செவ்வாய், ஜனவரி 22, 2013

விஸ்வரூபம் - முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

 
விஸ்வரூபம் திரைப்படம் இன்று முஸ்லிம் இயக்கங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைக்  கண்ட இயக்க தலைவர்கள் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். தமுமுக மற்றும் ததஜ தளங்களில் இதுக்குறித்த அவசர எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
அவற்றை உங்கள் கவனத்திற்க்கு கொண்டு வரவே இந்தப் பதிவு....


                                                                 

தமுமுக தளத்தில் இருந்து : 

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, திருமறை குர்ஆனை தீவிரவாத வழிகாட்டி என சித்தரிக்கும் "விஸ்வரூபம்" படம் உடனே தடை செய்யப்பட வேண்டுமென தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை. இல்லையேல் கடும் போராட்டம் வெடிக்கும் என அறிவிப்பு. பார்க்க: http://www.tmmk.in/

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தளத்தில் இருந்து : 

நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.

அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்

அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது

இப்படிக்கு,
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)
 
குறிப்பு : இந்த போராட்டங்களை வரவேற்கும் அதே நேரத்தில், படத்திற்க்கு மிகப் பெரிய பப்ளிசிட்டி கிடைக்குமே என்ற கவலையும் கூடவே வருகிறது.


52 கருத்துகள்:

  1. "எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்"


    மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுதபோவது யார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்ட ஒழுங்குப் பிரச்சினை முஸ்லிம்களிடம் இருந்து தான் வரும். உங்களது பிரச்சினை ஒரு சமூகத்தாரைத் தாக்கிப் படம் எடுத்து தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் வெளியிடுவது அல்ல, அதைப் பார்த்து பிரச்சினை செய்யப் போவது முஸ்லிம்கள் என்பது தானே? நல்லா இருக்கு பாஸ், பிள்ளையையும் கிள்ளி விட்டு அழக்கூடாது என்று சொல்வீங்க. அழுதா அது கொழந்த தப்புன்னு சொல்லுவீங்க. மொதல்ல கிள்ளுரத நிறுத்துங்க. யாரும் அழ மாட்டாங்க.

      நீக்கு
    2. //மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுதபோவது யார்?//-----விஸ்வரூபம்..!

      நீக்கு
    3. ////மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுதபோவது யார்?//-----விஸ்வரூபம்..! //

      செம..செம..செம...

      நீக்கு
  2. வணக்கம் சகோ இப்படி நாம மொக்கப்படத்துக்கு விளம்பரம் செய்து தான் துப்பாக்கி படம் 100 கோடிய தாண்டிச்சு.....இதுவும் அப்பிடி ஆயிடுமோ என்னு பயமா இருக்கு...இந்த கூத்தாடிகள கண்டுக்காம பயனுள்ள நாலு விஷயத்த யோசிக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதனை வணங்காதிங்க சகோ. ...........!

      படம் தியேட்டருக்கு வந்தால்தானே
      பணம் வசூல் பற்றி நீங்க பயப்படனும்...?

      இன்ஷாஅல்லாஹ்...

      தேட்டருக்கு வரும் முன்னரே
      சட்டப்பூர்வமான எல்லா வழிகளிலும்
      திட்டம்போட்டு எல்லா மொழிகளிலும்
      இந்த புஸ்வரூபத்தை
      எந்த ரூபமுமுமற்ற
      பஸ்பமாக்குவோம்..!

      நீக்கு
    2. இது 1000 கோடி வசூலிச்சாலும் ஓக்கே சகோ..

      நீங்கள் ஒரு விஷயம் தவறு என்று நினைக்கிறீர்கள்.. அது நியாயம் என்றால் போராடுங்கள்.. போராட்டத்தின் முடிவு நம் கையில் இல்லை.. பட் போராட்டம் நம் கையில் உள்ளது...

      ஹோப் யூ அன்டர்ஸ்டான்ட்..

      நீக்கு
  3. இன்ஷா அல்லாஹ் கள மற்றும் இணைய போராட்டத்திற்கு தயாராகுவோம். இனி இப்படியாக யாரும் செய்யக்கூடாது என்ற வகையில் நம் போராட்டாம் அறவழியில் வீரியமாக இருக்க வேண்டும்.

    //இந்த போராட்டங்களை வரவேற்கும் அதே நேரத்தில், படத்திற்க்கு மிகப் பெரிய பப்ளிசிட்டி கிடைக்குமே என்ற கவலையும் கூடவே வருகிறது.//

    தியேட்டருக்கு வரக்கூடாதுன்னு தானே போராட்டம்? அப்புறம் எப்படி பப்ளிசிட்டி?

    பதிலளிநீக்கு
  4. இவர்கள் சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையா ? அயோக்கிய பேரவையா ?

    2013-01-07 அன்று வெளியான தினமலர் செய்தியை பாருங்கள்..

    *** விஸ்வரூபத்துக்கு முஸ்லீம் அமைப்புகள் திடீர் ஆதரவு :

    விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்தும், காட்சியும் இருப்பதாகவும், அதனால் படத்தை எங்களுக்கு போட்டு காட்டிய பிறகே வெளியிட வேண்டும் என்றும் பல முஸ்லீம் அமைப்புகள் கூறி வருகின்றன. இந்த நிலையில் சில முஸ்லீம் அமைப்புகள் விஸ்வரூபம் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை என்ற அமைப்பு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

    கமல்ஹாசன் இதற்கு முன் இயக்கிய உன்னைப்போல் ஒருவன், ஹேராம் படங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்தும், காட்சியும் இருந்தது. அதனால் இஸ்லாமிய மக்கள் இந்தப் படத்தை சந்தேகிப்பது நியாயமானதுதான். மேலும் சமீபத்தில் வெளிவந்த துப்பாக்கி படம் முஸ்லீம்களை மிகவும் காயப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் விஸ்வரூபத்தை சந்தேகிக்கிறார்கள். ஆனால் கமல், இந்தப் படம் அப்படி இருக்காது என்று உறுதி அளித்திருக்கிறார். மேலும் படத்தை பார்த்த முஸ்லீம் தணிக்கை குழு உறுப்பினர்களும் இதனை உறுதி செய்திருக்கிறார்கள். மலேசியாவில் படத்தை பார்த்த முஸ்லீம் அமைப்பினரும் பாராட்டியிருக்கிறார்கள். அதனால் நமது பயம் தேவையற்றது என்று தோன்றுகிறது. கமலை நம்புவோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ***


    இந்த பப்ளிசிட்டி பைத்தியங்களை என்ன சொல்வது ..!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையா //

      இவங்கள போய் பெரிய ஆளா நினைச்சு பதிஞ்சு இருக்கீங்களே சகோ????
      அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
      எல்லாம் அட்டு பீஸு.. போலிஸ கண்டா 100 அடி பின்வாங்குவாங்க....
      இவங்களைலாம் எந்த அரசும் கண்டுக்காது...
      பவர் தமுமுக, ததஜா தான்... குறிப்பா ததஜ... இந்த இரண்டு அமைப்ப தவிர யாரையும் உளவுத் துறை கண்சிடர் பண்ணாது...

      நீக்கு
    2. //பவர் தமுமுக, ததஜா தான்... குறிப்பா ததஜ... இந்த இரண்டு அமைப்ப தவிர யாரையும் உளவுத் துறை கண்சிடர் பண்ணாது...//

      இதுல ஒரு பெருமை?

      உளவுத்துறை கவனிக்குதுன்னா சட்ட விரோதமா செயல்ப்படுவாங்கன்னு அர்த்தம், அப்போ நீங்க பெருமைப்பட்டவங்க எல்லாம் சட்ட விரோதமா செயல்ப்படுறவங்கன்னு உங்களுக்கே நல்லா தெரியுது :-))

      நீக்கு
    3. //
      உளவுத்துறை கவனிக்குதுன்னா சட்ட விரோதமா செயல்ப்படுவாங்கன்னு அர்த்தம், //

      அடடே.. அப்படியா?? உங்க அளவுக்கு எனக்கு வெவரம் பத்தாது வவ்வால் ஜீ...

      இந்த எதிர்கட்சியை எல்லாம் ஒளவுத்துறை கண்காணிக்குமே?? அப்ப அவங்களும் சட்ட விரோத ஆட்களா???? டவுட்டு...

      நீக்கு
  5. படம் வெளி வரும் முன்பே எதிர்ப்பை உரிய முறையில் காட்டி திருத்தங்களை கொண்டு வரச் செய்ய முயற்சிப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு சென்சார் எவ்வாறு அனுமதி கொடுத்தனர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்சார் போர்டுன்னு ஒன்னு இருக்கா அண்ணே????

      அவங்க பாட்ட மட்டும் தான் பார்த்து தணிக்கை பண்ணுவாங்க..அப்புறம் காமெடில வர்ற சில டபுள் மீனின் டயலாக்ஸ்..

      அவங்க ஒழுங்கா இருந்து இருந்தா, இது போன்ற படங்கள் வருவது எப்பையோ தடை பட்டு இருக்கும்.

      நீக்கு
  6. //படத்திற்க்கு மிகப் பெரிய பப்ளிசிட்டி கிடைக்குமே என்ற கவலையும் கூடவே வருகிறது.////

    ஆமா... இது தெருல குப்ப பொருக்கிட்டிருந்த குப்பன் எடுத்த படம்... பப்ளிசிட்டி இல்லாம இருந்துச்சு! நாம கொடுக்குறோம்... அடபோங்கப்பா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமா... இது தெருல குப்ப பொருக்கிட்டிருந்த குப்பன் எடுத்த படம்... பப்ளிசிட்டி இல்லாம இருந்துச்சு! நாம கொடுக்குறோம்... அடபோங்கப்பா..... //

      நீங்க சொல்றதும் சரி தான்.. பேசாம குறிப்ப நீக்கிடுவமா???

      நீக்கு
  7. இப்படி தொடர்ந்து இஸ்லாமும் இஸ்லாமியர்களும் இழிபடுத்திக்கொண்டேபோவதற்க்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? இஸ்லாமும் இஸ்லாமியர்களும் மட்டும்தான் உலகில் தவறுகளும் குற்றங்களும் செய்வதாக சித்தரிக்கபடுவது தொடர்வது மனதை மிகவும் ரணமாக்கிறது. இதைசெய்பவர்களுக்கு ஏன் புரியமாட்டேன் என்கிறது மனதை காயப்படுத்தவே இப்படி செய்கிறார்களா?

    தனது முதுகில் அழுக்கை சுமந்துகொண்டு அடுத்தவர்களை அழுக்கென இடித்துரைப்பது எவ்விததில் நியாயம்?

    பொழுதுபோக்கிற்காக எடுக்கத்தொடங்கிய சினிமாக்கள் இன்று பிறமனங்கள் வருத்தபட்டாலும் புண்பட்டாலும் நமக்கென்ன நமக்குத்தேவை பணம், பப்ளிசிட்டி, என்று நோக்கத்தையும் தாண்டி,
    சகோதரத்துவத்துடன் நடந்துகொள்பவர்களுகிடையிலும் சண்டையென்னும் நெருப்பைமூட்டி அதில் குளிர்காயநினைப்பவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்டவேண்டும். அதற்க்கு இதனால் பாதிக்கபடும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடவேண்டும்.

    மீடியாக்கள்மூலம், முஸ்லீம்கள் முரட்டு கொள்கையுடைவர்கள், இன்னும்பிற செயலுடையவர்களென திணிக்கப்படும் அவதூறுகளை அறுத்தெரியவேண்டும்.

    முக்கியமாக திரு குர்ஆனையோ! திருநபியையோ இழிவுபடுத்த நினைப்பது மிகத்தவறு.அது கண்டிக்கதக்க ஒன்று என்பதை வலியுறுத்திச்சொல்வதுடன் இதனைபோன்ற மற்றவர்கள் செய்ய எண்ணக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்து களைகளை களைந்தெடுக்கவேண்டும்.

    இஸ்லாம் இது இறைவனால் ஏற்படுத்தப்பட மார்க்கம் இதனை மனிதர்கள் எவராலும் இழிவுபடுத்திவிடமுடியாது அப்படி நினைப்பவர்களுக்கு நிச்சயம் தோல்வியே மிஞ்சும் அவர்களும் இஸ்லாத்தை புரிந்துகொள்ளும் நாளும் வெகுவிரைவில் ஏற்படும்.அல்லாஹ் அக்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இஸ்லாமும் இஸ்லாமியர்களும் மட்டும்தான் உலகில் தவறுகளும் குற்றங்களும் செய்வதாக சித்தரிக்கபடுவது தொடர்வது மனதை மிகவும் ரணமாக்கிறது. //

      இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம் சகோ.. பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடாது..

      வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. சென்சார் போர்டுல செர்டிபிகேட் கொடுத்த பிறகு இங்கே பேசும் அட்டக்கத்திகளை என்ன சொல்வது, இந்த அட்டக்கத்திகள் படத்தை விநியோகம் செய்யப்போவுதா?

    டிடிஎச் இல் படம் போட்டப்பிறகு தியேட்டரில் போட்டால் வருமான இழப்பு என்பதில் வணிக ரீதியாக்காரணம் இருக்கு. ஆனால் அரசு சென்சார் போர்டு அனுமதியளித்தது எல்லாம் சரியில்லைனு சொல்வது போல இருக்கு இந்த எதிர்ப்பு.

    தலைய வெட்டினா கூட அங்க அதான் சட்டம், சரியாத்தான் இருக்குனு சொல்லும் மக்களுக்கு மத்திய அரசின் சென்சார் போர்டு சட்டம் சரியாத்தான் இருக்குனு நம்பிக்கை வரலையே :-))

    உண்மையில இப்படி எதிர்ப்புனு ஒரு கோஷ்டி கிளம்பினாத்தான் படம் ஓரளவாச்சும் ஓடும்னு நினைச்சு தான் ரிலீசுக்கு முன்னாடி இப்போ படம் போட்டு காட்டியிருக்கணும், வலையில் சரியா போய் விழுந்துட்டாங்க.

    படம் தயாராகி, டிரெய்லர் போட்டே 100 நாள் ஆச்சு, டிடிஎச் இல் வரும்னு சொன்னப்போலாம் போட்டுக்காட்டலை,தியேட்டரை விட்டா வேற வழியில்லைனு வந்தாச்சு ,ஓட வைக்கணும், எனவே இப்போ காட்டி, எதிர்ப்பலை உருவானால் இன்னும் விளம்பரம் :-))

    லொகநாயகர் ஓசி விளம்பரம் தேடுறார்,அதை கொடுக்க ஒரு கூட்டம் :-))

    போங்கய்யா நீங்களும் ,உங்க எதிர்ப்பும்,உருப்படதா படம் கூட நல்லா ஓடும் :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வவ்வாலு இவங்கெல்லாம் விஸ்வரூபத்துக்கு விளபரம் செய்யுராங்க விட்டுதள்ளுங்க..!!

      நீக்கு
    2. ஐயா.. நியாயவான்களே....

      ஒருத்தன் விஷப்பாம்பை பிடித்து வந்து எனது வீட்டின் உள்ளே வீசி விட்டான்.
      'விஸ்வரூப படமெடுத்து' சீறி ஆடும் அந்த பாம்பை, நான் உடனே அடிக்க ஆயத்தமாகிறேன்.

      இப்போது நியாயவான்கள் எல்லாம் ஓடோடி வந்து...
      பாம்பை அடிப்பது சரியா... தப்பா...
      விரட்டி விட்டால் போதாதா...
      ஓர் உயிரை கொள்வது பாவம் இல்லையா...
      இதை கொன்றால் உன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...
      ப்ளூ கிராஸ் எங்கே... அதுக்கு ஒரு போன் போடு...
      பிடித்து கொண்டு போய் பாம்பு பண்ணையில் விட்டால் என்ன
      -----என்று ஆயிரம் கருத்தும் அறிவுரையும் சொல்கிறார்கள்.

      அட... நியாயவாங்களே...
      அந்த பாம்பை கொண்டு வந்து எனது வீட்டில் போட்டவனை எதுமே சொல்ல மாட்டேன் என்கிறீர்களே...!

      மனசுன்னு ஒன்னு இருக்கா உங்க கிட்டே..?

      நீக்கு
  9. வவ்வால்...

    உங்கள் பிரசனை படத்துக்கு விளம்பரம் கிடைக்குமா?? கிடைக்காதா என்பது..

    போராடுபவர்கள் பிரச்சனை படத்துக்கு விளம்பரம் கிடைக்குமா கிடைக்காதா?? என்பது அல்ல.. அதையும் தாண்டி..

    பதிலளிநீக்கு
  10. சிராஜ். எதிர்ப்பு தெரிவிப்பது தான் சரி. எதிர்ப்பு மிக அதிகம் ஆனால் கோர்ட் தலையிட்டு படத்தை தடை செய்யும் வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறேன். எதிர்ப்பு தெரிவித்தால் விளம்பரம் ஆகிவிடும். அதனால் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்பது எந்த விதத்திலும் சரியல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ பந்து...

      ஏற்றுக்கொள்கிறேன்.. விளம்பரம் ஆனாலும் பரவாயில்லை எதிர்ப்போம் என்பது தான் சரியான நிலைப்பாடு....

      விளம்பரம் என்று யோசிக்கிறோம்..ஆனால் அதன் மறுபக்கம் முஸ்லிம்களை பற்றி தவறாக படம் எடுத்தால் போராடுவார்கள் என்பது சேர்ந்தே விளம்பரம் ஆகும்...

      நீக்கு
    2. தடை செய்துவிட்டார்களே! அமைதியான எதிர்ப்புக்கு வலிமை இருக்கிறது (சட்டம் ஒழுங்கு பிரச்சனையை வரும் என்று தடை விதித்தால் கூட, இதுவரை காட்டிய எதிர்ப்பு எல்லாம் அமைதியான வழியில் காட்டியதே!)

      நீக்கு
  11. 'வடை பஜ்ஜி'க்கு நல்ல விளம்பரம்.

    பதிலளிநீக்கு
  12. இஸ்லாமிய சகோதரர்கள் இப்படி எடுத்த எல்லா விஷயங்களுக்கும் போராட்டம் வன்முறை என்று தொடர்ந்தாள்,,,,,
    விஸ்வரூபத்தில் இஸ்லாமியர்கள் எப்படி சிதரிக்கபட்டவர்கலாக இருக்க முடியும். ஒன்றுமே புரியல போங்க......
    வன்முறைய விட்டுட்டு காந்தி பிறந்த மண்ணில் அகிம்சையை பின்பற்றுங்கள். உலகம் உங்களை வணங்கும். அதுவரை,,,,,,,,,,,?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வன்முறைய விட்டுட்டு காந்தி பிறந்த மண்ணில் அகிம்சையை பின்பற்றுங்கள்.//

      இந்த பதிவு எந்த வகையில் வன்முறையை ஏற்படுத்தியது??? அகிம்சை வழி என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்க சகோ...

      //இப்படி எடுத்த எல்லா விஷயங்களுக்கும் போராட்டம் வன்முறை என்று தொடர்ந்தாள்,,,,,
      விஸ்வரூபத்தில் இஸ்லாமியர்கள் எப்படி சிதரிக்கபட்டவர்கலாக இருக்க முடியும்.//

      ஒருவரின் உணர்வுகள் புண்படுத்தபடும் போது , தனது எதிர்ப்பு காட்டுவதுவதற்கும், இவர்கள் குண்டு வைப்பவர்கள், குர் ஆன் தீவிரவாத வழிகாட்டி என சித்தரிப்பதற்கும் வித்தியாசம் உணராதவரா நீங்கள்.. ஆச்சர்யம் தான்!


      நீக்கு
    2. ///இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும்///
      ///முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, திருமறை குர்ஆனை தீவிரவாத வழிகாட்டி என சித்தரிக்கும் "விஸ்வரூபம்" படம் உடனே தடை செய்யப்பட வேண்டுமென தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை. இல்லையேல் கடும் போராட்டம் வெடிக்கும் என அறிவிப்பு///.

      இந்த அறிவிப்பு எந்த வகையில் அகிம்சயானது சகோ?

      அகிம்சை பற்றி தெரிந்துகொள்ள காந்தி அடிகளின் 'சத்திய சோதனை' என்ற புத்தகத்தை வாங்கி வாசியுங்கள் (http://www.nammabooks.com/Sathiya-sothanai)
      திருக்குர் ஆனில் இருந்தால் அதையும் சுயமாக வாசித்து அறிந்துகொள்ளுங்கள் சகோ!(நான் "திருக்குர் ஆன்" வாசித்தது இல்லை)

      நீக்கு
    3. //இந்த அறிவிப்பு எந்த வகையில் அகிம்சயானது சகோ?//

      இங்கே குண்டு வைத்து போராட்டம் நடத்த போவதாகவும், மனித வெடிகுண்டுகளாக இஸ்லாமியர்கள் மாறி தியேட்டரை காலி செய்து போராட்டம் நடத்துவோம் என உள்ளதா???

      அகிம்சையை பற்றி தெரிந்துக்கொள்ள நான் எங்கேயும் தேடி போகத்தேவையில்லை...ஆல்ரெடி என் வீட்டிலேயே நிரந்தரமாக அமைதிக்கான வழிகாட்டி நூல் இருக்கு! நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/ இங்கே சென்று அகிம்சைக்கான இலக்கணம் கற்றுக்கொள்ளுங்கள்!

      நன்றி!

      நீக்கு
    4. //இங்கே குண்டு வைத்து போராட்டம் நடத்த போவதாகவும், மனித வெடிகுண்டுகளாக இஸ்லாமியர்கள் மாறி தியேட்டரை காலி செய்து போராட்டம் நடத்துவோம் என உள்ளதா???//

      எதையும் யாரும் நேரடியாக சொல்லாமல் மறைமுக கருத்துக்களுடன் சொல்லும் போது, தீவிர வாதம் தானாக வெடித்துக்கொல்லும் சகோ!

      //அகிம்சையை பற்றி தெரிந்துக்கொள்ள நான் எங்கேயும் தேடி போகத்தேவையில்லை...ஆல்ரெடி என் வீட்டிலேயே நிரந்தரமாக அமைதிக்கான வழிகாட்டி நூல் இருக்கு!//

      உங்கள் வீட்டில் உள்ள நூலை நீங்கள் சரியாக புறிந்து கொண்டதாக எனக்கு தோன்றவில்லை!
      அப்படி நீங்கள் புறிந்து கொண்டிருந்தால் இந்த உலகில் இவ்வளவு பிரட்சினைகள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை!(மதம் சார் பிரட்சினைகள்)

      நீக்கு
    5. @ Rasu Krishanthan

      //இஸ்லாமிய சகோதரர்கள் இப்படி எடுத்த எல்லா விஷயங்களுக்கும் போராட்டம் வன்முறை என்று தொடர்ந்தாள்,,,,,//-----?!?!?!?!?

      ////வன்முறைய விட்டுட்டு காந்தி பிறந்த மண்ணில் அகிம்சையை பின்பற்றுங்கள்.////-----?!?!?!?!?

      இந்திய இறையாண்மைக்கு எதிரான இந்த படத்தை,
      சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இப்படத்தை,
      பயங்கரவாதத்தை போதிக்கும் இந்த படத்தை...
      நீங்கள் எதிர்க்க வில்லை.
      அதனை எடுத்தோரை நீங்கள் கண்டிக்கவும் இல்லை.
      நியாமான நடுநிலையாளர்கள் இதற்கு கை கொடுத்து உதவி இருந்திருப்பார்கள்.

      ஆனால், நீங்களோ...
      அந்த தீவிரவாத சினிமாவை தடை செய்யக்கோரி...
      ஜனநாயக ரீதியில்... நீதி மன்ற நடவடிக்கை எடுத்து,
      கமிஷனரிடம் மனு கொடுத்து, அரசிடம் கோரிக்கை வைத்து...
      ஊர்வலம், கோஷம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி பேரணி என்று முஸ்லிம்கள் போராடினால்...
      அது உங்களுக்கு வன்முறையாக தெரிந்தால்...
      இதுதான் பக்கா பாசிசம்..!

      ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உரிமைக்குரல்வலையை நெரிக்கக்கூடிய உங்கள் கருத்துக்களுக்கு எனது கண்டனம்..!

      நீக்கு
    6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    7. //இந்திய இறையாண்மைக்கு எதிரான இந்த படத்தை,
      சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இப்படத்தை,
      பயங்கரவாதத்தை போதிக்கும் இந்த படத்தை...
      நீங்கள் எதிர்க்க வில்லை.
      அதனை எடுத்தோரை நீங்கள் கண்டிக்கவும் இல்லை. //

      அந்த திரைப்படத்தை நீங்க பார்த்தீர்களா?
      இல்லை நான் தான் பார்தேனா?
      சில வன்முறையாளர்கள் தூண்டிவிட்ட கருத்துக்கே இவ்வளவு போராட்டமா?!
      அது வெறும் திரைப்படம், இலாப நோக்கம் கொண்ட வியாபாரம்!
      இது வாழ்க்கைக்கு வழிகாட்டி அல்ல!
      வெறும் பொழுது போக்கு சாதனம் அவ்வளவுதான் சகோதரரே :-)
      மனிதனுக்குள் பகுத்தறிவு இருப்பது, இவற்றை பிரித்தரியவே அன்றி
      சொல்பேச்சு கேட்டு போரட்டம் நடத்த வன்று!
      மனிதனையும் மனித நேயத்தையும் முதல் மதியுங்கள்,
      மதம்,,,,,,,,!!!!!!!!
      அன்பே சிவம், அல்லாஹ், இயேசு, புத்தர்,,,,,(வேரு கடவுளர் இருந்தாள் அவர்களையும் போட்டு இடைவெளியை நிரப்புக)

      நீக்கு
    8. // அன்பே சிவம். //-------------சூப்பரான கதையம்சம் கொண்ட சிறப்பான படம் இது. கமல் இது மாதிரி நல்ல படமாக எடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்..? இதை முடிஞ்சா கமலுகிட்டே சொல்லுங்க. அருமையா நியாபகப்படுத்தினிங்க. நன்றி சகோதரரே :-) .

      நீக்கு
  13. விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் -

    முஸ்லிம் தலைவர்கள் 30 பேர் போர்க்கொடி


    Posted by: Shankar

    சென்னை: முஸ்லீம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் கொண்ட விஸ்வரூபம் படத்தை திரையிட நிச்சயம் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் 30 பேர் அறிவித்துள்ளனர்.

    இஸ்லாமிய சமூக மற்றும் அரசியல் கூட்டமைப்பு சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஹனீபா தலைமையில், 24-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் 30 பேர், நேற்று மாலை 3 மணி அளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் கூடுதல் கமிஷனர்களை சந்தித்து பேசினார்கள்.

    இந்த பேச்சுவார்த்தையில், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. எம்.எச்.ஜவாஹிருல்லாவும் கலந்து கொண்டார்.

    பேச்சுவார்த்தை முடிந்தவுடன், செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்லாமிய தலைவர்கள் கூறுகையில்,

    "நடிகர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்' படத்தை பார்த்தோம்.

    அந்த படம் இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது.

    ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் தீவிரவாதிகளைப்போல் சித்தரித்து அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு இந்திய அரசின் உளவு அமைப்பான ரா அமைப்பு அதிகாரி பயிற்சி கொடுப்பதுபோல காட்சிகள் உள்ளன.

    மேலும் இஸ்லாமிய மத கோட்பாடுகளையும் தவறாக அந்த படத்தில் காட்டியுள்ளார் கமல்.

    தமிழகத்தில் மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் இந்த படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது.

    இந்த படம் வெளிவந்தால், தேசிய ஒருமைப்பாட்ட நாசமாகிவிடும்.

    ஏற்கெனவே மோசமான நிலையை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது.

    வருகிற 25-ந்தேதி அந்த படத்தை வெளியிடவிடாமல் தமிழக அரசும், மத்திய அரசும் தடை செய்ய வேண்டும்.

    போலீஸ் கமிஷனரிடம் எங்கள் நிலையை எடுத்து கூறிவிட்டோம்.

    அடுத்து உள்துறை செயலாளரை நாளை (இன்று) சந்திக்க உள்ளோம்.

    உயிரைக் கொடுத்தாவது... படத்தை அரசு தடை செய்யாவிட்டால், நாங்கள் உயிரை கொடுத்தாவது, படம் வெளிவரவிடாமல் தடுப்போம்.

    இந்த படத்தை வெளியிட அனுமதி கொடுத்த தணிக்கை குழு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    25-ந் தேதிக்குள் இதற்கு ஒரு நல்ல முடிவு காண அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்," என்றனர்.

    Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/muslim-leaders-urged-ban-viswaroopam-168418.html

    பதிலளிநீக்கு
  14. விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் போராட்டம் :

    முஸ்லிம்களின் கூட்டமைப்பு அறிவிப்பு


    Tuesday, 22 January 2013 20:49 administrator
    E-mail Print PDF


    நடிகர் கமல்ஹாசன், விஸ்வரூபம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.

    இந்தப் படத்தை கடந்த 21.01.2013 அன்று முஸ்லிம் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியைப் பார்க்க கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

    படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

    திருக்குர்ஆன், தீவிரவாதிகளின் கையேடு என்பதைப் போல் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன.

    தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிக்கின்றன என்பது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

    இந்தியத் திரைப்பட வரலாற்றில் இவ்வளவு மோசமாக ஒரு திரைப்படத்தை எடுத்திருக்க முடியாது.

    தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை போன்ற நகரங்களெல்லாம் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடங்கள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் மாமா, மச்சான் உறவு முறைப் பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்கவல்லது ‘விஸ்வரூபம்’ திரைப்படம்.

    ‘வைதீக பிராமணனை விட, முற்போக்கு பிராமணன் மிகவும் ஆபத்தானவன்’ என்று சொன்ன ஐயா பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது.


    இந்த திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும், தடை செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தமுமுக உள்ளிட்ட முஸ்லிம்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

    SOURCE: http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=2973:2013-01-22-15-21-34&catid=58:2009-10-11-12-42-41

    பதிலளிநீக்கு
  15. அது வெறும் திரைப்படம், இலாப நோக்கம் கொண்ட வியாபாரம்!
    இது வாழ்க்கைக்கு வழிகாட்டி அல்ல!
    வெறும் பொழுது போக்கு சாதனம் அவ்வளவுதான் சகோதரரே :-
    உண்மைதான்.ஆனால் நம் தமிழகத்தை பொருத்தவரை சினிமாதான் வாழ்க்கை இதில் சொல்லப்படும் செய்திகள் அனைத்தும் உண்மை என்று நம்பும் அறிவீலிகள் நிறைந்த மாநிலத்தில் எதிர்ப்பு தெரிவித்து களம் காண்பது மிக மிக அவசியம்.

    பதிலளிநீக்கு
  16. விஸ்வரூபம் அல்ல இது விஷரூபம்

    விஸ்வரூபம் திரைப்படம் குறித்து பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் BBC க்கு அளித்த பேட்டி (வீடியோ)

    Wednesday, 23 January 2013 12:59

    இந்தப்படம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை இப்படம் சீர்குலைக்கும் தன்மையுள்ளது என முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன.

    இந்தப் படம் திரையிடப்படுவதற்கு எதிராக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அவை இன்று செவ்வாய்க்கிழமை மனு ஒன்றைத் தந்துள்ளன.

    முன்னதாக இந்தப் படத்தை கமலஹாசன் வீட்டில் பார்த்த முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களில் ஒருவரான, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா படத்தின் பல காட்சிகள் முஸ்லிம்களை புண்படுத்துவதாக இருக்கிறது என்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

    சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஒமர் தமிழகத்தின் கோவையில் ஒரு ஆண்டு இருந்ததகாவும்,

    12 வயதேயான முஸ்லிம் சிறுவன் ஆயுதங்கள் குறித்த அறிவு கொண்டுள்ளதாக காட்டப்பட்டதாகவும்,

    பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பிரார்த்தனை செய்வது போன்றும் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

    கலைஞர்களுக்கு ஒரு கலைப் படைப்பை உருவாக்கும் சுதந்திரம் இருக்கிறது என்றாலும் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று வாதிடும் ஜவாஹிருல்லா சமூகப் பொறுப்பின்றி இப்படம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


    சுட்டியை சொடுக்கி >>>> பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் BBC க்கு விஷ (ஸ்வ) ரூபம் திரைப்படம் அளித்த பேட்டி விடியோ காணுங்கள்.


    source: http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=2975:------bbc----&catid=72:tmmk-videos&Itemid=168

    பதிலளிநீக்கு
  17. விஸ்வரூபம் திரைப்படம் துபாய், அபுதாபி உள்பட ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.இதை VOXCinemas அதிகாரப்போர்வமாக அறிவித்துள்ளது.

    பதிலளிநீக்கு
  18. குவைத் தமிழ் இஸ்லாமியச் (K -Tic) சங்கத்தின் உயர்மட்ட குழு நேற்றிரவு அவசரமாக கூடி விஸ்வரூபம் என்ற இழிவான திரைப்படம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டது.

    குவைத் அரசாங்க அதிகாரிகளை நேரிடையாக சந்தித்து இந்த திரைப்படத்தின் கதை குறித்தும், இதனால் விளையப்போகும் மோசமான விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து, குவைத் நாட்டில் இந்த திரைப்படம் வெளியாகாமல் இருக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் சங்கத்தின் நிர்வாகிகள் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட தமிழக நாளிதழை குவைத்தில் தடை செய்தவர்கள் இந்த அமைப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பதிலளிநீக்கு
  19. விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்

    உள்துறைச் செயலாளரிடம்

    முஸ்லிம் கூட்டமைப்பு வலியுறுத்தல்


    இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கவல்ல விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் அடங்கிய முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்கள் இன்று தமிழக உள்துறைச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

    "கமலஹாசன் எழுதி இயக்கி நடித்து வெளிவர உள்ள விஸ்வரூபம் திரைப்படம் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் ஏற்கனவே கடந்த 7.1.2013 அன்று தங்களை நேரில் சந்தித்து அச்சத்தையும், ஐயங்களையும் பதிவு செய்திருந்தோம்.

    திரைப்படத்தைப் பார்க்காமல் எந்த முன்முடிவுக்கும் வர இயலாது என்ற காரணத்தினால் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் இயக்க அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர்களுக்கு கடந்த 21ஆம் நாள் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டு முழுமையாகப் பார்க்கப்பட்டது.

    வழக்கமான ஒரு திரைப்படமாக ஏற்றுக்கொள்ள இயலாத அளவிற்கு அப்படம் முழுவதும் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் காயப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது எங்களால் உணர முடிந்தது.

    உலகம் முழுவதும் வாழும் 160 கோடி முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்று பின்பற்றி வரும் திருக்குர்ஆனையும், முஸ்லிம்களின் வழிபாட்டு முறைகளும் கூட மிக மோசமாக சித்தரிக்கப்பட்டு, இதயங்களை ரணப்படுத்துகிறது.

    உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக வந்த திருக்குர்ஆன், தீவிரவாதக் குழுக்களின் கையேடு புத்தமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளதை முஸ்லிம் சமுதாயம் எள்முனையளவும் ஏற்றுக்கொள்ளாது.

    சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கிவிட்டு திரையிடப்படும் அளவிற்கு சில வசனங்களில் மட்டும் வலிகளை ஏற்படுத்தாமல், முழுக் கதையின் களங்களும் தளங்களும் காயங்களை உண்டாக்குபவை; உடன்பாடற்றவை; ஆட்சேபத்திற்கு உரியவை.


    விஸ்வரூபம் திரைப்படம் இப்போதுள்ள நிலையிலோ அல்லது சிறிது திருத்தங்களுடனோ வெளியிடப்படும் பட்சத்தில் அது நல்லிணக்கமும், அமைதியும் நிலவும் தமிழகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைத்து விடுமோ என்ற எங்கள் அச்சத்தை மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறோம்.

    விஸ்வரூபம் திரைப்படம் நாளை மறுநாள் திரையிட திட்டமிட்டிருப்பதால் தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இப்படம் திரையரங்குகளிலும் மற்றும் டி.டி.எச்.சிலும் வர இயலாத அளவுக்கு படத்தின் உபகரணங்களைப் பறிமுதல் செய்யும்படி ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் இயக்கத்தின் அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.''

    முஹம்மது ஹனீபா

    ஒருங்கிணைப்பாளர்,

    தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள்.

    பதிலளிநீக்கு
  20. அல்ஹம்துலில்லாஹ்.

    தமிழக வரலாற்றில் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு ஒரே நாளில் கிடைத்த உடனடி பரிசு இதுதான்..!

    ஒரேநாளில்
    ஒரு கோரிக்கையை ஆரம்பித்து
    ஒரே அலைவரிசையாக
    ஒரே குரலில் ஓங்கி ஒலித்து
    ஒற்றுமையாக கைகோர்த்து நின்று
    ஒப்பற்ற வெற்றியை சட்டப்படி அடைந்து காட்ட முடிந்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. :-)
    தக்க சமயத்தில்
    தகுந்த நடவடிக்கையை
    தப்பாது எடுத்த
    தமிழக அரசுக்கு
    தன்மையான நன்றிகள் பல
    தனித்துவ 'விஸ்வரூபங்கள்' எடுக்கின்றன..!

    பதிலளிநீக்கு
  22. அடடா பிரியாணி சமைத்து போடுங்கள் பசியோடு காத்திருக்கேன் என்று பாசமாக பாய்சன் வச்சிட்டார் போல உலக நாயகன்.இங்கு சிலர் அந்த படத்துக்கு விளம்பரம் கூடி போகும் என்ற கவலைதான் தெரியுது.இதனுடைய நோக்கமே அதுவல்ல தனக்கு பொழப்பு நடத்த இஸ்லாமியர்களை கிள்ளுகீரையாக நினைக்கும் இவரை போன்ற விஷமிகள் நம்முடைய ஒற்றுமையை கண்டு அவர்களுடைய எண்ணங்களை இனிமேலும் மாற்றிக் கொள்ளவேண்டும்.(ஆனாலும் நாயகா இந்தளவு எதிர் பார்க்கவில்லை)

    பதிலளிநீக்கு
  23. விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிக தடை விதித்தது


    கொழும்பு: கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிகமாக தடை விதித்திருக்கிறது.

    கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படமானது இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துகிறது என்று பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியதால் தமிழக அரசு தடைவிதித்திருக்கிறது.

    பல்வேறு வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    இந்தப் பட்டியலில் இலங்கையும் சேர்ந்திருக்கிறது.

    விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்டால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை ஆராயும் வகையில் அந்தப் படத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக இலங்கை செய்தித் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

    இதனிடையே விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வெட்டிவிட்டதாக இலங்கை திரைப்பட தணிக்கைத் துறையும் கூறியுள்ளது. இருப்பினும் தற்காலிகத் தடை நீடிக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது

    Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/vishwaroopam-screening-suspended-168525.html

    பதிலளிநீக்கு
  24. புதுச்சேரியிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடத் தடை!

    Posted by: Mathi Published: Thursday, January 24, 2013, 17:26 [IST]

    புதுச்சேரி: தமிழ்நாடு, இலங்கையைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்ட புதுச்சேரியிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கின்றன என்பது பல அமைப்புகளின் குற்றச்சாட்டு.

    இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 2 வார காலத்துக்கு விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.

    இதேபோல் இலங்கையிலும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது,

    இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தீபக் குமார் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், புதுச்சேரியிலும் 2 வார காலத்துக்கு திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

    Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/puducherry-also-bans-vishwaroopam-168529.html

    பதிலளிநீக்கு
  25. SALAM,

    //இந்த போராட்டங்களை வரவேற்கும் அதே நேரத்தில், படத்திற்க்கு மிகப் பெரிய பப்ளிசிட்டி கிடைக்குமே என்ற கவலையும் கூடவே வருகிறது//சரியான வார்த்தை சகோ

    முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
    இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

    கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters