அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்...
சில மாதங்களுக்கு முன் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது,
3 - ம் எண் பேருந்தில் இருந்து கீழிறங்கி 4 - ம் எண் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தேன். பேருந்தும் வந்தது, பயணிகள் சிலர் கீழிறங்கிக் கொண்டிருக்கும் போதே உட்கார இருக்கைகள் இருக்கிறதா என்று நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். இருக்கைகள் எதுவும் இருக்கவில்லை எனினும் பேருந்தில் கூட்டமும் இருக்கவில்லை. நான் கீழே நின்று கொண்டிருக்கும் போதே என்னை உற்று நோக்கியபடியே ஒரு பெண் பேருந்தினுள் நின்று கொண்டிருந்தார். நான் பேருந்தில் ஏறியதும் அவர் அருகிலேயே நின்று கொண்டேன்.
நடத்துநர் : எங்கம்மா?????
நான் : சாய்நகர் 1 - ங்க்ணா...
அப்பெண் : நீங்க முபஷ்ஷரீனா தான ???
நான் : (சற்று ஆச்சரியத்துடனும் , தயக்கத்துடனும், மெல்லிய குரலில் ) ஆம்ம்ம்மா நீங்க ????
அப்பெண் : நீங்க Presentation Convent ல தான படிச்சீங்க ???
நான் : ஆமா ........
அப்பெண் : நீங்க 10F கிளாஸ் லீடர் தான?
நான் : ஆமா நீங்க யாருன்னு சொல்லுங்க.
அப்பெண் : ஏஞ்சலின் ஷர்மிளா தெரியுமா????
நான் : ஆங்... தெரியும். .......
அப்பெண் : நான் தான் அது.......
நான் : ( ஹேய் நீயா, என்ன டீ எளச்சுட்ட, என்ன செய்ற, என்ன படிச்ச எங்க இருக்கீங்க , உங்க வீடும் இந்த ஏரியாலயா ???????? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க ???? கல்யாணம் ஆயிருச்சா ???? ) இப்படி வழக்கமான சந்தோசங்கள், விசாரிப்புகள் எதுவுமின்றி... அதற்கு மாறாக அதிர்ச்சியுடனும் , ஆச்சரியத்துடனும்) நீங்களா? நீங்க NUN ஆயிட்டீங்களா !!!!!!!!!!!!!!!!!!!! ???????????????
(ஆம் ..... அவள் ஒரு கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாக இருந்தாள்.)
கன்னியாஸ்திரி : ஆமா.
நான் : ஸ்கூல் படிக்கும்போதுலாம் சொல்லவே இல்லையே இதப்பத்தி. (ஆம் பத்தாம் வகுப்பு பயிலும் போதே கன்னியாஸ்திரி ஆவதற்கு பள்ளியில் பெயர் கொடுக்க வேண்டும். )
கன்னியாஸ்திரி : இல்லை எனக்கு அப்போ அப்படி தோணல.
நான் : ஓஹ் !
சிறிது நேரம் மௌனத்தில் கழிந்தது...
நான் : இப்போ எங்க இருக்கீங்க.
கன்னியாஸ்திரி : St. Leos Convent இருக்குல அங்க தான்.
நான் : ம்ம்ம்ம்............ டார்த்திக் குவின் - ம் sister ஆயிட்டாளா.???
கன்னியாஸ்திரி : இல்லை அவளுக்கு marriage ஆயிருச்சு.
நான் : அவ nun ஆயிருவேன்னு சொன்னா ??
கன்னியாஸ்திரி : ஆமா சொன்னா, ஆனா அப்புறம் ஆகலை.
நான் : உங்க கூடப்பிறந்தவங்கள்லாம் ???
கன்னியாஸ்திரி : இருக்காங்களே 1 அண்ணா, 1 தங்கச்சி
நான் : நான் அதைக்கேக்கல அவங்களும் எல்லாரும் NUN ஆயிட்டாங்களா???
கன்னியாஸ்திரி : (சற்று வருத்தத்துடன் ) இல்லை குடும்பத்துக்கு ஒருத்தர் போதுமே.
நான் : லீவு லாம் எப்போ???
கன்னியாஸ்திரி : ஓஹ் !! இருக்கே வருஷத்துக்கு 2 நாள் வீட்டுக்குப் போயிட்டு வரலாம் அப்புறம் வீட்ல யாருக்காவதும் உடம்பு சரியில்லைனா போய் பாத்துட்டு வர Permission குடுப்பாங்க.
நான் : வீட்டு விஷேஷத்துக்குலாம் ???
கன்னியாஸ்திரி : இல்ல இல்ல அதுக்குலாம் Permission கிடையாது. சொந்த அண்ணன் , தங்கச்சி கல்யாணத்துக்குலாம் போக கூடாது. (சொல்லும் போதே மூஞ்சி சின்னதாயிருச்சு )
நான் : கக்ஷ்ட்டமாயில்லையா???
கன்னியாஸ்திரி : (சற்று யோசித்தவளாக) எந்த வாழ்க்கைல தான் கஷ்ட்டம் இல்லை???
நான் : இல்லை எங்களோட கஷ்ட்டத்துக்கும் , உங்களோட கஷ்ட்டத்துக்கும் வித்தியாசம் இருக்குல? parents, relatives எல்லாரையும் விட்டுட்டு போய் இருக்கீங்கல்ல?
கன்னியாஸ்திரி : (வருத்தம் கலந்த புன்னைகை)
நான் : சரி இங்க வந்தா எங்க வீட்டுக்கு வாங்க next stopping தான் எங்க வீடு.
கன்னியாஸ்திரி : try பண்றேன், இங்க எங்கயும் வெளிய யார் வீட்டுக்கும் போக கூடாது, Convent rules.
நான் : It’s ok, bye. என்னோட stopping வந்துருச்சு.
நடத்துநர் : சாய்நகர் இறங்குதாமா????
நான் : ஆங்...
பேருந்தை விட்டு கீழிறங்கி வீட்டிற்கு செல்லும் வழி முழுவதும் பள்ளி நினைவுகள்.... ஏஞ்சலின் ஷர்மிளா - ஒரே bench - ல் அமர்ந்திருந்த சற்று அமைதியான பெண் எனினும் பள்ளிப்பருவத்திற்கே உரிய உரிமை அழைப்புகள் வாடி, போடி ........ இப்பொழுது ஏதோ ஸ்கூல்ல science sister ஐயும், H.M. Sister ஐயும் பார்த்த effect, அவ்வளவு மரியாதை அவளுடன் நடந்த உரையாடலில்.
எனினும் இடையிடையே தோன்றிய அவளது சோகப் பார்வைகள் இதுனாலயெல்லாம் தான் அல்லாஹ் இஸ்லாத்துல துறவறத்தை அனுமதிக்கல என்பதை சொல்லாமல் சொல்லிச்சு.
அப்பொழுது நினைவுக்கு வந்த சில நபி மொழிகள் :
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!" என்று கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!" என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்)விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன், உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு!
(இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!" என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! 'இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!" என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தாவூத் நபி(அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!" என்றார்கள். தாவூத் நபி(அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். 'வருடத்தில் பாதி நாள்கள்!" என்றார்கள். "அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) வயோதிகம் அடைந்த பின் 'நபி(ஸல்) அவர்களின் சலுகைகளை நான் ஏற்காமல் போய் விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறுவார்!" என அபூ ஸலமா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(புகாரி : 1975. Volume : 2 Book : 30.)
அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். சல்மான் அல்ஃபார்சீ(ரலி) அவர்களையும் அபுத்தர்தா(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் (ஒப்பந்தச்) சகோதரர்களாக ஆக்கினார்கள். எனவே, சல்மான்(ரலி) அவர்கள் அபுதர்தா(ரலி) அவர்களை (அவரின் இல்லத்திற்குச் சென்று) சந்தித்தார்கள். அப்போது (அபுத்தர்தாவின் துணைவியார்) உம்முத் தர்தா(ரலி) அவர்களை அழுக்கடைந்த ஆடையுடன் சல்மான் கண்டார்கள். அப்போது சல்மான்(ரலி) அவர்கள், 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். அதற்கு உம்முத் தர்தா, 'உங்கள் சகோதரர் அபுத்தர்தாவிற்கு உலகமே தேவையில்லை போலும்' என்றார். பிறகு, அபுத்தர்தா(ரலி) அவர்கள் வந்து சல்மான்(ரலி) அவர்களுக்காக உணவு தயார் செய்தார்கள். பிறகு 'சல்மானே! நீங்கள் சாப்பிடுங்கள்! நான் (நஃபில்) நோன்பு நோற்றுள்ளேன்' என்றார்கள். அபுத்தர்தா அதற்கு சல்மான்(ரலி) அவர்கள், 'நீங்கள் சாப்பிடாத வரை நான் சாப்பிடமாட்டேன்' என்றார்கள். எனவே, (சல்மானுடன்) அபுத்தர்தா(ரலி) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) நிற்கப் போனார்கள். அப்போது சல்மான்(ரலி) அவர்கள், 'தூங்குங்கள்' என்றார்கள். எனவே, அபுத்தர்தா(ரலி) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, தொழுவதற்காக எழுந்தார்கள். அப்போதும் சல்மான்(ரலி) அவர்கள், 'தூங்குங்கள்' என்றார்கள். இரவின் கடைசி நேரம் ஆனதும் சல்மான்(ரலி) அவர்கள் 'இப்போது எழுங்கள்' என்றார்கள். பிறகு அவர்கள் இருவரும் தொழுதார்கள். அப்போது சல்மான்(ரலி) அவர்கள் அபுத்தர்தா(ரலி) அவர்களிடம், 'உங்களுடைய இறைவனுக்காகச் செய்ய வேண்டிய கடமைகள் உங்களுக்கு உள்ளன. மேலும், உங்கள் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன. உங்கள் குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன. எனவே, ஒவ்வொருவருக்கும் அவரவருக்குச் சேர வேண்டிய உரிமைகளை வழங்குங்கள்' என்று கூறினார்கள். பின்னர் அபுத்தர்தா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் சென்று (சல்மான் அவர்கள் தமக்குச் சொன்னதை) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'சல்மான் உண்மையே சொன்னார்' என்றார்கள். அபூ ஜுஹைஃபா வஹ்புஸ் ஸுவாஈ(ரலி)
அவர்களுக்கு 'வஹ்புல் கைர்' என்றும் பெயர் சொல்லப்படுகிறது.
(புகாரி : 6139. Volume :6 Book :78)
// நான் : வீட்டு விஷேஷத்துக்குலாம் ??? கன்னியாஸ்திரி : இல்ல இல்ல அதுக்குலாம் Permission கிடையாது. சொந்த அண்ணன் , தங்கச்சி கல்யாணத்துக்குலாம் போக கூடாது. (சொல்லும் போதே மூஞ்சி சின்னதாயிருச்சு ) ////
ஒரு திருமணத்தை பார்ப்பதனால் மட்டும் தான் தடுமாற்றம் ஏற்படுமா??? இவ்வளவு பலகீனமான உள்ளத்துடன் எப்படி ஒருவர் ஆயுள் முழுவதும் துறவறம் மேற்கொள்ள முடியும்????? ஓவ்வொரு நாளும் பத்திரிக்கை செய்திகளில் காணக்கிடைக்கிறதே “ ......... இளம்பெண்ணை கற்பழித்த கொடூரம் போன்றவை???
துறவரம் குறித்து இஸ்லாம் கூறுவது :
. “ இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. “
( அல்குர்ஆன் 24:32.)
வசதியில்லாதவர்களுக்குக் கூட திருமணம் செய்ய உதவி செய்யச் சொல்லி தூண்டும் இஸ்லாம்.
இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன். ( அல்குர்ஆன் 24:32.)
திருமணம் செய்ய இயலாதவர்களை நோன்பு நோற்கச் சொல்லும் மார்க்கம் :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்." என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(புகாரி : 1905. Volume :2 Book :30)
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார் நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது 'மினா'வில் அன்னாரை உஸ்மான்(ரலி) சந்தித்து, 'அபூ அப்தில் ரஹ்மானே! (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது'' என்று கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். அங்கே உஸ்மான்(ரலி) (அப்துல்லாஹ்(ரலி) அவர்களிடம்) 'அபூ அத்திர் ரஹ்மானே! உங்களின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிற ஒரு கன்னிப் பெண்ணை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவதில் தங்களுக்கு விருப்பமுண்டா?' என்று கேட்டார்கள். திருமணம் தமக்குத் தேவையில்லை என்று அப்துல்லாஹ்(ரலி) கருதியபோது என்னை நோக்கி அவர்கள் சுட்டிக்காட்டி 'அல்கமாவே!'' என்று அழைத்தார்கள். நான் அவர்களை அடைந்தேன். அப்போது (உஸ்மான்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ்) அவர்கள், நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் பின்வருமாறு அல்லவா கூறினார்கள்: ''இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணந்துகொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று தெரிவித்தார்கள்.
(புகாரி : 5065. Volume : 5 Book : 67)
துறவறம் மேற்கொள்ள இஸ்லாத்தில் நேரடி மறுப்பு : -
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார் உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) நபி(ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள்.
(புகாரி : 5073. Volume :5 Book :67)
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்.2 அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று
சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை
கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.
(புகாரி : 5063. Volume :5 Book :67)
இது ஒரு மதத்தை உயர்வாகக் காட்டிக்கொள்வதற்காகவோ அல்லது பிற மதத்தினரை புண்படுத்தவோ சொல்லப்படும் கருத்து அல்ல. மனித இயல்யுகளையும், உணர்வுகளையும் கருத்தில் கொண்டேயல்லாமல் எப்படி ஒரு மார்க்கம் முழுமை அடைய முடியும்???
"திருமணம் எனது வழிமுறை எனது வழிமுறையை வெறுப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்பது நபிமொழி.
இஸ்லாம் மட்டுமே மனிதர்களின் உணர்வுகளுக்கேற்ப, அவனின் உணர்வுகளை மதித்து இறைவனால் அருளப்பெற்ற மார்க்கம் என்பதற்கு இதைவிட வேற என்ன அத்தாட்சி வேண்டும்?
இறைவா! எங்கள் அனவரையும் நேர்வழியில் செலுத்துவாயாக!!!
- முபி ஜன்னத்.
குறிப்பு : இது சகோதரி முபஷ்ஷரீனா பிந்த் செய்யத் முஹம்மது ( முபி ஜன்னத் ) அவர்கள் எழுதிய பதிவாகும்....
Tweet |
முதல் பதிவா முபி இது? நல்லா எழுதிருக்கீங்க.
பதிலளிநீக்குகேரளத்தில் இதுபோன்ற ஒரு இல்லத்தின் கன்னியாஸ்திரிகள்/மாணவிகளின் பலாத்காரத்தை மையமாகக் கொண்ட கொலை வழக்கு மிகப் பிரபலம். இன்னும் தீரவில்லை.
ஆமாங்க்கா ஜஸ்க்கல்லாஹ். அந்த சம்பவங்களையெல்லாம் சேர்த்து எழுதலாம்னு நினைச்சேன் ஆனா கட்டுரை ஏற்கனவே 9 பக்கம் வந்துவிட்டது அதுனால சுருக்கிக் கொண்டேன்.
நீக்கு// இன்னும் தீரவில்லை. //
பதிலளிநீக்கும்க்கும்... நம்ம நாட்ல எந்த வழக்குதான் தீர்ந்து இருக்கு???
அலைக்கும் ஸலாம் சகோ.முபி ஜன்னத்...
பதிலளிநீக்குநான் அறிந்து பதிவர் யாரும் தொடாத நல்லதொரு வித்தியாசமான பதிவுக்கரு. ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம். அழகாக பதிவேற்றி இருக்கிறீர்கள். மாஷாஅல்லாஹ். முதல் பதிவு போலவே இல்லை சகோ. முபி ஜன்னத். தொடருங்கள்... தனி வலைப்பூவில்..!
அப்புறம் பதிவில்...
போகிற போக்கில் நுட்பமான பல உணர்வுகளை மிக திறமையாக இனங்காட்டி இருக்கிறீர்கள்.
அதில் என்ன குறிப்பாக கவர்ந்தவை...
//இல்லை குடும்பத்துக்கு ஒருத்தர் போதுமே. //
//எங்களோட கஷ்ட்டத்துக்கும் , உங்களோட கஷ்ட்டத்துக்கும் வித்தியாசம் இருக்குல?//
//ஒரு திருமணத்தை பார்ப்பதனால் மட்டும் தான் தடுமாற்றம் ஏற்படுமா???//
-----இனி, இது போல வெளியே சந்திக்கும் பால்யகால தோழிகளுடனும் கூட பேச கூடாது என்ற தீர்மானமும் அனேகமாக எடுக்கப்படலாம்..!
உங்கள் முயற்சியில் அல்லாஹ் அருள்புரியட்டுமாக. ஆமீன்.
அப்புறம்...
கிழமை - பிறை நாட்கள் என ஏதும் குறிப்பிடாமல்.... //ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்!//.... என குறிப்பிடும் இந்த ஹதீஸை நான் பலமுறை படித்திருந்தும்... ஏனோ, ஒரு புதிய பொருள் இன்றுதான் இவ்வரிக்கு பின்னே மறைந்து இருப்பது புரிந்தது..! அதுவே சரியான புரிதலாக இருக்குமெனவும் நம்புகிறேன்.
வா அலைக்கும் சலாம் வர்ரஹமத்துல்லாஹி வபரகாத்துஹூ சகோ. மாஷாஅல்லாஹ். முதல் பதிவு போலவே இல்லை /// ஜஸக்கல்லாஹ் கஹ்ரைன் சகோ.
நீக்குசகோ. முபி ஜன்னத். தொடருங்கள்... தனி வலைப்பூவில்..! /// இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறேன். துவா செய்யுங்கள்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குwa alaikum salam wa rahmathullahi wa barakathuhu...
நீக்குmasha allah.. nice mubi.. unaku allah melum melum ithu pola nala sindhika vaikum thalaipil katurai elutha arul purivanaga.. aamin ya rabbul alameen..
Thanks nasre. dhuwa sei..............
நீக்குமாஸா அல்லாஹ் Mubi., அருமையாக எழுதியிருக்கீங்க. கண்டிப்பாக படிப்பவர்களின் மனதைத் தொடும் பதிவு இன் ஷா அல்லாஹ். முதிர்ந்த எழுத்தாளர் நடை. Good Job.!.
பதிலளிநீக்குGood Job to Siraaj too for making such writers to write in his blog.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). உங்கள் வலைதளங்களுக்கு தேவையான திருகுர்ஆன் வசனம், நபி மொழிகள், துவா (பிராத்தனை) போன்ற widget கள் வேண்டுமா? உடனே கிளிக் செயுங்கள்...
பதிலளிநீக்குhttp://ungalblog.blogspot.com/p/codes.html
திருமணம் எனது வழிமுறை எனது வழிமுறையை வெறுப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்பது நபிமொழி.
பதிலளிநீக்குஎனது மனைவியா்களும் எனது குமுஸ் பெண்களும் ஜர்மாத்தின் தாயாா் போன்றவா்கள்.எனவே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நவின்றவரும் அரேபிய கண்மணி நபி முஹம்மதுதானே. பெண்டாட்டிகளுக்கு ஏன் துறவறம் சந்நியாசம் கொடுத்தாா் .
தகுதியான மனநிலை உடையவா்கள் துறவறம் முறையாக அனுஷ்டிக்க முடியும்.நிறுவனம் பேர் புகழ் பொது மக்களின் மாியாதை தலைமை பதவி போன்ற வற்றில் மயங்கி சந்நியாசம் பெறுகின்றவா்கள் இரண்டும் கெட்டானாக வாழ்கின்றாா்கள்.
இசுலாத்திற்கான ஷகித் உயிா் பலி -தன்உயிரைப் பொருட்படுத்தாமல் மரணம் வந்தாலும் எற்பேன் என்பதும் ஒருவகை வெறித்தனம். சந்நியாசம் தான்.
கத்தோலிக்க சகோதராிகள் உலக அளவில் நடத்தும் கல்வி மருத்துவ மற்றும் தொண்டுகளில் கோடியில் 1 கூட முஸ்லீம்கள் செய்யவில்லையே!.குறைந்த அளவு உணவு இருக்கும் போது குழந்தை சாப்பிட்ட்டும் என்று கொடுக்கும் தாய் அந்த கணத்தில் துறவு வாழ்வுதான் வாழ்கின்றாள். எல்லோரும் சதா துறவு வாழ்ககை வாழந்து கொண்டுததான் இருக்கின்றோம். குடும்ப உறவில் சிறந்து விளங்கும் குடும்பங்களில் துறவு தாராளமாக உள்ளது.
தாங்கள் வெளியிட்டுள்ள கன்னியாஸ்திாிகள் மிகவும் சந்தோசமாகத்தானே உள்ளாா்கள். உயா்ந்த,முக்கியமான ஒன்றிற்காக மற்றொன்வைிட்டுக் கொடுப்பது துறவு. இந்துவான எனக்கு கன்னியாஸ்திாிகள் மீது மிகுந்த அன்பும் மாியாதையும் உண்டு.
பதிலளிநீக்குThank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
பதிலளிநீக்குTamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News