புதன், ஜூன் 01, 2011

சேலம் மற்றும் மன்னார்குடியை ஆந்திராவிற்கு தாரைவார்த்த தமிழக அரசு                                                                                                                                

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் செய்த அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று "கழக அரசு பதவி ஏற்ற உடன் வழிப்பறி திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவிற்கு தப்பி ஓடிவிட்டதாக கேள்வி பட்டேன்" என்பதுதான். இந்த பேட்டி எப்படி இருந்தது என்றால் என்னமோ கலைஞர் தான் கொள்ளையர்களை கொள்ளை அடிக்க சொன்னது போலவும், அவரின் ஆட்சி முடிந்த உடன் இனி நமக்கு சப்போர்ட் யாரும் இல்லை என்று கொள்ளையர்கள் ஓடி விட்டது போலும் இருந்தது.

உண்மையா இது? என்று பார்த்தால் உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. நிறைய கொள்ளை சம்பவங்கள் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்ற உடன் நடந்துள்ளன. சமீபத்திய 3  நிகழ்வுகளை மட்டும் பார்ப்போம்.

சம்பவம் 1 : தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க MLA வாக இருக்கும் பழ.கருப்பையா அவர்களின் மனைவி இடமே சங்கிலி பறிப்பு கொள்ளை நடந்துள்ளது.

சம்பவம் 2 : நேற்றைய முன் தினம் சேலத்தில் 150  பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் 3 : நேற்றைய தினம் மன்னார்குடியில்(சின்னம்மாவின் ஊர் என்பதை இங்கு நினைவில் வைக்க வேண்டும்) 500  சவரன் தங்க நகைகள் அடகுக் கடையில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
                                                            

கலைஞர் ஆட்சியிலாவது 10 பவுன் 20 பவுன் என்று கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தார்கள். இப்பொழுது என்னடா என்றால் 100 பவுன் 500 பவுன் என்று பல்க்காக ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு வேலை நீங்கள் சொன்னது போல் வழிப்பறி செய்யும் குட்டி திருடர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடி அங்கிருந்து ப்ரொபசனல் திருடர்கள் இங்கு வந்து விட்டார்களா? அல்லது சேலத்தையும் மன்னார்குடியையும் ஆந்திராவிற்கு தமிழக அரசு தாரை வார்த்து விட்டதா?
மக்கள் எதிர்பார்ப்பது உறுதியான நடவடிக்கைகள் மட்டுமே, பேட்டிகளை அல்ல. சென்ற ஆட்சியில் நிறைய பேட்டிகள், பேச்சுகள் மற்றும் கவிதைகளை கேட்டு விட்டோம்.


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters