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அளிப்பானாக.


                                                              

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே திரும்பிச் செல்பவர்களாகவே இருக்கிறோம்...



நீங்கள் உறுதியாக கட்டப்பட்ட கோட்டையில் இருந்தாலும் உங்களை மரணம் வந்தடைந்தே தீரும்... (அல் குரான்)

சனி, பிப்ரவரி 02, 2013

அவன் அழுதால் நாமும் அழ வேண்டாமா??? - என்னத்த சொல்ல...



இது ஒருத்தருக்கு.....
நமக்கு அந்நிய நாடானா ஆப்கானிஸ்தான், தாலிபன் கதைகளை ஆஹா, ஓஹோ என்று புகழும் சிலர்...

நமது நாட்டில் இருக்கும் ஒரு மாநில மக்களின் கதையான "டேவிட்" படத்தை தமிழுக்கு ஒட்டாது, பார்க்க வேண்டாம் என்று சொல்கிறார்கள்... என்னத்த சொல்ல???

பார்க்க வேண்டாம் என்று சொல்ல நீங்க யாரு பாஸ்?? ஏன் அடுத்தவனின் கருத்து சுதந்திரத்தில் தலையிட்றீங்க....??? ஹி..ஹி..ஹி.. (இது அவர் சொன்ன டயலாக் தான்).. ஹி..ஹி..ஹி...

கமலுக்கு வழிஞ்சா இரத்தம்??? டேவிட் பட தயாரிப்பாளருக்கு வழிஞ்சா தக்காளி சட்னியா???
 டேவிட் பட தயாரிப்பாளர் மட்டும் நஷ்டம் அடையளாமா பாஸு?????  புரியல
 ஏன் இந்த இரட்டை முகம்???

முகமூடி கிழிஞ்சு தொங்குது பாஸ்... எடுத்து ஒட்டிக்கங்க....
 இது அடுத்தவருக்கு.....
 இன்னொருத்தர், "என்ன படம் கடல்???"  ஹீரோ அழுகையில் நாம் அழுக வேண்டாமா?? அவன் சிரிக்கையில் நாம் சிரிக்க வேண்டாமா??? என்று புலம்பி உள்ளார். இவர்  தான் முன்னொரு நாள் சினிமாவ சினிமாவ பார்க்க சொன்னது.
 சினிமாவில் அவன் அழுதா நீங்க ஏன் அழுகணும்?? லூசா நீங்க??
 இன்னொரு சந்தேகம்... அவன் அழுதா நீங்க அழுவீங்க... திரைல  நடக்கிற பார்த்து நீங்க பீல் பண்ணுவீங்க.. முஸ்லிம தீவிரவாதிய காட்டினா மட்டும் அப்படி எடுத்துக்க மாட்டீங்க??? அப்டிதானே??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். . நம்பிட்டோம்.... ஏன்னா நாங்க அறிவில்லாதவங்க தானே???
"சினிமாவ சினிமாவா பாருங்க பாஸ்..."  - மனசாட்சி இருந்தா இந்த டயலாக்க இனி சொல்ல மாட்டீங்க சாரே....
 இது எனக்கு...
 இந்த பிரட்சனைய வச்சு இவ்ளோ போஸ்ட் போட்றியே?? உனக்கு வேலை வெட்டியே இல்லையா????
 மனசாட்சி இருந்தா இனி நீ போஸ்ட் போட மாட்ட.. ஹா..ஹா..ஹா..


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters