சனி, பிப்ரவரி 02, 2013

அவன் அழுதால் நாமும் அழ வேண்டாமா??? - என்னத்த சொல்ல...



இது ஒருத்தருக்கு.....
நமக்கு அந்நிய நாடானா ஆப்கானிஸ்தான், தாலிபன் கதைகளை ஆஹா, ஓஹோ என்று புகழும் சிலர்...

நமது நாட்டில் இருக்கும் ஒரு மாநில மக்களின் கதையான "டேவிட்" படத்தை தமிழுக்கு ஒட்டாது, பார்க்க வேண்டாம் என்று சொல்கிறார்கள்... என்னத்த சொல்ல???

பார்க்க வேண்டாம் என்று சொல்ல நீங்க யாரு பாஸ்?? ஏன் அடுத்தவனின் கருத்து சுதந்திரத்தில் தலையிட்றீங்க....??? ஹி..ஹி..ஹி.. (இது அவர் சொன்ன டயலாக் தான்).. ஹி..ஹி..ஹி...

கமலுக்கு வழிஞ்சா இரத்தம்??? டேவிட் பட தயாரிப்பாளருக்கு வழிஞ்சா தக்காளி சட்னியா???
 டேவிட் பட தயாரிப்பாளர் மட்டும் நஷ்டம் அடையளாமா பாஸு?????  புரியல
 ஏன் இந்த இரட்டை முகம்???

முகமூடி கிழிஞ்சு தொங்குது பாஸ்... எடுத்து ஒட்டிக்கங்க....
 இது அடுத்தவருக்கு.....
 இன்னொருத்தர், "என்ன படம் கடல்???"  ஹீரோ அழுகையில் நாம் அழுக வேண்டாமா?? அவன் சிரிக்கையில் நாம் சிரிக்க வேண்டாமா??? என்று புலம்பி உள்ளார். இவர்  தான் முன்னொரு நாள் சினிமாவ சினிமாவ பார்க்க சொன்னது.
 சினிமாவில் அவன் அழுதா நீங்க ஏன் அழுகணும்?? லூசா நீங்க??
 இன்னொரு சந்தேகம்... அவன் அழுதா நீங்க அழுவீங்க... திரைல  நடக்கிற பார்த்து நீங்க பீல் பண்ணுவீங்க.. முஸ்லிம தீவிரவாதிய காட்டினா மட்டும் அப்படி எடுத்துக்க மாட்டீங்க??? அப்டிதானே??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். . நம்பிட்டோம்.... ஏன்னா நாங்க அறிவில்லாதவங்க தானே???
"சினிமாவ சினிமாவா பாருங்க பாஸ்..."  - மனசாட்சி இருந்தா இந்த டயலாக்க இனி சொல்ல மாட்டீங்க சாரே....
 இது எனக்கு...
 இந்த பிரட்சனைய வச்சு இவ்ளோ போஸ்ட் போட்றியே?? உனக்கு வேலை வெட்டியே இல்லையா????
 மனசாட்சி இருந்தா இனி நீ போஸ்ட் போட மாட்ட.. ஹா..ஹா..ஹா..


61 கருத்துகள்:

  1. ////////////இது எனக்கு...

    இந்த பிரட்சனைய வச்சு இவ்ளோ போஸ்ட் போட்றியே?? உனக்கு வேலை வெட்டியே இல்லையா????

    மனசாட்சி இருந்தா இனி நீ போஸ்ட் போட மாட்ட.. ஹா..ஹா..ஹா..////////////
    ஹ ஹா ஹி ஹி இது தான் ஹிட்டு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரியாஸ்..

      பேஸ் புக்ல ஸ்டேடஸா தான் போட்டேன்.. அப்டியே 2 வரிய ஆட் பண்ணி ஒரு பதிவா போடுவமேன்னு தட்டி விட்டேன்...

      சந்தேகமே இல்லாம மொக்கை பதிவு தான்..

      நீக்கு
  2. அடப்பாவி..இதும் உனக்குத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சொல்றன்னு புரியலையே கஸாலி..

      சரி விடு.. புரிஞ்சா என்ன புரியாட்டி என்ன?? எல்லாம் புரிஞ்சா பேசிகிட்டு இருக்காங்க??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

      வருகைக்கு நன்றி...

      நீக்கு
  3. "நமக்கு அந்நிய நாடானா ஆப்கானிஸ்தான், தாலிபன் கதைகளை ஆஹா, ஓஹோ என்று புகழும் சிலர்...
    நமது நாட்டில் இருக்கும் ஒரு மாநில மக்களின் கதையான "டேவிட்" படத்தை தமிழுக்கு ஒட்டாது, பார்க்க வேண்டாம் என்று சொல்கிறார்கள்... என்னத்த சொல்ல???"


    நீங்க ரொம்ப குழம்பி போய் இருக்கின்றீர்கள். விஸ்வரூபம் படத்தையே நாம பார்க்கல. அதை உங்களுடைய ஆட்கள் சன்னதம் ஆடி நிறுத்தி விட்டார்கள். இதில் எப்படி அதை ஆஹா, ஓஹோ என்று புகழ முடியும். பாத்தவன் நல்ல இருந்தால் புகழ்வான். இல்லன்னா திட்டி விட்டு போவான்.
    உன்னை போல் ஒருவன் படம் வந்த போது அதை விமர்சித்து எத்தனை பதிவு போட்டார்கள் தெரியுமா??? உங்களுக்கு selective memory loss ஆ???

    இதே விஸ்வரூபம் திரைக்கு வந்திருந்தால் கழுவித்தான் உற்றியிருப்பார்கள். இப்போது விஸ்வரூபம் விமர்சனம் போட்டவர்கள் கமல் தீவிர அபிமானிகள். அவர்கள் பக்கத்து மாநிலத்துக்கு போய் படம் பார்த்தவர்கள். இதிலிருந்து அவர்களுடைய அபிமானம் புரியும். அவர்கள் பெரும்பாலும் பாராட்டித்தான் பதிவு போடுவார்கள். அப்படி இருந்தும் பலர் விமர்சித்து பதிவு போட்டிருக்கின்றார்கள். முகநூலில் பல பதிவுகள் வந்து விட்டன.

    மஞ்சள் கண்ணாடி போட்டு பார்த்தல் எல்லாம் மஞ்சளாக தான் தெரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இதில் எப்படி அதை ஆஹா, ஓஹோ என்று புகழ முடியும். //

      பார்துவிட்டு புகழ்ந்தவர்களைத்தான் சொல்கிறேன் நண்பரே... அதே நபர்கள் தான் டேவிட்டுக்கு இப்படி விமர்சனம் எழுதியது அல்லது கருத்து தெரிவித்தது...

      நீக்கு
    2. //
      இதே விஸ்வரூபம் திரைக்கு வந்திருந்தால் கழுவித்தான் உற்றியிருப்பார்கள். இப்போது விஸ்வரூபம் விமர்சனம் போட்டவர்கள் கமல் தீவிர அபிமானிகள். அவர்கள் பக்கத்து மாநிலத்துக்கு போய் படம் பார்த்தவர்கள். இதிலிருந்து அவர்களுடைய அபிமானம் புரியும். அவர்கள் பெரும்பாலும் பாராட்டித்தான் பதிவு போடுவார்கள். அப்படி இருந்தும் பலர் விமர்சித்து பதிவு போட்டிருக்கின்றார்கள். முகநூலில் பல பதிவுகள் வந்து விட்டன. //

      இது நியாயமான கருத்து.. ஏற்றுக்கொள்கிறேன்...

      கமல் தனக்கு பிடிக்கும் என்பதால் உண்மையை மறைந்து ஆஹா..ஓஹோ என்று புகழ்வது இரட்டை வேடம் தானே??? அவர்கள் போடுவது இரட்டை வேடம் என்று சுட்டிகாட்டவே இந்த பதிவை எழுதினேன்...

      நீக்கு
  4. படம் சரியில்ல பார்க்காத என்பதும், படத்தையே பார்க்க விடமாட்டோம், படம் ஓடாது என போஸ்டர் ஒட்டுவதும் ஒண்ணுதான். செம பதிவு பாஸ்

    பதிலளிநீக்கு
  5. ஆமாம்ல.. ரெண்டும் வேற வேற தான்...
    பட் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஒன்னு தான்...
    அவன் குடும்பம் குட்டி மட்டும் தெருவுக்கு வரலாமா????

    பதிலளிநீக்கு
  6. ஆனா சிராஜ் இப்போ நான் ரொம்ப அதிர்ச்சியில் இருக்கின்றேன். கமலை விட மோசமாக ஒருவர் இஸ்லாமியர்களை கேவலப்படுத்தியிருக்கின்றார்.
    விஸ்வரூபத்தை விமர்சிக்கிறேன் என்று தான் இஸ்லாமியனாக படத்தை பார்த்தேன் என்று பதிவு போட்டிருக்கின்றார் பிரபல சரோஜாதேவி பத்திரிக்கை எழுத்தாளர் சாரு நிவேதிதா.
    எந்த மனித நாகரீகமும் ஏற்று கொள்ளாத கேவலமான வாழ்க்கையை வாழும் இவர் தன்னை இஸ்லாமியனாக உருவகித்து இஸ்லாமியர்களை கேவலப்படுத்தியுள்ளார்.
    (அவர் விஸ்வரூபம் படத்தை விமர்சிக்கலாம். ஆனா தன்னை இஸ்லாமியனாக உருவகித்திருக்க கூடாது. நாம அவரை மனுசனாக கூட மதிப்பதில்லை என்பது வேறு கதை)
    சிலவேளை playboys magazine உரிமையாளர் Hugh Marston Hefner தன்னை இஸ்லாமியர் என்று சொல்லி ஏதாவது கருத்து சொல்லகூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாம அவரை மனுசனாக கூட மதிப்பதில்லை//

      உங்களால் ஒரு மனிதனாக மதிக்க முடியாத ஒருவர் கூட இங்கு இஸ்லாமியர்கள் இடத்தில் இருந்து பார்த்தேன் என்று கூறுகிறாரே..!! உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் உங்களின் பார்வையில் நீங்கள் அவரை விட கீழ் தானே..!!! :-))

      நீக்கு
    2. //நாம அவரை மனுசனாக கூட மதிப்பதில்லை என்பது வேறு கதை//

      மனிதனை மனிதனாய்ப் பார்க்கத் தெரியாத ஒருத்தருக்கு "ethicalist " ன்னு பேராம் . ஏன் எனக்கு இப்பிடி சிப்பு சிப்பா வருது.

      நீக்கு
    3. மனுஷனை மனுஷனா பார்க்க தெரியாதவர்கள் எல்லாம்...

      "ஓ... முஸ்லிம்களே படத்தை படமா பாருங்க"-ன்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க...! காலக்கொடுமை..!

      ஹூம்...
      'இஸ்லாமொஃபோபியா ஒருவரின் கண்களில் பொங்கி வழிந்தோடினால்...

      எப்போவேனும் ஒருமுறையாவது முஸ்லிம்களை ஆதரிக்கும் எந்த மனுஷனும் மனுஷனாகக்கூட இவர்களுக்கு தெரிய மாட்டான்'

      -----என்பதை புரிய வைத்தது எதிகாளிஸ்ட்(?) கமெண்ட்.

      நீக்கு
    4. @ Peer Mohamed, முஹம்மத் ஆஷிக் citizen of world, நாகூர் மீரான்,

      "மனிதனை மனிதனாய்ப் பார்க்கத் தெரியாத ஒருத்தருக்கு "ethicalist " ன்னு பேராம் . ஏன் எனக்கு இப்பிடி சிப்பு சிப்பா வருது."
      நியாயம் கதைக்க பீர் முகம்மதுவுக்கு என்ன தகுதி இருக்கிறது.
      தன வாழ்வில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய எந்த அடிப்படை ஒழுக்கத்தையும் கடைபிடிக்காத ஒருவனை எப்படி மனிதன் என்று சொல்லமுடியும்.
      தனது மகளுடன் உடலுறவு கொண்டவனை எப்படி மனிதன் என்று சொல்லமுடியும் (இதை சொன்னவர் சாரு மனைவி அவந்திகா) ஆதாரம் இருக்கின்றது .

      "உங்களால் ஒரு மனிதனாக மதிக்க முடியாத ஒருவர் கூட இங்கு இஸ்லாமியர்கள் இடத்தில் இருந்து பார்த்தேன் என்று கூறுகிறாரே..!! உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் உங்களின் பார்வையில் நீங்கள் அவரை விட கீழ் தானே..!!! :-))"

      அவர் சொன்ன காரணம் அம்மா மீதான பக்தி. இதே ஒரு மதத்துக்கு முன் இந்தியாவை காக்க வந்த தேவகுமாரன் மோடிதான் என்று பதிவு போட்டார். அதையும் மீரான் ஏற்று கொள்வீரா?

      உங்களுக்கு எது உவப்பாக இருக்கின்றதோ அதை மட்டும் பாராட்டுவீர்கள். உவப்பிலாவிட்டால் திட்டுவீர்கள். உங்களை மாதிரி SELECTIVE MENTALITY எனக்கு இல்லை.

      மோடி பற்றி சாரு பதிவு போட்ட போது அதை விமர்சித்தவர்களில் நானும் ஒருவன்.

      "எப்போவேனும் ஒருமுறையாவது முஸ்லிம்களை ஆதரிக்கும் எந்த மனுஷனும் மனுஷனாகக்கூட இவர்களுக்கு தெரிய மாட்டான்' "
      முஹம்மத் ஆஷிக் citizen of world உங்களுக்கு மதத்துக்கு அப்பால் எதையும் சிந்திக்க முடியாது. இதே சாரு மோடி பற்றி பதிவு போட்ட போது விமர்சித்தவன்(கடுமையாக) நான் இஸ்லாமிய எதிர்ப்பாளனாக இருந்திருந்தால் அதை நான் ஆதரித்திருக்க வேண்டும்.

      சாரு வின் இந்த ஸ்டாண்ட் க்கு காரணம் அம்மா மீதான பற்று தான். வேறு ஒன்றும் இல்லை.
      மோடியை சாரு ஆதரிக்க காரணம் அம்மா மோடியை ஆதரித்தமை தான்.

      இதே கருத்தை எழுத்தாளர் ஞானி போட்டிருந்தால் நான் இந்த பின்னூட்டம் போட்டிருக்க மாட்டேன்.

      சாருவை ஏன் மனிதனாக பார்க்கவில்லை என்று கருதியமைக்கான காரணத்தை மேழே குறிப்பிட்டிருக்கின்றேன்.

      நீக்கு
  7. //அவன் அழுதா நீங்க அழுவீங்க... திரைல நடக்கிற பார்த்து நீங்க பீல் பண்ணுவீங்க.. முஸ்லிம தீவிரவாதிய காட்டினா மட்டும் அப்படி எடுத்துக்க மாட்டீங்க??? அப்டிதானே??? அவ்வ்வ்வ்//

    அவ்வவ்...நாங்கெல்லாம் யாரு..நம்ம கிராமப்புற மக்களில் இன்றும் கூட நம்பியார் உண்மையிலேயே வில்லன் என்று நினைத்து விட்டே தன் இன்னுயர் நீத்த மக்கள் தமிழ்நாட்டின் வரலாற்றிலே உண்டு...! படத்துல ஏழைகளை தூக்கி வச்சி கொஞ்சினதாலதான் தமிழ்நாட்டையே தூக்கி எம்ஜியார் கையில கொடுத்தோம்..!! அதையே நம்பியார் செய்திருந்தால் அவரும் முதல்வராக ஆகி இருப்பார்..! பாவம் அவருக்கு அந்த கொடுப்பினை இல்லை..ஆனாலும் சிவாஜியால் ஏன் நிற்க முடியவில்லை ? சிவாஜி அந்த அளவு ஏழைகளுக்கான நாயகனாக படத்தில் நடிக்கவில்லை..அதனால் அந்த இடத்திற்கு வர மக்கள் விரும்பவில்லை..!

    அதனாலதான் இன்னும் ரஜினியை கூப்பிட்டு கிட்டு இருக்கோம்..விஜயகாந்தே அதனால்தான் பாகிஸ்தான் எதிரிகளிடம் இருந்து பெரும்பான்மை மக்களை காப்பற்றி அரசியல் களத்தில் நம்பிக்கையுடன் உள்ளார்..அதனால் நிறைய பணம் இருந்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட ஜேகே ரித்தீஸ் கூட முதலில் தேர்ந்தெடுத்தது சினிமா தான்..! பக்கத்து மாநிலத்தில் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்ததும் இந்த பிம்பத்தை வைத்தே..!

    ஏன் எல்லா இடங்களிலும் கதாநாயகர்களே கட்சி ஆரம்பித்து ஆட்சி பிடிக்கின்றனர்..வில்லன்களான கதாபாத்திரம் அரசியல் வர முயற்சிக்ககூட வில்லை..வந்தாலும் வெற்றி பெறவில்லை(உதாரணம் மன்சூர் அலிகான்)..! காரணம் பிம்பத்தில் காட்டும் உணர்வையே மக்கள் உள்ளத்திலும் பதித்து விடுகின்றனர்..!

    நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஈமு கோழி மோசடிக்காரர்கள் நம்பியது சினிமா பிரபலத்தை ..! ஏன் அவர்கள் சொன்னால்தான் மக்கள் ஏமாறுவார்கள்..!!

    அதனால் இந்த மாதிரி சினிமாவில் முஸ்லிம்களை வில்லன்களாக காட்டினால் நிஜத்தில் அப்படி எல்லாம் நினைக்க மாட்டார்கள் என்று தமிழ்நாட்டில் மட்டும் அல்ல பக்கத்துக்கு மாநிலத்தில் கூட சொல்ல முடியாது..! அவ்வ்வ்வ்...!!!

    பதிலளிநீக்கு
  8. தம்பி நாகூர் மீரான்...

    அழகான விளக்கத்திற்கு நன்றி..
    எப்போதும் ஆன்லைன் தானா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைக்கு தான் சகோ....சிஸ்டம் வொர்க் இருக்கும் வரை ஏதோ நம்மால ஏன்றது..!!! நாளைபின்ன நம்ம பதிவுக்கும் நான் ஆப் லைன்ல இருக்கும்போது நீங்க ஆன்லைன்ல இருந்து உதவ மாட்டீன்களா..! அதுக்குதான் ......ஹி.ஹி..ஹி..!

      நீக்கு
  9. முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்.

    விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள். கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன்.

    அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது.

    என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

    ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும்.

    தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன்.

    விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது.

    நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது.

    அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்?

    அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

    இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்?

    அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள்.

    ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்?

    கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?

    ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான்.

    கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை.

    பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.


    இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை. ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன்.

    நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும்.

    அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன்.

    அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது.

    வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது.

    சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில்.

    ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை.

    ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது.

    ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள்.

    அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்?

    நினைத்துப் பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.

    விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன.

    ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்.

    மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது - சாரு நிவேதிதா


    SOURCE: http://charuonline.com/blog/?p=167

    பதிலளிநீக்கு
  10. சிராஜ் சித்தரே,

    நீங்க சொன்ன விமர்சர்கள் எல்லாம் ,ஏதேனும் பலனை எதிர்ப்பார்த்து எல்லாப்படத்தையும் விமர்சனம் செய்பவர்கள், உள்ளுக்குள் பல நுண்ணரசியல் உண்டு, ஆனால் இந்த படம் வந்திருந்தால் செம மொக்கை வாங்கியிருக்கும்,ஆனால் மார்க்குகள் தான் தேவையில்லாம விளம்பரம் கொடுத்துட்டாங்க, புறக்கணிப்பே சிறந்த தண்டனை, சுமாரான படம் சுமாராத்தான் ஓடும்,ஆனால் பழியை தூக்கி மார்க்குகள் மேல போட வசதியாகிடுச்சு.

    எத்திகலிஸ்ட் சொன்னது போல கழுவி ஊத்தி இருப்பாங்க :-))

    ஆனாலும் இந்த மேட்டரை வச்சே டீக்கடையைய ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் ஆக்கிடுவீர் போல இருக்கே :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஜாவில் ஆரம்பித்து,
      நடந்ததை-நடப்பதை திரித்து,
      உண்மைக்கு மாறாக,
      முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சார்பு பார்வையில் மட்டுமே...
      திரைக்கதை சொன்ன திரைப்படங்ககள்,
      தமிழில் எத்தனையோ எடுக்கப்பட்டு திரைக்கு வந்து விட்டன.

      இப்போது போல முன் எப்போதும் முஸ்லிம்கள் அவற்றை எதிர்க்கவில்லைதான்.
      இதனால் விளைந்த தீப்பலனை ஒவ்வொரு முஸ்லிமும் சமூகத்தின் பார்வையில் பேச்சில் எழுத்தில் முஸ்லிம்கள் பற்றிய புரிதலில் அனுபவித்து வருகிறோம்.

      காரணம், அரசியலில் பாபர் மசூதி-ராமர் கோயில் போலவே,
      சினிமாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் (?) வில்லனாய் இருந்து, ஹீரோ அதை வெற்றி கொண்டால் நன்றாக பிசினெஸ் ஆகிறது. கணிசமான சினிமா ரசிகர்கள் அதை விரும்புகிறார்கள்.

      இதன் பலனை எல்லாம் இஸ்லாமிய வெறுப்பாக சமூகத்தில் இன்னும் முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறோம். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா..? 'திருடனாய் பார்த்து திருந்தட்டும்' என்று சும்மா இருந்தால்... அது முட்டாள்த்தனம் என்பதை ரொம்ப ரீசண்டாகவே உணர்ந்தோம்.

      இதற்கு துவக்கப்புள்ளிதான் துப்பாக்கி..! கமாதான் விஸ்வரூபம்..!

      இனி முஸ்லிமோஃபோபியா வியாபாரம் செய்ய யோசிப்பார்கள் அல்லவா அந்த சினிமா வியாபாரிகள்..?

      அதே சமயம், முஸ்லிம்களின் அடுத்த டார்கெட்... இதுபோன்ற சினிமாவை ஆதரிக்கும் ரசிகர்கள். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் முஸ்லிமோஃபோபியா படங்கள் நாட்டின் இறையாண்மைக்கு மத நல்லிணக்கத்துக்கு எவ்வளவு தீமையானது என்பதை புரியவைக்க, முஸ்லிம்களாகிய நாம் நமது அன்றாட நல்லொழுக்க நற்செயல்கள் மூலம் வாழ்ந்து காட்டித்தான் அவர்களுக்கு விளக்க வேண்டும்..!

      ஏனெனில், இதேபோல இனிவரும் இதுபோன்ற திரைப்படங்களுக்கும் தமிழக முதல்வர் நமக்கு உதவ முன்வருவாரா என்று நிச்சயமாக தெரியாத நிலையில்... நமது பக்கமும் அந்த அப்பாவி ரசிகர்களின் கவனத்தை திருப்ப வேண்டும் என்றால்... இனி, உன்னைப்போல் ஒருவன்கள், துப்பாக்கிகள், விஸ்வரூபங்கள் எல்லாம் அவர்களின் கவனத்தினை கலைக்கக்கூடாது அல்லவா..?

      எனவே தான் விஸ்வரூப எதிர்ப்பு போராட்டம் அவசியமாகிறது..!

      நீக்கு
  11. வவ்வால்....

    ஏனோ உங்களின் இந்த கமெண்ட் பிடிச்சு இருக்கு.... நேர்மையான கமெண்ட்..
    நிச்சயம் நாங்கள் போராடாமல் இருந்து இருந்தால் இந்த படம் கழுவி ஊத்தப்பட்டு இருக்கும்..

    இப்பொழுது நாங்கள் நல்ல விளம்பரம் கொடுத்து இருக்கிறோம் என்பது 100 % உண்மை. அதனாலே இந்த படம் நல்ல வசூல் அடைய வழி உள்ளது என்பதை அறிவோம்... ஆனால் இதற்க்கு போராடாமல் விட்டு இருந்தால் கமல் நட்டமடைந்து இருப்பார்.. ஆனால் இது போன்ற படங்கள் வரிசை கட்டி இருக்கும்... இனி இது போன்று எடுக்க நிச்சயம் யோசிப்பார்கள்.. அந்த விதத்தில் எங்கள் போராட்டம் மாபெரும் வெற்றியே....

    என்ன கொடுமை இது.. ஒரு போராட்டத்தில் இரு தரப்புக்கும் லாபம்... :-) :-))

    வருகைக்கு நன்றி வவ்வால் முனிவரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆனாலும் இந்த மேட்டரை வச்சே டீக்கடையைய ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் ஆக்கிடுவீர் போல இருக்கே //

      அல்ரெடி 7 ஸ்டார் தானே?? இல்லையா???

      நீக்கு
    2. அதானே...!! முஸ்லிம்களை வேதனை படுத்த நினைத்த போதும் முஸ்லிம்களால் அவர்களுக்கு நன்மை தானே தவிர தீமை இல்லை..!! இதனால் முஸ்லிம்கள் பெருமைப்படுகிறோம்..!!

      மறக்காம எதிர்கருத்து கொண்ட கமல் நலம் விரும்பிகள் எல்லாம் " தியேட்டர் " போய் கமலுக்கு மொய் வைத்துவிடுங்கள் ..!! :-))

      நீக்கு
  12. முத்து லட்சுமிக்கு உள்ள உரிமைகூட
    முஸ்லிம் சமுதாயத்துக்கு இல்லையா?

    சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை
    அடிப்படையாகக் கொண்டு
    ‘வனயுத்தம்’ எனும் திரைப்படம்
    தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் திரைப்படத்துக்குத்
    தடை விதிக்கக் கோரி
    வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி
    சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில்
    வழக்குத் தொடர்ந்தார்.
    வழக்கை விசாரித்த
    சிவில் நீதிமன்றம்
    படத்துக்குத் தடை விதித்தது.

    இந்தத் தடையை ரத்து செய்யக்கோரி
    படத்தின் இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ்
    உயர்நீதிமன்றத்தில் மனு
    தாக்கல் செய்தார்.

    மனுதாரர் தரப்பு மூத்த வழக்குரைஞர்
    ஏ. நடராஜன், சர்ச்சைக்குரிய
    சில காட்சிகளை நீக்கி விடுவதாக
    உறுதிமொழி அளித்தார்.
    இதையடுத்து அந்தப் படத்தைத்
    திரையிட
    அனுமதி அளித்து
    நீதிபதி உத்தரவிட்டார்.

    இது இன்று (2.2.13) நாளிதழ்களில் வெளிவந்த செய்தி.


    ·கருத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம்
    என்று கத்திக்கொண்டு
    கமலுக்கு ஆதரவாகக்
    களத்தில் இறங்கிய
    வீராதி வீரர்கள் எல்லாம்
    ஏன் இயக்குநர் ரமேஷûக்கு
    ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை?

    ·தனிப்பட்ட முத்து லட்சுமிக்கு
    உள்ள உரிமைகூட
    ஒட்டுமொத்த
    முஸ்லிம் சமுதாயத்துக்கு இல்லை
    என்று ‘கருத்துச் சுதந்திர வீரர்கள்’
    கருதுகிறார்களா?

    ·இரட்டை வேடமும்
    இரட்டை நாக்கும் உள்ளவர்கள்
    எப்போதுதான் திருந்துவார்களோ?

    -சிராஜுல்ஹஸன் ( Face Book Status)

    பதிலளிநீக்கு
  13. //சினிமாவில் அவன் அழுதா நீங்க ஏன் அழுகணும்?? லூசா நீங்க??//// அதானே.!!!

    //மனசாட்சி இருந்தா இனி நீ போஸ்ட் போட மாட்ட.. ஹா..ஹா..ஹா../// அண்ணே உங்கள் கலைசேவையை நிறுத்தி விடாதீர்கள் :) :)
    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை..!!! (சிரிக்காம டைப் பண்ணு ஷர்மி ஹஹஹாஹ் அவ்வ்வ்வ்வ்வ் )

    பதிலளிநீக்கு
  14. ஒரு இந்து என்று இதுவரை நினைக்காமல் இருந்த பல நடுநிலைமையான இந்துக்களை உங்களின் விஸ்வரூப பட எதிர்ப்பு தங்கள் மதம் என்ன என்று யோசிக்க வைத்துவிட்டது. இது உங்களின் வெற்றி என நீங்கள் கருதினால் அது உங்கள் முட்டாள்தனம் என்று தோன்றுகிறது. கமல் தெரிந்தோ தெரியாமலோ ஒரு புரிதலை தமிழ் மக்களுக்கு கற்பித்து விட்டார். அது இஸ்லாமியர்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் இல்லை என்பது. நீங்கள் கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தால் இஸ்லாமியர்கள் பற்றிய மக்களின் எண்ணம் நல்லவிதமாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்நாட்டிலே...?
      அட... எத்தனை காலம்தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே இந்நாட்டிலே...?

      'குட்ட குட்ட சகிப்புத்தன்மையுடன் குனிவது முட்டாள்த்தனம்' என்று லேட்டாகவாவது புரிந்து கொண்டோம்..! இதற்கும் எதிர்ப்பா..? அடக்கடவுளே..!

      நீக்கு
    2. இந்தியாவில் இஸ்லாமியர் எதிர்ப்பார்க்கும் அனைத்து உரிமைகளையும், இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் அனைத்து இந்து, கிறித்தவ மக்களுக்கும் வழங்கோணும்.. இது தான் இந்த நாட்டாமை தீர்ப்பு ... ! நாட்டாமை தீர்ப்பு ... ! நாட்டாமை தீர்ப்பு ... !

      நீக்கு
    3. காரிகன் பாருங்க உங்களுக்கு ஈக்குவலா சீரியசா ஒருத்தர் பேசியிருக்காரு..!!

      ***

      டி.ராஜேந்தர் : வரும் லோக்சபா தேர்தலில் லட்சிய திமுக தன் ஜனநாயக கடமையை ஆற்றும் ,மத்தியில் ஆளும் காகிராஸ் அரசு ஊழல் நிறைந்த மக்கள் விரோத போக்கை கடை பிடித்து வருகிறது.லோக்சபா தேர்தலில் காங் ., கட்சிக்கு எதிராக செயல்படும் அணியில் லட்சிய திமுக அங்கம் வகிக்கும்..!!!

      ***

      என்ன சகோ. நான் சொன்னது சரிதானே..!!

      நீக்கு
    4. இந்திய முஸ்லிம்களுக்கு இந்தியா தாய் நாடு எல்லா உரிமைகளும் இருக்கிறது.
      இஸ்லாமிய நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டியது அவர்களின் கடமை.

      நீக்கு
    5. காரிகன்,

      Neenga hinduthane, ivalavu naal ungalukku antha ninaippu illaiyaa?

      sari vidunga ippavvavuthu vanthathu santhoshame, ithula thappu enna irukku, ellavarum aanmiga vazhiyai therntheduppadhu nanmai payakkum.

      ithula miratta enna irukku??????????????

      நீக்கு
    6. Iqbal selvan,

      basically u should know that india is not a hindu nation even though its hindustan.

      Its a secular nation. we muslims have all the rights to defend ourself under the constitutional rights,

      but on contrast those countries u mentioned have different agenda, even other nationalities who follow islam will not get equal rights like their locals, but they r treating all foreign nationals(despite of their religions) as equal.

      நீக்கு
    7. காரிகன்..

      // ஒரு இந்து என்று இதுவரை நினைக்காமல் இருந்த பல நடுநிலைமையான இந்துக்களை உங்களின் விஸ்வரூப பட எதிர்ப்பு தங்கள் மதம் என்ன என்று யோசிக்க வைத்துவிட்டது. //

      ஒரு படத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நீங்கள் இந்து என்று புரிந்து கொண்டீர்களா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. விளக்கம் ப்ளீஸ்..

      இந்த படத்தை இஸ்லாமியர்கள் எதிர்த்ததால் நீங்கள் எப்படி இந்து ஆனீர்கள்??? இந்த எதிர்ப்பின் போது இந்து மதம் பற்றி எந்த இஸ்லாமி தலைவர்களும் பேச வில்லையே??? பின் எப்படி???

      நீக்கு
  15. 1. மச்சி.. இந்த கடை சாப்பாடு நல்லா இருக்காதுடா.. பார்த்துக்கோ அவ்ளோ தான் சொல்லுவேன்.

    2. மச்சி.. இந்த கடை சாப்பாடு எனக்கு பிடிக்காதுடா. நீயும் சாப்பிடக் கூடாது. இழுத்து மூடுங்கடா. இந்த கடையை ....

    அவ்வ்வ்வ் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே நாங்க அப்படி சொல்லலையே , கடை உரிமையாளர் அவருக்கு புடிச்ச மாதிரி சமைத்து இருந்தார் எல்லார்க்கும் புடிக்கிற மாதிரி சமைத்து கொடுங்கள் என்றுதானே சொன்னோம்.

      நீக்கு
    2. எல்லோருக்கும் புடிக்கிற மாதிரியா, இல்லை உங்களுக்கு மட்டும் பிடிக்கிற மாதிரியா. தமிழ்நாட்டின் 95 % மக்களின் ரசனையை 5% மக்களில் இருந்து வந்த 1 சதவீதம் கூட பெறாதோர் நிர்ணயிப்பது தான் உங்கள் நியாயமா .. ! விளங்கிடும் ..

      நீக்கு
  16. மச்சி ...இந்த சாப்பாட்டு கடை காரன் என்னை பத்தி இல்லாததை எல்லாம் சொல்லி ஊருக்குள்ள மூட்டி விடுறாண்டா..!! நீ என்னனு கேக்க மாட்டியா ?..

    மச்சி 2 :...............................................

    மச்சி ....சரி நீ வரலனாவது பரவில்லை..நானாவது அவன்ட்ட என்னனு கேக்குறண்டா !!!

    மச்சி 2 : அவன்கிட்ட சண்டை போடாதே ! பின்ன அவரு கடைக்கு கூட்டம் வராது பின்ன அவரு அடுத்த தெருவுக்கு கடைய கொண்டு போயிருவாரு..!!

    மச்சி ...இல்லைடா..இப்படியே விட்ட அவன் நம்ம ரெண்டு பேருக்குள்ள சண்டைய வர வச்சிருவாண்டா ..!! நம்மள பிரிச்சிருவாண்டா..!!

    மச்சி 2 : நீ இவ்வளவு கீழ் தரமானவன்னு எனக்கு தெரிஞ்சி போச்சிடா..!

    மச்சி ...என்னடா..என்ன ஒருத்தன் அவதூர பேசினான்னு சொல்லுறேன் அப்ப நீ அமைதியா இருந்த..
    ..ஏன்னு கேக்கல ! தட்டி கேக்க போன என்னையும் கீழ் தரமானவன்னு சொல்லுற..எனக்கு ஆபத்துக்கு உதவாம தீயவன் அவருக்கு சப்போர்ட் பன்றியே ...இனி நான்தாண்டா உன்கூட பழகுறதுக்கு யோசிக்கணும்..!!

    நீதி :

    சாப்பாட்டு கடைக்காரன் மூட்டி விட்டதுலையும் ஒரு நன்மை உண்டு..!! நம் மேல் அக்கறை உள்ளவங்க யார் , வெறும் வாயிலேயே வடை சுடுரவங்க யாருன்னு தெரிஞ்சி போச்சி..!!

    சினிமாவுல அஜித் ரசிகர்களா இருக்குற அறியாத இஸ்லாமிய இளைங்கர்கள் இனியாவது விழித்து கொள்ள வேண்டும்.. வெறும் குல்லா போட்டுக்கிட்டு போஸ் குடுத்துக்கிட்டு ரம்ஜான் நோம்புக்கஞ்சி குடிச்சிட்டா அவர்கள் இஸ்லாமிய தோழர்கள் ஆகிவிட மாட்டார்கள்..உதாரணம் விஜய காந்த்..!! இன்னும் பதிவுலகிலும் நாம் புரிந்து கொண்டிருப்போம்..!!

    பலரை அடையாளம் காட்ட உதவிய கமலுக்கு எமது நன்றிகள் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கடினமான நேரத்திலையும் இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் ஆனந்த்(பிச்சைக்காரன்) , குருநாதன் , வே.மதிமாறன் ..ஆகியோருக்கு எங்களது மேலான நன்றியை தெரிவித்து கொள்கிறோம்..!!!

      (எனக்கு தெரிந்தவரை சொல்லியிருக்கிறேன் ..மேலும் இருந்தால் தெரியப்படுத்துங்கள் மார்க்க சகோதரர்களே..!!)

      நீக்கு
    2. என்ன பாஸ், வருணை விட்டு விட்டீங்க.. பாவம் அவரு, அவருக்கும் எதாவது கொடுங்க.. ப்ளீஸ் !

      நீக்கு
    3. //பலரை அடையாளம் காட்ட உதவிய கமலுக்கு எமது நன்றிகள் !!!//

      அதே அதே ! பலரை, அவர்களின் தூசண பேச்சை எல்லாம் அடையாளம் காட்ட வைத்த கமலுக்கு மிக்க நன்றிங்கோ ... ! :P

      நீக்கு
    4. சப்பாட்டுக் கடைக்கு போனா, சாப்பிடனும், அவன் இல்லாததை சொன்னா உன் சாப்பாட்டும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் போடா என சொல்லிவிட்டு போகணும், சாப்பாட்டுக் கடையில் சாப்பிடாமல் என்ன வோய் வீண் பேச்சு .. !

      நீக்கு
    5. சரியாய் சொன்னீங்க இ.செ...பாருங்க வருணை மறந்துட்டேன்..!! அதுக்கு தான் மற்றவர்களையும் சொல்ல சொன்னேன்..நன்றி செலுத்த வேண்டிய பட்டியலில் வருணும் உண்டு..அதை நியாபக படுத்தியதற்காக உங்களுக்கும் உண்டு நன்றி !!!

      நீக்கு
  17. மச்சி: இந்த சாப்பாட்டு கடை காரன் என்னை பத்தி இல்லாததை எல்லாம் சொல்லி ஊருக்குள்ள மூட்டி விடுறாண்டா..!! நீ என்னனு கேக்க மாட்டியா ?..

    மச்சி 2: கடைக்காரன் உன்னை பற்றி சரியாதானே சொல்லியிருக்கான்..

    மச்சி: டேய் நான் சொன்னா சொன்னது தான்..அப்படி தான் எங்கட புத்தகத்தில் சொல்லிருக்கு

    பதிலளிநீக்கு
  18. சிராஜ்: நானெல்லாம் சினிமாவில் மனதை நெகிழ வைக்கும் காட்சி வந்தால் சில சொட்டு கண்ணீர் விடும் ரகம்தான்; இதை பல இடங்களில் சொல்லியிருக்கிறேன் ; எனக்கு தெரிந்தே நண்பர் வட்டத்தில் இதை போல பலரும் உண்டு. இது தவறோ சரியோ, என்னை போல ஆயிரக்கணக்கில் இப்படி உள்ளனர்.

    மதம் அல்லது இனம் தாண்டி ஒரு சக மனிதனின் வலி என்னை தொட்டிருக்கிறது. கண்ணீர் விட வைத்திருக்கிறது.உங்களுக்கு அப்படி இல்லை போல.. உங்கள் மதத்தை பற்றி பேசினால் மட்டும் தான் வலிக்குமோ ?.. இல்லா விடில் மற்றவன் வலி பெரிதாய் இருக்காது போல...

    அவன் அழுதால் அழ வேண்டாமா என்ற வரியை இங்கு நீங்கள் சொன்னது என்னை நினைத்து தான் என்றால், "சினிமாவை சினிமாவாக பாருங்கள் " என்று நான் சொன்னது எங்கு? லிங்க் ப்ளீஸ்...விஸ்வரூபம் பற்றி பலரின் கருத்தும் தளத்தில் பதிந்திருந்தேன். அதில் இருந்ததா ? அந்த வரி நான் சொல்லவே இல்லை என்றால் பரபரப்புக்காக என்ன வேண்டுமானால் எழுதுவீர்களா என்று தான் உங்களை பற்றி நினைக்க தோணுது. உங்களை சந்தித்த ஒரே முறையில் உங்கள் மேல் நிறைய மதிப்பு வைத்திருந்தேன் :((

    அப்புறம் உங்களுக்கு ஒரு முக்கிய விஷயம் : நீங்க விஸ்வரூபமும் பார்க்கலை; கடலும் பார்க்கலை. கடல் பற்றிய விமர்சனம் தவறு என்றால் அதை பார்த்துட்டு என்னோட விமர்சனம் தப்பு என சொல்லணும். இப்படி எந்த படமும் பார்க்காமலே எல்லார் மீதும் கல் எறியாதீர்கள். இதுவே பழக்கம் ஆகிடும் வேறு மாதிரி சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க

    விஸ்வரூபம் பட விஷயத்தில், என் மனதில் இருந்ததில் நான் (முகநூல் உள்ளிட்ட இடங்களில்) எழுதியது 1 % கூட இல்லை. மீதம் 99 % எழுதாதன் ஒரே காரணம் இஸ்லாமிய நண்பர்களிடம் தேவையற்ற சண்டை வரும் என்பது தான். சிராஜ் ஆகிய உங்களுக்கு அந்த எண்ணம் இல்லையே என சற்று வருத்தமாய் உள்ளது

    இந்த விவாதத்தை நீங்கள் வளர்க்கலாம்.. நானும் வந்து மல்லுக்கு நிற்கலாம்..

    அது தான் உங்கள் விருப்பம் என்றால் தொடருங்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @மோகன் குமார்...

      இரண்டாவது சொன்னது நான் உங்களைத்தான்.. அதில் குழப்பம் வேண்டாம்...
      ஆனால் என்னை மன்னித்து விடுங்கள்.. காரணம் "நீங்கள் சினிமாவை சினிமாவாக பார்க்கவும்" என்று சொல்லவில்லை.... ஆனால் நான் அப்படி சொன்னேன்.. காரணம், உண்மையை மறைக்க அல்ல.. பேஸ்புக்கில் நீங்கள் போட்ட கமெண்டை அப்படியே போடாமல் மாற்றி சொல்லலாம் என்று விரும்பினேன்.. அது தவறு தான்... இதோ நீங்கள் பேஸ்புக்கில் போட்ட கமெண்ட்..

      // இந்து என்கிற உணர்வு என்றைக்கும் பெரிய அளவில் இருந்ததில்லை. கடந்த 5 நாளில் நடக்கும் நிகழ்வுகள் ஏன் அந்த உணர்வு இத்தனை நாள் இல்லாமல் போனது என யோசிக்க வைத்திருக்கிறது ! இதே போல் பலரும் உணர்ந்திருக்க கூடும்.

      நன்றி இந்த உணர்வு வர காரணமான நம் சகோதர்களுக்கு !

      http://www.facebook.com/mohan.kumar.1447

      //

      சரி இப்ப சொல்லுங்க... நாங்க விஸ்வரூபத்த எதிர்த்தது எங்கள் சுய காரணங்களுக்காக... எங்கள் தலைவர்களில் யாரும் இந்த பிரச்சனையில் இந்து மதம் பற்றி பேசவில்லை... நிலமை இவ்வாறு இருக்க உங்களுக்கு எதர்க்காக இந்து என்று இப்பொழுது தோன்றுகிறது என்று கூறு உள்ளீர்கள்... இதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்....

      நீங்கள் கூறியதையே உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்... "உங்களிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை". எங்கள் போராட்டத்தையும் இந்து மதத்தையும் நீங்கள் சம்பந்தப்படுத்தியன் காரணம் என்ன???? அறிந்து கொள்ள ஆவல்.. அறியத் தருவீர்களா???

      நீக்கு
    2. @மோகன்குமார்...

      உங்கள் கமெண்ட்.. "சினிமாவை சினிமாவா பாருங்க" என்று சொன்னதை விட அபாயகரமானது.. வன்மம் மிகுந்தது.... This is for your information...

      நீக்கு
    3. இந்தியாவில் உள்ள எனது வயதை ஒத்த முஸ்லிம்களுக்கு...
      தங்களை முஸ்லிம்கள் என்று உணரவைத்த தினப்படி நிகழ்ச்சிகள் ஏராளம் ஏராளம்..!

      #ர(த்)த யாத்திரை... போலிஸ் ராணுவ பாதுகாப்புடன் பாபர் மசூதி இடிப்பு,
      இதற்கான ஜஸ்டிஸ் லிபர்ஹான் கமிஷன் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது,

      #பால் தாக்கரேவின் மும்பை கலவ படுகொலைகள்,
      இதற்கான ஜஸ்டிஸ் ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன்அறிக்கை கிடப்பில் போடப்பட்டது,

      #கோவையில் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு அவர்கள் மீது வன்முறை,
      இதற்கான ஜஸ்டிஸ் கோகுல கிருஷ்ணாவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது,

      #பல்வேறு குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்கள் அன்றோ மறுதினமோ எவ்வித துப்பு துலக்கலும் இன்றி அனானி மெயில்கள் ஆதாரமாக வைத்து சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு, பதினைந்து இருபது வருடங்கள் முட்டிக்கு முட்டி தட்டி விட்டு, இறுதியில் நிரபராதி என்று பாதி பேர் விடுதலை செய்யப்பட்டது,

      #அந்த பல்வேறு குண்டு வெடிப்புகளில் எல்லாம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்திய ராணுவ அதிகாரிகளின் துணையுடன் குண்டு வைத்த செய்தி ஆதார பூர்வமாக அம்பலமாகியும் கூட.... சினிமா, நாவல், கதை, ஊடகம், நடுநிலையாளர் பேச்சு இவற்றில் இன்னும் முஸ்லிம்களையே பயங்கரவாதிகளாக சித்தரிப்பது,

      #சில நாட்கள் போலிஸ் ஆதரவோடு நடந்த குஜராத் இனப்படுகொலை,
      இதற்கு விடியோ ஆடியோ ஒப்புதல் வாக்குமூல ஆதாரம் இருந்தும் மூலக்குற்றவாளிகள் இன்னும் தடிக்கப்படாதிருத்தல்,

      #ஜஸ்டிஸ் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கிடப்பில் கிடத்தல்,
      #ஜஸ்டிஸ் ராஜேந்திர சச்சார் கமிஷன் கிடப்பில் கிடத்தல்,

      #பாபர்மசூதி இடம் பற்றிய வழக்கில் அலஹாபாத் உயர்நீதி மன்ற தீர்ப்பு,
      அப்சல் குருவுக்கு மரண தண்டனை தீர்ப்பு தர சொல்லப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க(?) காரணம்,

      #சேது சமுத்திர திட்டம் தடை,
      பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு தடை,
      மண்டல் கமிஷன் பரிந்துரைக்கு வந்த எதிர்ப்பு,

      #சாதிக்கலவரங்கள்... வன்முறை... 144... பந்த்...,
      மாவட்டங்களுக்கு சாதி தலைவர்கள் பெயர்கள்,
      பேருந்துகளுக்கு சாதி தலைவர்கள் பெயர்கள்,
      ஒவ்வொரு தொகுதியிலும் சாதி ரீதியில் வேட்பாளர் நிறுத்துதல்,
      அதற்கு ஏற்றார் போல தொகுதிகளை சாதி பெரும்பான்மை பார்த்து பிரித்து வைத்தல்,

      #அனால், மத ரீதியில் பிரதி நிதித்துவம் பெற முடியாத படிக்கு முஸ்லிம்கள் அதிகமாக உள்ள ஒரு வட்டம் அல்லது ஒரு மாவட்டம் மூன்று முதல் ஆறு தொகுதியில் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே பிய்த்து பிரிக்கப்பட்டு இருத்தல்,

      #அரசு அலுவலகம், அரசு கல்வி நிலையம், அரசு மருத்துவமனை, அரசு பேருந்து, அரசு வங்கி, அரசு அங்காடி... இங்கெல்லாம் அரசின் மதச்சார்பின்மை கடைப்பிடிக்கப்படாமல் குறிப்பிட்ட சமயத்தினரின் மத வழிபாடு 'மட்டும்' தினமும் அங்கே உள்ள ஏதேனும் ஒரு ஊழியரால் நடைபெறுதல்,

      #பள்ளி பாடப்புத்தகம் முதற்கொண்டு முஸ்லிம் தொடர்பான வரலாறுகள் திரிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் தவறாக எழுதப்பட்டுள்ளமை,

      வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வு போன்றவற்றில் 'சரியான முஸ்லிம்' என்பதால் ஒதுக்கப்படுதல்,

      (அதாவது ஒரு வேலைக்கான இன்டர்வியு - ஒரு ஹிந்து கோவிலுக்கு சென்று சாமியை வேண்டிக்கொண்டு விபூதி திருநீறு குங்குமம் பூசிய, பட்டை/நாமம் வரைந்த அதே நெற்றியுடன், உருத்திராட்ச கொட்டை கழுத்துடன், சிகப்பு கயிர் கையுடன், காதில் பூவுடன் கோவிலில் இருந்து அப்படியே நேரே இண்டர்வியூ ஹாலுக்கு சென்றால்... ஒரு பிரச்சினையும் இல்லை.

      ஆனால், ஒரு முஸ்லிம் தாடியுடன் தொப்பியுடன் பள்ளிவாசல் சென்று தொழுது வேண்டிக்கொண்டு அப்படியே நேரே இண்டர்வியூ ஹாலுக்கு சென்றால்... நடப்புலகில் ஏகப்பட்ட பிரச்சினையை சந்திக்க வேண்டி உள்ளது)

      'ஸ்டீவ் வாவ் தலைமையில் உள்ள ஆஸ்திரேலியா பலம் வாய்ந்த டீம். அதுதான் ஜெயிக்கும். பலம் குன்றிய இந்தியா தோற்கும் பாரேன்' என்பார் ஹிந்து நண்பர். அது அன்று சரி என்பதால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்.

      'ஹென்சி க்ரோன்யே தலைமையில் உள்ள சவுத் ஆப்ரிக்கா அணிதான் வெல்லும், பலம் குன்றிய இந்தியா இன்று தோற்கும்' என்பார் கிறுத்துவ நண்பர். அது அன்று சரி என்பதால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்.

      வாசிம் அக்ரம் தலைமையில் உள்ள பலம் மிக்க பாகிஸ்தான் அணிதான் தோற்கும், பலம் குன்றிய இந்தியா இன்று வெல்லும்' என்பார் ஹிந்து நண்பர். தவறான கணிப்பு என்றாலும், 'இல்லை இல்லை.. இந்தியாதான் ஜெயிக்கும்' என்று நான் கத்தியாக வேண்டும். சும்மா மட்டும் இருந்து விட்டால்... நான் தேசத்துரோகி என்று தூற்றப்படுவேன்..!

      இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆற அமர சிந்தியுங்கள் சகோ.மோகன் குமார். நெஞ்சு விம்மும். கண்ணீர் கசியும். எனில், அது போதும் எங்களுக்கு..!

      நீக்கு
    4. சகோ.ஆசிக் மிக அற்புதமான வாதம்..!! புள்ளிவிவரங்கள் அற்புதம்...! கடைசியில் கிரிக்கெட்டை பற்றிய குறிப்பு உண்மையிலும் உண்மை..! யாராலும் மறுக்க முடியாது..!

      அவர்கள் (சிலர்) இந்துவாக இருப்பதை நினைக்கிறார்களோ இல்லையோ நம்மை முஸ்லிம் என்பதை மறக்க தவறுவதில்லை..! துன்பங்கள் எங்கும் தொடர்கின்றன ..!

      நீக்கு
  19. விஸ்வரூபம் குறித்த உங்களின் அனைத்து பதிவுகளும் வாசித்தேன். அவற்றில் பலவற்றுக்கு பதில் கமண்ட் அடித்து விட்டு " சண்டை வேண்டாம்; நேர விரயம்" என அவற்றை டெலீட் செய்து விட்டேன்.

    சும்மா தகவலுக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @மோகன்குமார்...

      சண்டை என்ற பேச்சிற்கே வேலை இல்லை.. ஆக்கப்பூர்வமான விவாதத்தை நான் என்றுமே வரவேற்கிறேன்.. அவர் அவர் கருத்தை நாகரிமாக பேசிக்கொள்ள எப்பொழுதும் என் தளத்தில் தடை இல்லை.. போனிலும் தடை இல்லை... நீங்கள் உங்கள் கமெண்டுகளை எப்பொழுதும் பதியலாம்... தயக்கம் வேண்டாம்..

      கவலை படாதீங்க.. கடுமையா விவாதம் பண்ணா, உங்க மாதிரி பேஸ்புக்ல நான் இந்து மதத்தை வெறுக்கிறேன் என்றெல்லாம் ஸ்டேடஸ் போட மாட்டேன்...

      நீக்கு
  20. @ Peer Mohamed, முஹம்மத் ஆஷிக் citizen of world, நாகூர் மீரான்,

    "மனிதனை மனிதனாய்ப் பார்க்கத் தெரியாத ஒருத்தருக்கு "ethicalist " ன்னு பேராம் . ஏன் எனக்கு இப்பிடி சிப்பு சிப்பா வருது."
    நியாயம் கதைக்க பீர் முகம்மதுவுக்கு என்ன தகுதி இருக்கிறது.
    தன வாழ்வில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய எந்த அடிப்படை ஒழுக்கத்தையும் கடைபிடிக்காத ஒருவனை எப்படி மனிதன் என்று சொல்லமுடியும்.
    தனது மகளுடன் உடலுறவு கொண்டவனை எப்படி மனிதன் என்று சொல்லமுடியும் (இதை சொன்னவர் சாரு மனைவி அவந்திகா) ஆதாரம் இருக்கின்றது .

    "உங்களால் ஒரு மனிதனாக மதிக்க முடியாத ஒருவர் கூட இங்கு இஸ்லாமியர்கள் இடத்தில் இருந்து பார்த்தேன் என்று கூறுகிறாரே..!! உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் உங்களின் பார்வையில் நீங்கள் அவரை விட கீழ் தானே..!!! :-))"

    அவர் சொன்ன காரணம் அம்மா மீதான பக்தி. இதே ஒரு மதத்துக்கு முன் இந்தியாவை காக்க வந்த தேவகுமாரன் மோடிதான் என்று பதிவு போட்டார். அதையும் மீரான் ஏற்று கொள்வீரா?

    உங்களுக்கு எது உவப்பாக இருக்கின்றதோ அதை மட்டும் பாராட்டுவீர்கள். உவப்பிலாவிட்டால் திட்டுவீர்கள். உங்களை மாதிரி SELECTIVE MENTALITY எனக்கு இல்லை.

    மோடி பற்றி சாரு பதிவு போட்ட போது அதை விமர்சித்தவர்களில் நானும் ஒருவன்.

    "எப்போவேனும் ஒருமுறையாவது முஸ்லிம்களை ஆதரிக்கும் எந்த மனுஷனும் மனுஷனாகக்கூட இவர்களுக்கு தெரிய மாட்டான்' "
    முஹம்மத் ஆஷிக் citizen of world உங்களுக்கு மதத்துக்கு அப்பால் எதையும் சிந்திக்க முடியாது. இதே சாரு மோடி பற்றி பதிவு போட்ட போது விமர்சித்தவன்(கடுமையாக) நான் இஸ்லாமிய எதிர்ப்பாளனாக இருந்திருந்தால் அதை நான் ஆதரித்திருக்க வேண்டும்.

    சாரு வின் இந்த ஸ்டாண்ட் க்கு காரணம் அம்மா மீதான பற்று தான். வேறு ஒன்றும் இல்லை.
    மோடியை சாரு ஆதரிக்க காரணம் அம்மா மோடியை ஆதரித்தமை தான்.

    இதே கருத்தை எழுத்தாளர் ஞானி போட்டிருந்தால் நான் இந்த பின்னூட்டம் போட்டிருக்க மாட்டேன்.

    சாருவை ஏன் மனிதனாக பார்க்கவில்லை என்று கருதியமைக்கான காரணத்தை மேழே குறிப்பிட்டிருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கத்துக்கு நன்றி சகோ.எதிகாலிஸ்ட்.

      //தனது மகளுடன் உடலுறவு கொண்டவனை எப்படி மனிதன் என்று சொல்லமுடியும் (இதை சொன்னவர் சாரு மனைவி அவந்திகா) ஆதாரம் இருக்கின்றது .//----------இந்த அளவுக்கெல்லாம் நான் விபரம் அறியேன்..!

      அப்புறம்,
      மனைவியே எதிர்த்தாலும்,
      சம்பந்தப்பட்டவர்கள் உறவுக்கு உடன்பாடாக இருக்கையில்...
      இந்திய சட்டப்படி இது தவறா..?
      நம் நாட்டில் இதற்கு தண்டனை உண்டா..?

      நீங்கள் இது போன்ற தவறு செய்தவரை மனிதராகவே பாருங்கள்.
      மனிதர் அல்லாதததை(?) குற்றம் சாட்டி நம் நாட்டில் எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்க முடியாது.

      எனில், இஸ்லாமிய சட்டப்படியாவது தண்டிக்க முடியும்.

      நீக்கு
    2. இவருடைய முதல் மனைவிக்கு பிறந்த மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று வழக்கு தாக்கல் செய்ய இருந்தார்கள் . பின் சாரு நண்பர்கள் தலையீட்டாலும் அந்த பெண் குழந்தையின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு பின் சட்ட நடவடிக்கை நிறுத்தப்பட்டது. பின் சாரு வேறு மாநிலம் ஒன்றுக்கு சென்று நீண்டகாலம் மறைமுக வாழ்க்கை நடத்தினார்.

      இரண்டாவது சம்பவம் வேறு ஒரு மகள். ஆனால் சம்மதத்துடன் நடந்தது. இங்கு சம்மதம் என்பது முக்கியம் அல்ல. அதில் உள்ள அறம் தான் முக்கியம் (ETHICS)
      வேறு ஒரு பெண் உங்களை விருப்பப்பட்டால் என்பதற்காக திருமணமான நீங்கள் அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்து கொள்வீர்களா???

      பிற பெண்ணுடன் உடலுறவு வைப்பது பிரச்சினையானது எனில் மகள் முறையான ஒருவருடன் மணமான இவர் உடலுறவு வைப்பது எவ்வகையில் நியாயமானது???

      இஸ்லாமிலும் இது தடை செய்யப்பட்டது.

      நீக்கு
  21. ஹிந்தி 'விசுவரூபம்' : தமிழக ஊடகங்களின் 'பொய்ப்பிரச்சாரம்' அம்பலம்!

    http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/787--qq-qq-

    கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்ற பழமொழிக்கேற்ப, விசுவரூபம் ஹிந்தியில் வெளியான சில மணிநேரத்துக்குள்ளாகவே ஏற்பட்ட எதிர்ப்பைத்தொடர்ந்து, மும்பையில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்த கமலஹாசன் பல காட்சி நீக்கங்களுக்கு ஒப்புக்கொண்டார்.

    பதிலளிநீக்கு
  22. சகோ. ஆஷிக்கின் கருத்து ஆழ்ந்து சிந்திக்கக்கூடியதும் ஆய்வுக்குட்படுத்தக்கூடியதுமாகும். நன்றி.

    முஸ்லிம்கள் தங்களின் புற அடையாளங்களோடு( தாடி, தொப்பி,) வெளியில் வருவதைக் கூட இந்துக்களுக்கு எதிராகத்தான் என்று திருப்பி விட்டு வன்மம் வளர்க்கும் அளவுக்கு இங்கு ஒரு விஷமப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமிய மதப்பற்று கூட இங்கு இந்துக்களுக்கு எதிராகத்தான் என்ற வாதம் தான் அப்பட்டமான மதவாதம். ஒருவன் தான் கொண்ட கொள்கையில் உறுதியாகவும் உண்மையாகவும் இருந்தால் கூட உறுத்துகிறது என்றால் பார்வையில் தானே கோளாறு.

    முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்பட்ட அத்தனை அநீதிகளுக்கும் கூட ஒரு நியாயம் கற்பித்து கருத்துருவாக்கம் உருவாக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தங்களது உரிமைகளுக்கு போராடினாலே, அது திட்டமிட்டு கொச்சைப்படுத்தப்படுகிறது. வாக்குரிமை மட்டும் இல்லாவிட்டால், நாதியற்ற நாலந்தர சமூகமாக ஆகி விடுவோம். அதற்கும் அதாவது முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை பறிக்கக் கூட திட்டங்கள் ரகசியமாக நடைப்பெற்று வருகிறதோ என்று எண்ண தோன்றுகிறது. (ப்ரவீன் தொகாடியா, சுப்ரமணிய சாமி பேச்சு)

    பதிலளிநீக்கு
  23. @~முஹம்மத் ஆஷிக் citizen of world~
    இவருடைய முதல் மனைவிக்கு பிறந்த மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று வழக்கு தாக்கல் செய்ய இருந்தார்கள் . பின் சாரு நண்பர்கள் தலையீட்டாலும் அந்த பெண் குழந்தையின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு பின் சட்ட நடவடிக்கை நிறுத்தப்பட்டது. பின் சாரு வேறு மாநிலம் ஒன்றுக்கு சென்று நீண்டகாலம் மறைமுக வாழ்க்கை நடத்தினார்.

    இரண்டாவது சம்பவம் வேறு ஒரு மகள். ஆனால் சம்மதத்துடன் நடந்தது. இங்கு சம்மதம் என்பது முக்கியம் அல்ல. அதில் உள்ள அறம் தான் முக்கியம் (ETHICS)
    வேறு ஒரு பெண் உங்களை விருப்பப்பட்டால் என்பதற்காக திருமணமான நீங்கள் அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்து கொள்வீர்களா???

    பிற பெண்ணுடன் உடலுறவு வைப்பது பிரச்சினையானது எனில் மகள் முறையான ஒருவருடன் மணமான இவர் உடலுறவு வைப்பது எவ்வகையில் நியாயமானது???

    இஸ்லாமிலும் இது தடை செய்யப்பட்டது.

    பதிலளிநீக்கு
  24. @@~முஹம்மத் ஆஷிக் citizen of world~,
    "இந்திய சட்டப்படி இது தவறா..?
    நம் நாட்டில் இதற்கு தண்டனை உண்டா..?" இந்தியாவில் தனியாக சட்டம் இல்லை. சட்டம் இல்லையென்றால் அது நாகரீகம் உள்ள மனிதன் செய்யும் செயலா????

    ஒரு திருகுறளை உதாரணம் காட்டுகின்றேன்.
    "கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்." கல்லாதவருக்கு கண்ணிருந்து அது கண்ணல்ல அது புண் என்று திரு வள்ளுவர் கூறுகின்றார்.

    அதே போல் மனிதனாக பிறந்தவன் மனித இனங்களுக்கு உரித்தான ஒழுக்கங்களை கடைபிடிக்காது தறி கெட்டதனமாக வாழும் ஒருவரை மனித உருவில் வாழும் ....................... என்று சொல்லலாம்.
    (இஸ்லாமிய அன்பர்கள் மோடியை மிருகம் என்று வர்ணிப்பதை சாதாரணமாக இணையத்தில் காணலாம்)

    முக்கியமாக மது ஒழிப்பை கடுமையாக எதிர்க்கும் ஒரே தமிழ் நாட்டு எழுத்தாளர் இவர் மட்டும் தான் (குடிமகன்) இதற்க்கு அம்மா காரணம் அல்ல. இவரது தனிப்பட்ட வாழ்க்கை முறைதான் காரணம்.

    முகநூளில் இவரது புகைப்படங்கள் சில தேடினேன். கிடைத்த சில
    http://www.facebook.com/photo.php?fbid=153686494781208&set=o.410271332356142&type=3

    http://www.facebook.com/photo.php?fbid=10151260118319183&set=o.410271332356142&type=3 (அற்புதமான படம்)

    http://www.facebook.com/photo.php?fbid=290857044362113&set=o.410271332356142&type=3

    http://www.facebook.com/photo.php?fbid=329944273786764&set=o.410271332356142&type=3



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி.
      ஒரு தனி மனிதனின் நாகரிக மனித ஒழுக்க மாண்பியல் வாழ்வுக்கு, திருக்குறள் என்ற ஓர் அறநூல் உங்களுக்கு தேவை படுகிறது என்று பட்டவர்த்தனமாக ஒப்புக்கொண்டதற்காக..!

      உங்க அறநூலில் சொன்னதை விட அதிகமாகவே எங்க அறநூலில் சொல்லப்பட்டு இருக்கிறது.

      எனது கருத்து இதுதான்.

      குடிகாரர் ஒருவர், போதை எதிர்ப்பு பற்றி சொல்லும் அறிவுரையை நான் ஏற்க மாட்டேன். ஏனெனில் அதை சொல்ல அவருக்கு தகுதி இல்லை என்பேன்.

      அதேபோல, விபச்சாரம் செய்யும் ஒருவர் கலவி ஒழுக்கம் பற்றி அறிவுரை கூறினால் ஏற்க இயலாது என்பேன்.

      ஆனால்...

      சாரு, உன்னை போல ஒருவன் அல்லது துப்பாக்கி போல ஏதேனும் படம் எடுத்து இருந்தால், விஸ்வரூபம் பற்றி அவருக்கு கருத்து சொல்ல தகுதி இல்லை எனலாம்.

      ஆக, அந்த வகையில், இந்த விஷயத்தில் சாருவின் மீது நீங்கள் குற்றம் வைக்க வில்லை என்பதால், சாருவின் விஸ்வரூபம் பற்றிய கண்டன பதிவு வரவேற்கத்தக்கதே.

      வெல்டன் திரு.சாரு..!

      நீக்கு
    2. "ஆக, அந்த வகையில், இந்த விஷயத்தில் சாருவின் மீது நீங்கள் குற்றம் வைக்க வில்லை என்பதால், சாருவின் விஸ்வரூபம் பற்றிய கண்டன பதிவு வரவேற்கத்தக்கதே."

      விஸ்வரூப விமர்சனத்தை பற்றி எனக்கு எந்த மாற்று கருத்து இல்லை. "தான் இஸ்லாமியனாக சென்று படம் பார்த்தேன் என்று சொல்லி இஸ்லாமியர்களை அவமானப்படுத்தியுள்ளார் என்பதே எனது கருத்து"

      "ஆக, அந்த வகையில், இந்த விஷயத்தில் சாருவின் மீது நீங்கள் குற்றம் வைக்க வில்லை என்பதால், சாருவின் விஸ்வரூபம் பற்றிய கண்டன பதிவு வரவேற்கத்தக்கதே."

      விஸ்வரூப விமர்சனத்தை பற்றி எனக்கு எந்த மாற்று கருத்து இல்லை. "தான் இஸ்லாமியனாக சென்று படம் பார்த்தேன் என்று சொல்லி இஸ்லாமியர்களை அவமானப்படுத்தியுள்ளார் என்பதே எனது கருத்து"

      இதே சாறுதான் மோடி இந்தியாவை காப்பாற்ற வந்த தேவ தூதன் என்று கருத்து வெளியிட்டவர்.

      நீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. @@~முஹம்மத் ஆஷிக் citizen of world~,
    "எனில், இஸ்லாமிய சட்டப்படியாவது தண்டிக்க முடியும். "

    இந்த கப்பில் மதபிரச்சாரம் வேற??? ஹ்ஹ்ஹா ஹாஹா ஹாஹஹா ஹாஹா

    இதையும் படியுங்க இஸ்லாமின் சட்ட ஓட்டையை அறிய (ஹிஹிஹி )
    http://www.kodangi.com/2013/02/muslim-sheikh-accuses-5-year-old-daughter-of-not-being-a-virgin-beats-her-to-death-gets-off-with-50000-fine.html

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters