திங்கள், டிசம்பர் 31, 2012

மதுரை ஆதினம் அப்படி சொல்லியிருக்க கூடாது!!

டெல்லியில் அரங்கேறிய மருத்துவ கல்லூரி மாணவியின் பாலியல் பலாத்கார சம்பவம் பல விஷயங்களை நமக்கு உணர்த்தியது... என்னன்னா நம் மக்களும் தெருவில் இறங்கி போராடும் அளவிற்கு மனிதாபிமானம் (ஆள் பார்த்து) இருக்கு.. மெட்ரோ சிட்டியில் நேரமும் இருக்கு... இது போக நேத்து இன்னொரு விஷயமும் எனக்கு உணர வச்சது... நம்ம தமிழ்நாட்டு அமைப்புகள் போராடுவதற்கு எந்த ஒரு துரும்பும் இதுவரை கிடைக்கல... நம்மலும் இருக்கோம்னு காட்டணுமே... என்ன  செய்யலாம்னு காத்துட்டிருந்தவங்களோட வலைல நம்ம மதுர ஆதினம் தானா வந்து மாட்டிக்கிட்டார்...

சின்ன வயசுல அடிக்கடி கேள்விபடும் விஷயம், "அரைகுறை ஆடை அணியும் நடிகையை எதிர்த்து மாதர் சங்கம் போராட்டம், உலக அழகி போட்டி எதிர்த்து போராட்டம், விளம்பரத்தில் பெண் போகப்பொருளாக காட்டுவதை கண்டித்து
போராட்டம்...ன்னு இந்த லெவளில் இருக்கும்... இதெல்லாம் நான் முன்பே சொன்ன மாதிரி சின்ன வயசுல... சின்ன வயசுல...

சில வருட குளிர்கால உறக்கத்துக்கு பின் பெண்கள் அமைப்பு புதிய பரிணாமத்தில் வந்தது செம அதிர்ச்சி.... இவ்வளவு நாள் பெண்கள் கண்ணியம் பத்தி பேசிட்டிருந்தவங்களா இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி என புருவத்தை தலைமுடி தொடும் அளவுக்கு உயர்த்தி, காய்ந்து போய் ஒட்டிக்கொண்டிருந்த உதட்டை திறந்து இருக்கும் பற்களையெல்லாம் தெரிய வைத்து, மவுஸ்ஸில் இருக்கும் உள்ளங்கையை தானாக நெத்தியில் சடார்ன்னு ஒரு அடி அடிக்க வச்சது!

ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப இஸ்லாமிய பெண்களைப் போல் அனைத்து பெண்களும் பர்தா அணிய வேண்டும்- ன்னு சொன்னார். பாவம் இவர் கெட்ட நேரம் இஸ்லாமும், பர்தாவும் வாய்ல வந்துடுச்சு.... கொஞ்சம் உஷாரா இருந்திருந்து இப்படி சொல்லியிருக்கணும்... //ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப அனைத்து பெண்களும் முழு உடலை மறைக்கும் கன்னியமான ஆடை அணிய வேண்டும்// - இப்படி சொல்லியிருந்தா இப்ப இவருக்கு இந்த நெலம ஏற்பட்டிருக்குமா? இல்ல குளிர்கால உறக்கத்தில் இருந்த பெண்கள் அமைப்பும் மார்கழி மாசம் அதுவுமா மடத்தை முற்றுகையிட்டிருக்குமா? பாவம் தூங்குறவங்களையெல்லாம் எழுப்பிட்டார் இந்த ஆதினம் :-)) 

போராட்டத்தின் போது "நாங்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என சொல்லாதே" என்ற வாசகம் பற்றி கேள்விபடும் போதும், பெண்கள் இரவு நேரத்தில் வெளியே சுற்ற வேண்டாம் என ஆந்திராவில் ஒரு அரசியல் பிரமுகர் சொன்ன போது அதை நீ சொல்லாதே என சொன்னபோதும்- அப்படின்னா எக்கேடோ கெட்டு போ என அனைவரையும் சொல்ல வைத்திருக்கும்... நம் நாட்டு மக்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்தது எது என்ற வருத்தமே மிஞ்சியது... கண்ணியமா ஆடை உடுத்து என சொன்னது தப்பா என மனசாட்சி உள்ள அனைவர் மனதிலும் நிச்சயமாய் உதித்திருக்கும்.. பாவம் மாதர் சங்கங்களும், போராட்டத்தில் குதித்த அனைவரின் முகத்திலும் நீங்காத நெய்வேலி கரி  படிந்துவிட்டது...

இந்த பிரச்சனை ஆரம்பமாகிய நேரத்திலிருந்து அனைவரின் பார்வையும் உடைகட்டுப்பாடு, வளர்ப்பு, தண்டனை என்ற 3 விஷயங்களை சுற்றியே வந்தது. அனைவரின் கோரிக்கையும் இதனை வலியுறுத்தியே வந்தது..... துரதிஷ்ட்டவசமாக இவர்கள் வலியுறுத்திய இந்த விஷயங்கள் எல்லாமே முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னொரு காலத்திலிருந்தே இஸ்லாமியர்களின் வாழ்க்கை பகுதியில் பிரிக்க முடியாத அங்கமா இருக்கு... இந்த சம்பவத்தால் "இஸ்லாம் முறைப்படி" என்பது அனைவரின்  ஒட்டுமொத்த குரலாக இருக்கும் போது இஸ்லாமோபோஃபியாக்கள் சும்மா இருப்பாங்களா??...ம்ஹூம்.........

உடைகட்டுப்பாடு தேவை- ஆனால் இஸ்லாம் பெண்களை போல் என சொல்லக்கூடாது! பெண் பிள்ளை கண்காணிப்பு தேவை- ஆனால் இஸ்லாம் கூறும் வழிமுறைபடி என சொல்லக்கூடாது! கடுமையான தண்டனை வேண்டும்- ஆனா இஸ்லாம் சொன்ன மரணதண்டனை என  சொல்ல கூடாது!
-என்பதில் ரொம்பவே உறுதியா இருக்காங்க. பாவம் அவங்க பயமும் நியாயமானதே  :-)

என்னத்தான் மூடி மறைச்சாலும் இஸ்லாம் எனும் விதை மண்ணை துளைத்து தழைக்கவே செய்யும்.. பாறையின் இடுக்கில் சிக்கிக்கொண்டாலும் பிளவு ஏற்படுத்தி  வளரவே செய்யும்... காரணம், இது மலட்டு விதை அல்லவே :-)

அப்பறம் இன்னொரு முக்கிய விஷயம்...

பர்தா போட்டா மட்டும் பாலியல், வன்கொடுமைகள் எல்லாம் நின்றுவிடாது...

கடுமையான தண்டனை கொண்டு வந்தால் மட்டும் பாலியல், வன்கொடுமைகள் எல்லாம் நின்றுவிடாது...

பெண்பிள்ளைகளை கட்டுப்பாடோடும் கண்காணிப்போடும் வளர்த்தால் மட்டும் பாலியல், வன்கொடுமைகள் எல்லாம் நின்றுவிடாது...


கண்ணியமாய் உடை உடுத்தி, வரைமுறைகளோடு பாதுகாப்பான சுதந்திரமும்  அளித்து, நாட்டில் கடுமையான சட்டத்தை கொண்டு வந்தால் நிச்சயம் எந்த வெறிநாயும் சீண்டாது! நாம்  ஏன் கறித்துண்டை காமிப்பானேன்? நாய் ஏன் நம்மை கடிப்பானேன்??    தப்பு செய்றதுக்கான எல்லா கதவையும் அடைச்சு விடுங்க... அப்பறம் குற்றம் கொறையுதா இல்லையான்னு பாருங்க...


டிஸ்கி: இந்த பதிவை தனது தளத்தில் போட அனுமதித்த சிராஜ்ஜிற்கு நன்றி :-)

-ஆமினா முஹம்மத்

நன்றி : oneindia , inneram.com




52 கருத்துகள்:

  1. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக அண்ணா

    ஒவ்வொரு வரியும் நச்.
    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு.
    நோயை குணமாக்கும் மருந்து கண் முன் இருந்தும் அதை விஷம் என்று எண்ணி உண்ணாது இருப்பவர்களின் நிலை போன்றது இவர்களுடையது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மீதும் அவ்வாறே ஆகட்டும் ஹஸன்...

      // ஒவ்வொரு வரியும் நச்.
      மாஷா அல்லாஹ் அருமையான பதிவு. //

      நன்றி ஹஸன்.... நீங்க ஒருத்தர் தான் தெளிவா இருக்கீங்க.. மற்றவங்கள்லாம் கொஞ்சம் கன்ப்யூஸ் ஆகிட்டாங்க... ஹி..ஹி..ஹி..

      நீக்கு
    2. //நோயை குணமாக்கும் மருந்து கண் முன் இருந்தும் அதை விஷம் என்று எண்ணி உண்ணாது இருப்பவர்களின் நிலை போன்றது இவர்களுடையது. :(//

      அதுவும் மருத்துவர் இஸ்லாம் என்பதால் :-))

      நீக்கு
  2. சரியாச் சொல்லி இருக்கீங்க ஆமி.. நல்ல விஷயம் தானே அவர் சொன்னது என்று மக்கள் சிந்திக்கவில்லை... பகவத் கீதையில் இருக்குன்னு சொல்லி இருந்தா சும்மா இருந்து இருப்பார்களோ என்னவோ...நேற்று போரட்டம் நடத்தியவர்கள் பெண்கள் எனபதை நினைத்து மனம் வேதனை அடையவே செய்தது...
    அல்லாஹ் தான் இந்த வக்கிர உலகத்திலிருந்து எல்லாப் பெண் மக்களையும் காக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மும்தாஜ்.. சமீபகாலமாக அனைவரும் வைக்கும் தீர்வுகளும் ஏற்கனவே சொல்லப்பட்டது என்றாலும் இஸ்லாம் என வர்ம் போது மட்டும் , அது அடக்குமுறை என்கிறார்கள்... இப்ப மட்டும் பெண்களையெல்லாம் எல்லாரும் தெய்வமா மதிச்சு உயர்வா நெனைக்கிற மாதிரி தான்!!!

      வருகைக்கு நன்றி மும்தாஜ்

      நீக்கு
  3. சுருக்கமா, இஸ்லாம் நல்லதுன்னு சொல்றீங்க...இருங்க இருங்க..வந்துகிட்டே இருக்காங்க நாத்திகப் பின்னூட்டப் புலிகள் மற்றும் மைனஸ் வோட்டு மைனர்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ஹூம்... அவங்களாம் தனிதனியா பதிவுதான் போடுவாங்க... இங்கே வரமாட்ட்டாங்க :-)))

      நீக்கு
  4. போச்சு...இஸ்லாமிய சட்டம்தான் இதற்கு தீர்வு என்று சொல்லிட்டீங்களா? பின்னூட்டங்கள் காராசாரமக வரும். அடிச்சு விளையாடுங்க....:-)

    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இஸ்லாமிய சட்டம்தான் இதற்கு தீர்வு என்று சொல்லிட்டீங்களா?//

      நான் என்ன சொல்றது சகோ.... அது மட்டும் தான் தீர்வுன்னு நிகழ்கால நிகழ்ச்சிகளே அனைவருக்கும் காட்டி கொடுத்துட்டிருக்கு...

      நன்றி சகோ

      நீக்கு
  5. இத ஆரம்பத்துலேயே நம்ம சொல்லும் போது அடிப்படைவாதின்னு சொன்னாய்ங்க. இப்ப இவர புடிச்சிக்கிட்டாய்ங்க. இஸ்லாமிய சட்டம் உலகம் முழுவதும் வரும் நேரம் வெகு தொாலைவில் இல்லை. இன்ஷா அல்லாஹ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் அவர் நேரம் அப்படி....

      பேஸ்புக்கில் ஒரு சகோ சொன்னது "சோதனை காலம் அவருக்கு. அவர் நித்தியை தொட்டாலும் குற்றம். புத்தியை தொட்டாலும் குற்றம்.!!"

      நீக்கு
  6. என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    தமிழ்நாடு LIST OF HOLIDAYS

    பதிலளிநீக்கு
  7. nice post.. உண்மை இதுதான் என்று தெரிந்தும் மனது ஏனோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறது இந்த மக்களுக்கு...

    பதிலளிநீக்கு
  8. அஸ்ஸலாமு அலைக்கும்,

    :-) :-) :-) classic

    பதிலளிநீக்கு
  9. சபாஷ் சகோ.ஆமினா. நல்ல கேள்விகள்..! நல்ல விளக்கங்கள்..!

    'இது இஸ்லாமிய பதிவு இல்லை'ன்னு டிஸ்கி போட்டு சொல்ல மறந்துட்டீங்க.
    (இதிலே சகோ.சிராஜ் கெட்டிக்காரர்..! )
    இல்லைன்னா ஒரு குறிப்பிட்ட திரட்டியிலே இப்பதிவை தூக்கிருவாங்க...! பாத்துக்கங்க..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கப்போறது சிராஜ் ப்ளாக் தானே ஹி..ஹி...ஹி....

      தூக்க மாட்டாங்க சகோ. தூக்குனா நேத்து வந்த எல்லா பதிவையும் சேர்த்து தான் தூக்குவாங்க :-)

      வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. நல்ல பதிவு..

    வாழ்த்துக்கள்... ஹி..ஹி..ஹி\
    என்ன கொடுமை இது ஹஸன்??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...ஹா..ஹா..

      சிராஜ்க்கு ஒரு காலம் வந்தா ஆமினாக்கு வராமலையே போய்டும்... :-))

      நீக்கு
    2. என்ன கொடுமை இது ஹஸன்??//// சொந்தமா பதிவு எழுதி இருக்கலாம் இல்ல அண்ணா... :)

      நீக்கு
  11. 1. பர்தா போட்டால் பாலிய தொல்லை பண்ணுவதற்கு முன் யோசிப்பான். இவளைத் தொட்டால் இவளோடோ அல்லது இவள் குடும்பத்தாரோடோ முடியாது. இந்தியா, ஏன், உலகமுழுக்க ஒரு இசுலாமியப்பெண் சீரழிக்கப்பட்டால் என விளம்பரமாகி களேபரமாகி தான் பிடிபட்டால் அவ்வள்வுதான் என நினைத்துப் பக்கம் வரமாட்டான். இப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை தில்லிப்பெண்ணுக்கு இல்லை.

    2. இசுலாமியப்பெண்ணைக் காதல் கூட பண்ண இளைஞர்கள் வருவது கிடையாது. சும்மா திரைப்படத்தில் காட்டினால் கூட இசுலாமியர் விடுவதில்லை. நேராக நடந்தால்? எனவே எதற்கு வம்பு என்று போய்விடுவர். பர்தா ஒரு பெண்ணை மறைப்பதற்கு மட்டுமன்றி. அவளை ஒரு இசுலாமியப்பெண் சமூகத்துக்குப்பறைசாற்றவே.
    (ப‌ர்தா என்றால் அத‌ற்குமேலே என்று என‌க்குப்பாட‌ம் எடுக்க‌வேண்டாம். என‌க்குத் தெரியும்.)

    2. ஆதினம் சொன்னது சரியோ தப்போ, ஒரு விசயத்தில் அவர் மாட்டிக்கொண்டார். இந்து அமைப்புக்கள் அவரைச்சும்மாவிடா. எதற்கு? பர்தா ஒரு இசுலாமியக்குறியீடு. அப்படிப்பட்டக் குறியீடு இந்துமதத்திலில்லை. அதே வேளையில், அம்மதம் பெண்ணை தன்னுடலை வெளிக்காட்டும் வகையில் வெளியில் நடமாடு என்றும் சொல்வதில்லை. பொதுவாகக் கண்ணியமான உடை போடு என்று முடித்துவிடும். இந்த ஆதினம், அப்படி, பொதுவாக பெண்கள் தங்கள் உடலை நன்குமறைக்கும் உடைகளைத் தேர்தெடுத்து அணிந்து வெளிவரட்டுமென்றால் சரி. பர்தா என்ற சொல்லை பிரயோஹித்ததால், இந்து அமைப்புக்கள் இவரைத் திட்டும்.

    A point I wd like to highlight s: u r attempting to say only Islam helps women save themselves from their predators r rapists as u understand. It s true. But ''only Islam''? Not correct I'm sorry.

    No religion, as far as I understand, says women can go semi naked or in obscene revealing dresses. Yet women in the west go; and in our country, too, at many places. Women do it violating their own religion whichever it is. Even in countries known as orthodox Islamic countries, women dress revealingly. U don't believe me: then, watch India pakistan cricket match at any stadium of Pakistan. U will find young women in thigh hugging dresses. In Jakarta, I have seen young girls in tight tees and their bosoms were obscenely alluring. I was there during the Ramalan month a few years years ago. Indonesai is a country with the largest muslim population, u know that.

    The truth is that a certain amount of exhibitionism in females esp. when they r young, is natural to their sex. A bitter fact for religions. Religion, in many contexts, attempt to quench such natural inclinations of human being. They call it regulation of human urges.

    ஆங்கில‌ப்புத்தாண்டு வாழ்த்துக‌ள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. //1. பர்தா போட்டால் பாலிய தொல்லை பண்ணுவதற்கு முன் யோசிப்பான். இவளைத் தொட்டால் இவளோடோ அல்லது இவள் குடும்பத்தாரோடோ முடியாது. இந்தியா, ஏன், உலகமுழுக்க ஒரு இசுலாமியப்பெண் சீரழிக்கப்பட்டால் என விளம்பரமாகி களேபரமாகி தான் பிடிபட்டால் அவ்வள்வுதான் என நினைத்துப் பக்கம் வரமாட்டான். இப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை தில்லிப்பெண்ணுக்கு இல்லை.//

      இஸ்லாமிய கட்டுப்பாட்டில் வளரும் பெண்களுக்கு இந்த நிலை ஏற்படுவது குறைவு என்பது தான் சரியா இருக்கும். அதற்கான சந்தர்ப்பத்தை உடையாலும், நடவடிக்கையால்லும் அவர்கள் ஏற்படுத்துவதில்லை. இப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை தில்லி பெண்ணுக்கு இல்லை. இந்த பாய்ன்ட்டில் நீங்க சொன்ன அந்த பயம் , அரபு நாடுகளில் இஸ்லாம் கொடுக்கும் மரணதண்டனையின் காரணமாக கூட இருக்கலாம். இந்த பயத்தை ஆரம்பம் முதலே இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஏற்படுத்தியிருந்தால்??????????????

      //(ப‌ர்தா என்றால் அத‌ற்குமேலே என்று என‌க்குப்பாட‌ம் எடுக்க‌வேண்டாம். என‌க்குத் தெரியும்.)//

      :-) :-) :-)

      //பர்தா ஒரு பெண்ணை மறைப்பதற்கு மட்டுமன்றி. அவளை ஒரு இசுலாமியப்பெண் சமூகத்துக்குப்பறைசாற்றவே.//

      உங்கள் கூற்றுப்படி தான் ஒரு இஸ்லாமியப்பெண் என்பதை சமூகத்துக்கு பறைச்சாற்றும் இந்த அடையாள குறியீடு ஒரு பெண்ணை பாதுகாக்கும் , கயவர்களுக்கு பயம் கொடுக்கும் கேடயம் எனில் , அந்த பயத்தை சரிசமமாக உலகில் உள்ள அனைத்து பெண்கள் மீதும் விழ வேண்டும் என்பதை ஒத்துக்கொள்வீர்களா,.... அதே சமயம் எங்கும் எப்போதும் இஸ்லாமியப்பெண் மட்டும் உடலை மறைக்கும் தளர்வான ஆடைகளை உடுத்துங்க, அது இஸ்லாம் பெண்களுக்கு மட்டுமே உரிய உடை என்று எங்கும் சொன்னது கிடையாது... நாங்கள் எவ்வாறு பாதுகாப்ப இருக்கிறோமே அதே போல், அதையே எம் சகோதரிகளுக்கும் பரிந்துரைக்கிறோம் இல்லையா....

      // But ''only Islam''? Not correct I'm sorry. //

      If Islam is not the solution, which is ur suggestion to protect women?? with conscience, what are all your recommends? I am sure you will not be able to give anything better than Islamic laws... This is what I told in this post... நேர்மையாக நீங்கள் கொண்டு வரும் அனைத்தும் இஸ்லாம் என்னும் திரையுடன் தான் வரும் :-)


      //No religion, as far as I understand, says women can go semi naked or in obscene revealing dresses//
      yes... right... i accepted...

      but Islam is little different from this concept. Islam not only prohibit obscene dresses , and it forcing to wear only Hijab to protect them self from virtuosity thieves! There is much difference between telling and forcing...


      //Even in countries known as orthodox Islamic countries, women dress revealingly. U don't believe me: then, watch India Pakistan cricket match at any stadium of Pakistan. U will find young women in thigh hugging dresses//
      haa..haa..haa... brother ! Individual human actions were not Islam... neither Muslims nor Islamic countries are the scale of Islam! don't observe Islamic views from namesake Muslims :-)


      //The truth is that a certain amount of exhibitionism in females esp. when they r young, is natural to their sex. A bitter fact for religions. Religion, in many contexts, attempt to quench such natural inclinations of human being//
      ஒருவருக்கு கட்டுப்பாடுகள் நன்மையை கொடுக்குமெனில் ஏன் அதை ஏற்றுக்கொள்ள கூடாது... ஏன் முடியாதா என்ன? நீங்கள் மேலே குறிப்பிட்ட இந்த பத்தி துறவறம் போன்ற தோற்றத்தை தருகிறது. துறவுக்கும் இஸ்லாத்துக்கும் வெகுதூரம் சகோ. இது இயற்கையான ஒன்றை மாற்றாது... இறைவன் இட்ட கட்டுப்பாடுகள் ஒரு மனிதனை செம்மைப்படுத்தவே அன்றி உள அளவில் வேதனைப்படுத்துவதற்காக அல்ல... பொது வெளியில் சீரழிப்பதற்காகவும் அல்ல!

      நன்றி

      நீக்கு
    2. //இஸ்லாமிய கட்டுப்பாட்டில் வளரும் பெண்களுக்கு இந்த நிலை ஏற்படுவது குறைவு என்பது தான் சரியா இருக்கும். அதற்கான சந்தர்ப்பத்தை உடையாலும், நடவடிக்கையால்லும் அவர்கள் ஏற்படுத்துவதில்லை. இப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை தில்லி பெண்ணுக்கு இல்லை. இந்த பாய்ன்ட்டில் நீங்க சொன்ன அந்த பயம் , அரபு நாடுகளில் இஸ்லாம் கொடுக்கும் மரணதண்டனையின் காரணமாக கூட இருக்கலாம். இந்த பயத்தை ஆரம்பம் முதலே இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஏற்படுத்தியிருந்தால்??????????????
      //

      Ur pt s v can stop all rapes anywhere in India if death penalty s awarded to the rapists.

      மரணதண்டனை கொடுத்தால் குறையுமென்பதை கொடுத்த பின்னர்தான் குறைந்ததா இல்லையா என்று சொல்ல முடியும். கொடுக்கலாமா என்பதை இப்போது அரசும் மற்றவர்களும் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த பாராளுமன்றத் தொடரில் மசோதா வைக்கப்படும். அப்போது என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

      ஒன்று மட்டும் நிச்சயம். அம்மசோதாவை மதவாதிகள் எழுதமாட்டார்கள். மதவாதிகளின் ஆலோசனைகளும் ஏற்கப்படும். ஆனால் அவர்கள் மதவாதிகள் என்பதனால் அல்ல. இந்தியப்பிரஜைகள் என்ற முறையில்தான்.

      மதவாதிகளின் கைகளில் ஒரு நாடு கொடுக்கப்பட்டால் அதன்பெயர் தியாக்கிரசி. நம்மிடம் நிறைய மதங்கள் உண்டு. உங்களிடம் கொடுத்தால் இன்னொருவர் என்னிடம் ஏன் கொடுக்கவில்லை என்பார். ஆக உங்கள் மதச்சண்டைகளுக்கு நாடு பலியாகும்.

      சவுதி அரேபியாவில் குறைந்து விட்டது. நம் நாட்டிலும் குறைந்துவிடும் என்றால், ஏன் வன்புண்ர்வுக்குற்றங்களுக்கு மட்டும் ? அதைப்போல நிறைய குற்றங்கள் நடைபெறுகின்றன அல்லவா நாள்தோறும் ? அவற்றையெல்லாம் மரணதண்டனை கொடுத்துவிட்டால் குற்றங்களே இல்லாமல் போய்விடுமன்றோ?
      மரண தண்டனை கொடுத்தலை ஏன் மதம் சொல்லிச் செய்ததாக இருக்கவேண்டும்? நாமே நம் நாட்டில் குற்றங்கள் குறைய நாமே வகுத்ததாக ஏன் சொல்லக்கூடாது. மதம் ஏன்?

      நீக்கு
    3. //If Islam is not the solution, which is ur suggestion to protect women?? with conscience, what are all your recommends? I am sure you will not be able to give anything better than Islamic laws... This is what I told in this post... நேர்மையாக நீங்கள் கொண்டு வரும் அனைத்தும் இஸ்லாம் என்னும் திரையுடன் தான் வரும் :-)

      //

      நாம் எழதியதைத் திரித்துவிட்டீர்கள்.

      நான் எழுதிய‌து: //// But ''only Islam''? Not correct I'm sorry. //

      இத‌ன் த‌மிழாக்க‌ம்: ஆனால் இசுலாம் ம‌ட்டும்தானா? ம‌ன்னிக்க‌வும் அப்ப‌டியில்லை.

      இத‌ன்ப‌டி, இசுலாம் ம‌ட்டும‌ன்று, பிற‌ம‌த‌ங்க‌ளும் பெண்க‌ளைக்க‌ட்டுப்ப‌டுத்துகின்ற‌ன‌ அதாவ‌து அவ‌ர்க‌ள் ந‌ல‌த்தைமுன்னிட்டு என்றுதான் பொருள். முறைக‌ள் வேறான‌தாக‌ இருக்க‌லாம். அவ்வ‌ள‌வே.

      இசுலாம் ம‌ட்டும்தான் என்ப‌து உங்க‌ள் க‌ருத்து. அக்க‌ருத்துக்கு உங்க‌ளுக்குரிமையுண்டு. நான் சொல்ல‌வில்லை.

      நீக்கு
    4. நீங்கள் கொண்டு வரும் அனைத்தும் இஸ்லாம் என்னும் திரையுடன் தான் வரும் :-)
      //

      ரொம‌ப‌வும் உறுதியாக‌ச்சொல்கிறீர்க‌ள். இதில் ஓர‌ள‌வுக்கு உட‌ன்ப‌ட‌லாம். ஏனென்றால், ம‌த‌ங்க‌ள் ஆண்-பெண் உற‌வில‌, அல்ல‌து பெண்க‌ளைப் பொறுத்த‌ம‌ட்டில் ஒரே நோக்காக‌த்தான் செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. இதை நான் ஏற்க‌ன‌வே சொல்லி விட்டேன். அத‌ன்ப‌டி, பெண்ணைக் க‌ட்டுப்ப‌டுத்த‌வே அனைத்து ம‌த‌ங்க‌ளும் ஆசைப்ப‌டுகின்ற‌ன‌. செய‌ல்ப‌டுத்த‌வும் செய்கின்ற‌ன‌. இசுலாமின் முறைக‌ள் வீரிய‌மாக‌ இருக்க‌லாம். அல்ல‌து அம்முறைக‌ளை இசுலாம் க‌ண்டிப்பாக‌வும் உன்னிப்பாக‌வும் செயல்ப‌டுத்த‌லாம். ம‌ற்ற‌வை அப்ப‌டிச் செய‌ல்ப‌டுத்தாம‌ல் இருக்க‌லாம் என்ப‌து ம‌ட்டுமே வேறுபாடு. The difference in degree, not in kind!

      ஆக‌, ம‌ர‌ண‌த‌ண்ட‌னை கொடுத்தால் அஃது இசுலாம் சொன்ன‌தனால்தான் என்ப‌து ஒரு குறுகிய‌ பார்வை. இஃது எப்ப‌டியிருக்கிற‌தென்றால் ஒருவ‌ன் திருடி பிடிப‌டுகிறான். அவ‌னைத் த‌ண்டிக்கிறார்க‌ள். அதைப்பார்த்து விட்டு நீங்கள் "இசுலாம் திருட‌னை த‌ண்டிக்க‌ச்சொல்லியிருக்கிற‌து என‌வே இசுலாம் திரையில்லாம‌ல் எதுவுமில்லை" என்கிறீர்கள். :-) குற்ற‌ங்க‌ளும் த‌ண்ட‌னைக‌ளும் ஆதிகால‌த்திலிருந்து வ‌ந்து எப்போதுமிருக்கும். இசுலாம் ம‌னித‌ன் தோன்றி ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ளுக்குப்பின்பே வ‌ந்த‌து. Just a thousand and few hundreds years ago, the Prophet came. The said time factor is infinitesmall in the Time sense of the world.

      நீக்கு
    5. //haa..haa..haa... brother ! Individual human actions were not Islam... neither Muslims nor Islamic countries are the scale of Islam! don't observe Islamic views from namesake Muslims :-)
      //

      Then what else Madam?

      If a religion cant affect an individual deeply enough so as to make him live in a certain way, what for that religion?

      That is, if during Ramalan month, the Malls in Jakarta were full of girls with boyfriends with just a hijira round their heads only, then Islam is for others only? Not for the girls? Do u mean to say that Islam s not for them?

      If in the viewers stand, almost all girls were in modern dress i.e. westernised dress, that too, in Multan Stadium of Pakistan, what for your religion? To whom if not for them?

      In TN, how many of you go in purda? The females who are w/o purda outnumber those with. The muslim girls with flowers on their hair are more and more, compared to you.

      The females as well as males - w/o any symptom of Islam - are not a few. but humungous in TN.

      So, shall I take it that Islam has failed to influence an individual?

      Religion is for both individuals and groups! There r no separate Islam. Only one Islam. Pl mind the fact. Either one be a 100% muslim r he r she shd get out.

      நீக்கு
    6. //
      மரணதண்டனை கொடுத்தால் குறையுமென்பதை கொடுத்த பின்னர்தான் குறைந்ததா இல்லையா என்று சொல்ல முடியும். //

      அதான் அரபு நாடுகளில் காமிச்சுட்டாங்களே... ஒவ்வொரு நாட்டிலும் ஆராய்ச்சி பண்ணிட்டிருந்தா நம்ம கொள்ளு பேத்தி காலத்திலும் இதே நிலை தான் நீடிக்கும்...

      //ஒன்று மட்டும் நிச்சயம். அம்மசோதாவை மதவாதிகள் எழுதமாட்டார்கள். மதவாதிகளின் ஆலோசனைகளும் ஏற்கப்படும். ஆனால் அவர்கள் மதவாதிகள் என்பதனால் அல்ல. இந்தியப்பிரஜைகள் என்ற முறையில்தான்.//

      அனைவரையும் பாதுகாப்பும் பொதுவான சட்டத்தை கொண்டு வா என தான் அனைவரும் குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறோம் :-) இதை காதர் செய்தால் என்ன கருப்புச்சாமி செய்தால் என்ன :-)


      சரியான ஆட்சி முறை தோன்ற வேண்டும். அந்த சரியான ஆட்சி முறையை செய்ய மதவாதியிடம் கொடுக்கத்தேவை இல்லை! நீதியான, பாராபட்சம் காட்டாத, மக்களை மனிதாபிமானத்துடன் நடக்கச் செய்யும் சட்டம் போதும்... அப்படியான சட்டத்தை எந்த மதவாதி கொண்டு வந்தாலும் அதனை சந்தோஷமாக ஏற்கவே செய்வேன். அதை உங்களால் கொடுக்க முடியும் என்றாலும் உங்களை ஆதரிக்கவே செய்வேன்! :-) என் எதிர்பார்ப்பு ஐவேளை தொழுதவன் என்னை ஆள்வது அல்ல... நீதமாக நடக்க கூடியவன் என்னை ஆள்வது தான்... அதை மோடி செய்தாலும் ஆதரிக்கத்தான் வேண்டும்... :-)

      //மரண தண்டனை கொடுத்தலை ஏன் மதம் சொல்லிச் செய்ததாக இருக்கவேண்டும்? //
      அந்த ஒரு ஆய்வின் முடிவும் உண்மை என தெரிந்த பின் 'இத தானடா அப்பவே அவன் சொன்னான்... அவன போயி முட்டாள்ன்னு ஒலகம் சொன்னுச்சே"ன்னு நீங்க சொல்வதில்லையா? :-) 1400 வருஷத்துக்கு முன்பிலிருந்தே இன்ன குற்றத்துக்கு இன்ன தண்டனை கொடுத்தா குறையும், பயம் வரும்ன்னு சொல்லி சொல்லி , அதெல்லாம் காட்டுமிராண்டி தனம் என ஒதுக்கிவிட்டு, இப்போது அது தான் சரியான வழி என அனைவரின் ஒருமித்த குரலாக இருக்கும் போது "இத தானடா அப்பவே இஸ்லாம் சொல்லுச்சு" ன்னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு :-) மதத்தின் பேரைச் சொல்லி சட்டம் நிறைவேற்று என்பது நம் நோக்கம் இல்லை... கடுமையான தண்டனை அது போதும்! :-)

      நீக்கு
    7. //ஒருவருக்கு கட்டுப்பாடுகள் நன்மையை கொடுக்குமெனில் ஏன் அதை ஏற்றுக்கொள்ள கூடாது... ஏன் முடியாதா என்ன? நீங்கள் மேலே குறிப்பிட்ட இந்த பத்தி துறவறம் போன்ற தோற்றத்தை தருகிறது. துறவுக்கும் இஸ்லாத்துக்கும் வெகுதூரம் சகோ. இது இயற்கையான ஒன்றை மாற்றாது... இறைவன் இட்ட கட்டுப்பாடுகள் ஒரு மனிதனை செம்மைப்படுத்தவே அன்றி உள அளவில் வேதனைப்படுத்துவதற்காக அல்ல... பொது வெளியில் சீரழிப்பதற்காகவும் அல்ல!

      //

      சகோ என்ற சொல்லைத் தவிர்ப்பீர்களாயின் நன்று. இது என்ன மொழியென்று தெரியவில்லை.

      அரபியா, தமிழா, மலையாளமா, இல்லை ஆங்கிலமா?

      போகட்டும். நான் எழுதியவை சைக்கலாஜி. சைக்கலாஜிஸ்ட் மதங்களையும் அவை மனிதனை எப்படிப்பார்க்கின்றன, எப்படி அவனின் இயற்கைக்குணங்களை தம்வழிக்கொணர்கின்றன என்பதையும் படிப்பவர்கள். அவர்கள் மதங்களுக்கு அப்பால்பட்டவர்கள்.

      இதுவும் போகட்டும். இறைவனே கொடுத்தவைதான் அடிப்படைக்குணங்கள். அவற்றைச்செம்மைப்படுத்த மதங்கள் வந்தன. அதாவது இறைவன் செயலைச்செம்மைப்படுத்த. இறைவன் நம்மை ஆதிமனிதனாகவும் ஆதிமனுசியாகவும்தான் படைத்தான். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை உறவுகளை இறைவன் படைக்கவில்லை. அனைத்தையும் தனக்குத்தானே செய்துகொண்டவன் மனிதன். இச்செயலுக்கு மதங்கள் உதவின. மதங்கள் மனிதால் படைக்கப்பட்டவை. இறைவனால் எனப்து மதவாதிகளின் கருத்துக்கள். அதில் நான் உடன்படவில்லை. மன்னிக்கவும்.

      கட்டுப்பாடுகளைப்போட்டவனிம் மனிதன். ஆக, கட்டுப்பாடுகள் நன்மைபயக்குமெனில் ஏன் ஏற்கக்கூடாதென்றால், கட்டுப்பாடுகள் போட்ட மனிதனுக்குத்தான் பாராட்டு. ஆனால் அதை ஏற்பதும் ஏற்கக்கூடாததும் அந்தந்த சமூகங்களில் தனியுரிமை.

      வெள்ளைக்காரப்பெண்கள் தங்களுக்கு பிறர் போட்டக் கட்டுப்பாடுகள் தேவையில்லை. எங்களை நாங்களே கட்டுப்படுத்திக்கொள்வோமென்றால் அதை ஏன் நீங்கள் தப்பென்கிறீர்கள்?

      Even among religions, the restictions differ in style and manner between them. Islam is for you. Theirs s for them. 'Your religion is yours; mine is mine." Somewhere someone has said it. Perhaps it is in your Holy Koran. Pl trace it, Madam.

      The ultimate yardstick to judge a man or a woman is how he r she lives. Their religious label does not matter at all.

      நீக்கு
    8. சகோ குலசேகரன்...

      // மதங்கள் மனிதால் படைக்கப்பட்டவை. இறைவனால் எனப்து மதவாதிகளின் கருத்துக்கள். அதில் நான் உடன்படவில்லை. மன்னிக்கவும். //

      இதான் உங்கள் பிரச்சனை.. மதம் என்பது மனிதனால் ஏற்படுத்தப்பட்டது என்று நீங்கள் தவறாக நம்புகிறீர்கள். மார்க்கம்(வழிமுறை) என்பது இறைவனால் அளிக்கப்பட்டது என்று நாங்கள் நம்புகிறோம். அதாவது மதவாதிகள்.

      மனிதன் உருவாக்கிய எதுவும் காலப்போக்கில் மாறும்.அதனால் தான் இந்திய சட்டங்கள் வருடா வருடம் திருத்தப்படுகிறது. ஆனால் இறைவனின் சட்டம் மாறாது. அது எக்காலத்திற்க்கும் பொருந்தும். உதாரணம் இஸ்லாமிய சட்டங்கள். 1400 வருடங்களுக்கு முன்னும் பொருந்தியது. இன்றும் பொருந்தும். 3500 ல்லும் ஒரு மாற்றமும் இன்றி பொருந்தும்.

      நீக்கு
  12. பர்தா போட்ட பெண்கள் வாழும் ஊரில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஆண்களின் கற்புக்கு உத்தரவாதம் ஏதும் கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... எப்படி சகோ... எப்படி இப்படியெல்லாம்...

      உங்களால மட்டும் தான் இப்ப்ப்ப்ப்ப்ப்படியெல்லாம் சிந்திக்க முடியும்... உங்க ஆராய்ச்சி மெய்சிலிர்க்க வைக்குது!!!

      நீக்கு
    2. பாட்டி.. பாட்டி ...ஊருக்குள்ள பொறுக்கி பசங்க வராங்க !!! வயசு பொண்ணுங்க எல்லாம் வீட்டுக்குள்ள போங்கடி..! பாட்டி.. பாட்டி ...பின்னால ராவணன் வர்றாரு !!! இருங்கடி நானும் வீட்டுக்குள்ள வந்துர்றேன் !

      :-)) :-)) :-))

      நீக்கு
    3. ராவணன் இருக்கும் ஊரில் சீதைகளுக்கு பாதுகாப்பில்லை. (சீதை வயதான மூதாட்டி இருந்தாலும்....)

      நீக்கு
    4. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வர்ரா இவர் :-)))

      நீக்கு
  13. ராவணன் இப்படி சொல்லுவதற்க்காக நீண்டநாள் தவம் கிடந்து இப்போது அதை நிறைவேற்றிவிட்டார் .பிறவி பயன் அடைந்துவிட்டார்.
    ராவணா ,உங்கள் தங்கை சூர்பனகை இங்கு இல்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தி பேதளிச்சா இப்படிதான் பேச வைக்கும் சகோ... கண்டுகாதீங்க :-)

      நீக்கு
  14. பாரபட்சம் ஆகிப்போன நீதி!

    பத்திரிக்கையாளர் அருந்ததிராய்!


    இந்தியாவின் பொம்மை ஜனாதிபதி டெல்லி மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது குறித்து ஒரு கருத்து தெரிவித்திருந்தார் .

    அதாவது, அவள் இந்தியாவின் மிக தைரியமான மகள்,

    அவள்தான் இந்தியாவின் ஹீரோ, தனது உயிருக்காகவும் கவுரவத்துக்காகவும் கடைசி நிமிடம் வரை தைரியத்துடன் போராடினார்.

    இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக முன்மாதிரியாக திகழ்ந்த வீரமகளை இந்த நாடு இழந்து துயரப்படுகின்றது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் இரங்கல் தெரிவித்தார்.

    இதற்க்கு முன்னாள் இந்தியாவில் கற்பழிப்புகளே நடக்காத மாதிரியும் இதுதான் முதல் முறை போன்றும் பொம்மை ஜனாதிபதி கட்டபொம்மன் சிவாஜி போல் வசனம் பேசுகிறார்.

    இது, டெல்லியில் நடந்த மக்கள் எழுச்சியை மூடி மறைக்க பேசும் வீர வசனம்.

    மற்றபடி கற்பழிப்புகளுக்கு எதிராககடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இதுவரை அதிகாரவர்க்கம் எண்ணியதில்லை.
    **********************************

    அதே நேரம் பிரபல சமூக ஆர்வலரும் பத்திரிக்கையாளருமான அருந்ததிராய் ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.

    அதாவது, கற்பழிப்பு அது எங்கு நடந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது, தண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    எல்லா விஷயங்கள் போன்றும் இந்த விஷயத்திலும் நம் நாட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது.

    குஜராத்தில் பலநூறு முஸ்லிம் பெண்களை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கற்பழித்து கொன்றனர்.

    கர்ப்பிணி பெண்னை கற்பழித்து அவள் வயிற்ரை கிழித்து சிசுவை வெளியே எடுத்து சூலாயுதத்தில் குத்தி நெருப்பில் இட்டு கொன்றனர்.

    முஸ்லிம் பெண்களை கூட்டம் கூட்டமாக கற்பழித்து வெட்டியும், தீயிட்டும் கொளுத்தி கொன்றனர்.

    இது விசயத்தில் ஊடகங்கள் அமைதி காத்தது ஏன்?

    காஷ்மீரில் அப்பாவி பெண்கள் இந்திய ராணுவத்தினரால் சீரழிக்கப்படும் போது அவர்களை தூக்கில் போட வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்படாதது ஏன்?

    சத்திஸ்கரில் ஆதிவாசி பழங்குடி பெண் போலிசாரால் கற்பழிக்கப்பட்டு அவளுடைய பெண் உறுப்பு கற்களால் சேதப்படுத்தப்பட்ட போது ஏன் இவர்கள் வாயை திறக்கவில்லை?

    கற்பழிக்கப்பட்ட பெண் எந்த ஜாதி மதம் அல்லது இனத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் பாகுப்படில்லாமல் எதிர்க்கவேண்டும்.


    THANKS TO: http://www.sinthikkavum.net/

    பதிலளிநீக்கு
  15. கற்பழிப்பை தடுக்க முடியாது!

    31 டிசம்பர், 2012

    அன்மையில் தலை நகர் டெல்லியில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு தற்போது இறந்த செய்தி இன்று நட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது.

    மாநில அரசிற்கும், மத்திய அரசிற்கும் பெரும் தலைவலி ஏற்படும் அளவிற்கு போராட்டங்கள் தினம் தினம் தொடர்கின்றன.

    இக்குற்ற செயலுக்காக சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தலைவர்களால் பேசப்படுகிறது.

    இது போன்ற குற்றம் இனி நடைபெறக்கூடாது என்று நீதிமான்களும் பேசிவருகின்றனர்.

    ஆனால் இந்திய அரசால் இக்குற்றத்தை முற்றிலும் அல்ல ஓரளவிற்கு கூட தடுத்துவிடமுடியாது. ஆம் இந்தியாவில் நிலை அந்தளவிற்கு மோசமாக உள்ளது.

    இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் ரீதியாக பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த தாக்குதலில் பெரும்பாலும் பெண்கள் கற்பழிக்கப்படுகிறாள்.

    இந்த கற்பழிப்பில் ஈடுபடுபவர்கள்: நாட்டை பாதுகாக்கும் இராணுவம், நாட்டு மக்களை பாதுகாக்கும் காவல்துறை, நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிபர்கள், பாதிப்பிற்குள்ளாகும் பெண்ணின் தந்தை மேலும் அதிகாரமற்றவர்களில் சிலர் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.

    சில நடுநிலையாளர்கள் அரபு நாடுகளைப் போல் இக்குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கூறுவதுண்டு.

    அதிகாரத்தில் இருப்பவர்களே இப்படிப்பட்ட கொடுமைகளை செய்யும் பொழுது எப்படி குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பார்கள்?

    ஒரு கால் கற்பழிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு என்று சிறப்பு படை அமைத்தால் ஆளும் கட்சியினர், எதிர்கட்சியினர் உட்பட பல கிரிமினல்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டியது வரும்.

    நம் நாட்டில் நடக்காத ஒரு சமூக கொடுமை நடந்துவிட்டது போல் டெல்லியில் பரபரப்பாக்கப்பட்டு வருகிறது.

    காரணம் கற்பழிக்கப்பட்டது மருத்துவம் படிக்கும் ஒரு உயர் ஜாதிவகுப்பை சார்ந்த இளம் பெண்.

    அனுதினமும் கஷ்மீரில் பெண்கள், இளம் பெண்கள், சிறுமிகள் என்று கையில் அகப்படும் பெண்களின் கற்பை சூரையாடுவது என்பது கஷ்மீர் ஆப்பிள் சாப்பிடுவது போல் என்று வர்ணிக்கும் இந்திய இராணுவத்தை கண்டித்து இது போல் போராட்டம் நடத்த அனுமதித்தது உண்டா?

    குஜராத்தில் காப்பாற்றுங்கள் என்று காவல் துறையினரை பார்த்து கெஞ்சிய நமது சகோதரிகளின் கையை பிடித்து சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளிடம் ஒப்படைத்த காவல்துறையினரை தண்டிப்பது போன்ற செய்திகளை தீர்ப்புகளாக, மின் ஊடகங்கள் தற்போது செய்தியை பரப்புவதுபோல் பரப்பியதுண்டா?

    அல்லது கற்பழிப்பிற்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று பேசிய தமிழக முதல்வர் மதுரை புறநகரில் காவல்துறையால் காவல் நிலையத்தில் வைத்து கணவனை கட்டிப்போட்டு தலித் பெண்ணை கற்பழித்த காக்கி உடையில் இன்று பணியாற்றி வரும் ஓநாய்களைத் தண்டித்தீர்களா?

    இல்லை. காரணம் இவர்களெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையினர்.


    உண்மையில் இந்திய நாட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றால், பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் காந்தியடிகள் கூறியது போல் உமர் (ரழி) ஆட்சியை இந்தியாவில் கொண்டு வரவேண்டும் என்பதை அமுல்படுத்த வேண்டும்.

    குறைந்த பட்சம் அரபுலகை போல் தண்டிக்க வேண்டும். பெண்களும் தங்களின் கவர்ச்சிகலை மறைக்க வேண்டும். இது தான் பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.

    THANKS TO:http://chennaipopularfront.blogspot.in/2012/12/blog-post_2751.html

    பதிலளிநீக்கு

  16. பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்பதை பெண்களிடமே விட்டு விட வேண்டும். நவநாகரீக பெண்கள் ஆபாசமாக உடை அணிந்து சென்றால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு. அப்போது பொறுக்கிகள் சீண்டினால் 'ப்ளீஸ் ஹெல்ப் மீ' என்று கத்துவதில் அர்த்தமில்லை. அது போல 'இம்மாதிரி பெண்கள் உடை அணிந்தால் அவர்களின் காதில் விழுமாறு கொச்சையாக கிண்டல் அடிப்போம். பாலியல் தொந்தரவு செய்வோம்' என்று ஆண்கள் சொல்ல உரிமையே கிடையாது.

    இஸ்லாம் பெண்களின் பர்தாவை தவறான தொழில் செய்யும் பெண்கள் கோர்ட்டுக்கு செல்லும்போது முகத்தை மறைக்க பயன்படுத்துவது கீழ்த்தரமான செயல்.

    ஆதீனம் சட்டை போடாமல் இருப்பதால் எனக்கு கிளர்ச்சி ஏற்படுகிறது என்று பெண்கள் சொன்னால் சட்டை போட ஆரம்பிப்பாரா? 'ஓரினச்சேர்க்கை ஓகே' என்று வடக்கத்தி நீதிமன்றங்கள் சில சொல்ல ஆரம்பித்துள்ள வேளையில் மதுரை ஆதீனத்தை கண்டு ஆண் ஒருவர் கூட கவர்ச்சியில் மயங்கும் வாய்ப்பு உள்ளதை மறுக்க முடியுமா?

    ஆண்கள்(நான் உட்பட) ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு ஷாப்பிங் செய்வது, படம் பார்ப்பது மெட்ரோ நகரங்களில் சகஜமாகி விட்டதும், ஆண்டாண்டு காலமாக வீதிகளில் சட்டை போடாமல் தொப்பையை காட்டிக்கொண்டு கதை பேசுவதும் தவறில்லையெனில், பெண்கள் தம் விருப்பத்திற்கு உடை அணிவது எவ்வகையிலும் தவறில்லை. அட்வைஸ் சொல்லும் குடிமகன்கள் பொத்திக்கொண்டு இருப்பது நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெண்கள் தம் விருப்பத்திற்கு உடை அணிவது எவ்வகையிலும் தவறில்லை. அட்வைஸ் சொல்லும் குடிமகன்கள் பொத்திக்கொண்டு இருப்பது நலம்.//

      யெஸ்... அப்படியே அட்வைஸ் பண்ணியும் கேக்காம இருந்தா //பொறுக்கிகள் சீண்டினால் 'ப்ளீஸ் ஹெல்ப் மீ' என்று கத்துவதில் அர்த்தமில்லை.//

      வருகைக்கு நன்றி சகோ சிவா ...

      நீக்கு

  17. //டிஸ்கி: இந்த பதிவை தனது தளத்தில் போட அனுமதித்த சிராஜ்ஜிற்கு நன்றி :-)//

    ஆமா அவர் பெரிய கப்பல் அதிபர். டைட்டானிக்கை சுத்தி பார்க்க அனுமதி தந்துட்டாரு. எல்லாம் நம்ம கடைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமா அவர் பெரிய கப்பல் அதிபர். டைட்டானிக்கை சுத்தி பார்க்க அனுமதி தந்துட்டாரு. எல்லாம் நம்ம கடைதான். //

      நீங்க சொன்னா சரிதான் தல... அப்ப நாளைல இருந்தே மொக்கை பதிவுகள் போட்டுடலாம் :-)

      நீக்கு
  18. கண்ணியமாக உடையணிய வேண்டும் என்றாலே அது இஸ்லாமிய முறைப்படி தானே. ஏனென்றால் இஸ்லாம் கண்ணியமாகத் தான் உடையணிய சொல்கிறது.

    இன்னும் கூட இஸ்லாமிய முறைப்படியான உடை என்றாலே நம்மவர்களுக்கு ஆப்கான் பெண்களும், அரேபிய பெண்களும் நினைவுக்கு வந்து விடுகிறார்கள். நீங்கள் தளர்வாக அணியும் சுடிதார் கூட இஸ்லாமிய ஆடை தான். இஸ்லாம் குறிப்பிட்ட வடிவமான ஆடை என்று குறிப்பிடவில்லை.

    எல்லோருக்கும் உள்ளூர "இஸ்லாமிய முறைப்படி" பெண்கள் உடையணிய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை இஸ்லாத்தோடு இணைத்து சொல்ல கூச்சப்படுகிறார்கள்.

    தமிழக சட்டமன்றத்தில் " சில பேர்களைப் பார்த்தால் கும்பிட சொல்லும்; சில பேர்களைப் பார்த்தால் கூப்பிட சொல்லும்" என்ற புகழ் பெற்ற பேச்சு, அப்போது பரபரப்பாக வலம் வந்தது. அந்த பேச்சின் அடிப்படையே ஒரு பெண்மணியின் கவர்ச்சியான எடுப்பான உடையணிதலை வைத்து தான். பிறகு, அப்பெண்மணி உயர் பதவியை எட்டிய போது எவ்வளவு கண்ணியமாக உடையணிந்தார். கண்ணியமாக உடையணிந்ததின் மூலம் தனது கண்ணியத்தையும் உயர்த்தி, இன்று தமிழகத்தையே "அம்மா" என்று விளிக்க வைத்துள்ளார். இது கண்ணிய உடைக்கு உலகம் தரும் அந்தஸ்து.

    எல்லோருக்கும் விளங்குகிறது. ஆனால் இதில் இஸ்லாத்தை குறை சொன்னாலாவது நம்மை முற்போக்குவாதிகளாக காட்டிக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஆனால் இஸ்லாமே ஒரு "மாடர்ன் ரெலிஜியன்" தான்.

    பதிலளிநீக்கு
  19. குடும்ப கட்டமைப்பை சீர்குலைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் திருமண உறவு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு என்று அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

    அனைத்து மதங்களும் திருமண உறவிற்கு வெளியே உள்ள முறைகேடான பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றுபோல் இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆமி ஆடம்ஸிக் சுட்டிக்காட்டுகிறார்.

    முஸ்லிம் நாடுகளில் எய்ட்ஸ் நோய் மிகக் குறைவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

    முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்ணிக்கை கூடுவதையொட்டி சமூகத்தில் திருமணத்திற்கு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகளும் குறைந்து வருகின்றன. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுகள் யூதர்களில் 94 சதவீதமாகும். கிறிஸ்தவர்களில் 79 சதவீதம் காணப்படுகிறது. புத்தர்களில் 65 சதவீதம். ஹிந்துக்களில் 13 சதவீதம் காணப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் முறைகேடான பாலியல் உறவுகள் யூதர்களிடம் 4 சதவீதமும், கிறிஸ்தவர்களிடம் 3 சதவீதமும், ஹிந்து, பெளத்த, முஸ்லிம்களிடம் ஒரு சதவீதமாகவும் உள்ளது.

    இந்த ஆய்வுக் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் கத்தோலிக் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சோசியாலஜிஸ்ட் ரெவ.பால் சுல்லின்ஸ் கூறுகையில், “இந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் இவை பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. புர்கா(உடலை மறைக்கும் ஆடை) உண்மையிலேயே இவ்விஷயத்தில் நன்றாக வேலை செய்கிறது. ஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தி உடல் முழுவதும் மறைத்தால் பெண்களை அவர்களது திருமணம் முடியும் வரை முந்தைய முறைகேடான பாலியல் உறவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என கூறுகிறார்.

    சூசி இஸ்மாயில், இவர் திருமணம் மற்றும் விவகாரத்துக்கான மனவளவாளர்(கவுன்சலர்) ஆவார். இவர் கூறுகையில், “திருமணத்திற்கு முந்தையை, பிந்தைய முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம்களிடம் குறைவாக இருப்பதற்கு அவர்களது மார்க்க ரீதியான வேர் காரணமாகும். இஸ்லாம் விபச்சாரத்தை தடைச் செய்கிறது. இளம் வயதில் இருந்தே முஸ்லிம்கள் பாலியல் ஒழுக்கம் குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.


    http://www.thoothuonline.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE/

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters